Friday, August 12, 2005

10 கேள்விகள்

பள்ளியில் கல்லூரியில் இந்த விளையாட்டை ஆடி இருப்பீர்கள். மனதிற்குள் நினைத்து கொள்ளும் ஒரு பிரபலத்தை வெறும் கேள்விகள் கேட்பதன் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். விடை Yes/No/Maybe என்று மட்டும் தான் இருக்கவேண்டும்.

உதாரணதிற்கு பிரபலம் சானியா மிர்சா .

கேள்விகளும் பதிலும் இப்படி இருக்க கூடும்.

ஆணா ? No
சினிமா ? No
விளையாட்டு ? Yes ( கிரிக்கெட் இல்லை )
டென்னிஸ் ? Yes ( மரியா அல்லது சானியா சாத்தியம் )
இந்தியர் ? Yes .

ஆட்டம் முடிந்தது. சானியா மிர்சா தான் சரியான விடை.

இதே போல் வலைபதிவர்களை 10 கேள்விக்குள் கண்டு பிடிக்க முடியுமா ? கேட்டுத்தான் பார்ப்போமே .

ரம்யா அவர்கள் சொன்னது இந்த விளையாட்டைதான் என்று நினைக்கிறேன்.


1. நட்சத்திர வலைபதிவரா ?

Yes : கஷ்டம். புதிதாய் வலைபதித்த 6 வயது குட்டி பாப்பா தவிர கிட்டதட்ட எல்லாரும் நட்சத்திரம் ஆகி விட்டார்கள். என்னது ?? அடுத்த வாரம் அந்த பாப்பா தான் நட்சத்திரமா ? கடவுளே !!! )

No/Maybe : அடுத்த கேள்வி.


2. ரஜினி ரசிகரா ?
Yes : எளிது. கிட்டதட்ட மாயவரம் மாபியா வை சார்ந்தவராய் இருப்பார். ( மாயவரத்துக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம். விஜய ராஜேந்தர் ஊர் அல்லவா அது ? )
No : இவர்கள் அடுத்த கேள்வியில் நிச்சயம் கண்டு பிடித்து விடலாம்.
Maybe : கொஞ்சம் கடினம்.

3. ராமதாஸ்/திருமா பிடிக்குமா?

Yes :போன கேள்விக்கு பதில் நிச்சயம் இல்லை என்று இருக்க சாத்தியம் அதிகம். விடை எளிது.
No : போன கேள்விக்கு பதில் நிச்சயம் ஆம் என்று இருக்க சாத்தியம் அதிகம். விடை எளிது.
Maybe : அடுத்த கேள்வி

( இந்த கேள்வியை, பிராமாண/தலித் ஆதரவா/எதிர்ப்பா என்று கூட கேட்டு பார்க்கலாம்.


4. இஸ்லாம்/குரானில் இல்லாதது எதுவும் இல்லையா

Yes / No : ஆரோக்கியமா தேடினால் விடை எளிது
Maybe : அடுத்த கேள்வி


5. சுஜாதா பிடிக்குமா ?

Yes :வாத்தியார் என்று அவரை அழைப்பவர்களிடம் தேட வேண்டியது தான்

No : இது இன்னமும் எளிது. பிரபலமான இரண்டு பதிவுகளில் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர்.

Maybe : அடுத்த கேள்வி

6. பெண் , பெண்ணீயம், குடும்பம் பற்றி எழுதுபவரா ?

Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி


7. படம் காட்டும் பதிவரா ?
Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி


8. யாருக்கும் புரியாத மொழியில் எழுதும் இலக்கியவாதியா ?
Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி


9.மற்ற பதிவுகளை/பின்னூட்டங்களை கிண்டலடிப்பவரா ?

Yes ரொம்ப ஈஸி (நம்ம தலையிலே கையா ?.. )
No /Maybe : அடுத்த கேள்வி


10. சொந்த பெயரில் எழுதுபவரா ?
இதற்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டு இருப்பீர்கள். இல்லை ஒரு சிலர் என்று வட்டத்தை சிறிதாக்கி இருப்பீர்கள்.


