Thursday, October 20, 2005

கட்டுப்பாடும் சில கருத்துக்களும்

எங்கு பார்க்கினும் கட்டுப்பாடை பற்றி பேச்சாய் இருப்பதை கண்ட நமது தினமூடி நிருபர், வழக்கம்போல சில பிரபல வலைபதிவர்களின் கருத்தை கேட்டார். அது இங்கே

பதிவர் 1: கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். கட்டுப்பாடு இல்லாத இடத்தில் நான் எப்பவுமே இருக்கமாட்டேன். அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டுப்பாட்டிலும் , வீட்டில் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பதே சாலச் சிறந்தது. இதற்கு மேல் பேச எனக்கு அனுமதியில்லை.

நிருபர்: என்ன சார், இவ்வள்வு பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ந்னு வளர்ந்த நாட்டில் இருக்கீங்க. இப்படி பேசறிங்க ?


பதிவர் 1: கெட்ட வார்த்தையில் திட்டறதுக்கு முன்ன ஓடிப்போயிடு !


-------------------------------------------
பதிவர் 2: கட்டுப்பாடே நம்மை அடுத்த நிலமைக்கு எடுத்துச் செல்லும். இல்லாவிட்டால் இன்னும் முப்பதே நாளில் நாம் எல்லாம் அழிந்துப் போவோம்.

நிருபர்: உலகிலேயே அதிகக் கட்டுப்பாடு உள்ள நாடு வட கொரியா, அதிக சுதந்திரம் உள்ளதாய் சொல்லப்படும் நாடு அமெரிக்கா, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

பதிவர் 2: தேவையில்லாத விசயத்தில் எல்லாம் நீ மூக்கை நுழைக்கிறாய். உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றி ஒரு ஆழப்பதிவு போட்டு விடுவேன். சாக்கிரத்தை.

நிருபர்: அண்ணா, என்னை மன்னிச்சுக்குங்க. இனிமே இந்த மாதிரி எல்லாம் கேட்ட மாட்டேன். விடறா சாமி..

----------------------------------------------------

பதிவர் 3: என்னது கட்டுப்பாடா? அப்ப இனி சிக்கனோட தயிர், பருப்போட நெய், கருவாடோட காரக்குழம்பு எல்லாம் முடியாதா. அட மக்கா, சாப்பாடு மனுஷனுக்கு ரொம்ப முக்கியமாச்சே. நாராயணா, நாராயணா..

--------------------------------------------------------

பதிவர் 4: இப்பத்தான் சில விவகாரமான படங்கள் பார்த்து வெச்சி இருக்கேன். எழுதறேன் அத பத்தி. அதற்கு அப்புறம் வெச்சிக்கலாம் கச்சேரியை.

நான் மேலே சொன்னது யாரையும் குறிப்பிட்டு சொன்னதில்லை. எதுவாய் இருந்தாலும் ஆட்டோ இல்லாம வாங்க. சமரசமாய் பேசி தீர்த்துக்கலாம். வரட்டா...


-----------------------------------------------------------------------


பதிவர் 5: அட நீ வேற. நானே third umpire முடிவுக்கு காத்திருக்கும் batsman மாதிரி சிவப்பா, பச்சையா என்று தெரியாம குந்தினு கீறேன். வந்துடாரு துரை கொஸ்டின் கேட்டுகினு !



------------------------------------------------------------------


July 11 உலக மக்கள் தொகை தினம். அதை பற்றியும், family planning ( குடும்பக் கட்டுப்பாடு ) பற்றியும் பதிவர்களின் கருத்துக்களை மேலே பார்த்தீர்கள். இனி சில தகவல்கள்.,

1. சராசரியாக உலகில் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 billion
2. 1987 ல் முதல் உலகமக்கள் தொகை நாள் அறிவிக்கப்பட்டது
3. மேலதிக விவரங்களுக்கு http://www.usaid.gov/our_work/global_health/pop/news/wpd05.html


( இந்த பதிவு எதிர்மறை பதிவு, மக்களுக்கு இதனால் எந்த பிரயேசனமும் இல்லை. 40 வரி எழுதினாலும், ஒரு வரியில் கூட உபயோகமான விசயம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது எனபதற்காக மேலே கூறிய தகவல்கள் எழுதப்பட்டன என்று யாருப்பா அங்க சொல்றது ?? )


(ஆமாம், கொஞ்ச நாளுக்கு முன்னால் "கத்ரீனா" சமயத்தில் Dick Cheney யை பார்த்து, Go ---- Yoursef l என்று live TV யில் சுதந்திரமாய் கருத்து சொன்னாரே ஒருத்தர் , அவர என்ன பண்ணாங்க ?

சனநாயக முறைப்படி போட்டுத் தாக்கீட்டாங்களா ? )

Monday, October 17, 2005

சினிமா விமர்சனம்

ஆங்கில படங்களுக்கு வலைப்பூவில் விமர்சனம் எழுதுவது ஒரு தனிப்பட்ட கலை. படம் வந்து குறைந்தது பத்து வருடமாவது ஆகி இருக்க வேண்டும். அதன் 25 ஆண்டு சிறப்பு DVD வெளியீடு அல்லது
C(Sk)inemax ல் பலான படம் முடித்தவுடன் பார்த்த பழைய படங்களுக்கு விமர்சனம் எழுதுவது சாலச் சிறந்தது.


தமிழ் வலிப்பூ உலகில் முதன்முறையா , திரைக்கு வந்து 12 மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படதிற்கான விமர்சனம் இங்கே !


Harold & Kumar go to White Castle.

போதை உண்ட ( Stoner ? ) இரண்டு நண்பர்களுக்கான ( buddy comedy ) படங்களுக்கு பெயர் பெற்ற
Danny Leiner இயக்கிய படம் இது. Dude Where is my Car போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை அளித்தவர் இவர்.

ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு இந்தியனையும் கொரிய இளைஞனையும் முக்கிய பாத்திராங்களா வைத்து வந்த முதல் படம் இதுவாகவே இருக்கக்கூடும். John Cho ம் , Kal Penn அற்புதமாய் நடித்து கலக்கி இருக்கும் படம் இது.


பார்த்த படத்தின் முழு கதையயும் எழுதுவதுதான் விமர்சனம் என்று நான் நம்புவதில்லை. எனவே மற்ற விமர்சனங்களை போல படத்தின் கதை இங்கு இல்லை.






பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். அவர்களின் பின்னணி வருவதில்லை. பல கேள்விகளுக்கு ஒற்றை வரியில் இயக்குனர் பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல குண்டர்கள் மத்தியில் ஆணித்தரமாகப் சண்டையிட எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிச்சண்டை எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் , கஞ்சா அடிக்கும் போது கற்றுக்கொண்டாரோ என்னவோ!

என்றெல்லாம் இலக்கியத்தரமாய் ஜல்லி அடிக்காமல், Paula Garces , Malin Akerman பார்த்து ஜொள்ளு விட நான் இந்த படத்தை பார்த்தேன் என்பதை கூறிக்கொளவதில் எந்த வெட்கமும் இல்லை.

Sunday, October 16, 2005

வேலையை பாருங்கப்பா !

வேலையை பாருங்கப்பா !

