Monday, September 19, 2005

பின்னூட்டத்தின் நாயகியே !

ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்த பட்சம் ஒரு முப்பது , நாப்பது பின்னூட்டம் இல்லாவிட்டால் , அந்த பதிவை, ஒரு நல்ல பதிவு iஇல்லை பட்டியலில் சேர்க்க சில பேர்கள் தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் து லே ஆரம்பிச்சு சி லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும், நடுவில ஒரே எழுத்துதான் இருக்கும். அது வாக இருக்கலாம்).


சரி, எந்த மாதிரி பதிவு போட்ட நிறைய பின்னூட்டம் வரும் என்று இந்த கேள்வி பதிவு. இந்த கேள்விகளுக்கும் lateral thinking க்கும் எந்த சம்பதமும் கிடையாது. இது ரொம்ப பழசு கண்ணா பழசு என்று உங்களுக்கு தோன்றினால், மெயில் அனுப்புங்கள், நல்ல களி பார்சலில் அனுப்பி வைக்கிறேன்.


1. ஜெயில் களிக்கும் வீட்டில் செய்யும் களிக்கும் என்ன வித்தியாசம் ?

2. வராத படத்திற்கு விமர்சனம் எழுதுவது எப்படி ?

3.ஓணாணுக்கு ஓணத்தை பற்றி தெரிய்மா ?

4. பல் டாக்டருக்கு பல் வலி வந்தால் அவர் என்ன பண்ணுவார் ?

5. டார்டாய்ஸ் ஏத்தினா கொசு போகும், ஆனா டார்டாய்ஸ் போக என்ன ஏத்தனும் ?


---------------------------------------------------------------------------------
( அக்கா, மன்னிச்சுக்குங்க !!!! )

34 comments:

said...

// ஜெயில் களிக்கும் வீட்டில் செய்யும் களிக்கும் என்ன வித்தியாசம்//

ஜெயிலுலே யாரோ செஞ்சதை நமக்குத்தருவாங்க.
வீட்டுலே நாமே செஞ்சு நாமே சாப்புடணும்.

அங்கே தப்பு செஞ்சவனுக்குக் களி. வீட்டுலே 'தப்பே செய்யாதவனுக்கும்' களி:-)

இது கொஞ்சம் வேற மாதிரியான தண்டனை?

மன்னிக்கணுமுன்னா அந்த 'வாத்து' போட்டியிலே நான் ஜெயிச்சதா அறிவிக்கணும்.

said...

அக்கா,
எல்லா கேள்விக்கும் விடை வந்தவுடனே வாத்து போட்டியின் முடிவை அறிவிச்சடறேன்.

said...

1. ஜெயில் களியிலிருந்து என்றாவது ஒரு நாள் விடுதலை உண்டு:-))

4. அவர் தன் வீட்டில் செய்யப்பட்டிருக்கும் களியைச் சாப்பிடுவார் :-))

said...

லதா கலக்கல்..
முதல் தடவையா பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

said...

// ஜெயில் களியிலிருந்து என்றாவது ஒரு நாள் விடுதலை உண்டு:-)) //



ATHU!!!

said...

பின்னூட்டம் அதிகரிக்க பதிவு போடுவதிலும் பார்க்க, போட்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்களை அதிகரிப்பதில்தான் ஆள் கில்லாடி.
நன்றி சொல்லியே அம்மா பின்னூட்ட வாலை ஒரு முப்பதுக்கு இழுத்திடுவார். போதாததுக்கு யாரையாவது சீண்டி ஒரு பின்னூட்டம். பிறகு அதுவளரந்து இன்னொரு முப்பது போடும்.

said...

வசந்தன் இப்படி சொல்லி மாநாட்டில் அடி வாங்க போறீங்கள்.
( அப்புறம் களி வேற கிடைக்காது !! )

:-))

said...

//2. வராத படத்திற்கு விமர்சனம் எழுதுவது எப்படி ?//

வந்த (வெந்த) படமோ வராத படமோ, பார்த்தும் பாக்காமலும் எழுதறதுதான் விமரிசனம்

//3.ஓணாணுக்கு ஓணத்தை பற்றி தெரிய்மா ?//

ஏன்? தெரியாமயா அது 'ஓணத்தைப் பத்தித் தெரியுமா?ன்னு கேட்டதுக்குத்
தலையை ஆட்டுது?

