Friday, August 12, 2005

முகமூடிக்கு ஒரு கேள்வி

முகமூடிக்கு ஒரு கேள்வி
நான் உங்கள் வலைபதிவில் பின்னூட்டம் இட முடியாத நிலையில் இருப்பதால் இந்த தனி பதிவு.

போட்டிக்கு ஏன் என் கதை சேர்த்துக்கொள்ள படவில்லை ?


உங்களின் விதிகளை நான் எங்கும் மீற வில்லை.

//போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) பிரசுரிக்கப்பட்டிருக்கக்கூடாது. கதையின் காப்புரிமை எழுதிய ஆசிரியருக்கு சொந்தமானது


இந்த படைப்பு முழுமையாக எந்த பதிவிலும் இல்லை. இது முழுவதும் எனது கற்பனையே. மூன்று கதைகள் என்னை எழுத தூண்டி மட்டும் தான் விட்டன. அவற்றை நான் முழுவதுமாய் காப்பி அடிக்கவில்லையே? You can say I am inspired by them :)


ஏன் முகமூடி ஏன் ?


ஒரு வளரும் கன்னி கதை ஆசிரியனின் கனவை கருவிலேயே
கலைக்காதீர்கள். ( அப்பாடா எத்தனை "க" . பேசாம சீரியலுக்கு வசனம் எழுத போலாம் போல )

6 comments:

Anonymous said...

அதானே
அந்த ஞானபீடம் கதை மட்டும் என்ன "நல்ல படைப்பா" ? அது மட்டும் எப்படி சேர்த்துக்கலாம் ?

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

சின்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா...

விதிமுறைகளை மீறவில்லையா... கதை சொந்த சரக்காக இருக்க வேண்டும் என்ற முதல் விதிமுறையே காலி...

// அந்த ஞானபீடம் கதை மட்டும் என்ன "நல்ல படைப்பா" ? //

அபி... நல்ல கேள்வி, ஆனாலும் சிலர் தன் கதை நல்ல படைப்புன்னு ஒத்த கால்ல நிக்கறாங்களேப்பா...

Anonymous said...

அண்ணாச்சி. அந்த நல்ல படைப்பை படிக்கிறதல மட்டும் நடுவருக்கு நேரம் வீணாகாதா ? அப்படி என்றால் சொந்த கதை என்று எதை கொடுத்தாலும் ஏற்று கொள்வீர்களா ?
சுஜாதாவின் சலவை கண்க்கு போல ?

:((

Anonymous said...

தலைவா

நீதி கேட்கிறோம்.

ஒரு கண்ணில் சசுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணையா ?
( அட் இதுக்குதான் கருப்பு கண்ணாடி அணிகிறார்களோ இந்த தலைவர்கள் ? )

சின்னவன் said...

புது கதை ரெடிங்க..
எந்த விதியும் மீறல..

முகமூடி அண்ணாச்சி
உங்களுக்கே தெரியும். நான் உங்க வலைபதிவில
பின்னூட்டம் இட முடியாது என்று.
என் Pirvacy மனதில் கொண்டு இதை என் போட்டி சிறுகதையாய் ஏறுக்கொள்ளவும்.

இப்படிக்கு
வளரும் கதை ஆசிரியன்.
சிஙகை சின்னவன்.