Monday, October 17, 2005

சினிமா விமர்சனம்

ஆங்கில படங்களுக்கு வலைப்பூவில் விமர்சனம் எழுதுவது ஒரு தனிப்பட்ட கலை. படம் வந்து குறைந்தது பத்து வருடமாவது ஆகி இருக்க வேண்டும். அதன் 25 ஆண்டு சிறப்பு DVD வெளியீடு அல்லது
C(Sk)inemax ல் பலான படம் முடித்தவுடன் பார்த்த பழைய படங்களுக்கு விமர்சனம் எழுதுவது சாலச் சிறந்தது.


தமிழ் வலிப்பூ உலகில் முதன்முறையா , திரைக்கு வந்து 12 மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படதிற்கான விமர்சனம் இங்கே !


Harold & Kumar go to White Castle.

போதை உண்ட ( Stoner ? ) இரண்டு நண்பர்களுக்கான ( buddy comedy ) படங்களுக்கு பெயர் பெற்ற
Danny Leiner இயக்கிய படம் இது. Dude Where is my Car போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை அளித்தவர் இவர்.

ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு இந்தியனையும் கொரிய இளைஞனையும் முக்கிய பாத்திராங்களா வைத்து வந்த முதல் படம் இதுவாகவே இருக்கக்கூடும். John Cho ம் , Kal Penn அற்புதமாய் நடித்து கலக்கி இருக்கும் படம் இது.


பார்த்த படத்தின் முழு கதையயும் எழுதுவதுதான் விமர்சனம் என்று நான் நம்புவதில்லை. எனவே மற்ற விமர்சனங்களை போல படத்தின் கதை இங்கு இல்லை.


பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். அவர்களின் பின்னணி வருவதில்லை. பல கேள்விகளுக்கு ஒற்றை வரியில் இயக்குனர் பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல குண்டர்கள் மத்தியில் ஆணித்தரமாகப் சண்டையிட எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிச்சண்டை எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் , கஞ்சா அடிக்கும் போது கற்றுக்கொண்டாரோ என்னவோ!

என்றெல்லாம் இலக்கியத்தரமாய் ஜல்லி அடிக்காமல், Paula Garces , Malin Akerman பார்த்து ஜொள்ளு விட நான் இந்த படத்தை பார்த்தேன் என்பதை கூறிக்கொளவதில் எந்த வெட்கமும் இல்லை.

29 comments:

said...

என்ன சின்னவன், அறிவு ஜீவி பேரு வாங்க ஆசை வந்திருச்சா... ஆங்கில பட விமரிசனம், நேம்ஸ் ட்ராப்பிங் எல்லாம் தூள் பறக்குது..

சரி இதுக்கு எதுக்குமாவது சம்பந்தம் இல்லைன்னு டிஸ்க்ளெய்மர் உண்டா?

said...

ஆழப்பதிவு போட சொல்லிக்கொடுத்தவரே நீங்கத்தான்.

ஆனால் இந்த ஆங்கில பட விமர்சனங்கள் நல்ல டமாசுதான் போங்க.

எல்லாம் எங்கப்பாவே பொறக்கறதுக்கு முன்னாடி வந்த படங்க.

கதை முழுசும் சொல்லறதுதான் விமர்சனம் போலும்.
நான்கூட Harold & Kumar ல் இருக்கும் நல்ல சீன்களை பற்றி சொன்னேனா ?


அப்படியே நேற்றுத்தான் ரிலீஸ் ஆன சார்லி சாப்ளின் புது படத்தை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.


டிஸ்க்ளைமர்.

நான் ஆங்கில படங்களே பார்ப்பது இல்லை !

said...

அப்பட்டமான உண்மை.
பத்து வருச்த்துக்கு முன்னாடி வந்த clerks க்கு கூட யாரோ புத்தம் புதிதாய் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

என்னவோ மற்ற யாருக்கும் ஆங்கில படங்களை பற்றி ஒன்றுமே தெரியாது என்பது போன்ற அற்புதமான விமர்சனங்கள் வாழ்க !

said...

இதெல்லாம் சகஜம் தல !!

said...

இன்னொருத்தர் ஆங்கில பட விமர்சனத்தில் மூக்கை நுழைத்து இருக்கிறார் பார்த்தீர்களா ?

said...

