Monday, September 26, 2005

அடுத்த பிரச்சினை

தங்கர் , குஷ்பு பிரச்சனைகளுக்கு அடுத்து, தமிழகத்தில் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.

பிரபல கவர்ச்சி நடிகை குலுக்காதேவி இன்று "India Day after Tomorrow " ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்

"ஆண்கள் எல்லாம் அழுக்கானவர்கள். வியர்வை நாற்றம் உடையவர்கள். தனி மனித சுகாதாரம் இல்லாதவர்கள். '

என்று கூறியிருக்கிறார். இதனால் தமிழகத்தில் வேற வேலை இல்லாத மக்கள் கடும் கோபம் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் ஆண்களை இழிவு படுத்தும் செயல் என்ற கண்டணம் எழுந்து உள்ளது.

எதிர்ப்பு அதிகம் ஆவதை உணர்ந்த குலுக்கல் தேவி அவசரமாய் பாத்ரூமிற்குள் ஓடி ஓளிந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களாய் அவர் வெளியில் வரவில்லை.

அனைத்து ஆண்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் அவர் வீட்டு வாசலில் சோப்பு, டவல் போன்றவற்றை வீசி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இதை பற்றி பிரபல வலைபதிவர்களிடம் எமது தினமூடி நிரூபர் கருத்து கேட்ட போது .

பதிவர் 1:

:எனக்கென்ன ஒரு வருத்தம் குலுக்காவிடம் என்றால் அதென்ன ஆண்கள் மட்டும் என வரையறை ?வியர்வை வாராத பெண்களே இல்லையா, இல்லை சிறுவர்களிடம் வியர்வையே வருவதில்லையா ? என்ன இருந்தாலும் குலுக்கா ஒரு புரச்சி புரோக்கிராமர் சீ சீ புரட்சி பெண்தான்.

பதிவர் 2:
குலுக்கா தோசை, குலுக்கா பேண்ட் எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள். குலுக்கா என்ன தினமும் குளிக்கிறாரா?
அவர் சுவிஸ் சூட்டிங் போன போது என்ன நடந்தது என்று தெரியாதா ?. 4 நாட்கள் குளிக்காமல் கும்மாளம் போட்டவர்தானே அவர்.

ஏற்கனவே குளிக்காமல் தேமல் வந்துக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.


பதிவர் 3:
இராமயாணக் காலத்திலேயே இராமரும் இலக்குவனும், காட்டில் இருந்த போதும், இராவணனுடன் சண்டை இட்ட போதும் தினமும் குளித்ததாக கம்பர் எழுதி இருக்கிறார்.
என்னே ஆண்களுக்கான குளியல் கட்டுப்பாடு ?
.மனம் அழுக்காய் இருக்கலாம் ஆனால் உடல் அழுக்காய் இருக்கக் கூடாது என்பதே பண்பாடு. எவ்வளவு போலிகள் நாம்.

சனி நீராடு *
எந்த சனிக்கிழமை என்பதை நாமே முடிவு செய்வோம் !

பதிவர் 4::
குளியல் என்பது வேறு. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வேறு.
குலுக்கா தேவி சொன்னது யதார்த்தம் .அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். உண்மையை வெளியில் பேச தைரியம் வேண்டுமல்லவா?

இவரைப் பற்றி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கன்னடக்காரனை தட்டிக் கேட்கட்டுமே பார்க்கலாம். அதற்கு தைரியம் இருக்கிறதா ?

பதிவர் 5:
குலுக்கா தேவி உண்மையில் என்ன சொன்னார் ?
விளையாடி விட்டு அல்லது gym ல் உடற்பயிற்சி செய்து விட்டு வரும் ஆண்கள் வியர்வை நாற்றத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் உடனே குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மிகவும் அழுக்குடன், வியர்வை நாற்றதுடன் இருப்பார்கள். என்பதே !

நான் குலுக்கா தேவி இடத்தில் இருந்தாலும் இதையே சொல்லி இருப்பேன். இதில் என்னத் தவறு இருக்கிறது ?


