Friday, October 14, 2005

நான் தட்டாம் பூச்சிகளை பிடிப்பதில்லை



எழுதுவதே புரியாத போது
பூவில் இருக்கும் இரு தட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

மழை வரும் போது
தட்டாம்பூச்சிகள் குடை பிடிக்குமா
எனக்கேட்டு அனுப்பிய
தட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் வாலில் நூல் கட்டி
பறக்கவிட்ட
விரல்நுனியில் ஆய் போன
தட்டாம்பூச்சி

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
தட்டாம்பூச்சிகளுக்குள்
கைகலப்பு சண்டை இல்லை யென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி அடி

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
தட்டாம்பூச்சிகளை பிடிப்பதில்லை

28 comments:

said...

சின்னவரே கலக்குறீரு :-)

இந்தாரும் தேன்மொழி எழுதுன மழைப் பூச்சி கவிதை

மழைப்பூச்சி - தேன்மொழி
----------------------
அந்தி மஞ்சள் வேளையில்
புல்வெளியெங்கும்
வெட்டுக்கிளிகளாவோம்
மெல்ல மெல்ல வரும்
மழைப்பூச்சி

பெருவிரலுக்கும்
ஆட்காட்டி விரலுக்கும்
இடையில் பிடித்து
" ஏ மழப்பூச்சி
மழ எந்தப் பக்கம் வரும் சொல்லு "
என்போம்

குரலின் அதிர்வில்
கிர்ர்ரெனச்
சுற்றிச் சுற்றி
ஏதோ ஒரு திசையில் நிற்கும்

மழைப்பூச்சி சொன்ன
திசை வழியாய்
வானம் பார்ப்போம்
சில்லெனத் தூவும்
சாரல்

" மழை வருது மழை வருது
மங்களக்கொட்டையில
கூனகெழவி குந்தியிருக்கா
குருசு மொட்டையில " - என

பூப்போட்ட தாவணி
சிறகடிக்கச் சிறகடிக்க
கைதட்டி ஆடுவோம்

செங்கல்பொடி நிறத்தில்
மஞ்சள் வளையம் சுற்றிய
மழைப்பூச்சி
அடிவயிறு வலிக்க
ஊர்ந்து போகும்

காடுகளை அழித்து
மழை கவிழ்த்துவிட்டோம்
மேகங்களும் உலர்ந்து வற்றின

யாரும் சொல்லித்தராத
மழைப்பாட்டு
இப்போதுள்ள
குட்டிகளுக்கில்லை

திசை சொல்லித் தந்த
மழைப்பூச்சியின்
சுவடில்லை
சுவடில்லை

said...

என்ன கவித.. என்ன சொல்ல வர்ரீங்க.. ஒண்ணுமே புரியலை..

ஆனா, மரவண்டு புரிஞ்சுகிட்டு பதிலுக்கு இன்னொரு புரியாத கவித போட்டுருக்காரு.

இது எந்த -இஸம் கவித, இதப் படிச்சா யாருக்கெல்லாம் புரியும்னு டிஷ்க்ளேய்மர் போடுங்கப்பா..

said...
This comment has been removed by a blog administrator.
said...

ராமநாதன், தட்டான (எங்க ஊருல புட்டான்னு சொல்லுவோம்) புடிச்சி ஒரு நூல கட்டி ஒரு சின்ன குச்சிய நூல்ல கட்டி வுட்டீங்கன்னா, அது நம்மல திட்டிக்கிட்டே ஒரு மாடு மாதிரி அத இழுத்துக்கிட்டு போகும். இது ஒரு வெளாட்டு. இந்த மாதிரி கொடுமைகளெல்லாம் சின்ன வயசுல கிராமத்துல பண்ணிருந்தா இந்த கவிதை புரியும். அப்போ பண்ண கொடுமைக்கு இப்போ சின்னவன் Feel பண்ணறார் போல...:-)

said...

மரவண்டு
நன்றி. அப்படியே நீங்க நம்ம இளவஞ்சி கவிதையும் படித்து விடுங்க.
அவர்தான் ஆதி நான் மீதி !

இராமநாதன்
ஒன்னுமே புரியலை என்றால்
"இந்த பதிவுக்கு நன்றி " அப்படின்னு ஆழமாக பின்னூட்டம் போட்டு தப்பிச்சிக்கணும்..

சிவா
//அப்போ பண்ண கொடுமைக்கு இப்போ சின்னவன் Feel பண்ணறார் போல...:-)

அப்ப பூச்சிகளை கொடுமை படித்தின மாதிரி இப்ப எழுதி எல்லாரையும் கொடுமை படுத்திக்கிட்டு இருக்கிறேன்.


பாண்டி

என்ன சொல்ல வறீங்க? நூல் கட்டுனது தப்பா? ஆய் போனது தப்பா?

முள்ளுமேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம் சேலைக்குதானே.

:-)

said...

இந்த பதிவுக்கு நன்றி

;-))

said...

//மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
தட்டாம்பூச்சிகளை பிடிப்பதில்லை
//
நானும் தான்

said...

