Friday, August 05, 2005

சவால்

எனதருமை சக வலை பதிவாளர்களே,

நீங்கள் தெய்வமாய் மதிக்கும் உங்கள் அபிமான நடிகரை பற்றியோ, உங்கள் கட்சி தலைவரை பற்றியோ, உங்கள் நேசமிகு எழுததாளரை பற்றியோ
யாரேனும் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி எழுதினால் உங்கள் இரத்தம் கொதிக்கிறதா? உடனடியாக பதில் சொல்லியே ஆகவே வேண்டும் என்று தோன்றுகிறதா ? அவர்களை பற்றி நான் புத்தகமே எழுதி இருக்கிறேன், மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெஞ்சு வெடிக்கிறதா ?

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்.

விடுங்கள் ஒரு பகிரங்க சவால் !!!

எதிர்த்து நில்லுங்கள். தைரியமாக நேருக்கு நேர் சவால் விடுங்கள்.என்ன சவால் விடுவது என்று உடனடியாக யோசிக்க முடியவில்லையா ?

கவலை வேண்டாம். சில உடனடி சவால்கள் இங்கே !!


குயிலி : LoveMoney என்பது அண்புமணியின் உண்மையான பெயர் இல்லை. இது புரளி.

செல்லுண்டியின் சவால். :ஒரு பகிரங்க சவால்!
இல்லை. அதுதான் உண்மையான பெயர். உங்களால் Birth certificate காட்டமுடியுமா ? காட்டினால் என் பெயரை ராமதாஸ் ராஜ்கி என்று மாற்றி கொள்கிறேன்

---------------------------------------------------------------------------------

முகமீடி : Mask Of Zorro வும் நானும் ஒரே ஆள் இல்லை.

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! கதை விடாதீர். Catherine Zeta Jones உடன் நீங்கள் ஆடியதை நான் Chineese Maan theatre ல் முதல் வரிசையில் விசில் அடித்து பார்த்தேன். ஆதாரம் காட்டுங்கள், இனி நான் முகத்துக்கு பவுடரே பூச மாட்டேன்
---------------------------------------------------------------------------------

மாங்காமரத்தான்: தினமலர் பரபரப்பு செய்தி. அந்துமணி இராமதாஸை திட்டினார்

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! அந்துமணியும் இராமதாஸ¤ம் ஒரே ஆள். மாங்காமரத்தான், சினிமா பொன்னையா என்ற பெயரிலும் அவரே தான் எழுதறார். முடிந்தால் அந்துமணி, பொன்னையா, மாங்கா இவர்களின் போட்டோவை ஆதாரம் காட்டுங்கள். உண்மை இல்லை என்றால் இனி நான் மாங்காவே சாப்பிட மாட்டேன்
---------------------------------------------------------------------------------

கமுகா : ஜென் கதைகளுக்கும் சுஷ்மிதா சென் க்கும் எந்த தொடர்ப்பும் இல்லை.

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! சுத்த பொய். சுஷ்மிதா ஜப்பானில் பிறக்கவே இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள். நிரூபித்தால், சுஷ்மிதாவை பார்த்து ஜொள் விடுததை நிறுத்துகிறேன்.

---------------------------------------------------------------------------------

சங்கட்: சுஜாதா என்ற பெயரில் எழுதுவது ரங்கராஜன்.

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் !. முடிந்தால் ரங்கராஜனின் கையெழுத்தையும் அவர் மனைவி சுஜாதாவின் கையெழுத்தையும் காட்டுங்கள்.இல்லை என்றால் நான் இனி பெண் பெயரில் மட்டும்தான் எழுதுவேன்

---------------------------------------------------------------------------------

மத பதிவாளர்கள்: எங்கள் மதம் தான் சிறந்தது. My god can kick your god's A$$.

