Tuesday, October 11, 2005

லூகாஸ¤ம் ஜார்ஜார் பின்கிஸ¤ம்

இந்த பதிவு அருமை நண்பர்(ன்) இராமநாதன் என்ற செஞ்சட்டை துரோகியின் பதிவின் எதிர்ப்பை காட்ட எழுதப்படுகிறது. அவசர அவசரமாய் கம்யூட்டர் விட்டு கம்ப்யூட்டர் மாறும் நிலையில் உள்ளதால் விளக்கமான பெரிய பதிவை எழுத முடியவில்லை.

ஒரு தலை சிறந்த இயக்குனரை, Jar Jar Binks யையும், R2D2 வயும் உலகுக்கு அறிமுகப்படுத்தியவருமான, ஜார்ஜ லூகாஸை கிண்டலடித்தும், எதிர்த்தும் எழுதும் ஸ்குரூ கழண்ட இராமநாதனையும், அதில் பின்னூட்டம் இடும் நியோ , மாட்ரிக்ஸ் , பாசி, உளுத்தம், பருப்பர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு பரிகாரமாக, உடனடியாக இரம்(?!)நாதன் Hollywood வந்து Screen Actors Guild ல் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரின் வீட்டு வாசல் முன் Vodka குடித்துவிட்டு சீ சீ வீசி போராட்டம் நடத்த Hollywood மகளிர் அணி தயாராக உள்ளது.

மற்றும், நான் கட்ட இருக்கும் Natalie Portman கோயிலுக்கு ஒரு மில்லியன் rubles கட்டாய நன்கொடை வழங்க வேண்டும்.

இராமநாதா, மன்னிப்பு கேள், இல்லையெனில் இரஷ்யாவை விட்டு ஓடு !!






(எப்படி தலைப்பிலேயே உம்மை தொகை இருப்பதால் இதுவும் ஒரு ஆழமான பதிவின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழ் வலைப்பூ உலகம் இருக்கிறது. !! )

26 comments:

said...

உம்மைத் தொகையினால் ஆழம் பெற்ற பதிவுதான். ஆனால் உம்மைகளுக்கிடையே கமா வரலாமோ? ப்டாது.

- அதே அனானிமஸ்

said...

தங்கத்தலைவி நடாலியின் படம் போட்டதற்கு எங்களின் அன்பு கலந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

அகில உலக நடாலி ரசிக ஜொள்ளர்கள் மகாசபை,
மேற்கு ஜாலிவுட்.

said...

சரி தலைவா
கமா வை கழட்டி விட்டு விடுகிறேன்.

said...

எங்கள் சபை தலைவிக்கு ஏற்கனவே கோயில் கட்டிவிட்டது என்பதையும் வேறு யாராவது கட்ட முயற்சித்தால், வசூலாகும் நன்கொடையை எங்களுக்கு கொடுத்துவிட்டு கட்டவேண்டும் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

(ரசிக)கலைஞர். முகமூடி

said...

முகமூடியாரே
முதலில் இந்த பதிவுக்கு நன்றி என்று சொல்ல வேண்டும்.

அப்புறம் தான் உங்களின் கருத்தை எழுத வேண்டும்.

ஆழமான பின்னூட்டங்களின் Template நீங்கள் அறியாததா ?

said...

//
//வசூலாகும் நன்கொடையை எங்களுக்கு கொடுத்துவிட்டு கட்டவேண்டும்
//


நீங்களும் சின்னவரும் ஒரே அணி என்று ஏஜெண்டு சொல்லறாரே. அப்புறம் கோயில் கட்ட காசுக்கு மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறீர்கள் ??

ஒரு புரியாத அனானி

said...

//
//வசூலாகும் நன்கொடையை எங்களுக்கு கொடுத்துவிட்டு கட்டவேண்டும்
//


நீங்களும் சின்னவரும் ஒரே அணி என்று ஏஜெண்டு சொல்லறாரே. அப்புறம் கோயில் கட்ட காசுக்கு மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறீர்கள் ??

ஒரு புரியாத அனானி

said...

//
//வசூலாகும் நன்கொடையை எங்களுக்கு கொடுத்துவிட்டு கட்டவேண்டும்
//


நீங்களும் சின்னவரும் ஒரே அணி என்று ஏஜெண்டு சொல்லறாரே. அப்புறம் கோயில் கட்ட காசுக்கு மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறீர்கள் ??

ஒரு புரியாத அனானி

said...

மன்னிப்பு கேட்கவேண்டிய தேவையும், அவசியமும் எனக்கில்லை. என் பின்னால் உணர்வுப்பிழம்பாய் தமிழகமே திரண்டு நிற்கிறது.