Friday, October 14, 2005

நான் தட்டாம் பூச்சிகளை பிடிப்பதில்லை



எழுதுவதே புரியாத போது
பூவில் இருக்கும் இரு தட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

மழை வரும் போது
தட்டாம்பூச்சிகள் குடை பிடிக்குமா
எனக்கேட்டு அனுப்பிய
தட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் வாலில் நூல் கட்டி
பறக்கவிட்ட
விரல்நுனியில் ஆய் போன
தட்டாம்பூச்சி

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
தட்டாம்பூச்சிகளுக்குள்
கைகலப்பு சண்டை இல்லை யென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி அடி

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
தட்டாம்பூச்சிகளை பிடிப்பதில்லை

Wednesday, October 12, 2005

ரேஸிஸம்

சூடோ செக்யூலரிஸ்ட், பாசி பருப்பஸ்ட், மாசி மாஸஸ்ட் போன்ற பட்டங்களுக்கு பிறகு நேற்று புதிதாய் கிடைத்த பட்டம் ரேஸிஸ்ட்.











இதுதான் ரேஸிஸம் என்றால் இதை ஆதரிப்பதில் என்ன தவறு.

இணையத்தில் மட்டும் முகத்திரை அணிந்து கொள்ளும், இந்த மாதிரி ரேஸிஸத்தை எதிர்க்கும் போலியர்கள் தங்கள் உண்மை முகத்தை அவர்களின் மனசாட்சியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும் !

Tuesday, October 11, 2005

லூகாஸ¤ம் ஜார்ஜார் பின்கிஸ¤ம்

இந்த பதிவு அருமை நண்பர்(ன்) இராமநாதன் என்ற செஞ்சட்டை துரோகியின் பதிவின் எதிர்ப்பை காட்ட எழுதப்படுகிறது. அவசர அவசரமாய் கம்யூட்டர் விட்டு கம்ப்யூட்டர் மாறும் நிலையில் உள்ளதால் விளக்கமான பெரிய பதிவை எழுத முடியவில்லை.

ஒரு தலை சிறந்த இயக்குனரை, Jar Jar Binks யையும், R2D2 வயும் உலகுக்கு அறிமுகப்படுத்தியவருமான, ஜார்ஜ லூகாஸை கிண்டலடித்தும், எதிர்த்தும் எழுதும் ஸ்குரூ கழண்ட இராமநாதனையும், அதில் பின்னூட்டம் இடும் நியோ , மாட்ரிக்ஸ் , பாசி, உளுத்தம், பருப்பர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு பரிகாரமாக, உடனடியாக இரம்(?!)நாதன் Hollywood வந்து Screen Actors Guild ல் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரின் வீட்டு வாசல் முன் Vodka குடித்துவிட்டு சீ சீ வீசி போராட்டம் நடத்த Hollywood மகளிர் அணி தயாராக உள்ளது.

மற்றும், நான் கட்ட இருக்கும் Natalie Portman கோயிலுக்கு ஒரு மில்லியன் rubles கட்டாய நன்கொடை வழங்க வேண்டும்.

இராமநாதா, மன்னிப்பு கேள், இல்லையெனில் இரஷ்யாவை விட்டு ஓடு !!






(எப்படி தலைப்பிலேயே உம்மை தொகை இருப்பதால் இதுவும் ஒரு ஆழமான பதிவின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழ் வலைப்பூ உலகம் இருக்கிறது. !! )

Monday, October 10, 2005

முகமூடி யார்??

முகமூடி யார் ??

முகமூடி யார் என்று உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கக்கூடும்.இன்னும் அவர் யார் என்று தெரியாத "கோயிஞ்சாமியா " நீங்கள் ? கவலை வேண்டாம். !!

அக்டோபர் 28
இந்த தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றுதான் முகமூடியின் முகத்திரை கிழியப்போகிறது ....


அக்டோபர் 28 க்கு என்ன விசேஷம் ?
ஏன் அன்று உண்மை வெளிய வரப்போகிறது ?

என்று சரியாக சொல்பவருக்கு ஒரு பழைய பாட்டுப் புத்தகம் பரிசாய் குலுக்கல முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். ( பரிசு உதவி மரவண்டு அய்யா அவர்கள் )

Sunday, October 09, 2005

எழுத மறந்த பதிவுகள்

எழுத மறந்த பதிவுகள் !
  • பாட்டியால் எடுக்கபட்ட புகைப்படம்
  • சந்திரோதயம் மேற்கில்தான்
  • Hundred best NAVELS of the century
  • பருந்துக்கு பல் வலிக்குமா
  • கொள்ளு திங்கலையோ கொள்ளு

சக்கரம் சுழலுது, டயர் தேயுது !

பிரேக் பிடிக்கும் போது மீதி பார்த்துக்கொள்ளலாம் !!

Thursday, October 06, 2005

தெளிவும் ஆழமும்

ஆறு அது ஆழம் இல்லை, அது சேரும் கடலும் ஆழம் இல்லை

ஆழம் எது அய்யா? அது பொம்பளை மனசு தான்யா

--- தியாகி சந்திரசேகர்

ஆழம் என்றால என்ன ? அது ரொம்ப "டீப்" பம்மா !

பெண்மனசு ஆழமின்னு ஆம்பளைக்கு தெரியும். அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்.

ஆழம் தெரியாமல் காலை விடாதே
-
அகல உழுவதில் ஆழ உழுவது நல்லது

இரண்டு காலையும் விட்டு ஆற்றின் ஆழம் பார்ப்பவன் முட்டாள்

பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதி Mariana Trench

கிணற்றில் ஆழத்தில் மூழ்கி இறப்பவனுக்கு நீச்சல் தெரிய வேண்டியது இல்லை

ஆழ்கடலுக்கும் சாத்தனுக்கும் இடையே எதை தேர்ந்து எடுப்பது ?

அமைதியான ஆழ்கடலில் மாலுமிக்கு வேலை இல்லை

"பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்" - ஞான்ஸ்

Wednesday, October 05, 2005

வழக்கமான முகமூடி பதிவு

இப்ப வருகிற ஒரு வழக்கமான பின்னூட்டம் "இது ஒரு வழக்கமான --- --பதிவு . ( கோடிட்ட இடத்தில் உங்களுக்கு பிடித்த பெயரை போட்டுக் கொள்ளுங்கள் . ) இது முக்கியமா முகமூடியின் எல்லா பதிவிலும் வரும்.

இது என்னடா வழக்கமான பதிவு என்று புரியாமல் திண்டாடும் "கோயிந்த சாமி"களுக்காக ஒரு சிறிய விளக்கவுரை !

தமிழ்மணத்தில் "இமேஜ்" முக்கியம். நீங்கள் இப்படி பட்டவர், இப்படித்தான் எழுதுவீர்கள், எழுத வேண்டும் என்று "எழுதப்படாத" விதி இருக்கிறது. அதன்படி முகமூடியின் வழக்கமான பதிவு நீங்களும் எழுதலாம். செய்ய வேண்டியது இதுதான்.


தேவையானவை:
  • தமிழ்மணத்தில் வரும் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படித்தல் அவசியம். ( சாதா, சோதா, ஸ்பெஷ்ல் ரவா என்று எல்லாம் பாகுபடுதாமல் அனைத்தையும் படித்தல் அவசியம் )
  • கூகுளில் பட்ம் தேடும் வசதி, கொஞ்சம் போல போட்டோ எடிடிங்க்
  • குழந்தைகளுக்கான கதை புத்தகம்.