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! பாபாதான் சிறந்தவர். அவர்தான் கிரிஷ்ணன். அல்லா, ஜீஸ்ஸ எல்லாருக்கும் பேசவே கற்று கொடுத்தார். பாபா போட்டோவை என்னால் காட்டமுடியும். மற்றவர்களின் போட்டோவை காட்டுங்கள் பார்க்கலாம். காட்டினால் நான் என் பெயரை
சங்கர் சலீம் சைமன் என்று மாற்றி கொள்கிறேன்.

---------------------------------------------------------------------------------


சரி .
இது எல்லாம் ரொம்ப ஈஸியாய் ஆதாரம் காட்டுவாங்களே என்றால் ...

இதென்ன ஜூஜிபி..

கண்ணா !!
சிலர் சொல்லறதை செய்வாங்க
சிலர் செய்றதைதான் சொல்வாங்க..

நாம சொல்றது மட்டும்தான் செய்றதே கிடையாது..வரட்டா..

.என்று சொல்லிவிட்டு அணங்கே, ஆமணக்கே என்று கோஷ்டி கானம் பாடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.


நான் வலைபூக்களுக்கு கொஞ்சம் புதுசு. இப்பதான் இந்த பதிவையும் அதில் பிரபல ரசிகர் விட்டு இருக்கிற சவாலையும் பார்த்தேன்.. அந்த பாதிப்புதான் இது .

எல்லா பெங்களூர் பேப்பரில் முதல் பக்கமாய் வந்த இந்த செய்திக்கா இந்த சவால் ? சம்பந்த பட்டவங்க யாருமே இதற்கு மறுப்பு தெரிவிச்சதா எனக்கு ஞாபகம் இல்லை.

47 comments:

said...

என்ன ஆராய்ச்சி பண்ணி என்ன புத்தகம் எழுதறாங்களோ ? இதில 2000 காப்பி வித்ததுக்கு பியர் குடித்து பார்ர்ட்டி கொண்டாட அழைப்பு வேற கொடுக்கறாங்களாம்.

said...

#

said...

?

said...

*

said...

சுஷ்மிதா படம் சூப்பர்.

said...

ஞான குடம்
என்னையா சொல்ல வரீங்க ?

சுஷ்மிதா படம் இல்லாம நம்ம பதிவு எப்படி ஜொள்ளன் ..ஹி ..ஹி...

said...

//நீங்கள் ஆடியதை நான் Chineese Maan theatre ல் முதல் வரிசையில் விசில் அடித்து

Chineese Maan theatre
இது இருப்பது Los Angeles தானே ? முகமீடியும் அங்கேதான் இருக்கிறாரோ?

said...

ரஜினி ராம்கி எஸ்கேப், இங்க உன்னையும் உன் தலைவனையும் கிழிச்சி தோரணம் கட்டுறாங்க
http://mugakkannadi.blogspot.com/

நீ விட்ட சவால் டங்குவாரு கிளிஞ்சி போச்சியே எஸ்கேப்

said...

சின்னவன் நீங்க யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன் !!!
முகமூடி தானே நீங்க ???

said...

// Catherine Zeta Jones உடன் நீங்கள் ஆடியதை நான் Chineese Maan theatre ல் முதல் வரிசையில் விசில் அடித்து பார்த்தேன். //

என்னய்யா இதையும் கண்டுபிடிச்சிட்டீங்களா... என்னவோ போங்க... ஆனா சல்மா ஹயக்கோட போட்ட கெட்ட ஆட்டத்த மட்டும் வெளில சொல்லிடாதீங்க

யோவ் மோடி நீர் பேருக்கு ஏத்த மாதிரியே கலகக்கார கில்லாடியா இருக்கீறே...

said...

யோவ் மோடி, குஜாராத் மோடியவிட கேடியாய் இருப்ப போல இருக்கே? வேற ஏதோ பதிவுல முகமூடி "அண்ணா"ன்னு சொன்னதை மாத்தி போட்ட. இப்ப இங்கயுமா ?