முகமூடி
இந்த பின்னூட்டத்துக்கு நான் காப்புரிமை வாங்கி வைத்து இருக்கிறேன். மன்னிக்கவும் இனி இதை உபயோகிக்க வேண்டாம் . இல்லையெனில் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும் !

குழலி
நன்றி. சின்ன வயதில் இந்த ஆட்டம் ஆடியது உண்டா ?

said...

ஓ ஸாரி..

நன்றி, இப்பதிவுக்கு (காப்பிரைட் முகமூடி)

said...

னிமே இந்த மாதிரிதான் நோட்டீஸ் போடனும் போல



No part of this comment maybe modified,photocopied, reproduced or translated without prior written consent of Chinnavan.


அப்பாடா. மூச்சு வாங்குது !

said...

நன்றி சொல்லவே உனக்கு - சின்னவா
மூச்சு வாங்குதே!!!

இளமை ஊஞ்சலாடுது...
பருவமே புதிய பாடல் பாடு...

said...

NJ
இந்த 1975-1985 காலத்தை விட்டு வரவே மாட்டீங்களா ?
technology has improved so much !

said...

Advt-
¬ÆÁ¡É À¾¢×¸ÙìÌ ÅÕ¨¸ ¾Ã§ÅñÊ ´§Ã þ¼õ
http://parisothanai2005.blogspot.com

said...

Advt-
ஆழமான பதிவுகளுக்கு வருகை தரவேண்டிய ஒரே இடம்
http://parisothanai2005.blogspot.com

said...

அது ஒரு பொற்காலம்!

எப்படி விட்டு விலகி வருவது!!

அதன் நினைவுகளின் தாக்கத்தை

மறக்க முடியவில்லையே!!!

அர்தப்பழசு என்போருக்கு அது

அர்தப் பழசாகவே இருக்கட்டும்!

என்னுலகம் என்னோடு!!!

அது என் சுதந்திரம்!!!

வண்டி ஒருநாள் ஓடத்தில் ஏறும்

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்


எல்லாருக்கும் காலச்சக்கரம் சுழலும்...

ஆனால் எல்லோருக்கும் ஒரே வேகத்தில் அல்லவே!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

இந்த பதிவுக்கு நன்றி. Sorry,
இந்த பதிவுக்கு நன்றி. Sorry sorry,


மிக மிக நன்றி.

:)

said...

அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா...!

//விரல்நுனியில் ஆய் போன
தட்டாம்பூச்சி// :)

said...

NJ

//அது என் சுதந்திரம்!!!

இதில ஏதாவது குத்து இருக்கா ?

பிரேமலதா
மிக்க நன்றி. முதல் தடவை வரீங்களோ

இளவஞ்சி
ஹி ஹி

said...

இது

said...

இது சின்னவரின் வழக்கமான பதிவு ..
இதற்கு காப்பிரைட் யாருக்கு?

said...

ராம்கி
என்ன சொல்றீங்க. திட்டறீங்களா பாராட்டறீங்களா

தெருத்தொண்டன்..
அதுக்கு ஒரே உரிமையாளர் நீங்க ஒருத்தர் தான் !

said...

பின்னூட்டம் : 1
டொக் டொக் டொக்... யாரங்கே? சின்னவர் இருக்காருங்களா??

சின்னவரா , அது யாரு... ?

ஓ! சாரி , வழி தவறி வேற ஏதோ வலைப்பூவுக்கு வந்துட்டேன்.. போயிட்டு வரேன்.. :)
========
பின்னூட்டம் : 2 நல்லா இருக்கு சின்னவரே .. கவிஞரா நீங்க??

ஒரு ஹைகூ .. (கேட்டது)

அழகிய வண்ணமிகு மலர் -
செடியில் இருந்து உதிர்ந்து
மீண்டும் செடி சேர்ந்திடும என நினைத்தால் - அட பறந்துவிட்டதே
பட்டாம்பூச்சி!

said...

டொக் டொக் டொக் ..
பின்னூட்டம் இட்டது யாருங்க ?
வீ எம் மா ? நான் கூட வேற யாரோ என்று நினைத்து விட்டேன்

கவிதை நன்றாக இருக்கிறது வீ எம்

said...

/// அழகிய வண்ணமிகு மலர் -
செடியில் இருந்து உதிர்ந்து
மீண்டும் செடி சேர்ந்திடும என நினைத்தால் - அட பறந்துவிட்டதே
பட்டாம்பூச்சி!//

அது அப்படியில்லை தம்பி :-)

0
வீழ்ந்த மலர்
மீண்டும் கிளைக்குத் திரும்புகிறது
ஓ வண்ணத்துப் பூச்சி !


என்றும் அன்பகலா
ஹைக்கூ கணேஷ் :-)

said...

வீழ்ந்த யானை

மீண்டும் எழுந்து ஓடுகிறது

ஓ... குதிரை!

said...

ஹும்... கண்ணாடி மாத்தனும் போல!

said...

என்ன ஆச்சு NJ ?
எதுக்கு மாத்தனும் ?

கண்ணாடி மாத்திட்டு அது என் சுதந்திரம் என்று கவிதை (??! ) போடுங்க !



குழலிக்கு போட வேண்டிய பின்னூட்டம் இங்க போட்டு விட்டீர்களா ?