Sunday, August 14, 2005

மூடு விழா

மூடு விழா !!
இன்றே கடைசி ! படிக்க தவறாதீர்கள்!!!

இதுவரை எவ்வளவு பேர் இங்கு வந்து படித்து இருப்பார்கள்..
தினமும் வரும் நண்பர்கள் எவ்வளவு பேர்.
ஒரு நாளைக்கு பலமுறை எவ்வளவு பேர் வந்து போய் இருப்பார்கள்.

இப்ப இதை மூடி விட்டால்?


வேறு வழியே இல்லை . மூடித்தான் ஆக வேண்டும்

வேறு வழியே இல்லை . மூடித்தான் ஆக வேண்டும்

அவர்கள் வேற இடத்துக்கு படிக்க போய்விடுவார்கள் .

இந்த ஒரு இடம் இருந்ததே அவர்கள் மறந்தும் போகலாம்.


ஆனால் நான் ???

பாடுபட்டு, இரத்தம் சிந்தி உருவாக்கிய நான் என்ன செய்வேன்? அழுகைதான் வருகிறது.

======================================
You Got Mail படத்தில் Shop around the Corner மூடும் முன் Kathleen Kelly ( Meg Ryan) இப்படிதான் யோசித்து இருப்பாரோ?


இந்த வலைபூவிற்குதான் மூடுவிழா என்று நினைத்து நீங்கள் வந்து இருந்தால். ஹி ஹி..

எனது Audio Blog வரும்வரை இதை கொஞ்சம் நாள் ஓட விடத்தான் எண்ணம்

பின்குறிப்பு :
1. அஞ்சலி தேவியுடன் நான் ஆட்டம் போடுகிறேன் ( கனவில் ) என்ற நண்பருக்கு,
அஞ்சலி தேவி ஒரு பிரபலமான அழகிய இளம் பலான நடிகை என்பது தெரியும் தானே?

Google தேடி பார்த்து வரும் NSFW படங்களினால் உங்கள் அலுவகத்திலோ, வீட்டிலோ வரும் பிரச்சனைகளூக்கு நான் பொறுப்பு அல்ல !!!!

2. எழுத தூண்டிய தலைவர் முகமூடிக்கு நன்றி !!
( கோப்பி ரைட் ஆக்ட் படி வழக்கு வராமல் இருக்க )

4 comments:

said...

இப்பதிவு முகமூடியின் சென்று வருகிறேன்... நன்றி பதிவின் அப்பட்டமான காப்பி என்பதால், முகமூடியார் கோப்பி ரைட் ஆக்ட் படி வழக்கு தொடுக்க தன் வக்கீலுடன் கலந்தாலோசித்து வருவதாக கேள்வி...

அஞ்சலி தேவி பற்றிய குறிப்பை உடனடியாக நீக்காவிட்டால் அதற்கும் வழக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.

said...

முகமூடி
பூ வின் தலைப்பே

வான்கோழி கற்ற கவி ! தானே
அப்புறம் என்ன வழக்கு எல்லாம் ?

அஞ்சலி தேவி மீது என்ன கோவம் உங்களுக்கு ?



வேண்டுமானால், எழுத தூண்டிய தலைவர் முகமூடிக்கு நன்றி என்ன்று போட்டு விடுகிறேன்.

said...

கேஸ் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... மேல் விபரங்கள் இங்கே

said...

ஒரு சிறு குழப்பம் நேர்ந்து விட்டது... கேஸை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்...

(நான் நெனச்சதுதான் சரின்னா மீண்டும் கேஸ் வரும்)