செய்முறை:

  • எழுதப் போகும் விஷ்யம் . இது ரொம்ப முக்கியமானது. உங்களின் பதிவு வெறும் 5, "- " ஓட்டு வாங்குமா, இல்லை 30, "-" ஓட்டு வாங்கி அமோக வெற்றி பெறுமா என்பது இதில்தான் இருக்கு . உங்களுக்கு பிடித்த ( அப்படியென்றால் பிடிக்காத என்று அர்த்தம் ) அரசியல்வாதி/நடிகர்/நடிகை/பதிவர் கூறிய அபத்த கருத்துகளை தேர்ந்து எடுங்கள் ( அதுதான் தினமும், யாராவது ,எதையாவது உளறிக்கிட்டே இருக்காங்களே ! தலைப்புக்கா பஞ்சம்).
  • வில்லன் தேர்ந்து எடுத்தல் :நேற்று இரவு உங்கள் குழந்தைக்கு படித்துக்காட்டிய விலங்கு படக்கதை புத்தகத்தில் இருந்து ஒரு கொடிய விலங்கை தேர்வு செய்யுங்கள் . உதாரணதிற்கு, ஓநாய், பக்கத்து வீட்டு வெறி நாய், சிறுத்தை, புலி.
  • அப்பாவி : அதனிடம் அவதிப்படும் ஒன்றையும் தேர்வு செய்யுங்கள். ( நாயிடம் கடி வாங்கிய பக்கத்து வீட்டு சிறுவன் , புலியிடம் அடிப்பட்ட முயல், சிலுக்குவார்பட்டி கோமணக் கிழவன் இப்படி. )
  • புனைப்பெயர்கள் : வில்லன், ஹீரோ எல்லாம் நேரிடையாகத் புரியும் பெயரில் எழுதக்கூடாது. சுவாரிசியம் போய் விடும். உதாரணதிற்கு , நாலு விரல் கொண்ட மஞ்சள் ஆசாமி என்பது ஸிம்ஸன் என்பதை விட எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது அல்லவா ?
  • பதிவுக்கு தேவையான படத்தை கூகுளுங்கள்.
  • உங்களுக்கு பிடித்த நடையில் தேவையானதை எழுதி, படத்தை போட்டு, மிக்ஸியில் இரண்டு நிமிடம் "நைசாக" அரைத்து, மைக்ரோவேவ் வில் 45 செகண்ட் போட்டு எடுத்தால் சுடச்சுட வழக்கமான பதிவு ரெடி.

அதையும் படித்துவிட்டு "இது ஒரு வழக்கமான பதிவு" என்று வழக்கமாய் வரும் பின்னூட்டங்களை பார்த்து மகிழுங்கள்.

( Patent Pending: NO 45723872873 , All rights reserved)


Tuesday, October 04, 2005

கோயிந்தசாமி(கள் ) யார் ?

அட எங்க பார்த்தாலும் கோயிந்தசாமி, கோயிந்தசாமின்னு குப்பதல பேசிகினுகிறாங்களே யாரு நைனா அவங்க ?


எல்லா பதிவுலும் அவரை(ங்களை) போட்டுதாக்க வேற சனங்க இருக்காங்க ! இன்னைக்கு மட்டுமே ஒரு 5,6 பதிவு கோயிந்தசாமிகள் பத்தியும் , அவரு இதை உருவிட்டாரு. அடுத்த புக்குல answer சொல்லுவாருன்னு போட்டு தாக்கறாங்க.


இது எல்லாம், நான் இந்த பக்கம் வருவதுக்கு முன்னாடியே குழம்பிய மட்டைகள் மட்டும் என்று நல்லா தெரியுது.

இந்த உள்குத்து, வெளிகுத்து கத்துக்க நிறைய இருக்குடோய் !

Sunday, October 02, 2005

உலக வலைபதிவர் மாநாடு!

அகில உலக வலைபதிவர் மாநாடு சென்னையில் உள்ள ஒரு பிரபல அசைவ விடுதியில் நடந்தது.
முகமூடி, குசும்பன், VM , ஞானபீடம் , குழலி, சின்னவன் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இருந்து சில பகுதிகள் !


ஞானபீடம் : வந்த எல்லாருக்கும் நன்றி. நாராயணா , நாராயணா !!

முகமூடி : ஞான்ஸ், யாரும் இன்னுமும் பேசவே ஆரம்பிக்கவில்லை, அதுக்குள்ள நாராயணாவா ?

ஞானபீடம்: ஆடிய பாதங்களுக்கும் , கோள்மூட்டும் நாரதனுக்கும் ஏது ஓய்வு ? நம் பணியை நாம் செய்துக்கொண்டே இருப்போம் .

குசும்பன்: பசிக்குது, சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பா நான் ஏற்கனவே நடத்திய லாஸ் வேகஸ் மாநாட்டிலும் இந்த சாப்பாடு பிரச்சனை தான் பெரிய பிரச்சினை ஆயிடிச்சி

முகமூடி: என்னால எதையும் சாப்ப்பிட முடியாதே. முகத்தை முழுசா இல்ல மூடி வைச்சு இருக்கேன்.

VM : கழட்டினால் தான்ய்யா எல்லாமே முடியும். ஹி ஹி. நான் சாப்பிடறதை சொன்னேன்

முகமூடி: சரி சரி.. சாப்பிடறேன். இஙக் சிறுத்தை கறி கிடைக்குமா ?

குசும்பன்: சிறுத்தை கறி சிஙப்பூரில்தான் கிடைக்கும் சாரே கொஞ்சம் அட்ஜ்ஸ்ட் பண்ணிகோங்கோ

முகமூடி : இதை மாதிரி கண்டதை சாப்பிட்டா Dr கிட்ட போக வேண்டியதுதான்

(கொஞ்சம் லேட்டாய் குழலி நுழைகிறார் .. )


குழலி : நீங்கள் சைவமா அசைவமா என்று தெரிந்துக்கொள்ள ஒரு 120 கேள்வி தயார் செய்து வருவதற்குள் கொஞ்சம் தாமதாமாகி விட்டது.


ஞானபீடம்: Dr என்றவுடன் குழலி வந்துவிட்டார், நாராயணா நாராயணா !

VM: இப்படித்தான் ஒருமுறை புனாவில் கண்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு Dr கிட்ட போனேன். அங்கே ஒரு கேரளா நர்ஸ் வந்து...

குசும்பன் : தமிழ்நாட்டில சினிமாவில்தான் அஸின் நயனதாரா ஆக்கிரமிப்பு என்றால் , தமிழ்நாட்டு மருத்துவர்கள் எல்லாம் இந்த மாதிரி கேரளா சேச்சிகளை நர்ஸய் வைத்து இருக்கிறார்கள். அகில உலக அஸின் ரசிகர் தலைவராகிய குழலி இதை பற்றி என்ன நினக்கிறீர்கள்?

