Wednesday, August 03, 2005

என் குட்டி கதை - 1 ..

மாடும் , கன்று குட்டியோடும் எடுத்த குட்டி போட்டாவை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். கணவன் குட்டியப்பன் அருகில் இருப்பது கூட தெரியாமல்.

"ஏம்மா என் செல்ல குட்டி, ஏன் கன்னு குட்டி கூட இருக்கிற இந்த குட்டியூண்டு போட்டோவை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருப்பாய்.பாரு ஸ்கூலில் இருந்து நம்ம குட்டி குட்டி பசங்க, தலையில குட்டி குட்டி விளையாடி கிட்டே வராங்க "என்றான் குட்டியப்பன்.


மாடு அடி வயிற்றில் முட்டிய ஒரு குட்டி விபத்துக்கு பின், குட்டியாகி போன கணவனுக்கு வைத்தியம் பார்த்து ஊரு விட்டு போய்விட்ட 25 வய்து குட்டி நாட்டு வைத்தியனுக்கு குட்டிபசங்க போட்டோவை அனுப்பி வைக்க வேண்டும் என்று மனதுக்குள் குட்டி குட்டி எண்ணங்கள் பூக்க வெட்கப்பட்டாள் அவள்.


===============================================================
என்னங்க பண்ணறது, இப்ப வர குட்டி கதைகளில் வர குட்டிகள் எல்லாம் கொஞ்சம் கொடூரமாத்தான் இருக்காங்க.

---
தகர மாளிகை

8 comments:

Anonymous said...

குட்டிகளை வில்லிகளாய் காட்டும் குட்டி கதைகளை எதிர்ப்போம் !
:))

Anonymous said...

You rock dude..
Wow what a wondeful story !

Anonymous said...

அவ எதுக்கு அந்த வைத்தியனுக்கு போட்டோ அனுப்பனும் ? புரியலையே?

Anonymous said...

I think you didnt read it carefully . வைத்தியன் & குட்டியப்பன் IS not the same person. Read it 1000 more times !

Anonymous said...

அண்ணாத்தா நீங்க கடேசியா இந்த ரெண்டு வரியும் சேர்த்துகுங்க..
" போஸ்டில் வந்த தனது இன்னொரு மனைவியும் , குழந்தைகளும் இருக்கும் போட்டவை ஒளிக்க இடம் தேடினான்
குட்டியப்பன்."


இது எப்படி இருக்கு ?

Anonymous said...

இந்த மாதிரி அபத்தமாய் வேற ஒருத்தர் தானே, குட்டி கதைகள் எழுதுவார். நீங்களுமா ?

Anonymous said...

ரொம்ப நன்னா எழுதறேள்.
ஆனா நேக்கு ஒன்னும் புரியலை.

சின்னவன் said...

அனானி
என்ன புரியல உங்களுக்கு ? கொஞ்சம் தெளிவாய் சொல்லுங்க