Friday, August 26, 2005

சாதனை

இதுவரை எத்தனை பேர் இந்த மாதிரி சாதனை படைத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இது ஒரு உலக சாதனையாகத்தான் இருக்க வேண்டும் .எப்படி இது சாத்தியம் என்றே தெரியவில்லை !!!

நடந்து வரும் 4 வது Ashes போட்டியில் Andrew Flintoff இடது கையால் இன்று ஆடி 102 ரன்கள குவித்து உள்ளார்

வழக்கமாக வலது கையால் ஆடும் இவர், ஏன் திடீரென்று இடது கையினால் ஆடினார் என்று யாருக்கும் தெரியாது.

கேப்டன் Vaughn , Flintoff இடது கையால் ஆடாவிட்டல் ஸ்டெம்பின் மீது குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தியதால் , Flintoff இடது கையினால் இன்று ஆடினார் என்று நம்பத்தகாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்பாலில் Switch hitters இருப்பது போல இனி கிரிக்கெட்டிலும் வலது, இடது கை ஆட்டம் அனுமதிக்கப்படுமா ? என்பதே ரசிகர்களின் கேள்வி .
வலது கையில் ஆடும் Flintoff
இடது கையில் ஆடும் Flintoff

=========================

Sources :

1. www.cricinfo.com

2. www.rediff.com/cricket

14 comments:

said...

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே,

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி............

said...

//ஞாபகம் வருதே//

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரஞ்சிக் கோப்பை ஆட்டம்.. சஞ்ஜய் தேசாய், ரோஜர் பின்னி என்ற இரு ஆட்டக்காரர்கள் துவக்க ஆட்ட சாதனையான 400+ ரன் அடித்து சாதனை புரிகிறார்கள்.. அதே ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் என்ற சாதனையாளர் இடது கையால் ஆடுகிறார்.. சஞ்ஜய் தேசாய் அதை எதிர்த்து கேட்கிறார்.. கிரிக்கெட்டுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது அதைக் கெடுத்து விடாதெ என்று.. அதன் பிறகு சஞ்ஜய் தேசாயை கிரிக்கெட் உலகில் மிகக் குறைவாகவே பார்க்க முடிந்தது.. தேசிய அளவில் அவருக்கு வாழ்க்கை அந்த கேள்வியுடன் அஸ்தமித்தது.. சுனில் வாழ்க்கையைக் கெடுத்த பலரில் இவரும் ஒருவர்..

அன்புடன்..விச்சு..

said...

தல குமரேஸ¥
அதுதான் நான் தலைப்பிலேயே வான்கோழி கற்ற கவி என்று போட்டு இருக்கேனே.
படிக்கலையா நீங்க.
புதுசா பழய பாட்டு ஏதாவது சொல்லுங்க
( புதுசா பழயப்பாட்டு . என்ன ஒரு Oxymoron !! )

விச்சு:
இது என்க்கு புது செய்தி. சஞ்ஜெய் தேசாய் எந்த டீமுக்கு ஆடினார் ?

said...

வான்கோழி சின்னவன் புரியுது.

அப்ப கானமயில் ஆரு ??

( குமரேஸ¥ வா, இல்ல Mirror image போடறவங்களா ? )

ஏம்பா , சின்னவா

காப்பி அடிக்க உனக்கு வேற ஆளுங்க கிடைக்கலயா ?
ஏதோ கொஞ்சம் தமாசா எழுதி கொண்டு இருந்தாய்..
என்ன சரக்கு காலியா ?
அப்படியே, அம்பிகா, மீனா பத்தி ஏதாவது பதிவையும் போடு.

said...

ஏம்பா ஆடலரசா
நான் உனக்கு என்னப்பா பாவம் பண்ணேன்.

எத்தனை நாரதர்கள் இந்த உலகத்தில்.

அய்யா NJ.

சும்மா Mirror images பற்றி ஒரு தமாஷ¤க்குத்தான்
தப்பா நினைக்காதீங்க.

said...

he played for karnataka.. before raman lamba and his partner broke the first wicket record in middle 90s, they had the record with 451 runs.

i had a mistake in my message.. it should have been .. in the same year in ranji trophy.. as this record was done against Kerala.. in the final they met Mumbai.

anbudan vichchu

said...
This comment has been removed by a blog administrator.
said...

Chinnavan
your sense of humor is quite *strange*

I liked the concept , but it could have been more funnier than this.

:)

And hey thanks for pointing me to the forum .

said...

சின்னவன்
ஒரு கேள்வி
வான்கோழியும் Turkey யும் ஒன்றா ?

said...

உங்களைப் பத்தி குழலி இங்கே சொன்னது சரியாதான் இருக்கு

said...

குழலி மிக்க நன்றி.
லொள்ளு செய்ய இன்னொருத்தரை காட்டியதற்கு..
JAVA என்று Coffee கூட இருக்கு .இல்லையா ?
சரி சரி..

வருகைக்கு நன்றி தருமி

said...

சின்னய்யா, Flintoff ஏன் ரெண்டு பேட் வச்சு வெளயாடறாரு?

said...

சின்னய்யா, அவரு ஏன் ரெண்டு பேட் வச்சு வெளயாடறாரு? அட இதுகூட ஒரு சாதனையில்லையா?

said...

அட ஆமாம்
ரெண்டு பேட் !!
நன்றி Anonymous !!!