பதிவர் 6:
வியர்வையில் நனைந்தபடி
ஒரு ஆண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில்
மட்டும்மூடிக் கொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் மூக்குகளை !

உங்களது மூக்குகள்
எதையாவது மெல்ல முகந்தப்படி
வியர்வையில் நனைந்தபடி எவனவது ஏறுகையில்
உங்கள் கைக்குட்டைக்குள் ஓளிந்த
அவன்களுக்குப் நாற்றமடித்த போதும்
சனநெரிசலில் மூடிய மூக்குகளை
மறைக்காமல் சுவாசிக்க தொடங்குங்கள்
இப்போதே. !!!

----------------------------------------------------------------------
பாதுகாப்பு காரணம் கருதி பதிவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யார் அவர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன ?

22 comments:

said...

ஹி..ஹி..ஹி

said...

சூப்பரோ சூப்பர்

said...

யாரின் பாதுகாப்பு ?
உங்களின் பாதுகாப்பா ? இல்லை அவர்களோட பாதுகாப்பா ?

*|*
---

said...

ஹா ஹா ஹா! timely joke

said...

நன்றி சிவா,அனானி(ஸ்), ராமா

said...

kavithai kalakkal !

:-)

said...

எதில் பிரச்சினை ?

வியர்வையிலா?

மூக்கிலா?

துர்நாற்றத்தை எடுத்துச் செல்லும் (media) காற்றிலா?

said...

welcome back NJ !

said...

வாங்க NJ
ஆடிய பாதங்களுக்கு நன்றாக ஓய்வு கிடைத்தா ?

பிரச்சினை,
வியர்வை வரும் என்று கூறியது சரியா/தவறா
நாற்றத்தை மறைக்க "செண்ட்" போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா
என்று பேசி பொழுது போக்கும் நம்மிடமும் உள்ளது என்றூறு சொல்லலாமா ?

said...

உம்ம கவிதை ஒரிஜினலை விட எவ்வளவோ பராவாயில்லை !

தலையை ஆட்டும் ஆட்டுக் கூட்டம் !!

said...

இராஜேஷ¥
என் கவிதை மேல என்னய்யா கோபம் உங்களுக்கு.
இந்த தாக்கு தாக்குறீரு !

said...

:-))

said...

2, 3 ஈஸியாப் போச்சே ஸி(இ)ம்சா !!!

மத்ததுக்கு மீட்டிங் முடிச்சிட்டு வாரன் !

said...

குசும்பரே
உம்ம ரேஞ்சுக்கு சூட்சுமாய் எழுத நமக்கு இன்னும் அனுபவம் பத்த மாட்டேங்குது !
ஞான் இன்னும் கத்துக் குட்டி சாரே ..
கொஞ்சம் ஷமிக்கனும்
:-)

said...

ஆறில் அஞ்சு தெரியுது. ஒன்னு மட்டும் சிக்க மாட்டேங்குது

said...

so ennaiya pudichitteenga intha pathivukku..

nalla irukku

anbudan vichu

said...

நன்றி விச்சு..
உங்களின் பதிவுகளில் நிறைய விஷயம் இருக்கு !

said...

சின்னவரே நீர் பெரிய ஆளுய்யா........

விஷேசமா ஏதாவது பதிவு போடுங்களேன்.....
அடுத்தவரை எத்தனை நாள் தான் நக்கலடித்துக் கொண்டிருப்பது...?

said...

சொந்தமாய் பதிவு போடற திறமை இருந்தா நான் இந்நேரம் கான மயிலா ஆடிக்கொண்டு இருக்க மாட்டேனா கணேஷ¤..


----
வான்கோழி

said...

வாங்க அவதாரம்,
என்ன கொஞ்ச நாளாயாய் ஆளைக் காணோம் !

said...

ஏமண்டி! பதிவர் எவரண்டி?

said...

//ஏமண்டி! பதிவர் எவரண்டி?

அதை தெரிஞ்சு நீ என்னப் பண்ணப் போற பேராண்டி ?