Thursday, August 11, 2005

சிறுகதை.. சுட்ட பழம்.

முகமூடியின் போட்டிக்கு என் கதை. முகமூடி அவர்களே,
பரிசு எனக்கு தானே? இதோ போட்டிகான எனது கதை !

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக்கொண்டே கோயிந்தசாமி மூன்றாவது முறையாக வீட்டு வாசலுக்கு வந்து நீண்டு கிடக்கும் தெருவை பார்த்துக்கொண்டிருந்தார்.இந்த போஸ்ட்மேனை இன்னுங்காணோம்திண்ணேல உட்கார்ந்து புகையிலை பொட்டலத்தை பிரித்தார். அவரது நெற்றியில் விழுந்த கோடுகள் சொல்லியது அவரது சிந்தனை பழ்னிசாமி பற்றியது என்று.


தவமிருந்து பின்பு பிறந்தவன். எப்பவும் அவனுக்கு மொட்டை அடிச்சு விட்டு விடுவார்.

தலையில கொஞ்சம் தலையில முடி மொளச்சிடக் கூடாதே.உடனே எதோ ஒரு கோயிலுக்குக் கிளப்பீட்டுப் போயிடுவார் .கால் பரிச்சை லீவுல தான் கொல தெய்வம் கோயில் போய் மொட்டை போட்டுட்டு வந்தரார் . முழுப் பரிச்சை லீவில பழனில மொட்டை போடணும்


கூடப் படிக்கிற K.கதிர்வேல்,"கொடுக்காப்புளி"தங்கதுரை,மீனாச்சியக்கா வூட்டு ரமேசு இவிங்க எல்லாம் புதுசா வந்திருக்கிற ரஜினி மாதிரி முடி வெட்டிக்கப் போறாங்களாம் என்று பழனிசாமி எப்பவும் அழுவான்.

இப்படி வரிசைக்கா மொட்டை போட்றதப் பத்தி யாராவது கேட்டாலும் பழனிச்சாமிக்கு சாமி பக்தி சாஸ்தி;அவன் நேர்ந்து கிட்டதனாலத் தான் இப்படின்னு அப்பா பொய் சொல்றப்பவெல்லாம் ஊடால புகுந்து அப்பா பொய் சொல்றாங்கன்னு சொல்லத் துடிப்பான்.


ஒருவழியாய பழனிசாமி எப்படியோ படிச்சிட்டு Engineering college வேற போயிட்டான். என்ன அங்க இங்க பெயிலானதுனால வயசுதான் ஜாஸ்தியாய் போச்சு. அவன எல்லாம் கூட படிக்கிற பசங்களும் "மாமா" கூப்பிட ஆரம்பிச்சதுல ரொம்ப வருத்தம் அவனுக்கு.


அவன் போடுற சட்டையில அயரினிங் கிரீஸ் மடிப்பு அப்படியே இருக்கும். அந்த அளவுக்கு சுத்தமா அயர்ன் செய்வான், அதே மாதிரி தினம் தினம் ஒரு ஷீ போட்டுக்கொண்டு சோக்காதான் வருவான், எப்போது பார்த்தாலும் அப்போதான் மேக்கப் போட்ட மாதிரி இருப்பான். நிறய பசங்க அவன் கூடவே இருப்பானுங்க காலேஜில.


அப்படித்தான் அவங்க அம்ம செத்தபோ, பசங்க வண்டி கட்டிகினு வந்தானுங்க. நம்ம பழனிசாமி பசங்களையும், பொண்டாடியையும் பார்த்து எல்லாம் வாயடைச்சு போயி நின்னானுங்க. கேட்டா, பழனிசாமிக்கு கல்யாணம் ஆனதே அந்த பசங்களுக்கு தெரியாதாம். அட என் பேரே கோயிந்தசாமி, இவனுங்க நமக்கு மேல கோயிந்து போல இருக்குன்னு கோயிந்த சாமி அப்ப நினைச்சுகிட்டார்.


பழ்னிசாமி எப்படியோ பிட்டு கிட்டு அடிச்சி, பேப்பர் எல்லாம் சேஸ் பண்ணி படிச்சு முடிச்சிட்டான்.

