Thursday, October 06, 2005

தெளிவும் ஆழமும்

ஆறு அது ஆழம் இல்லை, அது சேரும் கடலும் ஆழம் இல்லை

ஆழம் எது அய்யா? அது பொம்பளை மனசு தான்யா

--- தியாகி சந்திரசேகர்

ஆழம் என்றால என்ன ? அது ரொம்ப "டீப்" பம்மா !

பெண்மனசு ஆழமின்னு ஆம்பளைக்கு தெரியும். அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்.

ஆழம் தெரியாமல் காலை விடாதே
-
அகல உழுவதில் ஆழ உழுவது நல்லது

இரண்டு காலையும் விட்டு ஆற்றின் ஆழம் பார்ப்பவன் முட்டாள்

பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதி Mariana Trench

கிணற்றில் ஆழத்தில் மூழ்கி இறப்பவனுக்கு நீச்சல் தெரிய வேண்டியது இல்லை

ஆழ்கடலுக்கும் சாத்தனுக்கும் இடையே எதை தேர்ந்து எடுப்பது ?

அமைதியான ஆழ்கடலில் மாலுமிக்கு வேலை இல்லை

"பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்" - ஞான்ஸ்

15 comments:

ஏஜண்ட் NJ said...

இங்கே 11 இடங்களில் ஆழம் உணர்த்தப்பட்டுள்ளது!

குழலி / Kuzhali said...

//இங்கே 11 இடங்களில் ஆழம் உணர்த்தப்பட்டுள்ளது!
//
ஹா ஹா

Anonymous said...

பெண்மனசு ஆழமின்னு ஆம்பளைக்கு தெரியும். அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்.

வீ. எம் said...

13 வது ஆழம்

"பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்" - முக்காலும் உணர்ந்த ஞான்ஸ் மாமுனி!!

சின்னவன் said...

ஞான்ஸ், குழலி, அனானி , வீஎம். நன்றி.

அனானி உங்க ஆழத்தை நான் சேர்த்துக்கிட்டேன்.

Anonymous said...

தலைப்பில் உம்மை தொகை இருக்கிறதே
அது போதாதா ஆழ பதிவிற்கு

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...

குசும்பன் said...

என்ன நடக்குது இங்க??? :-)

rv said...

ஆழத்தின் ஆழத்தைப் பற்றி அறிய ஆழத்தின் ஆழத்துக்கே சென்று திரும்பி ஆழ்ந்த ஆழத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து ஆழப் பதிந்த சின்னவரே, நீவிர் வாழ்க..

முகமூடி said...

நான் கொடுக்க நினைத்த ஜால்ரா பின்னூட்டத்தை ஏற்கனவே நமது இணை பொது செயலாளர் கொடுத்துவிட்டதால் புதிதாக யோசிக்கும் (அ)பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன் (ரொம்ப ஆழம்)

***

// பெண்மனசு ஆழமின்னு ஆம்பளைக்கு தெரியும். அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும். // என்று சொன்ன அனானி ஒரு மதமற்ற ஜனார்தனன். அவர்தான் திராவிட விளிம்புநிலை மாந்தர்களை பற்றி அறியாமல் அப்படியெல்லாம் சொல்கிறார் என்றால் வெட்கமில்லாமல் அதை சின்னவனும் வழிமொழிவது அவரின் கோட்பாட்டு பிரதிபலிப்பையே காட்டுகிறது... திருவளர்செல்வன் அனானியும் ஸ்மாலரும் சேர்ந்தால் உலகில் நியாயம் ஜெயிக்க வழியே இல்லை போலிருக்கிறது

rv said...

//அவர்தான் திராவிட விளிம்புநிலை மாந்தர்களை பற்றி அறியாமல் அப்படியெல்லாம் சொல்கிறார் என்றால் வெட்கமில்லாமல் அதை சின்னவனும் வழிமொழிவது அவரின் கோட்பாட்டு பிரதிபலிப்பையே காட்டுகிறது... //

தல, இது இன்னும் டீப்பா இருக்கே! இவ்வளவு ஆழத்திலா யோசிக்கீறீங்க??? எப்படி தல, எப்படி? உள்குத்து வெளிகுத்தெல்லாம் போய் ஆழக்குத்தர்னு பட்டம் போட்டுக்கலாம நீங்க. ஒண்ணுமே புரியலை, போங்க..

சின்னவன் said...

ஒரு மணி நேரம் மீட்டிங் போய்விட்டு வருவதற்குள் என் கோட்பாட்டை விளிம்பு நிலைக்கு கொண்டு போய்விட்டு இருக்கிறீர்களே ..

பெனாத்தல், இந்த பின்னூட்டம் வழக்கமான ஒரு பின்னூட்டம் என்று யாராவது சொல்லிடப் போறாங்க !

குசும்பரே : ஆழமான, தெளிவான, கொழ கொழ என்று இல்லாமல் பதிவு எழுத வேண்டும் என்ற அவா வில் விளைந்த பதிவு.

இராமநாதன். பின்னூட்டம்னா இதுதான்யா ஆழமான பின்னூட்டம்.

முகமிலி: என்னத்தை சொல்லறது. வர வர உங்களின் பதிவும் பின்னூட்டமும் "ப்ரோ" கள் ரேஞ்சுல இருக்கு !

Anonymous said...

:-)

Anonymous said...

சிறிய காம்ரேடின் பாராட்டுகள்.

சின்னவன் said...

நன்றி சிறிய காம்ரேட் !