4. இதுக்கு லதாவோட பதிலையே வச்சுக்கலாம். கலக்கலா இருந்தது,(எது?)

5. இது ரொம்ப அசட்டுத்தனமான கேள்வி.

டார்ட்டாய்ஸ் போக 'கொசுவை' ஏத்தணும்:-)

said...

வசந்தன்,

பின்னூட்டம் வேணுமுன்னா 'டைரக்ட்'டாக் கேக்கலாம் தானே. அதை விட்டுட்டு....

//அதுவளரந்து இன்னொரு முப்பது போடும். //

அந்த அது போடற முப்பது எது? முட்டையா?

சிட்னி மாநாட்டுலே செயலாளர்கிட்டே 'ஷ்ரேயா களி அனுப்பனதா' சேதி வந்துக்கே.
இன்னும் கிடைக்கலைன்ற ஆத்தாமையா? சீக்கிரம் வந்துரும். கவலைப்படாதீங்க.:-))

said...

சின்னவன்..திருந்தவே மாட்டீங்களா??:-) துளசிக்கா கிட்டே மட்டும் தான் மன்னிப்பா?? :-)

//பல் டாக்டருக்கு பல் வலி வந்தால் அவர் என்ன பண்ணுவார் ?//

பல்லவி பாடுவார்.

said...

கேள்வியின் நாயகி 40 கிட்ட ஓடிக்கிடு இருக்கு,
துளசி அக்கா உங்களை பத்திய பின்னூட்ட நாயகி வெறும் 10 தானா.
கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க

said...

//துளசிக்கா கிட்டே மட்டும் தான் மன்னிப்பா


சரி, ரம்யா அக்கா
நீங்களும் மன்னிச்சுடுங்க..
( ஏதோ வீரப்பன் பொது மன்னிப்பு மாதிரி என்ன கேட்க வைச்சுட்டீங்களே

//பல்லவி பாடுவார்.

இது சூப்பர் !

said...

//சரி, ரம்யா அக்கா
நீங்களும் மன்னிச்சுடுங்க..
( ஏதோ வீரப்பன் பொது மன்னிப்பு மாதிரி என்ன கேட்க வைச்சுட்டீங்களே//

:-))))

ஏதோ துளசிக்காக்கு என்னாலான உதவி..இதோ ஒரு பின்னூட்டம்!

said...

துளசியக்கா தான் என்னிக்கும் 'நிரந்தர பின்னூட்ட நாயகி'.. நிரந்தர முதல்வர் மாதிரி...

ரம்யா அக்காக்கு வேணா புதுசா 'இளைய பின்னூட்ட புயல்'னு பட்டம் கொடுத்திடலாமா? இளையனு சொல்லிருக்கேன். ரம்யா அக்கா, கொஞ்சம் கண்டுக்கோங்க..;))

said...

//சிட்னி மாநாட்டுலே செயலாளர்கிட்டே 'ஷ்ரேயா களி அனுப்பனதா' சேதி வந்துக்கே.
இன்னும் கிடைக்கலைன்ற ஆத்தாமையா? சீக்கிரம் வந்துரும். கவலைப்படாதீங்க.:-))//


அது!! :O)

//துளசியக்கா தான் என்னிக்கும் 'நிரந்தர பின்னூட்ட நாயகி'.. நிரந்தர முதல்வர் மாதிரி...

சொல்லித் தெரிவத்தில்லை பின்னூட்டம் பெறும் கலை! ;O)

said...

ஏதோ வீரப்பன் பொது மன்னிப்பு மாதிரி என்ன கேட்க வைச்சுட்டீங்களே

OLD KANNA OLD..
Enna Chinnavare, veerappan mannippu ellam old... ippo ippo .. oruthar mannippu keytaaree...
aiyoo vendam saami.. podhu.. appeeettuuuu....

said...

VM ,
முதல்ல அதைதான் நினைத்தேன்.
அப்புறம் அது எங்கே போய் முடியுமோ !!

said...

அக்கா ஸ்டைலில் தனிதனியாக ரெஸ்பான்ஸ்.

இராமநாதன்,
அப்ப ரம்யா அக்கா,
"சின்னம்மா " என்று சொல்லுங்கள்

said...

நன்றி மழை..
உங்க பின்னூட்டம் இல்லாத துளசி அக்கா பதிவா !!

said...

இராமநாதன்..பட்டத்துக்கும் நன்றி.. 'இளைய'க்கும் நன்றி.. (நீங்க என்ன ரேஸ் கார் ஓட்டுவீங்களா? போட்டிருக்க ட்ரஸைப் பார்த்தா அப்படி இருக்கே??)

சின்னவன்..ஏதோ அக்கா ஒ.கேன்னு பார்த்தா இந்த பின்னூட்ட போட்டி முடியறதுகுள்ளே 'அம்மா' ஆக்கிடுவீங்க போலிருக்கே!!

அப்புறம், வீ.எம் பேச்சை கேட்டீங்கன்னா இந்த பதிவுலே பின்னூட்டத்தை ஏத்த மெனக்கெடவே வேணாம்!! :-)

said...

ஹ¤ம் துளசியக்கா பெயரை சொன்னதுக்கே பின்னூட்டம் 20 த தாண்டிடுச்சு!
அக்கா சீக்கிரம் பேட்டண்ட்க்கு விண்ணப்பம் போட்ருங்க. இல்ல சின்னவன் போல எல்லாம் உங்க பேர வச்சே பதிவு போட போராங்க :-)

said...

ரம்யா அக்கா,
அம்மாவை விட "சின்னம்மா" க்குத்தான் "சக்தி" ஜாஸ்தி. இளைய பின்னூட்ட புயலை வை விட சின்னம்மா கொஞ்சம் பவர்புல் இல்லையா ?

said...

சோழநாடன்
அதுதான் துளசி அக்காவின் பவர் !

:)

said...

ரம்யா,

அது கொலம்பியாவைச் சேர்ந்த பார்முலா-1 ட்ரைவர் ஹுவான் பாப்லோ மான்டோயோ. நரேன் கார்த்திகேயனோட தோஸ்து.

said...

அனானி.. நன்றி..சில விஷயங்கள்லே நான் மக்குன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மக்குன்னு தெரியாது!! :-) அந்த படத்துக்கு மேலே மவுஸ் போகும் போது வேறே இராமநாதன்னு காட்டுச்சா? அதான் கேட்டேன்!

said...

ரம்யா அக்கா,
அது நானல்ல. (இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!) :)

அனானி அவர்கள் சொன்ன மாதிரி கொலம்பியாவைச் சேர்ந்த Juan Pablo Montoya. எனக்கு மிகவும் பிடித்த F1 driver. McLaren Mercedes டீமில் இப்போது இருக்கிறார்.

said...

சில விஷயங்கள்லே நான் மக்குன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மக்குன்னு தெரியாது!! //

ரம்யா,
'மொடாக்'கான நானும் இதே கேள்வியை ராமனாதனிடம் கேட்டேன்.

சின்னவனே, எப்படி எண்ணிக்கை போய்க்கிட்டு இருக்கு?

said...

இராமநாதன்..ரஷ்யாலே ப்ராக்டீஸ் பண்ணுங்க..அவர் மாதிரி இல்லைன்னாலும் நம்ம ஷோளவரம் ரேஸ்லே ஓட்டலாம்..(இப்பலேல்லாம் நடக்குதா இல்லையா?)

தருமி, உண்மையைச் சொல்லி என்னை கொஞ்சம் less மக்கா feel பண்ண வைச்சத்துக்கு நன்றி!! :-)

said...

பின்னூட்ட நாயகி இதுவே ஏதோ அம்மன் பெயர் மாதிரியிருக்கிறது, கிடைத்த வாய்ப்பினை விடாமல்
இன்னொரு 200 பவுன் கேளுங்க துளசி :)

said...

அக்கா,
ஷோலாவரத்துல இன்னும் நடக்குதான்னு எனக்கும் தெரியல...

எப்படியும் F1-ல ஆறு அடிக்கு மேல உள்ளவங்கல்லாம் ஓட்ட முடியாதுன்னு எனக்கு நானே சொல்லி சமாதானபடுத்திக்கிறேன்.