அட நீங்க வேற . எனக்கென்னவோ ஞான்பீடம் தான் சின்னவன் என்று தோன்றுகிறது.. சரியா சின்ன ஞான பீடத்தாரே?

said...

அன்புமணி, இராமதாஸ் எல்லாரையும் ரொம்ப support பண்றே. நீ என்ன மரம் வெட்டி கட்சிக்காரனா ?

----
சுத்த பிராமணன்

said...

சின்னவன்,

நீர்

ரொம்பப் பெரியவன் !

:-))))))))))))

said...

NewsGator Server Eases RSS Feeds for Enterprise Use
NewsGator announced this week its NewsGator Enterprise Server , referring to the ease, synchronization, personalization and support of the technology.
If you want, check out my secret Sony PS3 News blog.

said...

வாங்க ஏஜெண்டு
நீங்கதான், சின்னவன் என்று வெற பெயரில் எழுதுகிறீர்கள் மண்டபத்தில் பேச்சு வந்து கொண்டு இருக்கிறதே?
அத பத்தி நீங்க என்ன சொல்லறீங்க?

said...

ஊகங்களுக்குப் பதில் சொல்லி மாளாது!

இதுக்கு எதுனா நீங்களே சவால் போட்ருங்க!!!

said...

// நீ என்ன மரம் வெட்டி கட்சிக்காரனா ?

அடடா
நான் இங்க சொல்ல வந்ததே வேற .எனக்கு கட்சியும் வேண்டாம்,
ஒரு கொடியும் வேண்டாம்
அட டாங்கு டக்கரு டக்கரு டக்கரு டோய்..!

said...

//அன்புமணி, இராமதாஸ் எல்லாரையும் ரொம்ப support பண்றே. நீ என்ன மரம் வெட்டி கட்சிக்காரனா ?

----
சுத்த பிராமணன்//

சாருநிவேதிதாவும், ஞானியும் என்ன மரம் வெட்டி கட்சிக்காரனா ?

said...

//இதுக்கு எதுனா நீங்களே சவால் போட்ருங்க!!!


ஞான பீடம் : எனக்கும் சின்னவனுக்கும் சம்பந்தம் இல்லை

செல்லுண்டியின் சவால்:
ஒரு பகிரங்க சவால் !! ஞானபீடம் குழந்தையாக இருந்தபோது அவரை யாரும் சின்னவனே என்று கூப்பிட்டதில்லை என்று நிரூபிக்க முடியுமா? முடிந்தால் நான் குளிப்பதையே நிறுத்தி விடுகிறேன்.

said...

பொல்லாத குசும்பரையா நீர், இப்படி எல்லோரயும் இணை(ய)த்து தாக்கி விட்டீரே

said...

சின்னவன் சில உண்மைகள்
1. இருப்பது அரேபிய வளைகுடாவில் இல்லை அமெரிக்காவில் ( எழுதும் நேரததை வைத்து )

2. வலைபூக்களுக்கு புதியவர் என்று சொல்லிக்கொள்கிறார். ( ஆனால் எல்லோர் எழுதுவதும் படித்திருக்கிறார் போல )

3. மாயாவரம் மாபியா கோஷ்டி இல்லை என்பது போல தெரிகிறது .

4. யார் பதிவிலும் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. கண்டிப்பாக வேற ஏதோ பெயரில் எல்லோருக்கும் அறியபட்டு இருக்க வேண்டும்.

5. வெங்கட், கங்கா , முகமூடி, குழலி அதிகம் சொல்லப்படுகிறார்கள் இவரின் பதிவுகளில் .

கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் . யார் இந்த சின்னவன் என்று..


வரட்டா...

said...

இந்த மாதிரி வலை பூ எழுதறவங்களுக்கு தண்டனை கிடையாதா ?

said...

