Wednesday, August 31, 2005

தங்கர் , ரிக்கி பாண்டீங்க்

பாண்டீங்க் செய்த தவறுதான் என்ன?

சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் ரிக்கி பாண்டீங்க்.

இங்கிலாந்து எப்படி தேவையில்லாமல் substitute க்களை பயன்படுத்துகிறது எடுத்து கூற வந்து கெட்ட வார்த்தைகளில் இங்கிலாந்து அணியினரையும் அவர்களின் பயிற்சியாளரையும் திட்டி புயலை கிளப்பிவிட்டார்.

Damien Martyn எப்படி அம்பயரிகளிடமும் , பேரே தெரியாத substitute பீல்டர்களிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.

ரிக்கி பாண்டீங்கும், மார்டீனும், க்ளார்கும் ரன் அவுட் ஆனதிற்கு அவர்களுக்கு சரியாக ஓடத்தெரியாதது மட்டும்தான் காரணமா ? சூப்பராய் பீல்டிங்க் செய்யும் substitute பீல்டரும்தான் காரணம்.

ஆட்டம் இடையில் பாத்ரூம் பிரேக் எடுக்காத கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் யார்தான் இல்லை? ரிக்கி பாண்டீங்க் அப்படியே ஆடுவாரா ? இல்லை அம்பயர்கள்தான் ஆட விடுவார்களா ?

விளம்பரத்தில் நடிக்காத கிரிக்கெட்டர் யார்தான் உள்ளனர்? ஆனால் Sprit of the Game என்பதே இல்லையா?? ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில்தான் , இங்கிலாந்து இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், டாஸ் போடும் போது பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தோற்காத Ashes இப்போது தோற்கும் நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டதுக்கு யார்தான் பொறுப்பு.


ரிக்கி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பாத்ரூம் பிரேக்கு மட்டும் substitue OK " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இங்கிலாந்தின் விதிகள வளைக்கும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.


இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல் தான் வேண்டும். அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு இந்திய கிரிக்கெட் போர்டை வறுத்தெடுக்கும் இங்கிலாந்து அணியினர், முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.


இங்கிலாந்து செய்யும் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை ரிக்கி பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் அவரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?

இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.


ரிக்கியின் கெட்ட வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் Match Referee க்கள் என்ன substitute யே பண்ணாதவர்களா , இல்லை எதிர் அணியினரை திட்டாதவர்களா ? Sledgeing என்னவென்று கிரிக்கெட் ஆடுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

"இங்கிலாந்தை பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், match suspension . suspension தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று ரஞ்சன் மடுகலே , கூட்ட முடிவில் அறிவித்தார்."


மேட்சுக்கு மேட்சு இந்தியாவில் வந்த போதெல்லாம் Leg stump க்கு வெளியே negative bowling போட்ட இங்கிலாந்தே வாழ்க உனது திறமை !!

20 comments:

said...

அதுதான் ரிக்கி பாண்டீங்க் மன்னிப்பு கேட்டு விட்டாரே,
அப்புறம் என்ன தலைப்பில் பாண்டீங்க என்ன தப்பு செய்தார் என்று போட்டு இருக்கிறீர்கள்?

said...

மோசமான மக்கள் அதிகம் புலங்கும் ஆட்டம் கிரிக்கெட் . பொய்யும் பித்தலாட்டமும match fixing ் ஆட்சி புரியுமிடம். இதுல யாரை போய் குற்றம் சொல்ல?

said...

சின்னவன்,

ரிக்கி பாண்டீங்க் மட்டும் உங்களுக்கு பிடிக்காத ஆட்டகாராய் இல்லாவிட்டால் உங்கள் பதிவு எப்படியிருந்திருக்கும் என்று நினைக்க விக்கல் வருகிறது.

said...

நல்ல பதிவு தல..
ஆனா சில சமயம் இந்த மக்கு மாதிரி பேசி ரிக்கி பிரச்சனைக்கு வலிய போறாருனு எனக்கு தோனுது..

said...

யப்பா பயங்கர timing sense உங்களுக்கு.
சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல.

