Thursday, August 25, 2005

முகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு

பிரபல(?) வலைபதிவர் , பமக புகழ் முகமூடி அவர்களை தினமூடி நிருபர் தன் கனவில் சந்தித்து பேட்டி கண்டார். அது இங்கே...

நிருபர்: எவ்வளவோ வலைபதிவர் இருக்காங்க... ஆனா உங்க தனித்தன்மை என்ன சார்.

முகமூடி: மற்ற வலைபதிவர்களை கிண்டல் அடிக்கிறது ... என்ன அதிர்ச்சி லுக் விடறீங்க.. இப்ப பாத்தீங்கன்னா, மொத்தம் ஏழே பேர்தான் ரெகுலராக வலைபதிகிறார்கள். இவ்ளோ குறைச்சலா இருக்குற வலைபதிவை மட்டும் படித்தால் மற்றவர்களுக்கு போர் அடிக்காதா ? அதனால ஒரு நாளைக்கு ஒரு கிண்டல் பதிவு போடறேன்.

முதல்ல ஒரு சீரியஸான(??) பதிவை யாரோ போடுவாங்க . அப்புறம் அதையே கிண்டல் அடிச்சி நான் பதிவு போடுவேன். அப்புறம் ஞானபீடம் அத கிண்டல் பண்ணி கமெண்ட் விடுவாரு. அத கிண்டல் பண்ணி சின்னவன் ஒரு பதிவு போடுவாரு. அப்புறம் குழலி, ஜிகிடி...,

நிருபர்: போதும் சார், புரிஞ்சி போச்சி.. சில குறிப்பிட்ட வலைபதிவர்களை மட்டும்தான் நீங்க நிறைய கிண்டல் அடிக்கிறீங்க .. அது உங்க கொள்கையா சார்.


முகமூடி: மண்ணாங்கட்டி. வேற எவன் என்னை எதிர்த்து எழுதறான் . வலைபதிவு கிண்டல் மாதிரி உயர்ந்த விஷயத்த பண்றவனுக்கு இந்த தமிழ்மணம் கொடுக்கற கௌரவம் இதுதான் தம்பி... ஆனா அந்த சில வலைபதிவர்கள் அப்படி இல்ல. எனக்கு கிண்டல் அடிக்கற மாதிரியான விஷயங்கள் நிறைய எழுதறாங்க. அதான் எங்க வெற்றிக்கூட்டணியோட ரகசியம்.

நிருபர்: அப்புறம் ஏதோ ஒரு படத்துல கூட நடிச்சீங்க போலருக்கு

முகமூடி: ஹிஹி. நான் பின்னூட்டத்தில் சொல்லறத எல்லாம் அப்படியே நம்பக்கூடாது ராசா. பாரு , நான் கூடத்தான் Dr/Engineer அப்படினு ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன். எல்லரும் அத நம்பலையா . அப்படியே அடிச்சு விட வேண்டியதுதான்நிருபர்: கொஞ்ச நாளா உங்க கிண்டல்கள் நிறைய காணோமே அது ஏன் சார்.


முகமூடி: அது ஒரு சோகமான காரணம்பா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஒரு சிறுகதை போட்டி ஆரம்பிச்ச்சிட்டேன். அத முடிக்கறதுக்குள்ள எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது.. மயக்கமா வருது... இருந்தாலும் சமாளிச்சி என் வாழ்க்கைல முத தடவ போட்டி போட்டு முடிச்சேன்...


இப்ப பேங்கல $500 போட்டு வச்சிருக்கேன்.

மொத்தம் 5 X 100 = 500.
5 போட்டி நடத்தற அளவு காசு ரெடி .. என் முதல் போட்டி முடிவுகள் மட்டும் வரட்டும் அப்புறம் தமிழ்மணம் எங்கும் நம்ம கிண்டல்தான்..

27 comments:

said...

:))

said...

// மற்ற வலைபதிவர்களை கிண்டல் அடிக்கிறது ... // நான் மற்ற வலைப்பதிவர்களை கிண்டலடிக்கிறேனா.. அபாண்டம். மக்கா இது உங்களுக்கே அடுக்குமா..

இருந்தாலும் சின்னவா... இந்த பதிவு கலக்கல்தான்...

said...

இந்த பதிவிற்கும் எஸ்.ஏ.ராஜ்குமார்- தினமூடி நிருபர் சந்திப்பு பதிவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையின்னு ஒரு டிஸ்க்ளெய்மர் விட்டாதானே கிக்கே..

