Friday, September 09, 2005

புரட்டாசி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர்,புரட்சி புரோக்கிராமர் குழலி எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்டாசினு இருக்கனும்,
ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி புரட்டாசி செஞ்சனு நம்ம குழலி கேட்கறாரு அதனால என்ன தனக்குத்தானே பட்டம் கொடுத்துகிட்டவங்க மட்டும் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம குழலியின் கம்ப்யூட்டர் ஜி இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி குழலிக்கு ஜாவா தொல்லை இருக்காது.).

நாளைக்கு குழலி மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்டாசி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

நாம் எல்லாம் Driver வேலை பண்ணற ஆளுங்க. ஏதோ லாரி டிரைவர், ரெயில் என்ஞின் டிரைவர் வேலையோ என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
யூ நோ ஸி ?

எனக்கு நன்றாக பார்க்க தெரியும் , ஏன் அபத்தமாய் இப்படி கேள்வி கேட்கிறாய் என்கிறீர்களா ?

இது அந்த "See" இல்லைங்க இந்த "C". a,b க்கு அப்புறமா K &R கண்டுபிடிச்ச C"


அதுல Pointers என்று ஒரு பாடாவதி கான்செப்ட் இருக்கு.

Pointers to pointers of an array of pointers என்று எல்லாம் புத்திசாலி புரோக்கிராமர்ஸ் எழுதி தள்ளுவாங்க. அத debug பண்றதுக்குள்ள நுரை தள்ளி, தாவு தீர்ந்துவிடும்.

ஆனா நான் எழுதுற புரோகிராம் pointers தேவையில்லை, எப்படியுமே debug பண்ண முடியாது .நான் எழுதற ஒவ்வொரு புரோக்கிராமிலும் புரட்டாசி என்று தேவை இருக்கோ, இல்லையோ ஒரு variable வைத்து விடுவேன். இப்போ சொல்லுங்க நான் புரட்டாசி புரோகிராமர் தானே.


புரட்டாசி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் குழலியுடன் சண்டை போட விட்டுவிடுவேன்.


சொல்ல மறந்த முக்கிய செய்தி..

நான் பொறந்த்து ஒரு புரட்டாசி மாதத்தில்.

12 comments:

said...

உங்களது சுய பட்டமளிப்புக்கு எனது
புரட்டு ஆசிகள்.
அன்புடன்...ச.சங்கர்

said...

"மீறுபவர்கள் குழலியுடன் சண்டை போட விட்டுவிடுவேன்."

அதென்னங்க பூச்சாண்டி கிட்ட புடுச்சு குடுத்துடுவேன் ரேஞ்சுக்கு சொல்ரீங்க?
:-)) குழலி என்ன அப்படியா சண்டை போடுறார்?:-))

said...

//மீறுபவர்கள் குழலியுடன் சண்டை போட விட்டுவிடுவேன்.
//
அடப்பாவிகளா இப்படி கூடவா போட்டு தள்ளுவாங்க.

said...

சங்கர்:

என்ன பண்றது .
கொஞ்ச நாளாய் நம்ம வலிபதிவுகளின் ஸ்டண்ட் மாஸ்டர் குங்க்·பூ குழலி தானே.


குழலி:
ஹி ஹி

said...

//குங்க்·பூ குழலி தானே.
//
நாசமா போச்சி இந்த பட்டமும் கொடுத்தாச்சா!!!

said...

//
வலிபதிவுகளின் ஸ்டண்ட் மாஸ்டர் குங்க்·பூ குழலி
//

ஹை இது கூட நல்லாருக்கே!!!!!!!!!!!

said...

குழலி
ஏதோ என்னால் முடிஞ்ச ஒரு பட்டம் அவ்வளவுதான்.
பட்டம் பல பெற்று பதிவு பல போட வாழ்த்த வயதில்லை. எனவே வண்ங்குகிறேன்.

சோழநாடன்:
உங்க பேரே ஒரு பட்டம் போலத்தான் இருக்கு . ( இது உங்களின் உண்மையான பெயரா ? )

said...

இல்லைங்க ! நான் தஞ்சாவூர் காரன் அதான் இப்படி நானே ஒன்னு வச்சுகிட்டேன்.

குழலி போல :-)

said...

>> புரட்டாசி புரோகிராமர்

தெய்வமே...... தமிழன் படத்துல விவேக்கோட காமெடி சீன நெனச்சுக்கிக்கிட்டேன். இதுக்கு மேல எதுவும் சொல்ல வரல.

said...

//தமிழன் படத்துல விவேக்கோட காமெடி

அந்த படம் நான் பார்க்கலீங்க .
என்ன காமெடிங்க அது ?

said...

இப்படி இருக்கிற பட்டத்தையெல்லாம் நீங்க இரண்டு பேரும் எடுத்துக்கிட்டா, நாங்கல்லாம் என்ன பட்டம் வச்சுக்கிறது ?? இதைக் கண்டித்து, நான் 'டுபாக்கூர் பட்டங்கள்' ன்னு ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன் :-)

said...

'டுபாக்கூர் பட்டங்கள்' ன்னு ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன்

:))