Thursday, October 20, 2005

கட்டுப்பாடும் சில கருத்துக்களும்

எங்கு பார்க்கினும் கட்டுப்பாடை பற்றி பேச்சாய் இருப்பதை கண்ட நமது தினமூடி நிருபர், வழக்கம்போல சில பிரபல வலைபதிவர்களின் கருத்தை கேட்டார். அது இங்கே

பதிவர் 1: கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். கட்டுப்பாடு இல்லாத இடத்தில் நான் எப்பவுமே இருக்கமாட்டேன். அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டுப்பாட்டிலும் , வீட்டில் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பதே சாலச் சிறந்தது. இதற்கு மேல் பேச எனக்கு அனுமதியில்லை.

நிருபர்: என்ன சார், இவ்வள்வு பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ந்னு வளர்ந்த நாட்டில் இருக்கீங்க. இப்படி பேசறிங்க ?


பதிவர் 1: கெட்ட வார்த்தையில் திட்டறதுக்கு முன்ன ஓடிப்போயிடு !


-------------------------------------------
பதிவர் 2: கட்டுப்பாடே நம்மை அடுத்த நிலமைக்கு எடுத்துச் செல்லும். இல்லாவிட்டால் இன்னும் முப்பதே நாளில் நாம் எல்லாம் அழிந்துப் போவோம்.

நிருபர்: உலகிலேயே அதிகக் கட்டுப்பாடு உள்ள நாடு வட கொரியா, அதிக சுதந்திரம் உள்ளதாய் சொல்லப்படும் நாடு அமெரிக்கா, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

பதிவர் 2: தேவையில்லாத விசயத்தில் எல்லாம் நீ மூக்கை நுழைக்கிறாய். உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றி ஒரு ஆழப்பதிவு போட்டு விடுவேன். சாக்கிரத்தை.

நிருபர்: அண்ணா, என்னை மன்னிச்சுக்குங்க. இனிமே இந்த மாதிரி எல்லாம் கேட்ட மாட்டேன். விடறா சாமி..

----------------------------------------------------

பதிவர் 3: என்னது கட்டுப்பாடா? அப்ப இனி சிக்கனோட தயிர், பருப்போட நெய், கருவாடோட காரக்குழம்பு எல்லாம் முடியாதா. அட மக்கா, சாப்பாடு மனுஷனுக்கு ரொம்ப முக்கியமாச்சே. நாராயணா, நாராயணா..

--------------------------------------------------------

பதிவர் 4: இப்பத்தான் சில விவகாரமான படங்கள் பார்த்து வெச்சி இருக்கேன். எழுதறேன் அத பத்தி. அதற்கு அப்புறம் வெச்சிக்கலாம் கச்சேரியை.

நான் மேலே சொன்னது யாரையும் குறிப்பிட்டு சொன்னதில்லை. எதுவாய் இருந்தாலும் ஆட்டோ இல்லாம வாங்க. சமரசமாய் பேசி தீர்த்துக்கலாம். வரட்டா...


-----------------------------------------------------------------------


பதிவர் 5: அட நீ வேற. நானே third umpire முடிவுக்கு காத்திருக்கும் batsman மாதிரி சிவப்பா, பச்சையா என்று தெரியாம குந்தினு கீறேன். வந்துடாரு துரை கொஸ்டின் கேட்டுகினு !



------------------------------------------------------------------


July 11 உலக மக்கள் தொகை தினம். அதை பற்றியும், family planning ( குடும்பக் கட்டுப்பாடு ) பற்றியும் பதிவர்களின் கருத்துக்களை மேலே பார்த்தீர்கள். இனி சில தகவல்கள்.,

1. சராசரியாக உலகில் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 billion
2. 1987 ல் முதல் உலகமக்கள் தொகை நாள் அறிவிக்கப்பட்டது
3. மேலதிக விவரங்களுக்கு http://www.usaid.gov/our_work/global_health/pop/news/wpd05.html


( இந்த பதிவு எதிர்மறை பதிவு, மக்களுக்கு இதனால் எந்த பிரயேசனமும் இல்லை. 40 வரி எழுதினாலும், ஒரு வரியில் கூட உபயோகமான விசயம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது எனபதற்காக மேலே கூறிய தகவல்கள் எழுதப்பட்டன என்று யாருப்பா அங்க சொல்றது ?? )


(ஆமாம், கொஞ்ச நாளுக்கு முன்னால் "கத்ரீனா" சமயத்தில் Dick Cheney யை பார்த்து, Go ---- Yoursef l என்று live TV யில் சுதந்திரமாய் கருத்து சொன்னாரே ஒருத்தர் , அவர என்ன பண்ணாங்க ?

