Saturday, August 06, 2005

அனுராதா என்ற ஒரு அம்மா!

முன் குறிப்பு, இது ஒரு சீரியஸ் பதிவு !!!!

ஸ்மிதா பற்றியும், சாந்தி பற்றியும் எழுதி விட்டார்கள். மிச்சம் இருப்பது அனுராதா மட்டும்தான். அவரை பற்றியும் எழுதி 80, 90 களின் கவர்ச்சி Holy trinity பற்றி முழுமை செய்கிறேன்.

அனுராதா 80களில் மிக பிரபலமான ஒரு கவர்ச்சி நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் சதீஷ் என்ற நடன கலைஞரை காதலித்து மணந்து கொண்டு திரை படங்களில் இருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கியும் இருந்தார்.

ஒரு விபத்தில் சதீஷ் மிகவும் காயம் பட்டு , கை, கால் அசைக்க முடியாமல் ஒரு குழந்தை போல ஆகி விட்டார் மணமான கொஞ்ச நாட்களில். கையில் ஒரு பெண் குழந்தை , கூடவே கணவன் குழந்தை போல ! அனுராதாவின் கண்ணீர் பேட்டி ஒரு பிரபல வார இதழில் வெளிவந்ததை படிக்க நேர்ந்த்து .

இன்று அவரின் மகள் பிரபல நடிகை ஆகி விட்டார் அனுராதாவும் சில படங்களில் நடிக்கபோவதாகவும் செய்திகள்.

தனி ஒரு பெண்ணயாய் , குடும்பத்தை முன்னேற்றி கொண்டு வந்த அனுராதாவும் பாராட்டுக்கு உரியவரே.

வாழ்க்கை கவர்ச்சி மட்டும் அல்ல, கடினமும் கூட !!

9 comments:

முகமூடி said...

தங்கத்தலைவி அனுராதாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா ??

குழலி / Kuzhali said...

//வாழ்க்கை கவர்ச்சி மட்டும் அல்ல, கடினமும் கூட !!//

உண்மை... கவர்ச்சிப் பதுமைகளாக பார்க்கப்படும் பல நடிகைகளின் பின்னால் கடும் சோகம் உள்ளது, வெகு சிலரே விருப்பப்பட்டு வருகின்றனர், மற்றோரெல்லாம் பெற்றோர்களின் சுய நலத்திற்காகவோ, தம்மால் முடியாததை தன் பெண்ணால் சாதித்துக்கொள்ள வேண்டுமென்ற வெறியாலோ அல்லது சில வலுவான காரணங்களோடோ தான் வருகின்றனர்.

சின்னவன் said...

முகமூடியாரே,
அதுக்குதான் இது ஒரு சீரியஸ் பதிவு என்று மு.கு. போட்டேன் :)


குழலி:
உங்களின் கருத்தோட 100 % ஒத்து போகிறேன்.

Anonymous said...

தமிழ்மண்த்தின் Latest Trend க்கு ஏற்றபடி பதிவிடும் சின்னவனுக்கு ஒரு சபாசு !!!

முகமூடி said...

// அதுக்குதான் இது ஒரு சீரியஸ் பதிவு என்று மு.கு. போட்டேன் //
ஏன் சீரியஸ் பதிவுல இளமைக்கால அனுராதா படம் போட்டா நாங்க பாக்க மாட்டோமா...

சின்னவன் said...

தலைப்புல அம்மா என்று போட்டாச்சு,
கூடவே மகள் இருக்கிற இளமைகால போஸ் கிடைக்கலீங்க.. மன்னிச்சுக்குங்க !!!

Dr.Srishiv said...

அனுராதா,,,
முத்து எங்கள் சொத்து படத்துல, நானுந்தன் செல்லக்குட்டி...என்று குதியாட்டம் போட்டவர், இன்று இப்படியா????

Anonymous said...

nice write up !

Abreu, Jorge said...

I can't read a word of it but it looks great...