அப்புறம் அவன் சென்னைக்கு போனதும் இததெல்லாமும் நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு. பிறந்த மண்ணை விட்டு போவதில்லை என்றிருந்தாலும் தன் மகன் கூப்பிடுவான் அவனுடன் போகலாமென்று நினத்தார். ஆனால் அது நிகழவேயில்லை. 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' இவரு மனச தேத்திக்கிட்டாரு


போஸ்ட்மேன் வந்தான் கடைசில. கோயிந்த சாமியின் கிராப்பை பார்த்து அவனுக்கு ஒரே சிரிப்பு.

இன்ன கிழவா, நம்ம பிதாமகன் விக்ரம் கணக்கா இருக்கு உன் கிராப்பு என்று நக்கல் அடித்தான்.

கோயிந்த சாமிக்கு இப்ப எதுவும் பிடிப்பதில்லை. தன் கிராப்பும், மகன் தீபாவளிக்கு அனுப்பி வைத்த 500 பணமும்.

முகத்தில் ஏமாற்றம் மேகத்தின் நிழல் மண்ணில் படர்வதுபோல தழுவி நின்றது. நீண்டநேரம் திண்ணையிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தார்.



கதை எழுத தூண்டிய சுதர்சன், குழலி, சுரேஷ் க்கு மிக்க நன்றி. உங்கள் கதைகள் வெற்றி அடைய என் வாழ்த்துகள். நீங்க யார் ஜெயித்தாலும் நான் ஜெயித்த மாதிரி தான். :)

25 comments:

said...

சின்ன வயசுல அப்பா பிள்ளைக்கு மொட்டை போடுறார்,
வயசான பிறகு அப்பவின் கிராப்பை மற்றவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.

என்ன ஒரு அருமையான் கதை.
முதல் பரிசு உங்களுக்கு தான் !

said...

இந்த கதைக்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று நான் கணிக்கிறேன்..

said...

அருமையான் கதை. !
ஆழ்ந்த கருத்துக்கள் !!
முடிந்தது இந்த போட்டி !!!

உங்களுக்கே எல்லா பரிசும்

said...

சூட்டோட சூடாய் சுடறயே ராசா நீ

said...

// 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' // நிறைய எடத்துல இந்த ப்ரச்னைதான். மனசு விட்டு பேசாம நினைப்புலயே தப்பு பண்ணிடுவாங்க.

said...

ரொம்ப நல்லா இருக்கு சின்னவன்.. ஒரு பெரிய ஆளோட பார்வையிலேயே எவ்வளவு சிறிய பிரச்சனைகளை சொல்லிட்டீங்க.. நானும் கவிஞன் சொன்னதை வழிமொழியறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

அருமையான கதை!

வயதான் கிராமத்து பெரியவரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள கதை!!

நெஞ்சைத்தொடும் உருக்கமான சென்டிமெண்ட் முடிவு கொண்ட கதை!!!

பரிசுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய சின்னவன்!!!!

said...

அடடா
ஞானபீடம் இப்பதான் கதை போட்டு இருக்கார்.

கொஞ்ச முன்னாடி போட கூடாத ஞானம்.
உங்களுதும் நம்ம கதையில மாட்டி இருக்குமே ?

said...

சுட்டாலும் சுட்டே இப்படி மூணுபேரைச் சுட்டுட்டயேப்பா.

அடேயப்பா, சுடறதுலெ மன்னன்தான்!

அக்கா

said...

இந்த கதைக்கு நிச்சயம் பரிசு உண்டு சின்னவன்....

(பரிசு வாங்க நேர்ல வராமயா போய்டுவ... மக்கா.. நெற்றிக்கண் இல்லாமயே எரிக்கறோம் நாங்க)

said...

நன்றி துளசி அக்கா
நீங்க ஏதாச்சும் கதை எழுதறீங்கனா சொல்லுங்க ..

முகமூடி
எனக்கு நிச்சயம் தெரியும். பரிசு எனக்குத்தான் என்று..
நேரில் வருவத பத்திதான் கொஞ்சம் பயமாய் இருக்கிறது..

said...

கண்டு பிடிச்சிட்டேன்.
சின்னவன் என்று ஒரு ஆளே இல்லை.
இது ஒரு கூட்டு பதிவு.
எவ்வளவு பின்னூட்டம் இதில் வருது பாருங்க

said...

Good Chinnavan.
Fantastic. You rock dude !

said...

