Monday, August 15, 2005

சாருவின் கோணல் பக்கங்கள்

அன்று, சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா... இணைய தளத்தில் அவர் எழுதி வரும் "கோணல் பக்கங்கள்' கட்டுரைத் தொகுப்பின் புத்தக வடிவம் அது. கடந்த வருடம் இத்தொகுப்பின் இரண்டாவது தொகுதி வெளியிடப் பட்டது... இது, மூன்றாவது தொகுதி!


இசைக்கும், இலக்கியத்துக்கும் பெரும் ஆதரவு அளித்து போஷித்து வரும் பட்டு ஜவுளி வர்த்தகர் "நல்லி' குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் இவ்விழா நடந்தது; கடந்த ஆண்டும் அது போலவே...

கடந்த ஆண்டு இந்த விழா நடந்த போது, சிறு பத்திரிகையாளர்களிடையே ஒரு சலசலப்பு... "ஜவுளிக் கடைக்காரருக்கும், இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு? ஆதிக்க சக்திகளிடமும், பண முதலைகளிடமும், முற்பட்ட இனத்தினரிடமும் விலை போய் விட்டார் சாரு நிவேதிதா...' என்று!
இந்த குற்றச்சாட்டு, அப்பட்டமான வயிற்று எரிச்சல் தவிர, வேறு முரண்பாடு ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்கு தெரியும்!




சிறு பத்திரிகையாளர்களுக்கு, "ஐடன்டிட்டி கிரைசிஸ்' உண்டு. அதாவது, தன் எழுத்து, படைப்பு பரவலாக பல பேரைச் சென்றடையவில்லையே... ஜனரஞ்சக இதழ்கள் தம்மைக் கண்டு கொள்ளவில்லையே... தமக்கு பண ஆதரவு தர யாரும் முன்வரவில்லையே... என்ற ஆதங்கங்கள் நிறையவே உண்டு... அதனாலேயே, ஏணியைக் கோணி என்பர்... கோணியை, ஏணி என்பர்! எப்போதுமே எதிர்மறையாக சிந்திப்பர்–எழுதுவர்... அப்போது தானே நாலு பேர் கவனத்தைக் கவர முடியும்!



ஏதாவது ஒரு ஜனரஞ்சக பத்திரிகை, இவர்களில் ஒருவரை அழைத்து எழுத வைக்கட்டும்.. பிறகு தெரியும் சேதி... இந்த சமாச்சாரம் சமீபத்தில் கூட நடந்தது... ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்.. இவரைக் கூப்பிட்டு, "குமுதம்' இதழில் எழுதச் சொன்னார்கள்...
அவ்வளவுதான்! சிறு பத்திரிகைகளில் அவர் தொட்டு வந்த "சப்ஜெக்ட்'களே மாறி விட்டது... அவரது எதார்த்த நடை எங்கோ ஓடிப் போனது... சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த பார்வை மாறிப்போனது... ஒரு கட்டத்தில், "குமுதம்' ஆசிரியர் குழு, "நீங்கள் ஜெயமோகனாகவே இருந்து எழுதுங்கள்' என்று கேட்டுக் கொண்டதாக அறிந்தேன்!




ஒவ்வொருவரின் பேச்சையும் அவதானித்துக் கொண்டிருந்த போதும், பின் இருக்கைகளிலிருந்து சிலர், உரத்த குரலில் "கமென்ட்' அடித்து, கிண்டல் செய்து கொண்டிருந்தனர்... இலக்கியக் கூட்டங்களில் இது வாடிக்கை! இலக்கிய எழுத்தாளர்களின் கருத்து வேறுபாடுகள் இங்கே வெடிக்கும்; சில நேரங்களில் கை கலப்புகள் கூட நடக்கும்... இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் முன்பு ஒருமுறை சாருவின் பல் உடைந்தது!


முந்தைய தினமே, சாரு என்னிடம், "போலீஸ் பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்து விடேன்...' என்று கேட்டுக் கொண்டிருந்ததால், ஒரு எஸ்.ஐ., சகிதம் நான்கு போலீஸ்காரர்கள் தடியுடன் வந்து, வாயிலில் நின்று கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் நண்பர் ஒருவரும் "மப்டி'யில் வந்து அமர்ந்திருந்தார்.



அவரும் இந்த "அலம்பல்'களை கவனித்தபடியே இருந்தார்!
கூட்டம் முடிந்த பின்னும் அவர்களது "அலம்பல்' அடங்காமல் இருக்கவே, "மப்டி'யில் இருந்த இன்ஸ்பெக்டர், "படித்தவர்கள் கூடும் இடமாயிற்றே என்று "மப்டி'யில் வந்தேன்... கஷ்டப்பட்டு, "யூனிபார்மை' ஜீப்பில் அமர்ந்தபடியே கழற்றி, இந்த உடை அணிந்து வந்தேன்... இப்படிப்பட்ட, "சில்லரை'களும் வரும் என்று தெரிந்திருந்தால், போலீஸ் உடையிலேயே வந்து, லத்தியை சுழற்றி இருக்கலாம் போலுள்ளதே...' என அவர்கள் காதுபடக் கூறியதும், அவர்கள் "எஸ்கேப்!'


===================

சாருவின் கோணல் பக்கங்கள் மூன்றாம் பதிப்பு விழாவை பற்றி அந்துமணியின் பார்வை (சில பகுதிகள் ).



வர வர இந்த தினமலரை மறுபதிப்பு செய்ய ஆட்களே இல்லாமல் போய்விட்டார்கள்.கிடைத்த சந்தர்பத்தை விடுவானேன்.

ஆமாம் இதில் குறிப்பட படும் "அலம்பல்கள்" யார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

6 comments:

said...

// ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்.. இவரைக் கூப்பிட்டு, "குமுதம்' இதழில் எழுதச் சொன்னார்கள்... அவ்வளவுதான்! சிறு பத்திரிகைகளில் அவர் தொட்டு வந்த "சப்ஜெக்ட்'களே மாறி விட்டது... அவரது எதார்த்த நடை எங்கோ ஓடிப் போனது... சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த பார்வை மாறிப்போனது... ஒரு கட்டத்தில், "குமுதம்' ஆசிரியர் குழு, "நீங்கள் ஜெயமோகனாகவே இருந்து எழுதுங்கள்' என்று கேட்டுக் கொண்டதாக அறிந்தேன்! //

ஆனால் சாரு அப்படி அல்ல... மணி காசுல டீ குடிச்சது, மஞ்சுவோட நடத்தின சைபர் செக்ஸ், போலீஸ் சமையல்காரன் கையில அசைவம் சாப்பிட்டது, கோபாலகிருஷ்ணனின் லீலைகள் அப்படீன்னு தினமலரின் டீக்கடை பெஞ்சாகட்டும், சினிமா பொன்னையா வேஷமாகட்டும், கோ.ப வாகட்டும் எப்பவுமே ஒரே மாதிரிதான் எழுதுவார்

said...

முகமூடி அண்ணாச்சி
பின்னீடீங்க போங்க...

(போட்டா வரல இந்த தடவை உங்க பின்னூட்டம் கூட )

;)

said...

கோணல் பக்கங்கள் அல்ல அவை..
கேண(ல்) பக்கங்கள்.

said...

சின்னவன்
நீங்களும் முகமூடியும் ஒரே ஆளா ?

said...

Charu is a sick weido

said...

இத பற்றிய அலம்பல்கள் ஏற்கனவே வந்து இருக்கே ?