குழலி: தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் தழைக்கவே இல்லை. எல்லாம் ஆங்கில மோகம். தமிழ்நாட்டில் தமிழச்சிகள் நர்ஸாய் இருக்க வேண்டும் என்றும் , தமிழ் மருந்துகளைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றும் போராட்டம் ஆரம்பிக்கப்போகிறோம்


முகமூடி : இது என்னய்யா நியாயம். அப்பாவும், மகனும் ஆங்கில மருத்துவம் படிக்கலாம். சிலுக்காவர்பட்டி கோமணக்கிழவன் அனாஸின் சாப்பிடக்கூடாதா ? போங்கய்யா நீங்களும் உங்க ..யிர் காக்கும் மருந்துகளும்

VM : வெட்கத்தால் சிவந்து வெண்ணை போன்று மிருதுவாய் இருந்த தொடைகளை அவன் கையில் ஏந்தினான். மெல்ல உதட்டருகே சென்று வாசம் பார்த்தான் . மெல்ல சிலிர்த்துக்கொண்டான்


ஞானபீடம் : அய்யா VM , butter chicken உங்களுக்கு பிடிக்கும் என்பதை இப்படித்தான் சொல்லனுமா தயிர்சாதமும் சிக்கனும் என்று பதிவெல்லாம் போட்டவனையா நான். எனக்கே சிக்கனா ?

குசும்பன்: அட என்னய்யா ! பொஸ்ரன் காரனுங்க இல்லாம இந்த மாநாடு போர் அடிக்குது! உரோமம் தொலைத்துரித்த பாஸிஸ கோழிக் கூட்டத்த்தை சாப்பிடவா இந்த மாநாடு ?

முகமூடி: குசும்பா, நீர் பேசறது என்னமோ எனக்கு புரியர மாதிரி இருக்கே ?

அனைவரும்:. பாஸிஸத்துக்கும் கோழிக்கும் என்னங்க சம்பந்தம் ?/

ஞானபீடம் : இந்த வார நட்சத்திரம் , முகத்தை மூடி , இரண்டு எழுத்து பெயரைக்கொண்ட, பெண் பெயரில் எழுதும், வளைகுடா நாட்டை சேர்ந்தவர் என்று எமது ஏஜெண்டுகள் தெரிவிக்கிறார்கள்.

VM : நீங்க சொல்றது இங்க இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும் . பீடம்! ஏஜெண்டை மாத்து !!

குழலி : இந்த ஹோட்டலில் வான்கோழி கறி பிரியாணி அற்புதமாய் இருக்குமாமே ? யாரும் அதை ஆர்டர் பண்ணலையா ?

இதுவரை ஏதும் பேசாமல் இவர்கள் பேசுவதை குறிப்பு எடுத்துக்கொண்ட சின்னவன் ஓட்டம் பிடிக்கிறான் !!

Thursday, September 29, 2005

அலிபாபாவும் 40 கேள்விகளும்

அலிபாபா என்றவுடன் 40 திருடர்களும், கேள்விகள் என்றவுடன் வேதாளத்தையும் stereotype யாய் மனதிற்குள் கருத்தாக்கம் செய்துக் கொண்டு, பருப்பு என்றால் பம்மாத்தா, வயகராவில் வந்த bloodpath போன்ற புரட்சி கருத்துக்களை தன்னுள் ஏற்காமல், ஒரு குறுகிய வட்டத்துள் அடக்கிக் கொண்டு, கதவை மூடிக்கொள்ளும் இந்த சமூகத்தை சிலுக்குவார்ப்பட்டி, சிகாகோ, சின்ன கவுண்டர்புரம் சாவிகள் கொண்டும் திறக்கமுடியாத போதும், புராணத்தில் புரையோடிக் கிடக்கும் புனிதப்பசுக்களிடம் புளித்தப்பாலை கறந்துக் கொண்டு இருக்கிறோம் நாம்.


புல்லாங்குழலி 40 கேள்விகளும், எலக்கடைக்காரரும், முகமிலியும் லாங்காய் லிஸ்ட் போட்டு கேட்க்கும் போது, நாம் மட்டும் கேள்விகள் கேட்காது இருப்பது நமது கருத்து சுதந்த்திரத்தின் மென்னியை முறிப்பது போல ஆகும். எனவே இதோ கேள்விகள்

1. கறுப்பாய் இருப்பவள் கண்ணகியா மாதவியா ?

2.கறுப்பா வெளுப்பா மைக்கேல் ஜாக்ஸன் ?

3. கறுப்பு காக்கா, கறுப்பு குயில் எதுக்கு மவுசு ஜாஸ்தி ?

4. கறுப்பு என்றவுடன் உங்கள் மனத்தில் வரும் கலர் எது ?

இஸ்டாப் இஸ்டாப்.. என்னது மத்தவங்க எழுதறது கற்பை பற்றியா, கறுப்பை பற்றி இல்லையா ?
அப்ப கேட்ட நினைத்த 40 கேள்விகளும் வேஸ்டா ? சரி சரி, வேற 40 கேள்விகளோடு மீண்டும் வரேன்.


அதுவரைக்கும் இந்த பாட்டை கேளுங்க..

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
கற்பை போட்டுத் தாக்கும் பதிவு பலரு !

(பாட்டுக்குக் லிங்க கொடுக்க எந்த ப்ரோவும் கொப்பிரைட் வாங்கி விடவில்லை தானே ?? )

Wednesday, September 28, 2005

பாயும் புலியும் No செக்ஸ¤ம்

பாயும் புலி, பதுங்கும் நாகம் பார்த்தியா என்று நண்பர்(ன்) ஒருவர்(ன்) கேட்டார் கொஞ்ச நாட்களுக்கு முன்.

இது என்னடா தெலுங்கு டப்பிங்க் படமா என்று கேட்ட போது, இல்லை இது சீனப்படம், இதுக்குத்தான் AR ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார் என்று போட்டுத் தாக்கினான்

அப்புறம் தான் அவன் Crouching Tiger Hidden Dragons பற்றி பேசுகிறான் என்றும், AR ரஹ்மான் இசை அமைத்தது வேற படம் என்றும் புரிய வைக்க முடிந்தது.

Wo hu cang long இதுதான் இந்த படத்தின் சீன தலைப்பாம். சரி எதுக்கு அது எல்லாம் என்கிறீர்களா ?


Ziyi Zhang படம் காட்டத்தான் .










அப்புறம் ஏன் தலைப்பில் செக்ஸ் என்று கேட்பவர்களுக்கு..

Go. figure it yourself ;-) !!

Monday, September 26, 2005

அடுத்த பிரச்சினை

தங்கர் , குஷ்பு பிரச்சனைகளுக்கு அடுத்து, தமிழகத்தில் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.

பிரபல கவர்ச்சி நடிகை குலுக்காதேவி இன்று "India Day after Tomorrow " ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்

"ஆண்கள் எல்லாம் அழுக்கானவர்கள். வியர்வை நாற்றம் உடையவர்கள். தனி மனித சுகாதாரம் இல்லாதவர்கள். '

என்று கூறியிருக்கிறார். இதனால் தமிழகத்தில் வேற வேலை இல்லாத மக்கள் கடும் கோபம் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் ஆண்களை இழிவு படுத்தும் செயல் என்ற கண்டணம் எழுந்து உள்ளது.

எதிர்ப்பு அதிகம் ஆவதை உணர்ந்த குலுக்கல் தேவி அவசரமாய் பாத்ரூமிற்குள் ஓடி ஓளிந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களாய் அவர் வெளியில் வரவில்லை.

அனைத்து ஆண்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் அவர் வீட்டு வாசலில் சோப்பு, டவல் போன்றவற்றை வீசி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இதை பற்றி பிரபல வலைபதிவர்களிடம் எமது தினமூடி நிரூபர் கருத்து கேட்ட போது .