என்ன தல பண்றது..

இவன் எல்லாம் விமர்சனம் எழுதறான் நான் எழுதக்கூடாதா என்று நினத்து இருப்பார் போல ..

நான் இன்னமும் படிக்கவில்லை.


வழக்கம் போல

1. பத்து வருஷத்துக்கு முந்திய படம் ,

2 IMDB க்குக் லிங்க் .

3 முழு கதை

4 சில பல name droppings


போட்டுத்தாக்கி இருப்பாங்களே !


எல்லாத்துக்கும் ஒரு standard template ஆகிப்போச்சு !

வாழ்க Cable TV !!!

said...

மூக்குமூடியின் ஆங்கில பட விமர்சனம்

said...

chinnavare.. nalla irukeengala?
enna prichanai ippo ungalukku?
thalaila edhachum adi pattudha??

said...

//thalaila edhachum adi pattudha??

ஹி ஹி

said...

//...இலக்கியத்தரமாய் ஜல்லி அடிக்காமல், Paula Garces , Malin Akerman பார்த்து ஜொள்ளு விட நான் இந்த படத்தை பார்த்தேன் என்பதை கூறிக்கொளவதில் எந்த வெட்கமும் இல்லை.//

யாருக்கோ நல்ல *#ருப்படி கொடுத்தது போல் உள்ளது!

said...

ஏஜெண்ட்
பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி என்னை வம்புல மாட்டி விட பாக்கிறீங்க.
நாம் ஏதோ இங்கிலீஸீ படம் பார்த்தமா, கொஞ்சம் ஜொள்ளு விட்டமா என்று இருக்கிற ஆளு..
நீங்க வேற அடி வாங்க வைச்சிடுவீங்க போல இருக்கே !
அப்புறம் நீங்க இங்கிலீஸ¥ படம் பார்க்கறது உண்டா ? இல்லை வெறும் அம்பிகா/மீனா படம் மட்டும்தானா ?

said...

இந்த பதிவுக்கு மிக்க நன்றி. கட்டாயம் நான் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை உங்கள் விமர்சனம் தூண்டி விட்டது

மீண்டும் நன்றிகள்.

"கீத்துக் கொட்டாய் " கிருஷ்ணன்

said...

இந்த சுமாரான படத்திற்கு இத்தனை அலம்பல் தேவையா? dwisc, கடைசி காட்சிக்காக படத்தை பொறுத்துக்கொள்ளலாம்!

இது போன்ற நேர விரைய படங்களுக்கு விமர்சனம் அளிக்க ஆயிரம்பேர் இருக்கின்றார்கள். சின்னவரே, உங்களிடமிருந்து இத்தனை ஆழமற்ற பதிவை எதிர்ப்பார்க்கவில்லை.

இதற்கு பதில் சமீபத்தில் வெளிவந்த மிலோஷ் போர்மனின் "one flew over the cuckoo's nest", எமிர் கஸ்டூரிச்சாவின் "life is beautiful", செர்ஜியோ லியோனியின் "Buono, il brutto, il cattivo, Il", மைக்கேல் கர்டிஸ்ஸின் "Casablanca", குரோஸோவாவின் "Shichinin no samurai" போன்ற சமூக அவலங்களை துகிலுரிக்கும் புரட்சிப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நானும் பொதுவாய் ஆங்கில படங்களைப் பார்ப்பதில்லை!

said...

இரேசுநாதரே,
நல்லா Name Droppings பண்றீங்க. பேசமா நீங்களும் ஒரு டெண்ட் கொட்டாய் ஆரம்பிக்கலாமுங்கோ !

said...

//இரேசுநாதரே, //
குசும்பர் ஆரம்பிச்சு வெச்சது இதுன்னு நினைக்கிறேன். இயேசுநாதர் மாதிரி நல்லாத்தான் இருக்கு..

//நல்லா Name Droppings பண்றீங்க//
names droppings -ஆ?? இதென்ன அசிங்கமா bird droppings மாதிரி இருக்கே?? not nice :((((

said...

நம்ம தல Brain Droppings அப்படின்னு புத்தகமே எழுதிகிறாரு.. கிடைச்சா படிங்க !

said...