என்னையுமா :-)))))))))))

-சோழநாடன்

said...

நன்றி.. சோழநாடன்..
நீங்க எந்த பதிவுமே போடறது இல்லை .
அதான் வெறும் பின்னூட்டம் மட்டும் உங்க பேரில்!!
:)

said...

சின்னவன்
இந்த முக்கிய பின்னூட்டத்தை விட்டு விட்டீர்களே ..

ஆயா கடையில பாயா விற்கறாங்க என்று சொன்னதுக்கு தண்டனையா ?

said...

அனானி
வம்புல மாட்டி விடறீங்களே
அப்புறம்,

உங்க ஆயாவை விட அந்த பாயா கடை ஆயா எவ்வளவு நல்லவங்க,
ஆயா இல்லைனா, உங்க அப்பா இல்லை, அவர் இல்லைனா நீயே இல்லை

என்று என்னத் திட்டப்போறாங்க..

அப்புறம் நம்ம தலைவர் முகமூடி வேற
பாண்டிங்க் மூக்குபொடிகளுக்கு ஒரு தும்மல்

என்று தனி பதிவே போட்டு தாக்கிடுவாரு.

said...

intha matter suru surunnu serious pooyittu irukkumpothu ippadi oru pathivu.. really relaxing.. I enjoyed every line and laughed for every line.

Thanks Chinnavan.

said...

//பாண்டீங்க் செய்த தவறுதான் என்ன? //

வேகமா ஓடாதது, ... மற்றும் எதிரணியினரை வசைமாரி பொழிஞ்சது... இது முதல் முறையல்ல

[இது எப்பிடி இருக்கு????]

said...

lol ;-))

// பாண்டிங்க் மூக்குபொடிகளுக்கு ஒரு தும்மல் // இப்பதிவையும் சீன்னவனே போடும்படி ண்J விலிருந்து ஒருவர் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார்..

said...

Suresh, Pandi, Mugamoodi..
Thanks.

said...

holidayinSeptember!
seeyouallinOctober!!

said...

ஐயோ, ஐயோ, ஐய்யய்யோ..... சின்னைய்யா, இருந்தாலும் உமக்கு இந்தக் குசும்பு ஆகாது.
கெவனமா இருங்க.
இல்லாங்காட்டி, உங்களுக்கு ஆப்பு வெக்கணும்மின்னு நெறய பேரு காத்துகிட்டிருக்காங்க.

said...

//கெவனமா இருங்க.

Thanks Anonymous
:)

said...

ம்ம்ம்ம்ம்

கவனிச்சுக்குறேன்....

said...

//ம்ம்ம்ம்ம்

//கவனிச்சுக்குறேன்....

??????

said...

கிரிகெட் பற்றி ஒன்றும் தெரியாமல் இப்படி பேசும் ,அது மட்டுமின்றி ஏதோ substitute என்றாலே தவறானவர்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கும் உங்கள் பதிவை மிக வன்மையாக கண்டிக்கிறேன் சின்னவரே!

உங்கள் நன்பர்கள் யாராவது substitute ஆக போய், ரிக்கி பாண்டிங் இப்படி பேசியிருந்தால் நீங்கள் சும்மா இருந்திருப்பீர்களா..

ரிக்கி பாண்டிங் அடிப்பொடிகளுக்கு ஒரு கேள்வி கேட்டு விரைவில் ஒரு பதிவு போடுகிறேன்.

கிரிக்கெட் சரியா விளையாட தெரியதுன்னாலும் உங்களுக்கு கொஞ்சமாவது பந்து பற்றி தெரிந்திருக்கும்னு நெனைச்சேன்.. இந்த பதிவ பார்த்து அது கூட தெரியாதுனு நல்லா புரிஞ்சுப்போச்சு..

ஸ்போர்ட்ஸ் ஷாப் ல இப்படி அப்டமன் கார்ட் விக்கிறாங்கனு சொன்னவருக்கு கிடைச்ச பரிசு இது

உங்களை போன்ற கிரிக்கெட் அல்லது அப்டமென் கார்ட் பற்றிய மூளைவளர்ச்சி இல்லாதவங்க கிட்ட என்ன பேச முடியும் சின்னவரே?

அப்டமென் கார்ட் போடாம விளையாடி பந்து அடிச்சா substitute ku என்ன வலி இருக்கும்னு பாண்டிங்கும் உணரவில்லை. நன்பர் சின்னவரும் உணரவில்லை ..
எப்பவோ ஒரு மேட்சுல substitute ஆ இருந்து அப்டமென் கார்ட் போடாம பாண்டிங் அடிச்ச பந்தால அடி வாங்கினவங்க எல்லாம் இப்ப பாண்டிங்க அளவுக்கு மீறி தாக்குவது தெரிகிறது.
இருந்தாலும் உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் சின்னவரே. பாண்டிங் ஒரு bowler வேதனையின் வெளிப்பாடாகத்தான் அந்த கருத்தை கூறினார் என்பதை அனைவரும் மறந்து விட்டனர்..

குறிப்பு : இவை யாவும் சொந்த கருத்தே .. வேற எந்த பதிவிற்கும் வந்த கருத்தின் தாக்கம் அல்ல அல்ல அல்ல

said...

//இவை யாவும் சொந்த கருத்தே .. வேற எந்த பதிவிற்கும் வந்த கருத்தின் தாக்கம் அல்ல அல்ல அல்ல


:)

said...

தயாரிப்பாளர் தங்கர் பச்சான் அவர்களுக்கு,

வணக்கங்க..

உங்களை எப்படி விளிக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்ங்க. ஒளி ஓவியர்னா, இயக்குனர்னா, நடிகர்னா எப்படி விளிக்கணும்னு ரொம்ப யோசிச்சேன்ங்க. அப்புறம்தான் போனவாரம் முழுக்க சினிமா உலகத்தையே ஒரு கலக்கு கலக்கினீங்களே..அதுக்கு நீங்க தயாரிப்பாளர் ஆனதுதானே காரணம்னு புரிஞ்சு அப்படியே உங்களை இந்தக் கடிதத்துல விளிச்சு இருக்கேன். தப்புங்களா?

எனக்கு ஆரம்பத்துல உங்களை ரொம்பப் புடிச்சிருந்ததுங்க. வணிக மயமான சினிமா உலகத்துல நீங்க ரொம்பத் தமிழ் உணர்வோட இருந்தீங்க. சினிமாங்கற சூதாட்டத்துல நாம தாய்மொழியைப் பறிகொடுத்துடக் கூடாதேங்கற உங்களோட ஆதங்கம் சரின்னுதான் நான் நினைச்சேன்ங்க.

ஆனா நாம நினைக்கறதைச் சொல்றதுக்கு ஒரு வழிமுறை இருக்குது இல்லீங்களா? நீங்க பட்னு போட்டு உடைச்சுடறீங்க. அதுபோக நீங்க மட்டும்தான் புதிய மாற்றங்களுக்காக முயற்சி செய்யற மாதிரியும் உங்க சக படைப்பாளிகளும் முன்னோடிகளும் ஏற்கனவே இருக்கற சினிமா நீரோட்டத்துல கரைஞ்சு போனவங்க மாதிரியும் அடிக்கடி பேசறீங்க. சரி விடுங்க..அது உங்க சுதந்திரம்.. ஆனா உங்க சுதந்திரம் மத்தவங்களோட மூக்கு நுனி வரைக்கும்தான் இல்லீங்களா?

அதுதான் இப்போ பிரச்னை ஆயிடுச்சு.. ஒரு நடிகனும் நடிக்க வரமாட்டேங்கறான், அதனால நானே நடிக்கணும்னு முடிவு பண்ணினேன்னு சொல்லி நடிகர்கள் மேல கல்லெறிஞ்சிருக்கீங்க. ஒரு 'தலை சீவி விடற பொம்பளை' 600 ரூபாய்க்காக படப்பிடிப்பையே நிறுத்தறான்னு சினிமாவுல வேலை பார்க்கற தொழிலாளர்களைப் புழு மாதிரி துச்சமா மிதிச்சிருக்கீங்க.. பணத்துக்காக மட்டுமே நடிக்கற நடிகை விபச்சாரின்னு பெரிய அணுகுண்டையே எடுத்து நடிகைகள் மேல வீசியிருக்கீங்க..