பதிவர் 1:

:எனக்கென்ன ஒரு வருத்தம் குலுக்காவிடம் என்றால் அதென்ன ஆண்கள் மட்டும் என வரையறை ?வியர்வை வாராத பெண்களே இல்லையா, இல்லை சிறுவர்களிடம் வியர்வையே வருவதில்லையா ? என்ன இருந்தாலும் குலுக்கா ஒரு புரச்சி புரோக்கிராமர் சீ சீ புரட்சி பெண்தான்.

பதிவர் 2:
குலுக்கா தோசை, குலுக்கா பேண்ட் எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள். குலுக்கா என்ன தினமும் குளிக்கிறாரா?
அவர் சுவிஸ் சூட்டிங் போன போது என்ன நடந்தது என்று தெரியாதா ?. 4 நாட்கள் குளிக்காமல் கும்மாளம் போட்டவர்தானே அவர்.

ஏற்கனவே குளிக்காமல் தேமல் வந்துக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.


பதிவர் 3:
இராமயாணக் காலத்திலேயே இராமரும் இலக்குவனும், காட்டில் இருந்த போதும், இராவணனுடன் சண்டை இட்ட போதும் தினமும் குளித்ததாக கம்பர் எழுதி இருக்கிறார்.
என்னே ஆண்களுக்கான குளியல் கட்டுப்பாடு ?
.மனம் அழுக்காய் இருக்கலாம் ஆனால் உடல் அழுக்காய் இருக்கக் கூடாது என்பதே பண்பாடு. எவ்வளவு போலிகள் நாம்.

சனி நீராடு *
எந்த சனிக்கிழமை என்பதை நாமே முடிவு செய்வோம் !

பதிவர் 4::
குளியல் என்பது வேறு. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வேறு.
குலுக்கா தேவி சொன்னது யதார்த்தம் .அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். உண்மையை வெளியில் பேச தைரியம் வேண்டுமல்லவா?

இவரைப் பற்றி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கன்னடக்காரனை தட்டிக் கேட்கட்டுமே பார்க்கலாம். அதற்கு தைரியம் இருக்கிறதா ?

பதிவர் 5:
குலுக்கா தேவி உண்மையில் என்ன சொன்னார் ?
விளையாடி விட்டு அல்லது gym ல் உடற்பயிற்சி செய்து விட்டு வரும் ஆண்கள் வியர்வை நாற்றத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் உடனே குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மிகவும் அழுக்குடன், வியர்வை நாற்றதுடன் இருப்பார்கள். என்பதே !

நான் குலுக்கா தேவி இடத்தில் இருந்தாலும் இதையே சொல்லி இருப்பேன். இதில் என்னத் தவறு இருக்கிறது ?


பதிவர் 6:
வியர்வையில் நனைந்தபடி
ஒரு ஆண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில்
மட்டும்மூடிக் கொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் மூக்குகளை !

உங்களது மூக்குகள்
எதையாவது மெல்ல முகந்தப்படி
வியர்வையில் நனைந்தபடி எவனவது ஏறுகையில்
உங்கள் கைக்குட்டைக்குள் ஓளிந்த
அவன்களுக்குப் நாற்றமடித்த போதும்
சனநெரிசலில் மூடிய மூக்குகளை
மறைக்காமல் சுவாசிக்க தொடங்குங்கள்
இப்போதே. !!!

----------------------------------------------------------------------
பாதுகாப்பு காரணம் கருதி பதிவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யார் அவர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன ?

குஷ்பூ, ஸ்வீட், .யிர் ..

எல்லாரும் குஷ்பூ பதிவு போடறாங்க, ஏன் நீ இன்னமும் போடவில்லை என்று மயிலும், தொலைபேசியிலும், நேரில் ஆட்டோவிலும் வந்து "அன்பாய்" கேட்ட என் நண்பர்களுக்காக....

One picture is worth thousand words
அப்படின்னு , குப்பதுல பத்தாங் கிளாஸ் படிச்ச ஒரு பெரிசின் பேச்சுக்கு இணங்க..


குஷ்பூ



ஸ்வீட்



தயிர்

Friday, September 23, 2005

சில நேரங்களில்

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
என் மர மண்டைக்கு இது புரியுமா
கத்துக் கொடுத்த வாத்தியாரின் பெண் சுட்டி
ஒரு வெள்ளைக்காரனை கல்யாணம் கட்டி
இப்ப கான்வெண்டில் படிக்குது அவளின் குட்டி


குசும்பன் குழலி வீஎம் முகமூடி
படிக்கிறேன் அனைத்தும் தினமும் வாய்மூடி
பெரியவங்க போடறாங்க படம் வாத்து
புரியாத பின்னூட்டங்கள் அதில் பாத்து
பாட்டு லிங்கை கிளிக்கினால் வெறும் காத்து



பவுர்ணமி பாண்டியன்

==================
வீரப்பனின் முதலாமாண்டு நினைவுக்கு இந்த கவிதைகள் அர்ப்பணம் !!!

Thursday, September 22, 2005

என் தனித்தமிழ் பதிவு

இன்னும் 30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று அண்ணன் முகமூடியே தன் பதிவிலே சொல்லிட்டார்.

சங்கே முழங்கு என்ற தமிழுக்கே சங்கா ?
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் !!

தனித்தமிழில் எழுதுவது என்ன அவ்வளவு கடினமா ?

சரி இதோ என் தனித் தமிழ் பதிவு !

த மி ழ்



தனியா தமிழ் என்று எழுதுவது தானே தனித்தமிழ் பதிவு..

இதுக்குப் போயா உண்ணாவிரதம் மாதிரி ஒரு வாரம் தமிழில் எழுதறேன், அப்புறம் கன்னடத்தில் எழுதறேன் என்று கலாட்டா !

Tuesday, September 20, 2005

மொத்தமாய் ஜொள்ளு

எல்லாரும் ஜொள்ளு படங்கள் போடும் போது நாமும் போடாவிட்டால் எப்படி. அப்புறம் ஊர்ரோடு ஒத்து வாழ் என்று எங்க பாட்டி சொன்ன சொல்லுக்கு என்ன மரியாதை.

எச்சரிக்கை:
இந்த படங்கள் கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே. அலுவலகத்திலோ, வீட்டிலோ இந்த படங்களை பார்த்து நீங்கள் மாட்டிக் கொண்டால் நான் பொறுப்பு அல்லன்.


படங்களுக்கு நன்றி google.com









Monday, September 19, 2005

பின்னூட்டத்தின் நாயகியே !

ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்த பட்சம் ஒரு முப்பது , நாப்பது பின்னூட்டம் இல்லாவிட்டால் , அந்த பதிவை, ஒரு நல்ல பதிவு iஇல்லை பட்டியலில் சேர்க்க சில பேர்கள் தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் து லே ஆரம்பிச்சு சி லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும், நடுவில ஒரே எழுத்துதான் இருக்கும். அது வாக இருக்கலாம்).


சரி, எந்த மாதிரி பதிவு போட்ட நிறைய பின்னூட்டம் வரும் என்று இந்த கேள்வி பதிவு. இந்த கேள்விகளுக்கும் lateral thinking க்கும் எந்த சம்பதமும் கிடையாது. இது ரொம்ப பழசு கண்ணா பழசு என்று உங்களுக்கு தோன்றினால், மெயில் அனுப்புங்கள், நல்ல களி பார்சலில் அனுப்பி வைக்கிறேன்.