11111111111111

said...

Is this blog removed too ?????

said...

super :-)

said...

எப்படி ராசா
உன்னை இன்னும் விட்டு வச்சி இருக்காங்க ? உனக்கு நான் வைக்கிறேன் ஆப்பு !

said...

athuthane !

said...

சின்னவன் சார், வணக்கம்.
இந்தப் பதிவை ரெண்டு நாளைக்கு முன்னாடி படிச்சப்போ, சரி ஜாலியான கிண்டல் பதிவுன்னுதான் நினைச்சேன், உண்மையில அப்படித்தான் இருந்தது. ஆனா, "சரியாக் கொடுத்தேள் போங்கோ"ன்னு வரிசையா வர்ற, குசும்பன் ஸ்டைல்ல சொன்னா குனிஞ்சு குத்தடி ஜைனக்கான்னு வர்ற பின்னூட்டங்களையும், ஆமா ஆமாங்கிற உங்க ஆமோதிப்பையும் பார்த்தா, chip on my shoulder ரகத்துல உங்களை ஏதோ புண்படுத்திட்டேனோன்னு படுது, வருத்தமா இருக்கு. தேவைன்னா சொல்லுங்க, கீத்துக்கொட்டாயில அமெரிக்கா ஐரோப்பா மத்திய கிழக்குன்னு வகைவகையா வேலையத்துப்போயி தொறந்து வச்சிருக்கறமாதிரி, droppingனும் ஒரு டிவிஷன் தொறந்துடலாம், உங்க பதிவுகளையும் சேர்த்துடலாம். உங்களுக்குத் தெரியாததில்லை மனுஷங்க பல ரகமின்னு. கூட்டமாச் சேர்ந்தோ தனித்தனியாவோ சோறு குழம்பு வைக்கிறது ஒரு ரகம், கூட்டமாச் சேர்ந்தோ தனித்தனியாவோ சாப்பிட்டுப் பார்த்துட்டு நல்லாயிருக்கு நல்லாயில்லைன்னு /விமர்சனம்/ பண்ணித் தன் ருசியையும் சமைக்கிறவன் திறமையையும் முன்னேத்தறது இன்னொரு ரகம், கூட்டமா வந்து பிறத்தியார் சமைச்சுவச்ச பாத்திரத்துல **த்திரம் அடிச்சுட்டுப் போறது இன்னொரு ரகம் (இன்னொரு பதிவுக்கு மேட்டர் தயராக் கொடுத்திருக்கேன், ஆப்பம் பாயாவோட ரெடி பண்ணிருங்க, சரிதானே?). இதுல நீங்க முதலிரண்டு ரகமுன்னு கனகச்சிதமா நம்பறேன், அதுக்காகத்தான் என்னோட இந்தப் பொறுமையான விளக்கம் ;-). என்ன பண்றது ஷொல்லுங்கோ; IMDBயில முட்டறமாதிரி தினமும் இங்கேயும் முட்டறேன் - கம்மனாட்டிப் பசங்க தினமும் புதுசு புதுசா என்னென்னத்தையோ கண்டுபுடிக்கறானுக; எல்லாத்தையும் நான் கத்து முடிக்கறவரைக்கும் கொஞ்சம் இரிங்கோ வாப்பாக்களான்னா, அதுவரைக்கும் வேற எந்த ஆராய்ச்சியோ சவமோ பண்ணித்தொலையாதீங்கன்னா எவனும் கேக்கமாட்டேங்கறான்; எளவு ஒரு query போட்டா 128371247091748923749823765236897 ரிசல்ட்டு வருது - எத்தனையைத்தான் படிச்சுப் பிச்சிக்கிறது சொல்லுங்கோ - இந்த அறிவுஜீவிக் கம்மனாட்டிகளையெல்லாம் உப்பு வத்தலோட ஓலைப்பாயில போட்டு வீட்டுமுன்னாடி பட்படா படபடான்னு எரிக்கவேண்டாமோ ஷொல்லுங்க! ஓலைப்பாய் வேணுமின்னா உங்ககிட்டக் கேக்கறேன், Kwik-E-Martல வாங்கி அனுப்புங்கோ. நாம கத்துக்கிறப்ப இவனுகளெல்லாம் என்னென்ன லொள்ளோ பண்ணி ஆராய்ச்சி பூரான்புடுங்கல்னு பிஸ்த்து காட்டுனா அதுக்கோசரம் நாம சும்மா இருந்துரணுமா என்ன? இதுவிவகாரமா இந்த அறிவுஜீவிக் கஸ்மாலங்களுக்கு ஒரு பெட்டிஷன் போடலாமின்னு இருக்கேன், இதேமாதிரி சினிமா குறுக்கெழுத்துப் போட்டி, நியூஸ்பேப்பர், டிவி, Charmin extra soft தயாரிக்கிற கம்பெனி - இதுலருக்கற எல்லா அறிவுஜீவிகளுக்கும் பெட்டிஷன் அனுப்பிரலாம் - வழக்கம்போல சூதானமா பெட்டிஷனுக்கான அந்த டெம்ப்ளேட் பத்தியும், அதுக்கொரு fill in the blanks வச்சு உருவாக்கியும் டபக்குன்னு அடுத்து ஒரு பதிவோ பல பதிவுகளோ போட்டுருங்க சொல்லிப்புட்டேன். நம்பிக்கை வச்சிருக்கேன், கைவிட்டுராதீங்க.