மூடி சொன்னாரு போட்டின்னு
நா(ங்களும்)னும் நினச்சோம் சீரிஸின்னு
ஞானமும் பண்ணாரு லொள்ளூன்னு
சின்னவ போட்டான் காப்பின்னு
இத்தெல்லாத்துக்கும் கோஸ்டி
போடுது ஓ-ன்னு

என்னத்தச் சொல்ல ஆனாலும் பஸங்க
அடிக்கற லூட்டி..கீதே..சிரிப்பு வரலேன்னா நீ ஹாண்டிகாப்புதா போ..


இப்படிக்கு

பரிசை கோட்டைவிட்ட ஜோக்கர்

said...

கிவி அண்ணாத்தா
உங்க கதை நிசமாவே நல்லா இருக்கிறது. அதுக்குல்ல எதுக்கு பரிசு போயிட்டுச்சுன்னு சொல்றீங்க.


நானும் 3 கதையும் படிச்சேன், மூணுத்துக்கும் link பண்ணதான் இந்த கலாட்டா .
தப்பா நினைக்காதீங்க.

said...

சின்னவன்

கிரியேட்டிவிடி க்கு நிச்சயம் பரிசு உங்களுக்கு தான் ;)

said...

ஞானபீட பதிவில் சுரேஷ் ( KIWI )

//டிர்ர்ரிங்... டிர்ர்ரிங்// கில் ஆரம்பித்து,

//ரிஸீவரைக்//

/டிபன்/போன்/ஆபீஸ்/லிப்ட்/ஆட்டோ-லாக்/

/நோட்புக்கை/நம்பர்/

/பீப் ஹோல்/ சேல்ஸ் ரெப்/ பீப்/பீரோவைத் /

/டவல்/ பாத்ரூம்/பாத்-டஃப்/டிரையர்/

/வாஷிங் மெஷினில் /மியூட்/

/ரீடயல்/ரிங்-கில் ஹலோ/

/ரெஸ்ட்/ஹால்ல/மோஃப்/வாக்கும் கிளீனர் /

என்று அரிய பெரிய டமில் வார்த்தைகளைப்போட்டு
மூடி சொன்ன 'ரூல' 'ஸ்ட்ரிக்டா' 'ஃபாலோ' பண்ணி
நீங்க இப்படி 'ப்ரைஸ' 'விண்' பண்ணீட்டீங்களே ஞானம்?

அனாலும் முடிவு சரியா இல்ல

அது 'க்ளாக் ஓடிக்கொண்டிருந்தது விண்ட் வீசிக்கொண்டிருந்தது' ன்னு முடிச்சிருந்தா - அஹா டமில்ல இத மாதிரி ஒரு ஸ்டோரி வரவே இல்லன்னு நான ஸ்வேர் பண்ணியிருப்பேன்.




ஆனா நம்ம கதையை பாருங்க. டமில் வார்த்தைகளே "அவ்வளவா" இல்லை. Special பரிசு எனக்குதான்.

said...

சின்னவரே.. உங்கப் பெயரை படாப் பெரியவர்னு மாத்தி வைச்சுக்கோங்க... பின்னே என்ன? கதைகளை மட்டுமா சுட்டீங்க? பின்னூட்டங்களையும் அழகா சுட்டிருக்கீங்களே?? :-) (நீலாம்பரின்ற pseudonym நல்ல கற்பனை!!)

said...

நன்றி நீலாம்பரி !!

கண்டுபிடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தை ஏமாற்றவில்லை நீங்கள்.

:)

said...

உங்களுக்கு ஒரு idea சொல்றேன் அடுத்த பதிவுக்கு {எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும்.. எழுத தெரியாது!! :-)}

நம்ம identity தெரியாத ப்ளாகர்ஸை சந்திச்சா 'இவர் தான் அவர்' அப்படின்னு confirm பண்ண ஒரு பத்து கேள்விகள் தயார் செய்ய முடியுமா? நீங்க தான் எல்லாரையும் நல்லா புரிஞ்சு வைச்சுருக்கீங்களே அதனாலே முயற்சி பண்ணுங்க!!! :-)

said...

செய்கிறேன்.
எவ்வள்வு எளிது என்று தெரியவில்லை.
முயற்சி உடையார் ..

said...

:))

said...

சூப்பர் தல சூப்பர் உம்ம குசும்புக்கு அளவே இல்லையப்பா

said...

நன்றி குழலி.
கதை பிடிச்சு இருந்ததா ? பரிசு கிடைக்குமா?

said...

இந்த கதை போட்டியில் இல்லையா ?
எனன இந்த தமிழ்க்கு வந்த சோதனை !