Wednesday, October 05, 2005

வழக்கமான முகமூடி பதிவு

இப்ப வருகிற ஒரு வழக்கமான பின்னூட்டம் "இது ஒரு வழக்கமான --- --பதிவு . ( கோடிட்ட இடத்தில் உங்களுக்கு பிடித்த பெயரை போட்டுக் கொள்ளுங்கள் . ) இது முக்கியமா முகமூடியின் எல்லா பதிவிலும் வரும்.

இது என்னடா வழக்கமான பதிவு என்று புரியாமல் திண்டாடும் "கோயிந்த சாமி"களுக்காக ஒரு சிறிய விளக்கவுரை !

தமிழ்மணத்தில் "இமேஜ்" முக்கியம். நீங்கள் இப்படி பட்டவர், இப்படித்தான் எழுதுவீர்கள், எழுத வேண்டும் என்று "எழுதப்படாத" விதி இருக்கிறது. அதன்படி முகமூடியின் வழக்கமான பதிவு நீங்களும் எழுதலாம். செய்ய வேண்டியது இதுதான்.


தேவையானவை:
  • தமிழ்மணத்தில் வரும் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படித்தல் அவசியம். ( சாதா, சோதா, ஸ்பெஷ்ல் ரவா என்று எல்லாம் பாகுபடுதாமல் அனைத்தையும் படித்தல் அவசியம் )
  • கூகுளில் பட்ம் தேடும் வசதி, கொஞ்சம் போல போட்டோ எடிடிங்க்
  • குழந்தைகளுக்கான கதை புத்தகம்.

செய்முறை:

  • எழுதப் போகும் விஷ்யம் . இது ரொம்ப முக்கியமானது. உங்களின் பதிவு வெறும் 5, "- " ஓட்டு வாங்குமா, இல்லை 30, "-" ஓட்டு வாங்கி அமோக வெற்றி பெறுமா என்பது இதில்தான் இருக்கு . உங்களுக்கு பிடித்த ( அப்படியென்றால் பிடிக்காத என்று அர்த்தம் ) அரசியல்வாதி/நடிகர்/நடிகை/பதிவர் கூறிய அபத்த கருத்துகளை தேர்ந்து எடுங்கள் ( அதுதான் தினமும், யாராவது ,எதையாவது உளறிக்கிட்டே இருக்காங்களே ! தலைப்புக்கா பஞ்சம்).
  • வில்லன் தேர்ந்து எடுத்தல் :நேற்று இரவு உங்கள் குழந்தைக்கு படித்துக்காட்டிய விலங்கு படக்கதை புத்தகத்தில் இருந்து ஒரு கொடிய விலங்கை தேர்வு செய்யுங்கள் . உதாரணதிற்கு, ஓநாய், பக்கத்து வீட்டு வெறி நாய், சிறுத்தை, புலி.
  • அப்பாவி : அதனிடம் அவதிப்படும் ஒன்றையும் தேர்வு செய்யுங்கள். ( நாயிடம் கடி வாங்கிய பக்கத்து வீட்டு சிறுவன் , புலியிடம் அடிப்பட்ட முயல், சிலுக்குவார்பட்டி கோமணக் கிழவன் இப்படி. )
  • புனைப்பெயர்கள் : வில்லன், ஹீரோ எல்லாம் நேரிடையாகத் புரியும் பெயரில் எழுதக்கூடாது. சுவாரிசியம் போய் விடும். உதாரணதிற்கு , நாலு விரல் கொண்ட மஞ்சள் ஆசாமி என்பது ஸிம்ஸன் என்பதை விட எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது அல்லவா ?
  • பதிவுக்கு தேவையான படத்தை கூகுளுங்கள்.
  • உங்களுக்கு பிடித்த நடையில் தேவையானதை எழுதி, படத்தை போட்டு, மிக்ஸியில் இரண்டு நிமிடம் "நைசாக" அரைத்து, மைக்ரோவேவ் வில் 45 செகண்ட் போட்டு எடுத்தால் சுடச்சுட வழக்கமான பதிவு ரெடி.

அதையும் படித்துவிட்டு "இது ஒரு வழக்கமான பதிவு" என்று வழக்கமாய் வரும் பின்னூட்டங்களை பார்த்து மகிழுங்கள்.

( Patent Pending: NO 45723872873 , All rights reserved)


13 comments:

said...

hahaha.. chinnavar nu vechadhukku padhila.. ungalukku "nakkals" peru vechirukalam... !

eppadiya mudiyudhu..???

edho ennaala mudinja oru + :)

said...

நன்றி வீ எம்.
பதிவின் வெற்றியே அதில் விழும் ஓட்டில்தான் இருக்கிறது !

நீங்களாவது சொல்லுங்க. யாருங்க இந்த கோயிந்தசாமி ?

said...

:-))

said...

நீங்கள் தேடுவது இதுவாகவும் இருக்கலாM!

http://goinchami.blogspot.com/

அன்புடன்,
(மாமா)சாமி

said...

வழ வழ

said...

உம்ம ரவுசுக்கு ஒரு அளவே இல்லயா? இந்த தடவை விழாமல் சிரித்தேன் ;-))

வீ.எம். அதான் அவரு "-" ஓட்ட வச்சித்தான் வெற்றிங்கறாருல்ல, அப்புறம் என்ன "+" ஓட்டு போட வேண்டி இருக்கு... "-"வ இங்க போடுங்க, "+"க்கு அணுகுங்கள் முகமூடி

said...

அப்புறம் நீங்கள் குறிப்பிடுவது தவறு...

அது "கோயிந்தசாமி" அல்ல...

கோயிஞ்சாமி

பேடந்த் கேஸ் வரணுமா?

said...

இது ஒரு வழக்கமான பதிவு!!!

said...

சாமி நன்றி

NJ: என்ன பண்ணற்துங்க . உம்ம மாதிரி "தெளிவா " எழுத நம்மால முடியுமா ?

முகமிலி :
அந்த இரண்டு "-" ஓட்டும் உம்முடையதா ?
"கோயிஞ்"சாமியோ "கம்மிங்ஞ்"சாமியோ.. தலை சுத்துதுடா நாராயணா !


பாண்டி
இதுதானே வேண்டாம்கிறது. இந்த பின்னூட்டததை முகமிலியின் பதிவில் போடறதுக்கு பதிலா இங்க போட்டுடீங்களா ?


தனிதனியா பதில் சொல்லி இருந்தா பின்னூட்ட எண்ணிக்கை ஒரு நாலு ஜாஸ்தியாய் இருக்கும்

said...

:)

said...

நான் "-" போடலையப்பா... அது எந்த "நண்பர்களோ"??

நான் அனுபவித்து "-" ஓட்டு போடும் ஒரே பதிவு NJ பதிவு மட்டுமே என்பதை இந்த நேரத்திலே...

said...

முகமூடியின் எள்ளல் பதிவுக்காக மட்டுமே உருவாக்கி வைத்திருந்த இன்ஸ்டண்ட் மறுமொழியை என் கையில் இருந்து தட்டிப் பறிக்கும் சின்னவரே,
இது உங்களின் வழக்கமான பதிவு!

said...

நிறைய "-" ஓட்டு போட்டு இந்த பதிவை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவரின் Ip address மூலம் தேடிக் கண்டுபிடித்து, உங்க கம்ப்யூட்டரை hack க்கி Credit Card, bank a/c number, SSN எடுத்துக்கொண்டும், உங்களின் மெயிலுக்கு வைரஸ் அனுப்பி வைக்கவும் என்னால் முடியாததால் என்னால் முடிந்த

நன்றி!! நன்றி !!!...