சின்னவர் என்னும் கைப்பொம்மையை ஆட்டுவிக்கும் இருவர் யாரென்பதை தமிழ்தாயின் தன்மானச் செல்வர்கள் யாவரும் அறிவர். பாசி, உளுத்தம் பருப்பு என்று தமிழ் உணவு வகைகளையும் கலாச்சாரத்தையும் கிண்டலடிக்கும் சீரியல், பிரெட் பட்டர் உண்ணும் வான்கோழிகளின் கூட்டத்தின் கொட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவிலில்லை என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

வோட்கா குடிப்பது .மிழ் பண்பாடா? என் பதிவில் கேட்டபடி அஸின், நயன், ஜோ போன்ற தமிழின கலைக்காவலிகளின் தன்னலமற்ற சேவை எவ்வகையில் கொம்பு வைத்து நடித்த நடாலியின் சேவை மேன்மையானது என்று விளக்க முடியுமா? இந்த மோகத்திற்கு பின்னால்.. கருந்தோலை வெறுத்து வெள்ளைத்தோலுக்கு வால் பிடிப்பது என்னும் அருவருக்கத்தக்க பாசிஸ ரேஸிஸ உண்மையே இருக்கிறது என்பதில் சந்தேகமும் உண்டோ?

said...

அனானி
ஒரு தடவை கேட்டாலே போதுமே ?

இதற்கு நான் என்ன பதில் சொல்ல .. தலைவர், (ரசிக )கலைஞர் அவர்களே பதில் சொல்லக்கூடும்..

said...

//என் பின்னால் உணர்வுப்பிழம்பாய் தமிழகமே திரண்டு நிற்கிறது.


இரம்நாதரே, அது உம்மை நாட்டை விட்டு விரட்ட வந்த கூட்டம் என்று ஏன் அறியாமல் போனீர்.



//அஸின், நயன், ஜோ போன்ற தமிழின கலைக்காவலிகளின்


அடப்பாவிங்களே, இதில ஒருத்தர் கூட தமிழ்ச்சியே கிடையாதேடா ( விவேக் ஸ்டைலில் படிக்கவும் )


// நடாலியின் சேவை மேன்மையானது என்று விளக்க முடியுமா?


கிணற்று தவளை போல இருப்பதால் வந்த வினை இது. அமிடால்வின் மேன்மையை பற்றி உலகே அறியும் ( ஆமா closer படம் பார்த்தீர்களா ? அதில் ஆடும் ஆட்டதை பாரும். பிறகு பேசும் ! )


// பாசிஸ ரேஸிஸ உண்மையே இருக்கிறது



ரேசு கார் ஓட்டும் ஒருவரின் படத்தை போட்டு தன் "ரேசிஸ்த்தை" பறை சாற்றிக்கொள்வது நானா ? இல்லை நீரா ?

said...

நாட்டை விட்டு விரட்ட வந்த கூட்டத்திற்கும் தோள் கொடுக்க திரண்டு வந்த கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் பேசும் சின்னவரே,

//அடப்பாவிங்களே, இதில ஒருத்தர் கூட தமிழ்ச்சியே கிடையாதேடா ( விவேக் ஸ்டைலில் படிக்கவும் )
//
தமிழ்நாட்டில் பிறந்தவர் மட்டுந்தான் தமிழர் என்று உமது குறுகிய பார்வையைத்தான் இது காட்டுகிறது. வெளிநாட்டினருக்கு கொடி பிடிக்கும் உங்களை விட தாய்நாட்டை பிரிந்து தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் செல்விகள் தமிழச்சிகளே..

//( ஆமா closer படம் பார்த்தீர்களா ? அதில் ஆடும் ஆட்டதை பாரும். பிறகு பேசும் ! )

//
சானியாவின் தொடையைப் பார்க்கும் கூட்டம் கிளைவ் ஓவன் முன்னர் நடாலி போட்ட ஆபாச குலுக்கலை ரசிப்பதில் வியப்பென்ன? (படத்தை நானும் மூணு தடவை பார்த்தேன்! - ரசிப்பதற்கு அல்ல. கலாச்சார சீர்கேடு குறித்த தார்மீக வருத்தத்தில்)

//ரேசு கார் ஓட்டும் ஒருவரின் படத்தை போட்டு தன் //
ரேசு கார் ஓட்டுபவரும் கீழ்நாட்டை சேர்ந்த வெள்ளையரல்லாதவர் என்பதிலிருந்தே என் ரேசிஸ நிலைப்பாடு தெரிந்திருக்கவேண்டுமே??

said...

ஸ்டார் வார்ஸை தமிழில் "டப்" பண்ணி விட்டால், நடாலியும் தமிழச்சி ஆகிவிடுவாரா ? இல்லை விஜய் படத்தில் குத்தாடமும் போட வேண்டுமா உங்கள் வாயால் தமிழச்சி பட்டம் வாங்க ?


அன்னா ( சின்ன சுழி "ன" ).மரியா பிறந்த நாட்டில் இருந்து கொண்டு சானியாவின் ஆட்டத்தை மட்டும் பார்பதாய் நீர் சொல்லிக்கொள்வதில், இருக்கும் உண்மையின் அளவு, இரஷ்யாவில் நேர்மையான அதிபர் தேர்தல் நடக்கிறது என்பதில் உள்ள உண்மையின் அளவை விட குறைச்சல் .


ரேசு கார் ஓட்டுபவர் வேண்டுமானால் கீழை நாட்டை சார்ந்தவராய் இருக்கலாம், ஆனால் அந்த ஓட்டுனரின் முதலாளி எந்த நிறத்தவர் ? அதை எதிர்த்து எப்பவாவது குரல் கொடுத்து இருக்கிறாரா ?

said...

