Wednesday, August 10, 2005

நண்பனின் குழந்தை..

என் 15 வருட கால நண்பனுக்கு கொஞ்ச நாள் முன்னர் முதல் குழந்தை பிறந்தது. இப்போது வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் தொலைபேசியிலும், மயிலகளிலும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் நண்பன்.


ஷேன் வார்னேயின் Top Spinner யை Flipper ல் இருந்து எப்படி கண்டு பிடிப்பது, சானியா மிர்சாவின் Second Serve எவ்வளவு Weak யாய் இருக்கிறது, நமீதாவின் இடுப்பு, திரிஷாவின் குளியல் என்று போய் கொண்டு இருந்த பேச்சுக்கள் இப்ப எல்லாம் குழந்தையை பற்றி மட்டும்தான் .


குழந்தை இப்படி செய்தது, அப்படி செய்தது, 5 மாததுக்குள் இவ்வளவு செய்கிறது என்று ..
கடந்த 150 நாட்களில் குழந்தையின் 100 படம் மயிலில் வந்து இருக்கும். இவன் மட்டும் அல்ல, புதிதாய் பெற்றோர் ஆன நிறய பேர்களை நான் பார்த்த வகையில் இப்படிதான்.


எனக்கும் ஒரு குழந்தை பிறந்தால் நானும் இதே போல்தான் இருப்பேனோ என்னவோ . அதுவரை புதியாய பெற்றோர்களான நண்பர்களே, அடிக்கடி உங்களின் குழந்தைகளின் போட்டோக்களை எனக்கு அனுப்பாதீர்கள். வருடத்திற்கு ஒரு படம் போதும்.


எனக்கு சுஷ்மிதா சென்னின் படங்களை சேர்த்து வைக்கவே Hard disk ல் இடம் இல்லை.


(இந்த பதிவை எழுத உதவிய என் வாத்தியார் Jerry Seinfeld க்கு நன்றி.)

9 comments:

said...

படம் ஒன்றில் விவேக் சொல்வது போல
நம்ம ஊரில குழந்தை பெத்துகிறது எல்லாம் சாதனை இல்லை..
இதை போய் கிண்டல் பண்ணிக்கிட்டு..


(என் குழந்தை அவங்க அம்மா மாதிரியே அச்சாய் இருப்பா தெரியுமோ ? )

said...

தஞ்சாவூரில் இடி இடித்தால் தாம்பரத்தில் மழை பெய்கிறது


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

Take it easy baby !

said...

நன்றி அரசு, மதியிலி..

மதியிலி அவர்களே,
தாம்பரத்துக்கும், தஞ்சாவூருக்கும், குழந்தைக்கும் என்னங்க சம்பந்தம் ?

said...

தாம்பரத்துலேயும் குழந்தை பிறக்குது, தஞ்சாவூர்லேயும் குழந்தை பிறக்குதுன்னு சொல்ல வந்திருப்பாங்கப்பா.

துளசி.

said...

நன்றி துளசி அக்கா
உங்களை நிச்சயம் நான் அக்கா என்று கூப்பிடலாம், அந்த அளவிற்கு நான் சின்னவன் தான் .
உங்களின் குழந்தைகளின் படங்களை நண்பர்களுக்கு நிறைய அனுப்பி இருக்கிறீர்களா நீங்கள்?

said...

//உங்களின் குழந்தைகளின் படங்களை நண்பர்களுக்கு நிறைய அனுப்பி இருக்கிறீர்களா நீங்கள்?//

இல்லையேப்பா. அப்ப ஏது இந்த வலையும், கணினி, டிஜிட்டல் கெமரா எல்லாம்?

ஆனா நிறைய ஃபோட்டோ எடுத்தோம். எல்லாம் ஒரு நாப்பது அம்பது ஆல்பத்துலே கிடக்கு. புள்ளை மட்டுமில்லை, எங்க விட்டு நாய், பூனைங்கதான் இதுலெ பாதி:-)))

என்றும் அன்புடன்,
அக்கா

said...

thanks

said...

நண்பனின் மனைவிக்கு அல்லவா குழந்தை பிறக்கும்?

said...

//நண்பனின் மனைவிக்கு அல்லவா குழந்தை பிறக்கும்

இந்த தாக்கு தாக்கறீங்களே..
தப்புதாங்க..
நண்பனின் மனைவிக்கு தான் குழந்தை பிறந்தது
ஹி ஹி