Tuesday, August 23, 2005

அஸினுக்கு வயசு 27.

என் அஸின் பதிவு

இப்ப லேட்டஸ்ட் பேஷ்ன் அஸின் பற்றிய பதிவு போடறதுதான். ஒருத்தரு மன்றம் அமைக்கறாரு, அனுமதியே இன்னும் வாங்கல , அதுக்கு முன்னே , பொருளார் பதவிக்கு சண்டை.

மக்கள், மன்றம் , கட்சி எல்லாம் எதுக்கு என்று நல்லாவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். வழக்கம்போல நானும் ஒரு அஸின் பதிவு போடறேன்.


அஸினுக்கு வயசு 27.

ASIN பிலிப்பென்ஸ் நாட்டின் மிகப் பிரபலமான கிராமிய-ராக் குழுக்களுள் ஒன்று. இந்த வருடத்தோடு அந்த குழு ஆரம்பித்து 27 வருடம் ஆகிறது.

சுற்றுபுற சூழல் பற்றிய அவர்களின் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இருபது வருடங்களுக்கும் மேலாக பல இலட்சக்கனக்கான மக்களின் பாராட்டை பெற்று வருகிறது இந்த குழு.

நவம்பர் மாததில் இந்த குழு அமெரிக்கா முழுவதும் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். மிகப்பெரிய வெற்றி பெரும் என்று பரவாலாக எதிர்பார்க்கப்படுகிறது இந்த அமெரிக்க பயணம். உடனே ஆசியாவிலேயே இந்த குழுதான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று யாரும் எழுதிவிட வேண்டாம்.



18 comments:

said...

:))

said...

நார்த் கொரியா, பிலிபன்ஸ் ...

என்ன மச்சி
ஒரே இண்டர்நேஷனலா எழுதற ..

said...

குரோசின்...
மெட்டாசின்...
அனாசின்...
வரிசையில்....

தற்போது....
அசின்... not A SIN!

said...

அசின் + Come /= அசிங்கம்

said...

அசின் + Come = a சிங்கம்!

said...

Name of the band is ASIN
not A SIN !

Thanks for writing about ASIN. I Used to hear them when I was there in Manila for couple of years.

said...

அம்மாடி

அஸினுக்கு இவ்வளவு ரசிகர்களா..
கூடிய சீக்கிரம் கோயில் கட்ட வேண்டியதுதான்.

said...

அழகு பதுமை அஸின் Photos போட்டா நீங்க என்ன
குறைஞ்சா போய்விடுவீங்க..

said...

-/ க்கும் இர***** க்கும் என்ன சம்பந்தம் ? யாருக்காச்சும் தெரியுமா ?

said...

//ஆசியாவிலேயே இந்த குழுதான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று யாரும் எழுதிவிட வேண்டாம்.
//

:))

said...

இன்று பிறந்தநாள் விழா காணும் அண்ணன் Kobe Brynat க்கு மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

ஏம்பா எல்லாரும் அசினுக்கு மட்டும் பதிவு போடறீங்களே.. அன்றாடம் பயன்படுத்துறோமே பிசின், அதுக்கு யாரும் பதிவு போட மாட்டீங்களா..

(பிசின் = கோந்து. அஞ்சலகம் தவிர்த்து அனைத்து இடங்களிலும் கிடைக்கும்... இதன் உப பொருளை தமிழில் 'பபிள் கம்' என்று சொல்வார்கள்)

said...

ஆகா கெளம்பிட்டாருயா சின்னவரு, பதிவு அசின் பற்றிய உபயோகமான தகவலை கொடுத்தது, எம் தலைவி அசினின் பெயரில் மிகவும் கவரப்பட்டு அவர் புகழ் பாட பிலிப்பைன்ஸ், சப்பானில் எல்லாம் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதும் அவர்கள் என் தலைவி அசினின் பெயரில் ஒரு இசைக்குழு ஏற்படுத்தி உலகம் முழுக்க அசினின் புகழ் பரப்புகின்றார்கள் என்பதும் புரியாமல் இங்கே சிலர் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகின்றனர், உலகெங்கும் தமிழனின் புகழ் பரப்பும் அசின் வாழ்க, ஆனால் சில மூடப்பிறவிகள் அசின் தமிழரா என கேள்வி கேட்கும்.

said...

அண்ணே, அசின் போட்டோவுக்கு இங்க போங்க.... http://www.asinonline.com

said...

//ஆனால் சில மூடப்பிறவிகள் அசின் தமிழரா என கேள்வி கேட்கும்.
அதே! அதே !!

அசின் என்று ஒரு மல்லு குட்டி பின்னாளில் பிறக்கும், அது சூப்பர வேறு இருக்கும் என்று முன்னமே அவரின் பெயரில் இசைக்குழு அமைத்த மணிலா மைந்தர்கள் வாழ்க !!

said...

தமிழ்த்திரை இசையில் பிலிப்பைன்ஸ் ராக் வடிவம்

அடடா, என்னமா ஐடியா ஓடுது மக்கள் மனசுல.
அர்விந்த் . நீங்களே அத எழுதி விடுங்க

:)

said...

ஏன்னா அசினோட பேருல ஒரு பொம்மனாட்டி ஃப்ராடு பண்ணியிருக்காளாமே,உண்மையா???

said...

அசினாவது.பிசினாவது.கேரளாவிலிருந்து வந்தா மட்டும் போதுமா??
எங்க பப்பிக்கு உறை போடக் காணாமா இந்தப் பெண் குட்டி...
பப்பீம்மா..நல்லா இருக்கியா??