Friday, August 19, 2005

சிறுகதை - வீ .எம்.

"என்ன மச்சி . எப்ப பாரு ஏதாவது எழுதி தள்ளிக்கிட்டு இருக்க "
என்ற நண்பனை திரும்பி பார்த்ததேன் நான்.

வெங்கட் ரமணீ மயில் வாகன திருமகன் என்ற என் நீண்ட பெயர் எல்லோராலும் வீ எம் என்று எப்பவோ சுருங்கி விட்டது.

. வெங்கட் தாத்தா பெயர் , ரமணீ அப்பா பெயர், மயில் அம்மாவிற்கு பிடித்த பறவை, திருமகன் படம் தான் அப்பாவும் அம்மாவும் பார்த்த முதல் படமாம் அதானால் எனக்கு இந்த நீண்ட பெயர் வந்தது என்பது இந்த கதைக்கு தேவை இல்லாத விஷயம் என்றாலும் 2000 வார்த்தை எழுதனுமே !!


அமுதம் பத்திரிக்கை கவிதை போட்டி ஒன்று அறிவித்து இருந்தது. அதற்காக நான் எழுதிக்கொண்டு இருக்கும் கவிதைகளை தான் நண்பன் கிண்டல் அடிக்கிறான். ஆனால் அது எனக்கு பெரிதாய் படவில்லை.

கல்லூரிக்கு போகும் முன் , இந்த பஸ் ஸ்டாண்டில் தினமும் சைட் அடிப்பது வழக்ககம். பக்கத்தில் இரண்டு பிகர் களும் நின்று கொண்டு இருந்தார்கள். மஞ்சள் சுரிதாரில் ஒருத்தியும், ஜீன்ஸ் போட்ட இன்னொருத்தியும்.
பக்கத்திலேயே, கிராமத்து பெரிசு ஒன்று மஞ்சப் பையோடு பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தது.

ஓ ....பெண்ணே...
உனக்குதான் எத்தனை ஆடைகள்.
ஜீன்ஸ் .சுடிதார், சேலை, தாவணி..
பாவம்
பக்கத்தில் இருக்கும் பெருசை பார்..
கிராமத்து விவசாயிக்கு
இருப்பது கோவணம் மட்டும் தான் !!!


"மச்சி கலக்கிட்டமா. இதுக்குதான் முதல் பரிசு "

என்றான் நண்பன், பிகர்கள் மேல் இருந்த கண்களை எடுக்காமலேயே.

இதுக்கு இப்படியா. இன்னும் கனமாய் 200 பக்கத்துக்கு ஒரு கவிதை எழுதி இருக்கேனே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.


நாங்கள் தமிழில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த பிகர்கள் தங்களுக்குள் நக்கலாய் சிரித்து கொள்வது நன்றாய் தெரிந்தது

பஸ் வந்தவுடன் ஓடி ஏறிய சுரிதார் பெண்ணின் துப்படாவை பின்னலேயே ஏறிய பெரிசு கால் வைத்து விட அந்த பெண் படிக்கட்டில் நிலை தவறி விழுந்து விட்டாள்


அவளை நான் காப்பாறியது, பின்னர் எங்களுக்குள் காதல் வந்து கல்யாணத்தில் முடிந்ததும் இந்த கதைக்கு தேவைபடும் விஷயம்.

காதலை ஒத்துக்கொள்ளும் முன் அவள் போட்ட முதல் கண்டிஷன்.
இனிமே கவிதை அது இது என்று எழுதின அவ்வளவு தான்.

அப்படியாக என் எழுத்து சேவை முடிவு பெற்றது. இதுதான் என் கடைசி எழுத்துக்கள்.
நன்றி! வணக்கம் !!

.ம்.. அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே. அமுதம் போட்டி பரிசு எனக்குத்தான் கிடைத்தது !



(வீ எம். அண்ணாச்சி . சும்மா தமாஷ¤க்குத்தான். பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. எடுத்து விடுகிறேன். . )

19 comments:

said...

மிக நல்ல கதை, முடிவு சற்று ஊகிக்க முடிந்தது என்றாலும், இந்த கதையின் இறுதியில் சட்டென ஒரு என் வாழ்க்கை பிளாஷ் பேக்...

said...

நல்ல விறுவிறுன்னு போச்சு கதை.... கொஞ்சம் நீளத்தை ஜாஸ்தி பண்ணியிருக்கலாம்ன்னு தோன்றியது

said...

//மிக நல்ல கதை, முடிவு சற்று ஊகிக்க முடிந்தது என்றாலும், இந்த கதையின் இறுதியில் சட்டென ஒரு என் வாழ்க்கை பிளாஷ் பேக்...//
நாசமா போச்சி உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா?! :-)

குசும்பின் மறுபிறப்பே சின்னவரே நீர் வாழ்க...

said...

