Sunday, October 02, 2005

உலக வலைபதிவர் மாநாடு!

அகில உலக வலைபதிவர் மாநாடு சென்னையில் உள்ள ஒரு பிரபல அசைவ விடுதியில் நடந்தது.
முகமூடி, குசும்பன், VM , ஞானபீடம் , குழலி, சின்னவன் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இருந்து சில பகுதிகள் !


ஞானபீடம் : வந்த எல்லாருக்கும் நன்றி. நாராயணா , நாராயணா !!

முகமூடி : ஞான்ஸ், யாரும் இன்னுமும் பேசவே ஆரம்பிக்கவில்லை, அதுக்குள்ள நாராயணாவா ?

ஞானபீடம்: ஆடிய பாதங்களுக்கும் , கோள்மூட்டும் நாரதனுக்கும் ஏது ஓய்வு ? நம் பணியை நாம் செய்துக்கொண்டே இருப்போம் .

குசும்பன்: பசிக்குது, சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பா நான் ஏற்கனவே நடத்திய லாஸ் வேகஸ் மாநாட்டிலும் இந்த சாப்பாடு பிரச்சனை தான் பெரிய பிரச்சினை ஆயிடிச்சி

முகமூடி: என்னால எதையும் சாப்ப்பிட முடியாதே. முகத்தை முழுசா இல்ல மூடி வைச்சு இருக்கேன்.

VM : கழட்டினால் தான்ய்யா எல்லாமே முடியும். ஹி ஹி. நான் சாப்பிடறதை சொன்னேன்

முகமூடி: சரி சரி.. சாப்பிடறேன். இஙக் சிறுத்தை கறி கிடைக்குமா ?

குசும்பன்: சிறுத்தை கறி சிஙப்பூரில்தான் கிடைக்கும் சாரே கொஞ்சம் அட்ஜ்ஸ்ட் பண்ணிகோங்கோ

முகமூடி : இதை மாதிரி கண்டதை சாப்பிட்டா Dr கிட்ட போக வேண்டியதுதான்

(கொஞ்சம் லேட்டாய் குழலி நுழைகிறார் .. )


குழலி : நீங்கள் சைவமா அசைவமா என்று தெரிந்துக்கொள்ள ஒரு 120 கேள்வி தயார் செய்து வருவதற்குள் கொஞ்சம் தாமதாமாகி விட்டது.


ஞானபீடம்: Dr என்றவுடன் குழலி வந்துவிட்டார், நாராயணா நாராயணா !

VM: இப்படித்தான் ஒருமுறை புனாவில் கண்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு Dr கிட்ட போனேன். அங்கே ஒரு கேரளா நர்ஸ் வந்து...

குசும்பன் : தமிழ்நாட்டில சினிமாவில்தான் அஸின் நயனதாரா ஆக்கிரமிப்பு என்றால் , தமிழ்நாட்டு மருத்துவர்கள் எல்லாம் இந்த மாதிரி கேரளா சேச்சிகளை நர்ஸய் வைத்து இருக்கிறார்கள். அகில உலக அஸின் ரசிகர் தலைவராகிய குழலி இதை பற்றி என்ன நினக்கிறீர்கள்?

குழலி: தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் தழைக்கவே இல்லை. எல்லாம் ஆங்கில மோகம். தமிழ்நாட்டில் தமிழச்சிகள் நர்ஸாய் இருக்க வேண்டும் என்றும் , தமிழ் மருந்துகளைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றும் போராட்டம் ஆரம்பிக்கப்போகிறோம்


முகமூடி : இது என்னய்யா நியாயம். அப்பாவும், மகனும் ஆங்கில மருத்துவம் படிக்கலாம். சிலுக்காவர்பட்டி கோமணக்கிழவன் அனாஸின் சாப்பிடக்கூடாதா ? போங்கய்யா நீங்களும் உங்க ..யிர் காக்கும் மருந்துகளும்

VM : வெட்கத்தால் சிவந்து வெண்ணை போன்று மிருதுவாய் இருந்த தொடைகளை அவன் கையில் ஏந்தினான். மெல்ல உதட்டருகே சென்று வாசம் பார்த்தான் . மெல்ல சிலிர்த்துக்கொண்டான்


ஞானபீடம் : அய்யா VM , butter chicken உங்களுக்கு பிடிக்கும் என்பதை இப்படித்தான் சொல்லனுமா தயிர்சாதமும் சிக்கனும் என்று பதிவெல்லாம் போட்டவனையா நான். எனக்கே சிக்கனா ?

குசும்பன்: அட என்னய்யா ! பொஸ்ரன் காரனுங்க இல்லாம இந்த மாநாடு போர் அடிக்குது! உரோமம் தொலைத்துரித்த பாஸிஸ கோழிக் கூட்டத்த்தை சாப்பிடவா இந்த மாநாடு ?