1. ஜெயில் களிக்கும் வீட்டில் செய்யும் களிக்கும் என்ன வித்தியாசம் ?

2. வராத படத்திற்கு விமர்சனம் எழுதுவது எப்படி ?

3.ஓணாணுக்கு ஓணத்தை பற்றி தெரிய்மா ?

4. பல் டாக்டருக்கு பல் வலி வந்தால் அவர் என்ன பண்ணுவார் ?

5. டார்டாய்ஸ் ஏத்தினா கொசு போகும், ஆனா டார்டாய்ஸ் போக என்ன ஏத்தனும் ?


---------------------------------------------------------------------------------
( அக்கா, மன்னிச்சுக்குங்க !!!! )

வான்கோழிகளும், வாத்துகளும்

கான மயிலாட கண்டு இருந்த வான்கோழி

தமிழ் வலைப்பூக்களில் வாரத்துக்கு குறைந்தது இரண்டு தடவையாவது யாராவது இதை பதிவாகவோ பின்னூட்டமாகவோ போடாமல் இருப்பதே இல்லை. பாவம் வான்கோழி என்ன குற்றம் செய்தது .

என்னவோ மயில் பிரபுதேவா மாதிரியும், வான்கோழி, ஸ்டெப் போடத்தெரியாத பாக்கியராஜ் மாதிரி யும் இந்த குற்றச்சாட்டு.

வான்கோழிக்கு நாமாவது மரியாதை கொடுப்போம் என்று,
வான்கோழி கற்றக் கவி
என்று வலைப்பூ தலைப்பு வைத்தால், அதை கூட சரியாகப் படிக்காமல் இங்கேயும் வந்து மயிலைப் பார்த்த வான்கோழி என்று ரசிகர்கள் பின்னூட்டம் இட்டு விட்டு போகிறார்கள்.

டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்து விட்டக் காலத்தில் இன்னும் எதற்கு வான்கோழியும் மயிலும் ? இரவி சாஸ்திரி கமெண்டரி மாதிரி எவ்வளவு நாளைக்குத்தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது . கொஞ்சம் புதுசாய் போடக்கூடாதா?..

உதாரணதிற்கு



  • MGR கட்சி ஆரம்பித்ததை பார்த்த விசயகாந்த் போல
  • சச்சின் பேட்டிங் பார்த்த சவுரவ் கங்குலி போல
  • முகமூடி, குசும்பர் பதிவு பார்த்த சின்னவன் போல
  • வாத்து போஸ் கொடுத்ததை பார்த்த பன்னிக்குட்டி போல
  • சாரு கெட்ட வார்த்தை பார்த்த இலக்கியவாதிகள் போல

கொஞ்சம் மாடர்னா எழுத சில யோசனைகள்.

உங்களுக்கு பிடித்த வான்கோழி மயில் ஒப்பீடுகளை பின்னூட்டத்தில் போடுங்கள். இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, September 16, 2005

தப்பித்து ஓடுவது யார்?

தப்பித்து ஓடுவது யார் ?

வாத்து வாரத்திற்கு பிறகு இந்த வீட்டை விட்டு/ஜெயிலை விட்டு ஓடும்/தொரத்தப்படும் வாரம் தொடங்கலாம் என்று ...


இங்கு தப்பித்து ஓடுவது யார் ?

என்று சரியாக சொன்னால், துளசி அக்கா செய்த களி, பார்சலில் அனுப்பி வைக்கப்படும்.

( Shipping & Handling extra ! )




Thursday, September 15, 2005

போட்டி

சிறுகதை போட்டி, கவிதைப் போட்டி எல்லாம் நடந்து முடிந்தாகி விட்டது. மிச்சம் இருப்பது இந்த ஒரு போட்டித்தான். யாரும் ஆரம்பிப்பதற்கு முன் நான் அறிவித்து விடுகிறேன்.

இதுவரை வெறும் $50, $75 பரிசு மட்டுமே இந்த வலைப்பூ வில் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த போட்டியின் பரிசு தொகை இதில் வரும் பின்னூட்ட்ங்களின் அடிப்படையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ( உடனே முக்காடு நண்பர் நான் ஏற்கனவே பின்னூட்ட பரிசு அறிவித்தேன் என்பார். கஸ்மால பொடி எனக்கு இன்னமும் மெயிலில் வரவில்லை 150 பின்னூட்டம் என்னது. )


சரி, போட்டி இதுதான். கீழே இருப்பவை இந்த ஒரு வாரத்தில் வந்த வாத்து புகைப்படங்கள் ( சுட்டது/சுடாது ).
எந்த வாத்து நன்றாக் இருக்கிறது . போடுங்கள் ஓட்டு. நடுவரின் தேர்வும் உங்களின் தேர்வும் ஒத்து போனால், வரும் பின்னூட்ங்ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசு..


1


2


3

4


5

6

7

8


9

10

11

12

13


14


15





வாத்து படங்கள் (அ) ஒன்னும் புரியலை

பாயா
கூப்பு
அச்சூ
மடிப்பு
ஜிகினா
சுய்யான்
ஜில்பான்ஸி
காகம்
இரவுக்கடன்
கொடுமுடி
மீன்களுக்கு பாதுகை

உங்களுக்கு ஏதாவது புரியுதா ? ஸ்ட்ராங்காய் காபி குடித்து விட்டும் படித்து பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எல்லாரும் வாத்து படம் போடறாங்க. நாம மட்டும் போடலைன்னா எப்படி.

(இந்த படங்கள் நான் எடுத்தவை. மற்ற சிலரை போல நெட்டில் சுட்டவை அல்ல )



Tuesday, September 13, 2005

ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டது.

  • இணையமும், கிண்டல் க்ளோனிங்க் பதிவுகளும் புதுப்புது விரோதிகளையும் , அளவிட முடியா திட்டையும் , வெறுப்பையும் பெற்றுத்தரும் வல்லமை கொண்டது. இணைய விரோதிகள் அனுப்பும் மெயிலில், பேரம் பேசி ஆட்டோக்காரனிடம் வாங்கும் கெட்ட வார்த்தைகள் போல வார்த்தைகள் இருப்பது சகஜமானது!

  • இணையத்தில், நான் பதினெட்டு வயது பெண், செக்க சிவந்த தேகம், டென்னிஸ் ஆடி வளர்ந்த உடம்பு, பெயர் சானியா என்று yahoo/MSN -ல் உங்களுடன் அரட்டை அடிப்பவர்கள் , 45 வயதான, தொப்பை விழுந்த, வழுக்கை ஆணாகவும் இருக்கக் கூடும்.

  • விடுமுறையும், பொண்டாட்டி பிள்ளைகள் தொந்தரவு இல்லாமல் தனியாக ஊர் சுற்றுதலும் மிக அவசியம். Vacation என்பது , இந்தியா சென்று வருவதற்கு மட்டுமே உபயோகப்படும் ஏற்பாடு அல்ல. வீட்டுக்குள்ளேயே சுற்றவும், கற்கவும் பல விஷயங்கள் உள்ளது!

  • அமெரிக்கா கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கேண்டீனில் மசால் வடை, புளிச்சாதம் வாசத்தை ஆச்சர்யத்தோடு சந்திப்பீர்கள். ஆத்திகனாக இருப்பதின் சௌகர்யங்களில் மேற்கூறியதுமொன்று!