இந்த கதையின் முடிவை நீங்க ஊகிச்சீங்களா சரியாக ?

said...

//இந்த கதையின் முடிவை நீங்க ஊகிச்சீங்களா சரியாக ?//
உங்க பதிவிலெல்லாம் ஊகிக்க முடியுமா??

said...

குழலி 10 எழுத வேண்டும் என்று கோடானு கோடி மக்கள் தினமும் கேட்கிறார்கள்
எழுத அனுமதி தருவீர்களா ?

said...

//புரியிலன்னா, சின்னவன் மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்

போன பின்னூட்டத்தை படிக்கங்க.
அந்த கோபம்தான் . வேற என்ன

:((

said...

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு...
ஆறோடும் ஊராப்பாத்து டேராப் போடு..

அடி ஆத்தி இது வாத்துக் கூட்டம்...

வாழ்க கார்த்திக்!

said...

வாங்க NJ
பாட்டுக்கு பாட்டு போட்டியில் எல்லாம் நிறைய பரிசு வாங்கி இருப்பீங்க போல இருக்கு.
எல்லா situation க்கும் ஒரு பாட்ட போட்டு தாக்கறீங்க.

யாருக்கு யார் மேல கோபம் இப்ப ? ஒரே குழப்பமாய் இருக்கு !

:((

said...

கவிதை எழுதி திரியும் வாலிப வயது பிள்ளைகளின் அசட்டை / எகத்தாளத்திற்கு உச்சகட்ட தண்டனை கல்யாணம் மட்டுமே என்று முடிவாகக் காட்டும் 'கதைஞர்'கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.

said...

//குழலி 10 எழுத வேண்டும் என்று கோடானு கோடி மக்கள் தினமும் கேட்கிறார்கள்
எழுத அனுமதி தருவீர்களா ?//

என்னை மாட்டிவிட்டு பார்க்க வேண்டுமென்று யாருக்கோ மிக்க ஆசை போல. நற நற...

சின்னவரே நீங்க எதற்கு அனுமதி கேட்டீர்கள் இதற்கு கேட்க, நடத்துங்க தல...

அப்படியே இங்கேயும் போய் பாருங்க

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_20.html

said...

//கவிதை எழுதி திரியும் வாலிப வயது பிள்ளைகளின் அசட்டை / எகத்தாளத்திற்கு உச்சகட்ட தண்டனை
//

இந்த பின்னூட்டத்தை இங்கே இட்ட நாரதர் யாரோ?

said...

நான் இல்லை; நான் இல்லை!

said...

நான் இங்க பின்னூட்டம் விட்ட மாதிரியும் இருக்கு விடாத மாதிரியும் இருக்கு... எது சரி

said...

சில சமயத்துல... சரி.

said...

சின்னவர், எங்களுக்கேல்லாம் பின்னூட்டமிடவே சில சமயம் நேரப் பற்றாக்குறை. நீங்க என்னடான்னா உடனே ஒரு க்ளோன் பதிவு போட்டு, க்ளோன் கமேண்ட்ஸ் எழுதி, அப்பப்ப அற்புதமான ஃபோட்டோ பிடிச்சு.... எங்கப்பா வேலை செய்யுறே? எனக்கும் ஒரு வேலை கிடைக்குமான்னு பாரேன்!! :-))

said...

புதுசா எழுதனும் என்றால் தானே யோசிக்கனும், க்ளோனிங்க் எல்லாம் 99 % Cut & Paste தான்.
நமக்கு தொழிலே Reverse Engineering

said...

சின்னவரே ,
சூப்பர் குசும்பு ... ! கலக்கங்கு தல கலக்குங்க... !
//கவிதைகளை தான் நண்பன் கிண்டல் அடிக்கிறான். ஆனால் அது எனக்கு பெரிதாய் படவில்லை///

நன்பன் கின்டலடிச்சா நாம ஏன் நிறுத்தனும்.. ஏதோ ஒரு பிகர் சொன்னா நிறுத்தலாமுனு நெனச்சுட்டே படிச்சா, கடைசில நீங்களும் அதே தான் சொல்றீங்க... :) என்ன ஒத்துமை பாருங்க... :)

கல்யாணம் முடிஞ்சதுங்களா??? இல்லை இனிமேதானா?? :)

///வீ எம். அண்ணாச்சி . சும்மா தமாஷ¤க்குத்தான். பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. எடுத்து விடுகிறேன். . ) ///
இதெல்லாம் கவலைபடாம எழுதுங்க சின்னவரே... நமக்கும் இதெல்லாம் கை வந்த கலைதானே..
குழலி , முகமூடி - ரிஸ்க் அனாலிஸிஸ் போட்டவன் தானே நானு :)
வீ எம்

said...

நன்றி வீ.எம்.
நிறைய கதை எழுதி இருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
:)