Wednesday, September 07, 2005

ஷேனன் எலிசபெத்தும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

Shannon Elizabeth க்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் ஷேனன் படம் எல்லாம் மாட்டி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (நண்பர்கள் ) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

லாஸ் ஏஞ்லஸின் அருந்தலமாம் ஹாலிவுட் திருத்தலத்தில் இந்த ஆண்டு ஷேனன் கையொப்பம் இட்ட படத்தின் விலை $100 என் அப்பா வழித் தாத்தாவுக்கு போலி கையெழுத்து போடத்தெரியும் எனக்குத் தெரியாது, போட்டோ மட்டும் இருந்து என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'American Pie 1,2,3 நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை,




ஷேனனுக்கு பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் ஷேனனுக்கு பொறந்த நாள் கொண்டாடறாங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா ஷேனன் ! பாவம். Baywatch க்கு Pamela Anderson மாதிரி , ஷேனனுக்கு என் மாதிரி பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் ரசிகர்கள் ? இருந்தாலும் என்னே உன் கருணை!


'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா ?

அடுத்த ஆண்டும் இதேமாதிரி தனி ஆளாய் இருந்து பிறந்தநாள் கொண்டாட வாழ்த்தி வணங்குகிறோம். தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க !!. bachelorette வே இருங்க !இதுவே இந்த அன்பு பக்தனின் வேண்டுகோள், பிராத்தனை , பூஜை எல்லாம்

12 comments:

குழலி / Kuzhali said...

இதைத்தான் நாங்க பக்கத்து இலைக்கு பாயாசம்னு சொல்லுவோம்! ஷேனனுக்கே பேவாட்சா? ஷேனன் லைப்லதான் சின்னவனுக்கு எத்தனை அக்கறை பாருங்க! :) சீக்கிரம் மேட்டரை முடிங்க தல! அடுத்தவருசம் நீங்களும் //ஷேனனுக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் ஷேனனுக்கு பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க.//
:)

நம்மளை டீல்ல விட்டியேப்பா

By: பமீலா ஆண்டர்சன்

அய்யய்யோ நான் வரலை விளையாட்டுக்கு ஏற்கனவே ஆணாதிக்க வெறியன்னு பட்டம் கொடுத்திருக்காங்க ஹா ஹா :-))

ilavanji said...

அடப்பாவிங்களா! :) வெளங்கீரும்...

சின்னவன் said...

//ஆணாதிக்க வெறியன்னு பட்டம் கொடுத்திருக்காங்க

நாட்ல பட்டம் கொடுக்கறதும் , வாங்கறதும் சகஜம்தானே குழலி.

இளவஞ்சி:

வெளங்கிரும் என்று எதை சொல்லறீங்க. ஒன்னும் விளங்கலேங்க :)

ilavanji said...

இத்தனைநாள் பதிவுகளைத்தான் போட்டு தாக்குனீங்க! இப்போ பின்னூட்டத்தைக்கூடவா? ( குழலி!? )

இதெல்லாம் வெளங்காம வேற என்ன செய்யும்? அட தேவுடா:)

சின்னவன் said...

இப்போ trend பின்னூட்டங்களை போட்டு தாக்கற்துதான்.
மற்ற பதிவுகளையும் பாருங்க !

Anonymous said...

American Pie படத்தில் வந்த Nadia தானே இவர்.
கலக்கல் !!

Anonymous said...

:))

Anonymous said...

சபாசு. சபாசு

Anonymous said...

kalkkal thala..
shannon vaazhga !!

வீ. எம் said...

«அப்படி என்னைய பாக்காதமா, ஒரே வெக்கமா இருக்கு.. :)

Anonymous said...

//அப்படி என்னைய பாக்காதமா,
//ஒரே வெக்கமா இருக்கு.. :)

ஹி ஹி..
ஷேனனை பார்த்து ஜொள்ளு விட்டு/ வெட்கப்பட்டுத் தானே இந்த பதிவே VM !!

Gabriela Watson said...

Gente eu acho q nao e bem por ai
pois afinal a repimboca da parafuseta e muito mais obtusa do que a semantica tridimensional do cateto da metafisica. alem do mais como diria nosso grande filosofo iluminado Kant, a tragedia grega está muito mais por atico que pro boreal! abaços e beijos
XOXO