இந்த மூணு விஷயமும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினன்னு சொல்றதில எந்தவிதமான மிகையும் இல்லீங்க. ஒருவேளை இப்படி எல்லாம் நீங்க பேசாம பத்திரிகையில தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டிருப்பாங்களோன்னு உங்க விழாவுக்கு வந்த நண்பர்கிட்டேயும் உங்க பேட்டியை வெளியிட்ட பத்திரிகை தொடர்பானவங்க கிட்டேயும் விசாரிச்சேன்ங்க. நீங்க பேசினது எல்லாத்துக்குமே டேப் ஆதாரம் இருக்குதாம்..அப்புறம்தான் சரி, நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு தப்புத் தப்பா பேசிட்டாருன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்ங்க..

ஒரு படத்துல நடிக்கறதும் நடிக்காததும் ஒரு நடிகனோட விருப்பம். அவங்க உழைப்புக்கேத்த கூலியாக அவங்க கேட்கறதை நீங்க கொடுத்தீங்கன்னா அவங்க நடிக்க சம்மதிச்சு உங்க கூட ஒப்பந்தம் போட்டுக்கப் போறாங்க.. சம்பளம், கதை ஒத்துவரலைன்னா என்னை விட்டுடுங்கன்னு சொல்லி விலகியிருப்பாங்க.. அவங்க சில பேரு நடிக்க சம்மதிக்காத படத்துல நீங்க நடிக்கறதும் நடிக்காததும் உங்க விருப்பம். அதுக்காக நாம நடிகர் மேல ஏன் சேறை வாரி வீசணும்?

உங்களுக்கு பல நடிகர்கள் மேல விமர்சனம் இருக்கலாம். உங்க மனக்குறைகள் நியாயமாகக் கூட இருக்கலாம். நீங்க விமர்சனம் பண்ற நடிகர்களோட – நடிகைகளோட எண்ணிக்கை அதிக பட்சம் போனா இருபது இருக்குமா? ஆனா தயாரிப்பாளர் கையில இருக்கற பணம் ஒரு திரைப்படமா உருமாறி வர்றதுக்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் தேவைப்படுது. யாரோ சிலரை மனசுல வைச்சுக்கிட்டு நீங்க போற வர்ற ஆளுங்களை எல்லாம் போட்டுத் தாக்கறது சரிதானுங்களா? அதனால, நடிகர்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு பொதுமைப்படுத்திப் பேசறது என்ன நியாயம்னு எனக்குப் புரியலீங்க.

நீங்க வாழற இந்த சமூகத்துல மத்தவங்களும் வாழறதுக்கு இடம் கொடுக்கணும் இல்லீங்களா? இந்த சமூகத்துல தனிமனித வழிபாடு உச்சத்துல இருக்கு..சினிமாவுல மட்டும் இல்லீங்க, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. சினிமாவுல அதிகமா இருக்கா அரசியல்ல அதிகமா இருக்கான்னு பட்டிமன்றம் வைக்கலாம். ஆனா நீங்க நடிகர்களைப் பத்தி மட்டுமே தான் "வாய்ஸ்" குடுக்கறீங்க. "கூலி நான் கொடுக்கறேன், இவன் வேலைக்கு வரமாட்டேன்ங்கறானே " ங்கற உங்க மனப்பான்மைக்கு என்ன பேருங்கறதை நல்லா யோசிச்சுப் பாருங்க..

அடுத்தது ‘தலை சீவி விடுற பொம்பளை’ விவகாரம். நீங்க பேசியிருக்கற வார்த்தைகள், தொனி இதெல்லாம் விவகாரமானதுதாங்க..எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாத் தொழில்ல வேலை செய்யற தொழிலாளர்களுக்கு அவங்க செய்த வேலைக்கு கூலி கொடுக்காம இழுத்தடிக்கறாங்க அல்லது ஏமாத்தியிருக்காங்க.. இதையெல்லாம் பார்த்துத்தானே அவங்க ஓர் அமைப்பாகத் திரண்டாங்க. சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு சம்பள பாக்கின்னா படப்பிடிப்பை மட்டும் இல்ல படம் வெளியிடறதையே நிறுத்தற அளவு பலம் பெற்றாங்க..

ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கற நீங்க இந்தத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாத்தானே குரல் கொடுக்கணும்? ஏன் எதிர்நிலையில் இருந்து பேசறீங்கன்னு புரியலீங்க..உங்களுக்குத் தலை சீவி விடற பொம்பளை கேவலமாகத் தெரியலாம்.. 600 ரூபாய் பிச்சைக் காசாகத் தெரியலாம்..ஆனா அவங்களுக்கு இதை வைச்சுத்தானேங்க வாழ்க்கை? உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் கொடுக்கற சம்பளத்தை வைச்சுத்தானேங்க அவங்க வீட்டுல அடுப்பெரியணும்? தமிழர் நலன் பத்திப் பேசற நீங்க மனிதாபிமானம் இல்லாம பேசலாமான்னு எனக்குள்ள கேட்டுக் கேட்டு மாய்ஞ்சு போயிட்டேன்ங்க..

அப்புறம் நீங்க ஒரு பத்திரிகைக்காக கொடுத்த பேட்டியில் காசுக்காக மட்டும் நடிக்கற நடிகைகள் விபச்சாரிகள்னு சொன்னீங்களாம். கூலி இல்லாம நடிகைகள் கலைச் சேவை பண்ணணும்ங்கறீங்களா? எத்தனையோ விஷயம் பேசற உங்களுக்கு “விபச்சாரம்”ங்கற வார்த்தையைப் பயன்படுத்தறதுல எந்தக் கூச்சமும் இல்லையா? ராஜராஜ சோழன் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நீங்க சொல்ற ‘விபச்சாரிகள்’ ஒரு சமூகத்துல இருந்து வர்றதுக்கு அந்தப் பெண்கள்தான் காரணமா? யாருடைய எந்தப் பசியைப் போக்கறதுக்கு அவங்க இந்தப் பாடு படறாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா?

மத்தவங்க இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா பரவாயில்லைங்க.. உங்களை மாதிரி சமூக மாற்றம் பத்திப் பேசறவங்களோட “டங்” ஸ்லிப் ஆயிடுச்சுன்னா எப்படா சிக்குவாருன்னு காத்திட்டு இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுடுவாங்க. அதோட மட்டும் இல்லீங்க உங்களுக்குப் பின்னால இந்த மாதிரி குரல் கொடுக்க வர்றவங்களையும் இது பாதிக்கும்.

எப்படியோ ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்கறதே பெரிய விஷயம்தான். நீங்க கேட்டிருக்கீங்க. அதுவும் யார் முன்னால? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு ரமணா படத்துல டயலாக் பேசுன கேப்டன் முன்னால மன்னிப்பு கேட்டிருக்கீங்க. இதன் மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள பிரச்னை தீர்ந்து போகலாம். ஆனா உங்க கிட்ட இருக்கற பார்வை மாறணும்ங்கறது நான் இது தொடர்பா பேசிப் பார்த்த பலரோட கருத்துங்க..

இதைப் பத்தி நான் எங்க பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பி கிட்ட கேட்டுப் பார்த்தேன். “தமிழ் அரசியலை மன்னர்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா அல்லது மக்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா என்பதைப் பொறுத்தே அவர்களது வார்த்தைகளும் பேச்சும் இருக்கும். அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலைல ஒருத்தர் வாயில் இருந்து என்ன வருதோ அதுதான் அவர் மனசுல இருக்கற கருத்து.. மத்ததெல்லாம் வேஷம்..இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு தனி விளக்கம் வேற குடுக்கணுமா”ன்னு கேட்டுச்சு..எனக்கு ஒண்ணுமே புரியலீங்க..உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா?

அக்கறையுடன்,
தெருத்தொண்டன்.