Sunday, August 28, 2005

புயல் அறிமுகம்

அகில உலக தமிழ் வலைபூக்களில் முதல் முறையாக !!!

இவரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கூடிய விரைவில் இவர் பேர் உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கப்போகிறது !



படத்தை பார்த்தவுடன் தெரிந்து போய் இருக்கும் இவர் Tennis ஆட்டக்காரர் என்று.






பெயர் Nicole Vaidisova.

பதினாறு வயது ( பிறந்த தேதி April 23, 1989 )
உலக வரிசையில் இப்போதய இடம் 26.

இப்பவே கிட்டத்தட்ட 6 அடி இருக்கிறார்..
அபாரமாக ஆடுகிறார் .


கிட்டத்தட்ட ஷரபோவை போலவே. மிக நேர்த்தியான் Forehand. மிகவும் எளிதான backhand. Service கொஞ்சம் வீக் என்றாலும், இன்னும் சில வருடங்களில் உடலில் வலு சேர்ந்தவுடன் அதுவும் மெருகு ஏறும்.

அடுத்த வருடத்துக்குள் இவர் நிச்சயம் Top 10 ல் இருக்கப் போகிறார் என்று பந்தயம் கட்ட நான் ரெடி.

பின்குறிப்புகள்:


1. I happen to like Women Tennis a lot. Sometimes for the Right Reasons.

2. இந்த மாதிரி ஒரு ஜொள்ளு பதிவு போட்டால் வரும் சில Classic பின்னூட்டங்களை இந்த பதிவின் பின்னூட்டத்திலும் படிக்கத் தவறாதீர்கள் !!!

3. More Nicole

4: இந்த பதிவுக்கும் அஸின் பற்றி வரும் பல பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை




9 comments:

Anonymous said...

பொழப்பத்துப் போயி,பேயைப் பிராண்டின காலமெல்லாம் போயே போச்.இப்பொ லேட்டஸ்டா இந்த மாரிதி ஒரு பதிவை ஆரம்பிச்சுக் கண்டதயும் எழுதிக் கொட்டறது தான் பொளுது போக்கு.

Anonymous said...

நல்லாச் சொன்னீங்க.! ஜில்லாக்டி தோஸ்த்..!!

Anonymous said...

ஒரு குமபகர்ண தூக்கம் போட கூடாதே, உடனே கெளம்பிருவீங்க... Nicole பத்தி எழுதறதுக்கு முந்தி அவர் கொபசெவா இருக்கிற பமக தலைவர் கிட்ட பர்மிசன் வாங்குனீங்களா..

Anonymous said...

கலக்கல் போட்டோஸ் வாத்யாரே... தலைவி இவ்ளோ அழகா?? :)
முக்கியமான விஷயம்..நான் தான் மன்றத்து உப தலவர்/செயலாளர்/பொருளாளர்... ஒ கே வா?

Anonymous said...

நல்ல முக்கியமான பதிவு சின்னவன் :-)

சின்னவன் said...

நிகோலுக்கு வயது 40

Anonymous said...

நிகோல் போட்டோவை பார்த்து ஏமாந்த நைஜீரியா இளைஞர்



மாயவரத்தை சேர்ந்த 55 வயது இளம் பெண் ஒருவர் நைஜீரியாவை சேர்ந்த 60 இளைஞரை Nicole படத்தை தன் படம் என்று e-mail அனுப்பி மோசடி செய்ததாக தினமூடி நாளிதழ் அறிவித்து உள்ளது.

மேலும் விவரங்கள் விரைவில்

முகமூடி said...

ம்ஹீம்.. யாரும் அடங்கறா மாதிரி தெரியல

சின்னவன் said...

பிதுக்கின பேஸ்ட் மீண்டும் ட்யூப் க்குள் போகுமா ?
யாரை அடக்க நினைக்கிறீர்கள் ??