மாண்ட்ரீஸர்/சன்னாசி/தமிழ்ப்பாம்பு/?/?/?/? (ஒண்ணுமில்லே, நம்ம லக்கி நம்பர் ஏளு, அதான்)

said...

சன்னாசி உங்களின் நீண்ட பின்னூட்டதிற்கு நன்றி.

உங்களை காயப்படுத்துவது என்பது எனது நோக்கமல்ல.

சினிமா விமர்சனம் எழுதுவது நீங்கள் மட்டும்தான் என்பது எனக்குத்தெரியாது. நான் படித்த பல சினிமா விமர்சன பதிவுகளின் தாக்கம்தான் இது.


இந்த Standard template க்கு உட்பட்ட பல ( உங்களைத்தவிர பலரும் எழுதிய ) விமர்சனங்களை தமிழ்மணத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

தனிப்பட்ட முறையில் உங்களை இகழ்வது போல் இந்த பதிவு இருந்தால் அதற்கு நான் வருத்துகிறேன்.

(உங்களுக்கு இவ்வள்வு பெயர் இருப்பது எனக்குத்தெரியாது. !!!)
:-)

said...

//உங்களை காயப்படுத்துவது என்பது எனது நோக்கமல்ல.//
Same here. என்னுடைய அந்தப் பின்னூட்டம் உங்களுக்கு எப்படிப் படுகிறதோ, அதேபோலத்தான் தனக்குத் தெரிந்ததை எழுதும் தமிழ் non-Roger Ebertகளுக்கு உங்கள் பதிவும் இன்னபிறவும் படும் என்று எனக்குப் பட்டதைக் குறிப்பிடத்தான். மற்றப்படி, ஆரோக்கியமான கிண்டல் என்றுமே வரவேற்கத்தக்கது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

said...

அய்யா பெரியவரே!!!
இங்லீஸ் படம் பாக்கமாட்டோம்
உடுங்க!!

said...

அடடா ஒரு சினிமா விமர்சனம் எளுத முடியலையே இந்த நாட்டுல.... என்ன கெரகமடா இது...

said...

முகமூடி.
என்ன பண்ணலாம் சொல்லுங்க. உங்க சினிமா விமர்சனம் எப்படி இருக்கப்போகுது என்பதை பார்த்துத்தான் என் மற்ற சினிமா விமர்சனங்கள் !

:-)


சன்னாசி

Ebert ஆக வேண்டாம், Atleast குமுதம், ஆனந்த விகடன் விமர்சனமாய் இல்லாவிட்டாலே போதும் :-) . நன்றி


சித்தரே
நம்ம நிலமையும் அதேதான் ..

said...

:-)

said...

இப்ப என்னாங்கறீங்க? நான் சினிமா விமரிசனம் எழுதலாமா கூடாதா?
இன்னும் திரைக்கே போகாத பலபடங்கள் எனக்குன்னே எடுத்து வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு 'ச்சுப்'ன்னு இருக்கறதா இல்லே எழுதறதா?

ஒண்ணூம் புரியலை(-: