Monday, August 08, 2005

போட்டிகள்

கவிதை போட்டி முடிந்தது, சிறுகதை போட்டி ஆரம்பிச்சாச்சு. இந்த ரேஞ்சில் போனால் இந்த மாதிரி போட்டிகளையும் நீங்கள் விரைவில் எதிபார்க்கலாம்.


சுஜாதா குற்றப் போட்டி

சுஜாதா 1ம் வகுப்பில் எழுதிய அ ஆ வில் இருந்து இன்று காலை எழுதிய சலவை கணக்கு வரையில் உள்ள எழுத்து, பொருள், கருத்து பிழைகளை தகுந்த ஆதாரத் துடன் காட்டவேண்டும். அதிக பிழைகள் கண்டு பிடிப்பவருக்கு மெக்ஸிகோ நாட்டு சலவைகாரியும் நானும் என்ற வசந்தின் சுயசரிதை பரிசாக வழங்கப்படும்

திருவாசகத்தில் உள்ள தெரு வாசகங்கள்

இளையராஜா எந்த எந்த இடத்தில் முறை எத்தனை முறை அபஸ்வரத்தில் பாடி இருக்கிறார்
உள்ளூரில் இசை அமைத்து இருந்தால் எவ்வளவு காசு மிச்ச படுத்தி இருக்கலாம்
என்று ஆராய்ந்து எழுத வேண்டும். சரியான முறையில் பாடி கேஸட் /சிடி அனுப்பி வைக்க வேண்டும்.
பரிசாக ஞாநியின் பியர் பாட்டலும், சாரு வழக்கமாக அனியும் பேன்ஸி பனியனும் தரப்படும்.


மத நூலகளும் "e" யும்.

அனைத்து மத நூலகலின் ஆங்கில மொழி பெயற்புகளில் "e" இந்த எழுத்து எத்தனை முறை வருகிறது என்று எண்ணி சொல்ல வேண்டும்.

பரிசாக தி.க. வெளியீடுகள் ஒரு வருடத்திற்கு !

Last but not least ...Now. Mother of all competitions. !!!

ரஜினி துதி பாடல்.

4 வரிக்கும் மிகாமல், நாடு, நதி, மொழி ஆகியவற்றை பெண்ணாக உருவகப்படுத்தி எழுத்தப்பட்ட பாடல்களை ரஜினிக்கு ஏற்ற மாதிரி பாடவேண்டும். கன்னடத்தில் எழுதுபவர்களுக்கு கூடுதல் மதிபெண்கள் .

பரிசாக இராமதாஸ் தோட்டத்து மாங்கனிகள், வேண்டும் போது எல்லாம்.

விதிமுறைகள்
-----------------

1. நடுவர்களின் தீர்ப்பே இறுதி ( அவங்க யாரு, தகுதி என்ன என்று எல்லாம் கேட்க கூடாது )
2. போட்டியில் கலந்து கொள்பவர்கள், இந்த பதிவை பற்றி பத்து வரி எழுதி தங்களின் பதிவில் இருந்து இதற்கு லின்க் கொடுக்கவேண்டும் ( அப்படியாவது இங்க கூட்டம் வ ருமான்னு பார்க்கணும். போட்டி நடத்திறதே ஒரு விளம்பரத்துக்காக தானே !!)

========================================================================

எந்த வலைபதிவரையும் எனக்கு தெரியாது, யாரிடம் நான் கடன் வாங்கவில்லை, என் எழுத்துக்கள் காப்பி அடிக்க படவில்லை . ஆகவே எனக்கு யார் மீதும் துவேஷமோ, பொறாமையோ இல்லை !!!

13 comments:

said...

நான் ரெடி, நீங்க ரெடியா ?

said...

பேன்ஸி பனியன் பரிசு

very clever :)

ரமேஷ்

said...

இத்தனை நாட்கள் இந்த வேலையை முகமூடி செய்து கொண்டிருந்தார், இப்போது நீங்களா? நடத்துங்க நடத்துங்க.

said...

இப்படியும் விளம்பரம் செய்யலாம்

இன்றே கலந்து கொள்ளுங்கள் சிறுகதைப் போட்டி

said...

முகமூடி
சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டார் இப்ப. அவரின் லேட்டஸ்ட் சிறுகதை பார்த்தீங்களா?
கலி முத்தி போய்விட்டது..

said...

சலவைக்காரி ஜோக் யாருக்காவது தெரியுமா ?

said...

முகமூடி நம்ம பதிவுல விளம்பரம் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து பாருங்க,
cheese cake receipe விளம்பரம் எல்லாம் இங்க வருது.
தேவுடா ! தேவுடா !!!

said...

// சலவைக்காரி ஜோக் யாருக்காவது தெரியுமா ? // எனக்கு தெரியும்... ஆனா அது மெக்ஸிகோ சலவைக்காரி இல்ல... வண்ணாரப்பேட்டை சலவைக்காரி (இந்தியனாய் இரு... இந்திய சோக்குகளையே படி)

said...

முகமூடி
வண்ணாரபேட்டை ஜோக்கையாச்சும் சொல்லி போடுங்க..

said...

// இத சொல்லற முகமூடி LA இருக்கிறதே ஒரு ஜோக்குதான் // redirect -> தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி

தெலுங்கர்களும், மலையாளிகளும், சாளுக்கியர்களும், என்னை தவிர மற்ற அனைவரையும் ஆட்சி கட்டிலில் ஏற்றும் சொரணை கெட்ட தமிழகத்திலிருந்து ஒரு முத்து, எங்கள் சொத்து அருமைத்தம்பி முகமூடி எல்.ஏ வில் இருப்பதை சோக்குத்தான் என்கிறது ஆரிய கூட்டம் ஒன்று.... தம்பி முகமூடி எல்.ஏ வில் இருந்தாலும் அவர் இந்தியராகத்தான் இருக்கிறார் என்பதனை என் சால்வை மீது ஆணையாக சொல்லிக்கொள்கிறேன்.

said...

// வண்ணாரபேட்டை ஜோக்கையாச்சும் சொல்லி போடுங்க.. // அய்யய்யோ, அப்புறம் மகளிர் சங்கங்கள் கிட்ட யாரு மொத்து வாங்குறது...

said...

Prizes are really gr8. Inspires me to take part ..

=========
Ganesh

said...

Very Funny :)