Monday, August 29, 2005

என் ஆட்டோகிராப்

சேரனை பார்த்து மக்கள் கெட்டு போய்விட்டார்கள். இப்ப எங்கு பார்த்தாலும் பிளாஷ் பேக்குகள்

கல்லூரியில் , பஸ்ஸில் பெண்ணை உற்று நோக்குதல், அழ வைத்தல் இதயம் நெகிழ்வுடன் பகிரப்படுகின்றன. Square Drive அடித்து கிளிகளை கபாஸ்கராய் கவர்ந்த்து எப்படி என்று பதிவுகள் பல. ( விஸ்வநாத் அல்லவா Sqaure Drive க்கு பேமஸ். குண்டப்பா என்ற செல்ல பெயர் வெளியில் சொல்லுமாறு இல்லையோ ?? )

இதோ என் ஆட்டோ கிராப் !!

பத்தாவது படிக்கும் போது தான் பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் ஒரு மயில் வந்தது. . மயில் சென்னையில் இருந்து வந்திருந்தது.மஞ்சள் bottom, கறுப்பு top, கலக்கலாய் இருந்தது மயில். அன்று சென்னைப் பற்றி ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவே இல்லை.

மயிலின் பேர் தெரியவில்லை . மயில் வந்த விஷயத்தை பசங்களுக்கு நான் தான் சொன்னேன்.

கோலி சோடா குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு சென்னை மயில் வீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது.

அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். மயில் வீட்டில் தாகசாந்தி நடக்கும். யாரும் பார்க்காத போது மயில் மேல் ஒரு செல்ல இடி . ஒரு ஆசை தடவல் மாமி வருவதற்குள் ஓட்டம்.

தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன்
பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.

அதில் இரண்டு குழந்தைகள் மயிலோடு எப்பவும் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் மயிலோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள்.இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது.

மயில் வீட்டு மாமி என்னை கூப்பிட்டார்கள் .
'மாமா ஆத்துல இல்ல. மயிலோட கொஞ்சம் கடைதெரு வரைக்கும் போய்விட்டு வரையா ?"

என் அதிர்ஷ்டத்தை என்னெவென்று சொல்வது.
இவ்வளவு நாள் கிட்டக்கூட நெருங்கி பார்க்காமல் இருந்த மயிலோடு கடைத்தெருவா ..

நான் மயிலோட சென்றதை கபில்தேவ், விவ் ரிச்சர்ட்ஸ், போத்தம் எல்லாம் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந் தார்கள். கடைத்தெருவில் ஆசை ஆசையாய் மயிலின் புகைப்படம் ஒன்றும் எடுத்து விட்டேன்.

அப்புறம் மாமா,மாமி வீடு மாற்றி சென்றவுடன் மயிலும் போயே போச்சு .

சோகம் தாளாமல் நான் கவிதைகளாய் எழுதி தள்ளினேன்.

மயிலே!!
உனக்கு மெயில் அனுப்ப
குயிலை தேடினேன்
குயில் சொன்னது
இன்று போஸ்டல் ஸ்டரைக் !!!

அந்த நாட்களுக்கு சாட்சியாக ஒரு படம்தான் மிச்சம்

காஞ்சி மயில் என்று, நாங்கள் அன்று பெயர் வைத்த அந்த மயிலின் புகைப்படம் இங்கே.

பாகம் ஒன்று முடிந்தது ..

( சே சே.. இந்த V.M. கதைகள் படிச்சிட்டு என் புத்தி இப்படி ஏன் ஆயிடிச்சு ?? )

14 comments:

said...

//கல்லூரியில் , பஸ் பெண்ணை உற்று நோக்குதல், அழ வைத்தல் இதயம் நெகிழ்வுடன் பகிரப்படுகின்றன. //

நண்பா தங்களோட ப்ளாஷ்பேக் அருமை..தயவுசெய்த சேரனிடம் கொடுத்திராதீங்க

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

said...

ரெண்டு மயில் தெரியுதுங்கோ

said...

சூப்பர், கலக்கல் சின்னவரே...

என் ஆட்டோகிராப் எல்லாம் கிளப்பி விட்டுடீயே தல...

நான் ஒரு தடவை, இப்படித்தான் . ஒரு மயிலு ஓனர்கிட்ட என்னப்பா இப்படி ரேட் சொல்றேனு கேட்டு..அதுக்கு அவரு ..இஷ்டம் இருந்தா வா ..இல்லைனா வேற மயிலு பார்த்துக்கோனு சொல்ல..
வேற மயில தேடி லோ லோ னு அலைஞ்சி ..அப்புறம் கடைசியா ஒரு வயசான மயிலு தான் கிடைச்சது...
அந்த மயிலு....
இதுக்கு மேல வேணாம் சாமி...அப்புறம் தனியா சொல்றேன்.. அது பெரிய கத.. :)

//( சே சே.. இந்த V.M. கதைகள் படிச்சிட்டு என் புத்தி இப்படி ஏன் ஆயிடிச்சு ?? )///

யோவ், எத்தனி பேரு கெளம்பி இருக்கீங்க.. அங்க ஒரு அம்மனி என்னடானா .. பட்டம் கொடுத்தா போட்டுத்தாக்குது.. அப்புறம் ஒரு நெய்வேலி காரரு ஒருத்தரு.....
ஏற்கனவே ஞானஸ், குழலினு ஒரு கூட்டம்...

said...

நிலவு நண்பன்:
சேரன் கிட்ட கொடுக்கற மாதிரி எழுதத்தான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே. நான் எதுக்கு ?
:)

பொதிகை மைந்தன்:
அந்த இன்னொரு மயில், இந்த மயிலின் தங்க ஹி ஹி

வீ. எம் :
மீதி கதையை எனக்கு மட்டுமாவது சொல்லுங்க..

யார்ங்க அந்த "பட்டம்" அம்மணி ?

said...

//யார்ங்க அந்த "பட்டம்" அம்மணி ? //

http://www.blogger.com/comment.g?blogID=10985079&postID=112460686364945459

மீதி கதையை எனக்கு மட்டுமாவது சொல்லுங்க
ஒரு பதிவா போட்டுட்டா போச்சு!

said...

நான் கொடுக்கிறேன் உங்களுக்கு பட்டம்.

கலக்கல் கதையாசிரியர் "பெப்ஸி" V.M

said...

kavithai kalakkal !!!


do you write these kind of kavithais regularly ?

:-)

said...

இந்த மாதிரி கவிதைகள் நண்பர் பவுர்ணமி பாண்டியன் நிறைய எழுதுவார்.

said...

hehehehehehehe

said...

இதுதான்யா நிஜமான "ஆட்டோ" கிராப்

said...

நன்றாக இருக்கு சின்ஸ்.

you and your sense of humor :)

said...

//நன்றாக இருக்கு சின்ஸ்

நிஷா
இப்படி எல்லாம் கூப்பிட்டீர்கள் எனில்
நான் ஆட்டோகிராப் அடுதத பாகத்தை எழுத வேண்டி இருக்கும்.
இது எச்சரிக்கை.

said...

சூப்பர் தல சூப்பர்,

இது எப்படி என் கண்ணிலிருந்து தப்பித்தது இத்தனை நாளா?

said...

Thanks Kuzhali
:)