சின்னவரே,
இன்னிக்கு அவ்ளோ தான். தூங்கப்போறேன். நாளை சந்திப்போம்.. போரடிச்சிருப்பா.. :))

said...

கொள்கை என்று வந்தபின் உறக்கம் ஏன் ?
சரி சரி

хорошая ночь
( Is this right ? )

said...

доброй ночи ??

said...

//கொள்கை என்று வந்தபின் உறக்கம் ஏன் ?
//

சரி சரி..

ночь கறது ஆண்பால். хорошой ночь லிட்டரல்லா சரின்னாலும்.. பேச்சுவாக்கில பயன்படுத்தறதில்ல.

அனானி சொன்னது இன்னும் கொஞ்சம் பொருத்தமானது..

ஆனா, பேச்சு வழக்கில உள்ளது
Спокойной ночи (Spokoyinoyi Nochi) - அமைதியான இரவு! ஹி ஹி..

வரேன்..GN

said...

மேற்கத்திய நாகரிகமே உயரியது, தமிழருக்கு சோர்வு போக்கும் கலைஞர்கள் கீழானவர் என்ற மாசி மாச (அதில்லையா - சரி அப்படி ஏதோ ஒண்ணு) போக்கையே இந்தப் பதிவு காட்டுகிறது.

நடாலி ஏன் விஜய் படத்துக்கு குத்தாட்டம் ஆட வேண்டும்? நயன தாரா கொம்பு வைத்து ஹாலிவுட்டைக் கலக்கக் கூடாதா?

தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தமிழுணர்வுடன் பதித்த ரஷ்ய அறிஞருக்கு எதிரான கீழ்த்தரமான இந்த ரௌடிக் கும்பலை (வழக்கம் போன்ற)கண்ணியமான முறையில் எதிர்ப்பைக் காட்டுவோம். உடன்பிறப்பே எழுந்திரு! மறக்காமல் மகளிர் அணியைத் தயார் செய் (தாயார் இல்லப்பா!)

said...
This comment has been removed by a blog administrator.
said...

சுரேஷ்,

உம்ம கட்சி தலைவரே நடாலி ரசிகரப்பா !

திடீரென இப்படி கட்சி தலமைக்கு எதிராய் புரட்சி நடாத்துவதில் ஏதேனும் உள்/வெளி,/ஆழ் குத்து இருக்கிறதா ?
என்று ஆராய நான் ஏஜெண்டைத்தான் அனுப்பி வைக்க வேண்டும்.

நாராயணா, நாராயணா

said...

//உம்ம கட்சி தலைவரே நடாலி ரசிகரப்பா !

திடீரென இப்படி கட்சி தலமைக்கு எதிராய் புரட்சி நடாத்துவதில்...//

பதவி ஆசை வந்துவிட்டால் இப்படித்தான், 'தலை'க்கே ஆப்பு வைக்க கிளம்புவார்கள்! :-))

ஆக, ஒரு 'தலை' உருளப்போவது நிச்சயமாகிறது!!!!!

said...

கட்சியின் தலைமை கொள்கையிலிருந்து பிறழ்ந்தால், தட்டிக்கேட்க வேண்டியதுதான் நல்ல கொ.ப.சே வின் அழகு. அதைச் செவ்வனே செய்கிறார் அருமை நண்பர் பினாத்தல் சுரேஷ்.

//பதவி ஆசை வந்துவிட்டால் இப்படித்தான், 'தலை'க்கே ஆப்பு வைக்க கிளம்புவார்கள்//
அதை ஜனநாயக முறைப்படி கையாளாமல், ஏஜண்டுகளை அனுப்பி மிரட்டுவது ப.ம.க வின் அடாவடி அரசியலைத் தான் காட்டுகிறது!

said...

/*
அதைச் செவ்வனே செய்கிறார் அருமை நண்பர் பினாத்தல் சுரேஷ்

*/


இப்போது தெரிகிறது, சுரேஷின் புரட்சிக்கு பின்னால் இருக்கும் கைங்காலிகளின் நிஜ முகம். கட்டுக்கோப்பாய் இருக்கும் கட்சிக்குள் குண்டு வைக்க நினைக்கும் உங்களின் நினைப்பு நிறைவேறாது.

said...

ஐயா ரம்நாதரே !!! (டோண்டு ஐயா போல் படிக்கவும்)

//சின்னவர் என்னும் கைப்பொம்மையை ஆட்டுவிக்கும் இருவர் //

அது யாருங்கோ ஆட்டுவிக்கும் அணியில்? :-)

said...

என்ன குசும்பரே,
இப்படி கேட்டு விட்டீர்.
அது நீரும், முகமுலியும் தான் !

said...

தலைப்பைப் பார்த்து நானும் என்னமோ ஏதோன்னு நினச்சி இங்கன வந்தா...அடி ஆத்தி...உங்க லொள்ளு தாங்கலப்பா..(இதை எந்த ஸ்டைலிலும் வாசிச்சிங்கப்பா)