Tuesday, August 16, 2005

கண்டன அறிக்கை.

சோலையில் பூத்து இருக்கும் வண்ண மலர்களை கோர்த்து கொடுக்கும் பூங்கொத்தை போல தமிழ் வலைபூக்களை எல்லாம் திரட்டும் இந்த தமிழ்மணத்தில் கடந்த சில நாட்களாக எம் தலைவரை பற்றி கிண்டல்களும் கேலிகளும் பதிவுகளாய் இடப்பட்டு வருகின்றன.

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்தவர்கள் நாங்கள், உண்ணும் விரதத்தை கண்டுபிடித்தவர்கள் நாங்கள், சோடா பாட்டில், கல் வீச்சில் வல்லவர்கள் நாங்கள். எம் தலைவரை பற்றி நீங்கள் எழுதுவதை கண்டு எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்காது. அற வழியில் எஙக்ள் போராட்டம் தொடங்கும்.


"சென்னை தந்த செம்மல், "
"சென்னை தேமதுர தமிழ் திக்கெட்டும் பரவிடச்செய்த திருமகன், "
"கூவம் கண்ட குயில் "

எங்கள் ஆருயிர் தலை லூஸ் மோகனை பற்றி கிண்டல் அடிப்பதை உடனே நிறுத்துமாறு முகமூடியையும், முகக்கண்ணாடியையும் "அன்போடு" கேட்டுக்கொள்கிறோம்.


முதற்கட்டமாக உங்கள் பதிவுகளில் Dynamic IP உதவியோடு எண்ணற்ற கள்ள ஒட்டுக்கள் "-" வாக போடப்படும் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

திரையுலகில் 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் லூஸ் மோகனே ,

உன்னால் தமிழும், தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம். உங்களால மட்டும் எல்லாருக்கும் லாபம்.


இப்படிக்கு
அ,இ.அ.மோ.மு.க

( அகில இந்திய அண்ணன் லூஸ் மோகன் முன்னேற்ற கழகம். )



இதில் இருக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க எல்லாம் கண்டுகாத நைனா,
நம்ம டமில் நாலேட்ஜ் அவ்வள்வு தான் ..

7 comments:

Anonymous said...

இதை நான் வழிமொழிகிறென்.
ஏன் அவர்கள் விவேக் யை கிண்டல் செய்யடுமே, யார் வேண்டாம் என்று சொன்னது.
அண்ணன் லூஸ் மோகனுக்க ஆதரவு இல்லை என்ற நினைப்பை இனியாவது
மாற்றிக்கொள்ளுங்கள்.

லுஸ் மோகன் பக்தர் குழு
கொஸ்ப்பேட்டை பிசின்ஸ் ஸ்கூல்

Anonymous said...

//
//உன்னால் தமிழும், தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம்
//

Super !!!

முகமூடி said...

முகமூடி லூஸ் மோகனை கிண்டல் செய்தார் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது... அவர் அண்ணன் மோகனின் ரசிகர். அண்ணனுடன் அவ்வப்போது தொலைபேசி அவர் பயணத்திட்டம் முதற்கொண்டு வெளியிட்டவர் என்பதை அறியாமல் அவர் மீது அவதூறு பரப்பினால் என் வக்கீல் உதவியுடன் வழக்கு போடுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

Anonymous said...

அனானி
அதாவது "அவரால்" தமிழ் வளர்ந்ததை விட "இவரால்" தமிழுக்கு நிறைய வளர்ச்சி என்கிறீர்களா?

இன்னொரு அனானி.

சின்னவன் said...

முகமூடி
அடடா எதற்கு எடுத்தாலும் வழக்கா ?
நீங்க வக்கீல் தொழிலும் பண்ணறீங்களோ ?

நீங்க படிச்சி ஒரு Dr ஆகவோ Enginneer ஆகவோ, வக்கீலாகவோ ஆகணும் என்று
உங்க வீட்ல சொன்னத "தப்பாய்" புரிஞ்சிகிட்டீங்களா ?

=======
அனைத்து அனானிகளுக்கும் நன்றி.

குழலி / Kuzhali said...

பார்த்தீர்களா ஒன்று முகமூடி, இன்னொன்று முகக்கண்ணாடியின் பதிவு, இரண்டும் முக என்று ஆரம்பிக்கின்றது.

தமிழ் வலைப்பூ கண்டெடுத்த தங்கமே.
நின் பணி வாழிய வாழியவே !!

Anonymous said...

குழலி 10 எப்போ வரும் ?