  • Mac Donald's , French Fries ஆறிப்போனால் சாப்பிட நன்றாயிருக்காது.

Friday, September 09, 2005

புரட்டாசி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர்,புரட்சி புரோக்கிராமர் குழலி எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்டாசினு இருக்கனும்,
ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி புரட்டாசி செஞ்சனு நம்ம குழலி கேட்கறாரு அதனால என்ன தனக்குத்தானே பட்டம் கொடுத்துகிட்டவங்க மட்டும் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம குழலியின் கம்ப்யூட்டர் ஜி இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி குழலிக்கு ஜாவா தொல்லை இருக்காது.).

நாளைக்கு குழலி மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்டாசி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

நாம் எல்லாம் Driver வேலை பண்ணற ஆளுங்க. ஏதோ லாரி டிரைவர், ரெயில் என்ஞின் டிரைவர் வேலையோ என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
யூ நோ ஸி ?

எனக்கு நன்றாக பார்க்க தெரியும் , ஏன் அபத்தமாய் இப்படி கேள்வி கேட்கிறாய் என்கிறீர்களா ?

இது அந்த "See" இல்லைங்க இந்த "C". a,b க்கு அப்புறமா K &R கண்டுபிடிச்ச C"


அதுல Pointers என்று ஒரு பாடாவதி கான்செப்ட் இருக்கு.

Pointers to pointers of an array of pointers என்று எல்லாம் புத்திசாலி புரோக்கிராமர்ஸ் எழுதி தள்ளுவாங்க. அத debug பண்றதுக்குள்ள நுரை தள்ளி, தாவு தீர்ந்துவிடும்.

ஆனா நான் எழுதுற புரோகிராம் pointers தேவையில்லை, எப்படியுமே debug பண்ண முடியாது .நான் எழுதற ஒவ்வொரு புரோக்கிராமிலும் புரட்டாசி என்று தேவை இருக்கோ, இல்லையோ ஒரு variable வைத்து விடுவேன். இப்போ சொல்லுங்க நான் புரட்டாசி புரோகிராமர் தானே.


புரட்டாசி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் குழலியுடன் சண்டை போட விட்டுவிடுவேன்.


சொல்ல மறந்த முக்கிய செய்தி..

நான் பொறந்த்து ஒரு புரட்டாசி மாதத்தில்.

Wednesday, September 07, 2005

ஷேனன் எலிசபெத்தும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

Shannon Elizabeth க்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் ஷேனன் படம் எல்லாம் மாட்டி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (நண்பர்கள் ) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

லாஸ் ஏஞ்லஸின் அருந்தலமாம் ஹாலிவுட் திருத்தலத்தில் இந்த ஆண்டு ஷேனன் கையொப்பம் இட்ட படத்தின் விலை $100 என் அப்பா வழித் தாத்தாவுக்கு போலி கையெழுத்து போடத்தெரியும் எனக்குத் தெரியாது, போட்டோ மட்டும் இருந்து என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'American Pie 1,2,3 நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை,




ஷேனனுக்கு பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் ஷேனனுக்கு பொறந்த நாள் கொண்டாடறாங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா ஷேனன் ! பாவம். Baywatch க்கு Pamela Anderson மாதிரி , ஷேனனுக்கு என் மாதிரி பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் ரசிகர்கள் ? இருந்தாலும் என்னே உன் கருணை!


'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா ?

அடுத்த ஆண்டும் இதேமாதிரி தனி ஆளாய் இருந்து பிறந்தநாள் கொண்டாட வாழ்த்தி வணங்குகிறோம். தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க !!. bachelorette வே இருங்க !இதுவே இந்த அன்பு பக்தனின் வேண்டுகோள், பிராத்தனை , பூஜை எல்லாம்

Tuesday, September 06, 2005

தூங்கும் பதிவுகள்

முகமூடி, குழலி, NJ, , VM ,

எதையாச்சும் எழுதுங்கப்பா , பாருங்க நீங்க எழுதாதலால் இந்த பதிவும் தூங்கிட்டு இருக்கு.
உடனே எதயாச்சும் எழுதாவிட்டால், கூட்டமாய் விசயகாந்த் ஆரம்பிக்கிற கட்சிக்கு மாறிடுவோம் என்று ரசிகக் கண்மணிகள் வேற பயமுறுத்தறாங்க.

சரி, போட்ட பதிவுக்கு உருப்பபடியா எழுத நம்ம வாத்தியார் George Carlin பொன்மொழிகள் சில.


  • Some see the glass as half-empty, some see the glass as half-full. I see the glass as too big.

  • Most people are not particularly good at anything.

  • The straightest line between a short distance is two points.

  • Hard work is for people short on talent.

  • Santa is satan spelled inside out.

Wednesday, August 31, 2005

தங்கர் , ரிக்கி பாண்டீங்க்

பாண்டீங்க் செய்த தவறுதான் என்ன?

சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் ரிக்கி பாண்டீங்க்.

இங்கிலாந்து எப்படி தேவையில்லாமல் substitute க்களை பயன்படுத்துகிறது எடுத்து கூற வந்து கெட்ட வார்த்தைகளில் இங்கிலாந்து அணியினரையும் அவர்களின் பயிற்சியாளரையும் திட்டி புயலை கிளப்பிவிட்டார்.

Damien Martyn எப்படி அம்பயரிகளிடமும் , பேரே தெரியாத substitute பீல்டர்களிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.

ரிக்கி பாண்டீங்கும், மார்டீனும், க்ளார்கும் ரன் அவுட் ஆனதிற்கு அவர்களுக்கு சரியாக ஓடத்தெரியாதது மட்டும்தான் காரணமா ? சூப்பராய் பீல்டிங்க் செய்யும் substitute பீல்டரும்தான் காரணம்.

ஆட்டம் இடையில் பாத்ரூம் பிரேக் எடுக்காத கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் யார்தான் இல்லை? ரிக்கி பாண்டீங்க் அப்படியே ஆடுவாரா ? இல்லை அம்பயர்கள்தான் ஆட விடுவார்களா ?

விளம்பரத்தில் நடிக்காத கிரிக்கெட்டர் யார்தான் உள்ளனர்? ஆனால் Sprit of the Game என்பதே இல்லையா?? ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில்தான் , இங்கிலாந்து இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், டாஸ் போடும் போது பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தோற்காத Ashes இப்போது தோற்கும் நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டதுக்கு யார்தான் பொறுப்பு.


ரிக்கி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பாத்ரூம் பிரேக்கு மட்டும் substitue OK " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இங்கிலாந்தின் விதிகள வளைக்கும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.


இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல் தான் வேண்டும். அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு இந்திய கிரிக்கெட் போர்டை வறுத்தெடுக்கும் இங்கிலாந்து அணியினர், முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.


இங்கிலாந்து செய்யும் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை ரிக்கி பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் அவரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?

இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.


ரிக்கியின் கெட்ட வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் Match Referee க்கள் என்ன substitute யே பண்ணாதவர்களா , இல்லை எதிர் அணியினரை திட்டாதவர்களா ? Sledgeing என்னவென்று கிரிக்கெட் ஆடுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

"இங்கிலாந்தை பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், match suspension . suspension தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று ரஞ்சன் மடுகலே , கூட்ட முடிவில் அறிவித்தார்."