முகமூடி: குசும்பா, நீர் பேசறது என்னமோ எனக்கு புரியர மாதிரி இருக்கே ?

அனைவரும்:. பாஸிஸத்துக்கும் கோழிக்கும் என்னங்க சம்பந்தம் ?/

ஞானபீடம் : இந்த வார நட்சத்திரம் , முகத்தை மூடி , இரண்டு எழுத்து பெயரைக்கொண்ட, பெண் பெயரில் எழுதும், வளைகுடா நாட்டை சேர்ந்தவர் என்று எமது ஏஜெண்டுகள் தெரிவிக்கிறார்கள்.

VM : நீங்க சொல்றது இங்க இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும் . பீடம்! ஏஜெண்டை மாத்து !!

குழலி : இந்த ஹோட்டலில் வான்கோழி கறி பிரியாணி அற்புதமாய் இருக்குமாமே ? யாரும் அதை ஆர்டர் பண்ணலையா ?

இதுவரை ஏதும் பேசாமல் இவர்கள் பேசுவதை குறிப்பு எடுத்துக்கொண்ட சின்னவன் ஓட்டம் பிடிக்கிறான் !!

28 comments:

said...

I rarely post comments on others blog but this is an exceptional. I found your blog is interesting and I will keep coming here!

I have a make money on the internet site. It pretty much covers make money on the internet related stuff.

Come and check it out if you get time :-)

said...

உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிச்சேன்...

;-)))

said...

இதுல கலந்துகிட்டதால, இது சம்பந்தமா நான் என் பதிவுல விபரமா போட்டோ எல்லாம் போட்டு எழுதணுமா ??

துளசி சேச்சி :: சாப்பாடு பத்தி எழுதுங்கப்பா முதல்ல..

said...

நன்றி முகமிலி

photos தானே போட்டுட்ட போச்சு
முழு பதிவே வெறும் சாப்பாட்டை பற்றித்தானே !!!
:-)

said...

இல்ல நீங்க போனப்புறம் நாங்க பல "முக்கிய" ப்ரச்னைகள் பத்தி பேசுனோம்.. அது பற்றி விரைவில் எழுதறேன்

said...

chinnavan,

kalakkittIngka, BOSS !!!

Absolutely SUPER :)))

said...

எழுதுங்க ,
முக்கிய பிரச்சினைகளை நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்.

said...

பாலா நன்றி !

BOSS என்ற வார்த்தையை வைச்சுக்கிட்டு கொஞ்ச நாள் எல்லாரும் ஓட்டிக்கிட்டு இருந்தாங்க..
அந்த வார்த்தையை கேட்டாலே பயமாய் இருக்கு !

said...

supero super

said...

//துளசி சேச்சி :: சாப்பாடு பத்தி எழுதுங்கப்பா முதல்ல..//

ஓஹோ... சாப்பாடுன்னா துளசி
துளசின்னா சாப்பாடுன்னு
ஜனங்க முடிவு செஞ்சுருச்சு போல.

ஹூம்.....

said...

சின்னவரே கலக்கல்..

ஒரு ஓரமா உட்கார்ந்து ஓட்டல் சர்வரையெல்லாம் நக்கல் பன்னிட்டு இருந்தீங்களே.. அதுல கடுப்பான் ஒரு சர்வரு எப்படா சேன்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருந்து..

சிக்கன்65 வாங்க வந்த சின்ன பொன்னு ஒன்ன பாத்து நீங்க 'சிக்' னு இருக்கு குழலினு சொல்ல..
அந்த பக்கமா வந்த சர்வர் உங்களை பார்த்து சில்லி சிக்கன் ஆர்டர் பன்னா சிக்கனு இல்லாம மட்டனா இருக்கும்னு கேட்க..... .. நீங்க முழிக்க...

சரி விடுங்க.. ஏதோ காரணத்துக்காக தான் நீங்க அதை பத்தி சொல்லல போல இருக்கு..

நாம எல்லாம் சேர்ந்து மெனு கார்ட்ல BUTTER chicken, Veg Kuruma .. அப்படினு இருந்ததை எல்லாம்.. எச்சி தொட்டு அழிச்சோமே...அதை மறந்துட்டீங்களா??

நம்ம சாப்பாட்டு சமத்துவர் ஞான்ஸ் சமையல் அறைல போய் பன்ன அலும்பு... சீக்கிரமா மூனு பிளேட் பிரியானி சாப்பிடுறவங்களுக்கு முகமூடி அறிவித்த போட்டி... சாப்பிடறதுக்கு முன்னாடி குழலி கொடுத்து 30 கேள்வி கொண்ட checklist..
சரி சரி விடுங்க.. அதெல்லாம் சீக்ரெட்

யோவ் சின்னவரே.. வீ எம் என்றாலே double meaning என்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க.. நியாயமா இது?

said...

