Tuesday, August 09, 2005

மாடர்ன் தலைப்புகள்

ரொம்ப மாடர்னா, அப்ஸ்ட் ராக்டா, surrealsitic க்கா வ்ர சில பதிவுகள் பார்த்து பாதிப்பு அடஞ்சுட்ட்டா இவன் . . வெறும் shock Value க்காக போடறாங்களா, இல்லை இதற்கு பின்னால் ஏதாவது உள் மூலம், வெளி மூலம் இருக்கான்னு ரொம்ப யோசிக்கலாமன்னு இவன் பார்த்தான். ஆனா வேணான்னு இத எழுத ஆரம்பிச்சுட்டான் இவன். ஏதோ நம்ம பங்களிப்பா சில தலைப்புகளை பதிவு பண்ணி வைக்கலாமுன்னு இவன் நினைக்கிறான்.



* All rights are reserved.
* The information herein may not be used as blog titles without proper written permission from the owner.
* All permitted titles must be properly attributed with a link to the originating URL.


வர இருக்கும் தலைப்புகள் ...

1. நாய்க்கும் வாந்தி வரும்
2. பூனை துப்பும் Hairballs
3. வயித்து வலி வராத ஆள் ஏது
4. விக்கலில் வாய்க்கு வந்தவை
5. எச்சில் ஒவியங்கள்
6. முகமூதி என்னும் மூடன்


இப்படி எழுதினதால கூடிய விரைவில் சின்னவன் சிறுநீர் கழிப்பதாக பதிவு வந்தால் , சின்னவன் மாடர்னாக எழுதுவத மற்றவர்களும் ஒத்துகொள்வதாக அறிந்து மகிழ்ச்சியடைவான் இவன்.


ரொம்ப நன்னி எல்லோருக்கும்..

17 comments:

Anonymous said...

இன்னா நைனா
முகமூடியை ரொம்ப support பண்ற, அவங்க ஆளா நீயி?
மாடர்ன் பையன்

முகமூடி said...

நீராவது வில்லா.. இல்ல வெறும் அம்பா

;-))))

சின்னவன் said...

நீங்க வேற
வில்லாவது அம்பாவது..
நானோ உண்டிவில்லை இப்பதான் கையில் எடுக்கும் சின்ன பையன்.

சின்னவன் said...

//முகமூடியை ரொம்ப support பண்ற, அவங்க ஆளா நீயி?

எனது பமக அடிப்படை உறுப்பினர் அட்டையை கண்டுபிடித்து விட்டீர்களா?

Anonymous said...

என்க்கென்னவோ மாடர்ன் 83 என்றால், 83 வயசு என்று அர்த்தம் போல தோன்றுகிறது.
22 வயசு அவுஸ்திரேலியா பொண்ணு இப்படி எல்லாம் பேசிச்சுன்னா, முதல்ல அத நான் date பண்ணனும்.
போன் நம்பர்/ மெயில ID கிடைக்குமா ?

சின்னவன் said...

தேவுடா, தேவுடா
இவ்வளவு நாளா வெறும் cheesecake receipe விளம்பரந்தான் வந்துகிட்டு இருந்தது. Dating ம் ஆரம்பிச்சுட்டீங்களா இங்க.
என்னவோ போங்க.

Anonymous said...

சூப்பர் தலைப்புகள் ..

சின்னவன் said...

//check out my easy money online blog

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க..

Anonymous said...

கலக்கிறீங்க ஐய்யா

Anonymous said...

சின்னவன்,

நீங்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவரா?

சின்னவன் said...

//நீங்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவரா?

பெரியவர் அவர்களே,

இல்லைங்க !

ஆனால்

நமக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

Anonymous said...

சூப்பர் மச்சி

Anonymous said...

Funny :))

Anonymous said...

சின்னவன்
இப்பதான் உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன்.
நன்றாக இருக்கிறது. அப்படியே சில தமிழ் வலைப்பூ புனித பசுக்கள் பற்றியும் பாருங்களேன்.

சின்னவன் said...

நிறைய தமிழ் பதிவுகள் படிக்கவேண்டும் எண்டு நான் இங்கடை வந்தனான். ஆரெல்லாம் இந்த புனித பசுக்கள் எண்டு நீங்களே சொல்லுங்கோவன்.

Anonymous said...

யாரோ நீ இலங்கையா என்று கேட்டதுக்காக இலங்கை தமிழில் பேசுவதாக நினைப்போ?

சின்னவன் said...

நீங்க வேற
நாலஞ்சு பதிவுகளை பார்த்து இரண்டு வாக்கியம் எழுதி போட்டேன். சரியா, தப்பான்னு கூட தெரியாது. யாராச்சும் பார்த்து சொன்னதான் தெரியும் எவ்வளவு அபத்தமாய் அந்த இரண்டு வாக்கியங்களும் இரூக்கு என்று.