சனநாயக முறைப்படி போட்டுத் தாக்கீட்டாங்களா ? )

21 comments:

முகமூடி said...

// எதிர்மறை பதிவு, மக்களுக்கு இதனால் எந்த பிரயேசனமும் இல்லை. 40 வரி எழுதினாலும், ஒரு வரியில் கூட உபயோகமான விசயம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது எனபதற்காக // இதெல்லாம் பதிவுக்கு மட்டும்தானா? இல்ல பின்னூட்டம் இப்படி இல்லாம இருந்தாலும் தூக்கிடுவீங்களா..

சின்னவன் said...

முகமூடியாரே
எத சொல்லறதுக்கும் பயமாகீது அண்ணாச்சி.
எதுக்கும் நானும் குண்டு துளைக்காத முகமூடி வாங்கி வெச்சிகிணும் போல கீது..

ஏஜண்ட் NJ said...

//...இனி சிக்கனோட தயிர், பருப்போட நெய், கருவாடோட காரக்குழம்பு எல்லாம் முடியாதா ...//

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை!

கதிரவன் என்னதான் காய்ந்து பார்த்தாலும்
கடல் நீர் வற்றுவதில்லை!!

தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழித்திவோம்!!!

அச்சமில்லை அச்சமில்லை
சங்கே முழங்கு!!!!

தகவலுக்கு நன்றி தொண்ணை!

சின்னவன் said...

ஏஜெண்ட்
அதேதான்.. சாப்பாடை பத்தி கருத்து சொல்லாமல்/இல்லாமல் மனுசன் வாழமுடியுமா.
எதற்கும், வான்கோழி fry பற்றி சீக்கிரம் நீங்க பதிவு போடற நிலமை வராமல் இருக்க
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

Anonymous said...

இன்று ஒரு தகவல் மாதிரி இனி எல்லா பதிவிலேயும் இந்த மாதிரி தமிழர்களுக்கு உபயோகமான தகவல் இல்லாவிட்டால் உங்கள் பதிவு நீக்கப்படலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் !

Maravandu - Ganesh said...

சின்னவரே

உம்ம எவனோ தூக்கனும்னு போன பதிவு பின்னூட்டத்துல போட்டிருந்தான்

னே தமிழ் மணத்தின் செல்லப்பிள்ளை , உன்னைத் தூக்க மாட்டாங்க
உன்னை தூக்குனாங்குன்னா , அப்புறம் என்னால :-(((

சின்னவன் said...

மரவண்டு
நம்மளை தூக்கிட்டாங்க என்பது தெளிவாகி விட்டது.
எனக்கென்னவோ அவலை நினைத்து உரலை இடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது.
என்ன செய்வது. தனி ஒருவரின் இலவச சேவை இது. அவருக்கு விரும்பியவற்றை சேர்க்க அவருக்கு உரிமை இருக்கிறது. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

முகமூடி said...

சின்னவன் இப்பத்தான் கவனித்தேன்... என்னய்யா இது நிலைமை கட்டுக்கடங்காம போயிகிட்டு இருக்கு

சின்னவன் said...

நாமதான் Provider யை கிழித்து நார் நாராய் ஆக்கி விட்டோமாம் . அதற்குத்தான் இந்த தண்டனையாம். மண்டபத்திலே பேசிக்கிறாங்க அப்பு !
எதற்கும் நீரும், ஏஜெண்டும் சாக்கிரத்தையாய் இருக்கவும். உங்க ரெண்டு பேரும் ரொம்ப அடிபடுது !

துளசி கோபால் said...

என்ன உங்களையும் தூக்கிட்டாங்களா???????

........................அது ஏன்?

சின்னவன் said...

நன்றி விஜி, பாண்டி, துளசி அக்கா !