இந்த பத்து கேள்விகளுக்குள் நீங்கள் விடை கண்டு பிடித்து விட்டீர்கள் எனில் நீங்கள் தமிழ்மணத்தை கரைத்து குடித்தவர். வரும் எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களயும் படிப்பவர் ( வேற வேலை எதுவும் இல்லையா உங்களுக்கு ? )


இல்லை என்றால், நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டுமே படிப்பவர். உங்களுக்கு நிறைய வேலை இருப்பது போல் காட்டிக் கொள்பவர், இல்லை மனைவி/கணவனிடம் இனையத்தில் நிறய நேரம் செலவழிக்கிறீர்கள் என்று திட்டு வாங்குபவர்.


வேற கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.

அட இதற்கே ஒரு போட்டி வைக்கலாம் போல இருக்கே?

சரி போட்டி விதிகள்.

1. கேள்வி 20 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. கேள்வி தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் கேள்வி இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) கேட்டு இருக்ககூடாது

3. கேள்வி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும்


முதல் பரிசு :: US $75 gift card

இரண்டாவது பரிசு :: US $25 gift card,

ஜெயித்தவர்கள் எனக்கு கொடுக்க வேண்டும் .

16 comments:

said...

நன்றாக இருந்தது கேள்விகளும் விளக்கமும்

said...

அண்ணாத்தா
நீ கலக்குமா ராசா...
ஆமா உன் பிரண்ட்ஸ் எல்லாம் எங்கே?

said...

எங்கேயா போச்சி இந்த மாயவரம் மாபியா ?
கும்மோணம் கூட்டத்தோட மோத முடியுமா ?

said...

அனானி
நன்னி

007:
யாருப்பா என் பிரண்ட்ஸ் ?

கும்பா :
மாபியா ? சோபியா ? என்ன இப்பதான் அன்னியன் படம் பார்த்துட்டு வாரீங்களா?

said...

தல சூப்பரோ சூப்பர்.
கொன்னுடீங்க போங்க !!!

said...

கேள்வி 11:
உங்களின் குசும்புக்கு அளவே கிடையாதா ?

said...

vaikkirEn unakku vEttu viraivil.


:))

said...

நிஷா
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் பெங்களூரை சார்ந்தவரா ?

மோடி :
என்ன சார், ரொம்ப மிரட்டறீங்க ;)

said...

ஆமாம்
ஆனால் இப்ப 6 மாததிற்கு San Jose வில்தான் வாசம் :)

said...

வருகைக்கு நன்றி.
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.

said...

சின்னவரே.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. ஆனா நான் சொன்னது கொஞ்சம் வேறே. இப்ப ஒரு ப்ளாகர் மீட்லே ஒருத்தர் வந்து 'நான் தான் முகமூடி'ன்னு சொல்றார்னு வைச்சுக்கங்க. அதை எப்படி நம்பறது? So, நான் சொன்னது individual பத்து கேள்வி for every anonymous active blogger.

said...

அட அது இன்னமும் ஈஸி யாச்சே.
சரி நீங்க சொன்ன மாதிரி முகமூடியில் இருந்து ஆரம்பிப்போம்.

said...

சின்னவரே .. கலக்கல் மேல கலக்கறீங்க...

said...

பரணீ
தாங்ஸ்பா..
உன்னை பத்தியும் கொஸ்டீன் கீதே . கண்டுகினியா ?

said...

நல்லா கண்டுகினம்பா

said...

// இப்ப ஒரு ப்ளாகர் மீட்லே ஒருத்தர் வந்து 'நான் தான் முகமூடி'ன்னு சொல்றார்னு வைச்சுக்கங்க. // ப்ளாக்கர் மீட் எல்லாம் நம்மள யாரும் கூப்பிடரதில்லீங்க... அதுவுமில்லாம அதுல கலந்துக்கற அளவு நான் அறிவாளியுமில்ல... அதனால ப்ளாக்கர் மீட்ல யாராவது நாந்தான் முகமூடியின்னு சொன்னா கட்டி வச்சிட்டு போலீஸ்க்கு போன் போடுங்க

// சரி நீங்க சொன்ன மாதிரி முகமூடியில் இருந்து ஆரம்பிப்போம் // ஏம்பா பரிசோதனை பண்ண நாந்தான் கெடச்சனா?