மேட்சுக்கு மேட்சு இந்தியாவில் வந்த போதெல்லாம் Leg stump க்கு வெளியே negative bowling போட்ட இங்கிலாந்தே வாழ்க உனது திறமை !!

Monday, August 29, 2005

என் ஆட்டோகிராப்

சேரனை பார்த்து மக்கள் கெட்டு போய்விட்டார்கள். இப்ப எங்கு பார்த்தாலும் பிளாஷ் பேக்குகள்

கல்லூரியில் , பஸ்ஸில் பெண்ணை உற்று நோக்குதல், அழ வைத்தல் இதயம் நெகிழ்வுடன் பகிரப்படுகின்றன. Square Drive அடித்து கிளிகளை கபாஸ்கராய் கவர்ந்த்து எப்படி என்று பதிவுகள் பல. ( விஸ்வநாத் அல்லவா Sqaure Drive க்கு பேமஸ். குண்டப்பா என்ற செல்ல பெயர் வெளியில் சொல்லுமாறு இல்லையோ ?? )

இதோ என் ஆட்டோ கிராப் !!

பத்தாவது படிக்கும் போது தான் பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் ஒரு மயில் வந்தது. . மயில் சென்னையில் இருந்து வந்திருந்தது.மஞ்சள் bottom, கறுப்பு top, கலக்கலாய் இருந்தது மயில். அன்று சென்னைப் பற்றி ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவே இல்லை.

மயிலின் பேர் தெரியவில்லை . மயில் வந்த விஷயத்தை பசங்களுக்கு நான் தான் சொன்னேன்.

கோலி சோடா குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு சென்னை மயில் வீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது.

அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். மயில் வீட்டில் தாகசாந்தி நடக்கும். யாரும் பார்க்காத போது மயில் மேல் ஒரு செல்ல இடி . ஒரு ஆசை தடவல் மாமி வருவதற்குள் ஓட்டம்.

தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன்
பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.

அதில் இரண்டு குழந்தைகள் மயிலோடு எப்பவும் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் மயிலோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள்.இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது.

மயில் வீட்டு மாமி என்னை கூப்பிட்டார்கள் .
'மாமா ஆத்துல இல்ல. மயிலோட கொஞ்சம் கடைதெரு வரைக்கும் போய்விட்டு வரையா ?"

என் அதிர்ஷ்டத்தை என்னெவென்று சொல்வது.
இவ்வளவு நாள் கிட்டக்கூட நெருங்கி பார்க்காமல் இருந்த மயிலோடு கடைத்தெருவா ..

நான் மயிலோட சென்றதை கபில்தேவ், விவ் ரிச்சர்ட்ஸ், போத்தம் எல்லாம் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந் தார்கள். கடைத்தெருவில் ஆசை ஆசையாய் மயிலின் புகைப்படம் ஒன்றும் எடுத்து விட்டேன்.

அப்புறம் மாமா,மாமி வீடு மாற்றி சென்றவுடன் மயிலும் போயே போச்சு .

சோகம் தாளாமல் நான் கவிதைகளாய் எழுதி தள்ளினேன்.

மயிலே!!
உனக்கு மெயில் அனுப்ப
குயிலை தேடினேன்
குயில் சொன்னது
இன்று போஸ்டல் ஸ்டரைக் !!!

அந்த நாட்களுக்கு சாட்சியாக ஒரு படம்தான் மிச்சம்

காஞ்சி மயில் என்று, நாங்கள் அன்று பெயர் வைத்த அந்த மயிலின் புகைப்படம் இங்கே.

பாகம் ஒன்று முடிந்தது ..

( சே சே.. இந்த V.M. கதைகள் படிச்சிட்டு என் புத்தி இப்படி ஏன் ஆயிடிச்சு ?? )

Sunday, August 28, 2005

புயல் அறிமுகம்

அகில உலக தமிழ் வலைபூக்களில் முதல் முறையாக !!!

இவரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கூடிய விரைவில் இவர் பேர் உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கப்போகிறது !



படத்தை பார்த்தவுடன் தெரிந்து போய் இருக்கும் இவர் Tennis ஆட்டக்காரர் என்று.






பெயர் Nicole Vaidisova.

பதினாறு வயது ( பிறந்த தேதி April 23, 1989 )
உலக வரிசையில் இப்போதய இடம் 26.

இப்பவே கிட்டத்தட்ட 6 அடி இருக்கிறார்..
அபாரமாக ஆடுகிறார் .


கிட்டத்தட்ட ஷரபோவை போலவே. மிக நேர்த்தியான் Forehand. மிகவும் எளிதான backhand. Service கொஞ்சம் வீக் என்றாலும், இன்னும் சில வருடங்களில் உடலில் வலு சேர்ந்தவுடன் அதுவும் மெருகு ஏறும்.

அடுத்த வருடத்துக்குள் இவர் நிச்சயம் Top 10 ல் இருக்கப் போகிறார் என்று பந்தயம் கட்ட நான் ரெடி.

பின்குறிப்புகள்:


1. I happen to like Women Tennis a lot. Sometimes for the Right Reasons.

2. இந்த மாதிரி ஒரு ஜொள்ளு பதிவு போட்டால் வரும் சில Classic பின்னூட்டங்களை இந்த பதிவின் பின்னூட்டத்திலும் படிக்கத் தவறாதீர்கள் !!!

3. More Nicole

4: இந்த பதிவுக்கும் அஸின் பற்றி வரும் பல பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை




Friday, August 26, 2005

இன்னொரு புயல்

ஒரு புயல் அடித்த அடியில் இருந்தே இன்னமும் மீளவில்லை. அதற்குள் அடுத்த புயல்.


என்கிருந்து தான் வருகிறார்களோ தெரியவில்லை.

தாங்குவேனா நான் ...

தூங்கினார் போலத்தான் இனி !


எத்துனை பேருக்குத் தெரியும்
யார் நீ என்று..

தெரிந்து கொள்வார்கள் விரைவில் !!









சாதனை

இதுவரை எத்தனை பேர் இந்த மாதிரி சாதனை படைத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இது ஒரு உலக சாதனையாகத்தான் இருக்க வேண்டும் .எப்படி இது சாத்தியம் என்றே தெரியவில்லை !!!

நடந்து வரும் 4 வது Ashes போட்டியில் Andrew Flintoff இடது கையால் இன்று ஆடி 102 ரன்கள குவித்து உள்ளார்

வழக்கமாக வலது கையால் ஆடும் இவர், ஏன் திடீரென்று இடது கையினால் ஆடினார் என்று யாருக்கும் தெரியாது.

கேப்டன் Vaughn , Flintoff இடது கையால் ஆடாவிட்டல் ஸ்டெம்பின் மீது குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தியதால் , Flintoff இடது கையினால் இன்று ஆடினார் என்று நம்பத்தகாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்பாலில் Switch hitters இருப்பது போல இனி கிரிக்கெட்டிலும் வலது, இடது கை ஆட்டம் அனுமதிக்கப்படுமா ? என்பதே ரசிகர்களின் கேள்வி .




வலது கையில் ஆடும் Flintoff




இடது கையில் ஆடும் Flintoff

=========================

Sources :

1. www.cricinfo.com

2. www.rediff.com/cricket