எனக்கும் ஏன் என்று தெரியவில்லை .
மன்றத்தில் கேள்வி இருக்கிறது. யாரும் பதில் அளிப்பார்களா என்று தெரியவில்லை.

நான் எழுதுவது யாருக்கோ பிடிக்கவில்லை.


காசி மட்டுமே இதற்கு பதில் அளிக்கக்கூடும்.
நான் வேறு யாரோ என்று நினக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துளசி கோபால் said...

என்னது? யாரோன்னு நினைச்சுட்டாங்களா?
இதுக்குத்தான் இந்த 'பூனை'பேருஎல்லாம் இல்லாம சொந்தப் பேருலே எழுதணுங்கறது.

எல்லாரும் கொஞ்சம் உண்மைப்பேருலே வாங்க.

Anonymous said...

ellaam maamikal seytha velai

வீ. எம் said...

வேலை அதிகம் இருந்ததால் 3 நாட்கள் கழித்து இன்று தான் வலைப்பூ பக்கம் வந்தேன் .. உங்கள் வலைப்பூ நீக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து அதிர்ச்சியாக உள்ளது.
உங்களுடைய வலைப்பூ எதற்காக நீக்கப்பட்டுள்ளது?? எந்த பதிவினை நீங்கள் தவறாக , மற்றவர் புண்படும்படி எழுதியிருந்தீர்கள் சின்னவரே??

Anonymous said...

உங்களை யாரொ என்றிருந்தால் உங்களுடைய மற்றொரு பதிவு தூக்கப்படாமல் இருக்கிறதா? நிர்வாகிகளுக்கு என்னவோ பிரச்சினை அல்லது திரட்டியின் "கொள்கை" மற்றமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

சின்னவன் said...

தெரில்லை வீஎம்.
என்பதிவுகள் அனைத்தும் இங்கேயேதான் இருக்கின்றன். நான் எதையும் அழிக்கவில்லை.
எது கீழ்தரமாய் இருக்கிறது ?காசிதான் சொல்ல வேண்டும்.
என் திரைப்பட விமர்சனம் முக்கியமான் சிலரை கோபத்துக்கு உள்ளாகியது போலும்.

உங்களின் ஆதரவுக்கு நன்றி.

அன்னனி ,
சி அவர்களாய் காரணம் சொல்லாமல் என்னல் வெறும் யூகம் மட்டுமே செய்ய முடியும்

Anonymous said...

//என் திரைப்பட விமர்சனம் முக்கியமான் சிலரை கோபத்துக்கு உள்ளாகியது போலும்.// chinnavan.

ஏம்பா! அந்த பதிவுல நான் ஒரு கமெண்ட் உட்டேனே அதுல எதுனா ஆயிருக்குமோ?. அப்டீன்னா எம்பதிவுக்கு நேரம் குறிச்சாச்சுன்னு சொல்லு!

ஹும்... என்னவோ போப்பா... ஒன்னுமே புரியல!

Pot"tea" kadai said...

இதுக்கெல்லாம் அசர்ர ஆளா நீங்க!:)
நீங்க எழுதிகிட்டே இருங்க...நாங்க படிச்சிக்கிட்டே இருக்கோம்!

குசும்பன் said...

ஸிம்ஸா,

நீ அடிச்சு ஆடு தல!!! கூட்டாளீ/சே(சீ)க்காளிங்க கூட இருக்கங்கடே!!!

:-)

Maravandu - Ganesh said...

//இந்த 'பூனை'பேருஎல்லாம் இல்லாம சொந்தப் பேருலே எழுதணுங்கறது.
எல்லாரும் கொஞ்சம் உண்மைப்பேருலே வாங்க.

துளசிப்பாட்டி

சந்தடி சாக்கில் என்னைப் போட்டுக் கொடுக்கிறீங்களே :-(

Anonymous said...

Chinnavan

When Se Ve Shekar was criticized heavily that there was no message in his movies, one person used to come on the stage unrelated to the drama and read a kural or tell a message. Your post reminded me that satire. Keep going. They dont understand your extreme sense of humor. I wait for your next post. You became a hero along with Kusumban now. Great work. It is honor bestowed on you.

Regards