தருமி,
மெயில் வந்துதா?

சின்னவன்,
பின்னூட்ட நாயகி வலப்பதிவிக்களுக்கு (!) மட்டும் பட்டம் வச்சுருக்கீங்க.. தலைவர்கள் யார்னு வக்கவேயில்லியே..

இப்பதான் பார்த்தேன்.. யாரோ மரியகுமாரன்னு ஒருத்தர் பதிவுகள்ல எல்லாம் ஆயிரத்துக்கு மேல பின்னூட்டங்கள்ன்னு காட்டுதே தமிழ்மணம்... அவரா? அவர் பதிவ திறக்கவே பயமா இருக்கு..ஆயிரம் பின்னூட்டமும் லோட் ஆக எத்தன நேரமாகும்னுதான்.. :)

said...

வந்த பின்னூட்டத்தை இட்ட அனைவருக்கும் நன்றி.
இப்பத்தான் 30 வந்து இருக்கு ( அக்கா ரேஞ்சுக்கு இது ரொம்ப குறைச்சல் இல்லையா ?

//தலைவர்கள் யார்னு வக்கவேயில்லியே..
பின்னூட்டம் போடறதுக்கு என்றே
பதிவுகள் எல்லாம் தலைவர்கள் வைச்சு இருக்காங்களே

said...

// நம்ம ஷோளவரம் ரேஸ்லே ஓட்டலாம்..(இப்பலேல்லாம் நடக்குதா இல்லையா?) //

அன்புள்ள இரம்யா / இராமநாதன்,

சோழவரத்தில் காரோட்டப் பந்தயம் நடக்குதா(இல்லை ஓடுதா)ன்னு தெரியவில்லை. ஆனால் சென்னை -> காஞ்சிபுரம் செல்லும் வழியில் பூவிருந்தவல்லிக்கும் (இராஜிவ் காந்தி) திருப்பெரும்புதூருக்கும் இடையில் உள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற ஊரில் காரோட்டப் பந்தயம் நடைபெறுவதாகக் கேள்விபட்டிருக்கிறேன்.

said...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, நானேசில கேள்விங்களுக்குப் பதில் சொல்லும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளேன்.

1. தி ஒன் அண்ட் ஒன்லியா இருந்த இந்த 'அக்கா'வுக்குப் போட்டியா ச்சின்னதும்
பெருசுமா அக்காக்கள் உருவாகி வர்றதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்:-)

( பொம்பிளைக்குப் பொம்பிளைங்கதாம்பா எதிரிங்க:-))

2. சோளவரம் ரேஸ்ன்னு இப்பத் தனியா நடக்குதோ இல்லையா தெரியாது. ஆனா
இந்தியாவுலே அதிலும் தமிழ்நாட்டுலே ஹைவேஸ் இருக்கு பாருங்க, அங்கேயே
இப்பல்லாம் தினமும் ரெகுலரா நடந்துக்கிட்டு வருது. வேற வேற 'கேட்டகிரி'ன்னு கிடையாது.
எல்லா வண்டிங்களும் ஒண்ணாக் கலந்துக்கணும்.

பரிசு, பொதுவா மேலே போக ஃப்ரீ டிக்கெட். இதுலேயும் பாகுபாடு, ஜாதிமத பேதம் ஒண்ணும் இல்லை.
முக்கியமா அரசியல்வாதிங்க தலையீடு அதிகமா இல்லை.

3. ரவி ஸ்ரீனிவாஸ்க்கு:

இப்படி 'பின்னூட்ட நாயகி'ன்னு பெத்தப் பேரு வச்சுக்கிட்டுக் 'கேவலம் 200 பவுன்' மட்டும்தானா?
அது ஒட்டியாணத்துக்கே பத்தாது.நம்ம 'ரேஞ்சுக்கு' இன்னும் கொஞ்சம் போட்டுக் குடுக்கச் சொல்லவும்:-))))

said...

சின்ன அக்கா பட்டம் கொடுத்தது நான் இல்லை.
இராமநாதன்னு நினைக்கிறேன்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை மாதிரி

அக்கா என்றால் அது நீங்க மட்டுந்தே !