>> எப்படியோ ஒரு விளம்பரம் போட்டாச்சி. ரொம்ப நாளாச்சி விளம்பரம் பண்ணி..

said...

அடா அடா சின்னவரே உங்களுக்கு மட்டும்(மா?) எப்படித்தான் இப்படியெல்லாம் எழுத தோணுதோ போங்க! எங்கேயோ போயிட்டிங்க. பதிவு கலக்கல் தல.

said...

முகமூடி:
அப்ப அந்த உண்ணி சந்திப்பு, புகை படங்கள் பதிவு எல்லாம் சொந்த பதிவுகள் என்று எனக்கு மட்டும்தான் தோணுதா ?

பமக தொண்டர்கள் அய்யா நாங்கள் எல்லாம். தலைவரின் கொள்கை தெரியாமலா கட்சியில் இருப்போம்.
(?? )


குழலி நன்றி.

said...

உன்னி சந்திப்பு உண்மையிலேயே நடந்ததப்பா.. போட்டோ போடாதது என் தப்புதான். இன்விடேஷன வேற காணோம். டிக்கெட்ட வேணா ஸ்கான் பண்ணி போடறேன்.

ஏன் நான் என்னோட புகைபட பதிவுன்னு ஒன்னு சொந்தமா போட கூடாதா..

இதன் மூலம் வலையுலகத்திற்கு நான் சொல்லிக்கொள்வது : என் பதிவு எல்லாமே அக்மார்க் ஒரிஜினல் கற்பனை.. சிலரை போல் மற்ற பதிவுகளை கிண்டல் அடிப்பவன் நான் அல்ல

// பமக தொண்டர்கள் அய்யா // தலைவர் மாதிரி தூய உள்ளத்தோட கை சுத்தத்தோட இருக்க எப்பத்தான் கத்துக்க போறீங்களோ.

said...

//தலைவர் மாதிரி

தலைவன் எவ்வழி
தொண்டர்களும் அவ்வழி


உன்னி இன்விடேஷ்ன் என்கிட்டயும் இருக்கு. நானே ஸ்கேன் பண்ணி போட்டு விடுகிறேன்.
ஆனா தாடி, மீசை வைத்த வைக்காத Photos தான் என் கிட்டே இல்லை.

:)//மற்ற பதிவுகளை கிண்டல் அடிப்பவன் நான் அல்ல


சரி சரி,, நான் ஒத்துக்கொள்கிறேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

gr8.. Laugh riot..
One of your best
:))

======
VB

said...

இதை ஒரு தேங்காமூடி பதிவாகவே நான் காண்கிறேன்!

தேங்காமூடி அட்வகேட்...
தேங்காமூடி பாகவதர்... வரிசையில்
ஒரு புதிய இணைப்பு...
தேங்காமூடி Blogger!

:-)))))))))))))

ஆஹா... எத்தன'மூடி'...

said...

சின்னவன்,
உங்களுக்கு தமிழ்மணத்தில் எப்படி என் வலை பதிவை இணைப்பது என்று தெரியுமா ?
நான் முயற்ச்சி செய்தால் , அது இணைத்துக்கொள்ளவே மாட்டேன் என்கிறது.
யாருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

தெரிந்தால் சொல்லுங்களேன்.

என் பதிவு முகவரி..

http://nishatamil.blogspot.com

said...

ஞானபீடம்
வந்துட்டீங்களா..

என்னடா இன்னமும் ஆளக்காணோமே என்று பார்த்தேன்.

உங்க விளையாட்டுக்கே நான் வரலை.
ஆள விடு நாராயணா.


Restraining Order வாங்க வேண்டும் போல இருக்கே.

said...

என்ன ஓய் சின்னவரே!
எப்ப இருந்து NOKIA service!
அதாங்க Connecting people!

said...

நிஷா
நீங்கள் மன்றத்தில் சென்று இதை பற்றி சொல்லுங்கள்.
Moderators யார் என்று எனக்கு தெரியாது .

Sorry :(

said...

//அதாங்க Connecting people!

???

என்னய்யா சொல்றீங்க ?

said...

Thanks..
I will try there.

Nisha

said...

nisha,

go to http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php

and in the field there give your URL and click the button

and it'll take u to another page, where you'll give your details... thats it you're done

said...

Mugamoodi,
I tried there.

It gives me an error saying that
the webaddress is unreachable.

I posted a query there now.

Thx
Nisha

said...

:-)

said...

நன்றி நற்கீரன்

said...

ha ha ha super thala super!!
mugamoodike va??

said...

நன்றி .
வீ. எம்