நன்றி சுரேஷ், துளசி சேச்சி.

VM:

உம்ம பதிவு என்றாலே எனக்கு பெப்ஸி தான்யா ஞாபகம் வருது. மன்னிச்சுக்குங்க !

:-)

said...

உலக வலைபதிவர் மாநாடு மேல் விபரங்கள் இங்கே

said...

வலைபதிவர் மாநாடு என்றால் ஏதோ சக்கரை போடாத காபி, உப்பு இல்லாத உப்புமா உடன் ஏதோ drive-in அல்லது ஏதோ ஒரு பாரில் பீரோடும் தானே நடக்கும் ? இது என்ன புதுசா அசைவ ஓட்டலில் சிக்கனோட ?

said...

இப்பிடியெல்லாம் அடுத்தவங்கள நக்கலடிக்க மாநாடு போடுறதுகூட வன்முறைனு மண்டபத்துல பேசிக்கிறாங்க :-)))

அதப்பத்தி மாநாட்டுல ஒண்ணும் பேசலையா?

said...

வன்முறையா ? அதுவும் காந்தி பிறந்தநாளில் ( அப்ப சிக்கன் மட்டும் சாப்பிடலாமா என்று கேட்கக்கூடாது !)

முக்கியமான பிரச்சனைகளை அப்புறம் நாங்கள் பேசினோம் என்று முகமூடி சொல்லியிருக்கிறார். அது இந்த வன்முறையை பற்றித்தானோ ?

said...

என்னத்த சிக்கன் சாப்பிட்டு என்ன பிரயோஜனம். அதுதான் தமிழ் பதிவுலகம் இப்படி கெட்டு போய் இருக்கே!


சிக்கன் வேணுமுன்னு
மாநாட்டுக்கு போனதென்ன
வயிற்று வலி வந்ததென்னு
டாக்டருக்கிட்ட போனதென்னா..


பந்தலிலே பாவக்கா
தொங்குதடி ஏலக்கா !

இப்படி தனியா புலம்ப வெச்சிட்டீங்களே

said...

//அகில உலக அஸின் ரசிகர் தலைவராகிய குழலி//

போட்டுக் கொடுக்கறீங்களே சின்னவன்

// முகமூடி said...
உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிச்சேன்...//

தமிழ்ல ROFTL'னு சிரிக்கணும்பா

//"முக்கிய" ப்ரச்னைகள் பத்தி //

இதைத்தான் லந்தும்பாய்ங்க... நடாத்துங்கப்பா நடாத்துங்க

said...

யோவ் வாத்து, போட்டி என்னாச்சு? :-)

said...

அந்த படங்களை எல்லாம் BMP யாய் மாற்றி அண்டார்டிக்காவில் இருக்கும் நடுவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன். அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதால், அகில உலக வாத்து தினமான ஏப்ரல் 1 அன்றைக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் !!


லந்தும்பாய்ங்க : இது என்னப்பா புதுசாய் ஒரு வார்த்தை..


:-)

said...

லந்து, சாதாய்த்தல், கிண்டுதல், கிழங்கெடுத்தல், நொங்குதல், நுங்கெடுத்தல், சந்து முனையில் சிந்து, லாவணி கச்சேரி, பாடு புராணம் இன்ன பிற சில பல அர்த்தங்கள் உண்டு சாரே!!!

ஆமா ஸிம்ஸா...மெய்யாலுமேவா பிரியல?!@# :-)

said...

கோனார் நோட்ஸ் கண்க்கா விளக்கம் கொடுத்ததுக்கு நன்னி !

said...

:-)

said...

chinnavare, ganesh goinchaami nu oru padhivu pootirukkar. adhukku oru badhil padhivu potiruken...

adhuthu enna ??

chinnavar idhey style oru kusumbu padhivu poduvaaru...

vaanga vaanga, ganesh / V M blog...


Ganesh: thank me for advertising your site also :)

said...

நன்றி NJ

VM
இந்த கேள்விகள் எல்லாம் George Carlin கேள்விகள் மாதிரி இருக்கு.. நானும் அந்த காலத்தில ( ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ) கேள்விகள் போட்டு இருக்கேன்.

said...

சொல்லியிருந்தால் நானும்
வந்திருப்பேன்
வான்கோழிக்கறி சாப்பிட
இப்படி ஏமாற்றி ஏப்பமிட்டு
விட்டீர்களே!

said...

சொல்லியிருந்தால் நானும்
வந்திருப்பேன்
வான்கோழிக்கறி சாப்பிட
இப்படி ஏமாற்றி ஏப்பமிட்டு
விட்டீர்களே!

said...

வாங்க சித்தன் ..
சித்த மருத்துவதிலாவது வான்கோழிக்கு மரியாதை இருக்கா