Tuesday, September 13, 2005

ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டது.

  • இணையமும், கிண்டல் க்ளோனிங்க் பதிவுகளும் புதுப்புது விரோதிகளையும் , அளவிட முடியா திட்டையும் , வெறுப்பையும் பெற்றுத்தரும் வல்லமை கொண்டது. இணைய விரோதிகள் அனுப்பும் மெயிலில், பேரம் பேசி ஆட்டோக்காரனிடம் வாங்கும் கெட்ட வார்த்தைகள் போல வார்த்தைகள் இருப்பது சகஜமானது!

  • இணையத்தில், நான் பதினெட்டு வயது பெண், செக்க சிவந்த தேகம், டென்னிஸ் ஆடி வளர்ந்த உடம்பு, பெயர் சானியா என்று yahoo/MSN -ல் உங்களுடன் அரட்டை அடிப்பவர்கள் , 45 வயதான, தொப்பை விழுந்த, வழுக்கை ஆணாகவும் இருக்கக் கூடும்.

  • விடுமுறையும், பொண்டாட்டி பிள்ளைகள் தொந்தரவு இல்லாமல் தனியாக ஊர் சுற்றுதலும் மிக அவசியம். Vacation என்பது , இந்தியா சென்று வருவதற்கு மட்டுமே உபயோகப்படும் ஏற்பாடு அல்ல. வீட்டுக்குள்ளேயே சுற்றவும், கற்கவும் பல விஷயங்கள் உள்ளது!

  • அமெரிக்கா கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கேண்டீனில் மசால் வடை, புளிச்சாதம் வாசத்தை ஆச்சர்யத்தோடு சந்திப்பீர்கள். ஆத்திகனாக இருப்பதின் சௌகர்யங்களில் மேற்கூறியதுமொன்று!

  • Mac Donald's , French Fries ஆறிப்போனால் சாப்பிட நன்றாயிருக்காது.

9 comments:

said...

;-))))))))))))

said...

முகமூடி

நான் நினைத்தது சரியா ?

said...

என்ன நினைச்சீங்கன்னு ஒரு க்ளூ கொடுங்க

said...
This comment has been removed by a blog administrator.
said...

அன்பாலே திக்கு முக்காட செய்தது Rose Bowl காரர் தானே?

said...

:))

said...

// Rose Bowl காரர் தானே? //
ப்ளான் இருந்தது... ஆனா அன்பார்சுனேட்லி நேரம் கிடடிக்கல... ஆக அது வேற ஆளு...

said...

ஜெகட ஜெகட ஜெயம்டா!

said...

சரி நீங்க எப்ப இந்த பக்கம் வரீங்க ?