Thursday, September 29, 2005

அலிபாபாவும் 40 கேள்விகளும்

அலிபாபா என்றவுடன் 40 திருடர்களும், கேள்விகள் என்றவுடன் வேதாளத்தையும் stereotype யாய் மனதிற்குள் கருத்தாக்கம் செய்துக் கொண்டு, பருப்பு என்றால் பம்மாத்தா, வயகராவில் வந்த bloodpath போன்ற புரட்சி கருத்துக்களை தன்னுள் ஏற்காமல், ஒரு குறுகிய வட்டத்துள் அடக்கிக் கொண்டு, கதவை மூடிக்கொள்ளும் இந்த சமூகத்தை சிலுக்குவார்ப்பட்டி, சிகாகோ, சின்ன கவுண்டர்புரம் சாவிகள் கொண்டும் திறக்கமுடியாத போதும், புராணத்தில் புரையோடிக் கிடக்கும் புனிதப்பசுக்களிடம் புளித்தப்பாலை கறந்துக் கொண்டு இருக்கிறோம் நாம்.


புல்லாங்குழலி 40 கேள்விகளும், எலக்கடைக்காரரும், முகமிலியும் லாங்காய் லிஸ்ட் போட்டு கேட்க்கும் போது, நாம் மட்டும் கேள்விகள் கேட்காது இருப்பது நமது கருத்து சுதந்த்திரத்தின் மென்னியை முறிப்பது போல ஆகும். எனவே இதோ கேள்விகள்

1. கறுப்பாய் இருப்பவள் கண்ணகியா மாதவியா ?

2.கறுப்பா வெளுப்பா மைக்கேல் ஜாக்ஸன் ?

3. கறுப்பு காக்கா, கறுப்பு குயில் எதுக்கு மவுசு ஜாஸ்தி ?

4. கறுப்பு என்றவுடன் உங்கள் மனத்தில் வரும் கலர் எது ?

இஸ்டாப் இஸ்டாப்.. என்னது மத்தவங்க எழுதறது கற்பை பற்றியா, கறுப்பை பற்றி இல்லையா ?
அப்ப கேட்ட நினைத்த 40 கேள்விகளும் வேஸ்டா ? சரி சரி, வேற 40 கேள்விகளோடு மீண்டும் வரேன்.


அதுவரைக்கும் இந்த பாட்டை கேளுங்க..

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
கற்பை போட்டுத் தாக்கும் பதிவு பலரு !

(பாட்டுக்குக் லிங்க கொடுக்க எந்த ப்ரோவும் கொப்பிரைட் வாங்கி விடவில்லை தானே ?? )

15 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

Almost every blog has counters and you can track IPs of everyone who is visiting and leaving a comment.
There is NO anonymous in the web world ( including me ! ) and you can be tracked even if you come through proxies.

Dont tell me you dont know about this !!!!

said...

:))

கறுப்பு என்பது தனி நிறமில்லங்கறதுக்காக, அதுக்கு மட்டும் ஓரவஞ்சனை! கறுப்பு பத்தி நீங்களாவது கேள்வி கேளுங்க..

// வயகராவில் வந்த bloodpath //
இது என்னது??

said...

படம் காட்டற நீங்களே இப்படி கேட்டு விட்டால் எப்படி இராமநாதன்..

சில்லலவ்வா சில்லலவ்வா காதல் நயகரா!!!

said...

உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...

said...

அடச்சே... கருப்ப பத்தியா... நான் கற்ப பத்தின்னு நினைச்சு ஸ்டாண்டர்டு பின்னூட்டத்த போட்டுட்டேன்... கண்டுக்காதீங்க

said...

வர வர பதிவு எல்லாம் படிக்கிறமாதிரி இருக்கா எனபதை விட இந்த மாதிரி நெஞ்சை பிசைய வைக்கும் பின்னூட்டங்கள் சாஸ்தியா போயிடுச்சு.. வழக்கம் போல இதற்கும் நீங்கத்தான் காரணமா முகமிலி ?

said...

//ஆனக்குட்டி வெளியே வந்துவிட்டது!!!


என்ன சொல்றீங்க பாண்டி
வர வர பின்னூட்டம் எல்லாம் எனக்கு புரியவே மாட்டேங்குது..
எந்த குட்டி வெளியில் வந்து விட்டது ?

said...

மறைந்து நின்று எழுதும் ஒருவரை கண்டு பிடித்து விட்டீர்களா?
கொஞ்சம் காதோடு நமக்கும் சொல்லிடுங்க !

இந்த வான்கோழிக்கே ஒரு காலம் வரும்போது, பூனைக்கா காலம் வராது ??

;-)

said...

// பூனக்கொரு காலம் வந்தா ஆனக்கொரு காலம் //

வாத்த வுட்டுட்டீங்களே

said...

வாத்து வாரம்தான் முடிஞ்சி போச்சுங்களே !!
இது கேள்வி வா...........ரம் !!!

said...

//உங்கள் மனத்தில் வரும் கலர் எது ?//

//குஷ்பு ;-)


எந்த பதிவு போட்டாலும் அது கடைசியில் குஷ்புவில் தான் போய் முடிகிறது.
கலி முத்திடுத்து. வேற என்னத்த சொல்ல !

said...

வெளாட்டுப்புள்ள பா இந்த வான்கோழி!

said...

என்ன பண்றது VM
மக்கள் சான்ஸ் கிடைச்சா போதும் சண்டை போட ரெடியாய் நிக்கறாங்க..

சிறுத்தை, மான் , நரி , ஆடு
(Zoo மாறி ஆயிடிச்சி )
என எல்லாம் சண்டை போட்டா வான்கோழி வேற என்ன பண்ணும் !!

:-)

said...

இப்படி நீளமா எழுதற குறைச்சுகிட்டு அகலமாய் எழுதலாம்.

Free யாய் கிடைப்பது அட்வைஸ்தானே .. அள்ளி வீசறேன். எடுத்துக்குங்க