ஜேம்ஸ¤
அப்படியே நம்ம சீனியர்களான
முகமூடி, ஞானபீடம், தாஸீ, மாயவரத்தான் , குசும்பன்
இவங்க எல்லாரும் யாருன்னு கூட கண்டு பிடிச்சு சொல்லுங்க. புண்ணியமா போகும்.

கேதாரம்
எல்லார் பதிவிலும் போய் இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே, புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா .

said...

ரஜினியையும் அவர் ரசிகர்களையும் இழிவாக பேசும் சின்னவனை கண்டிக்கிறேன்.

said...

அல்வாசிட்டி
ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?

said...

//ஒரு பகிரங்க சவால். சம்பந்தப்பட்ட நடிகர் கன்னட சலுவாலியா சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்பதை யாராவது நிரூபித்தால் நான் வலைப்பதிவதை நிறுத்திக்கொள்வதாக உத்தேசம். நான் ரெடி. நீங்க ரெடியா?


இந்த சவால்தானே?

எல்லாரும் ரெடியாப்பா?
ஒன், டூ, த்ரி... விடு ஜூட்

said...

சின்னவரே
அது எப்படி உங்க IP address ம் இணையத்துல் குசும்பு செய்யற ஒருத்தரோட Ip address ம் ரொம்ப ஒத்து போகிறது ?

said...

ரசிகர் 1: எங்க நம்ம மாங்காமரத்தானை கொஞ்ச நாளாய் காணோம். எல்லா பதிவிலும் இருப்பாரே?

ரசிகர் 2: மண்டபத்தில குட்டு வாங்கினதல இருந்து கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கறாரோ என்னவோ?

ரசிகர் 1: ஓஹோ.. சரி மற்ற ரசிகருங்க எல்லாம் எங்க போனாங்க ?
ரசிகர் 2: தலைவர் தாத்தா ஆக போறாரு , அதுக்கு போஸ்டர், கட் அவுட் ,பாலாபிஷேகம் , மாலை, கற்பூரம்,
தமிழ்தாய் வாழ்த்து எல்லாம் ரெடி பண்ண வேண்டாமா , அல்லாரும் தும்ப பிஸியாகிதாரே குரு. சொல்ப வெயிட் மாடி

said...

சின்னவரே...நல்ல தமாஷா எழுதியிருக்கீங்க..எல்லோரையும் நல்லா புரிஞ்சு வைச்சுருக்கீங்கன்னு தெரியுது.. :-)

said...

வந்த, கமெண்ட்ஸ் தந்த, எல்லா ஜனத்துக்கும் டேங்க்ஸ் பா !

said...

sooper appu !

said...

athu halwacity illai. avar peyaril poli pinnuuttam...

said...

laugh riot :)
Well done chinnavan

said...

ம்... எனக்கும் கூடத்தான் இங்கே பின்னூட்டமிடனும் என்று ஆசை.

said...

வருந்தத்தக்க பதிவு.

இது எல்லை மீறிய தனிமனித துவேஷமாகவே தெரிகிறது. விவாதப்பொருளாக ஒரு சக வலைப்பதிவரையே(அவரது கருத்தையல்லாது) கையாண்டிருப்பது தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு உகந்ததாகத்தெரியவில்லை.

சாதரணமாக சிரிப்பை வரவைக்கும் உங்கள் பதிவு இந்த முறை எரிச்சலையே ஏற்படுத்தியது.

ஸாரி.

said...

//ஒரு சக வலைப்பதிவரையே(அவரது கருத்தையல்லாது) கையாண்டிருப்பது தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு உகந்ததாகத்தெரியவில்லை.
//
சகவலைப்பதிவாளரின் சவாலைத் தான் இங்கே நையாண்டி செய்துள்ளார்கள் அவரை அல்ல, அவர் விட்ட சவால் தான் இதில் என்ன எல்லை மீறிய தனிமனித துவேஷத்தை கண்டீர்?

said...

வளவன்.
எனக்கு எந்த ஒரு தனிபட்ட வலை பதிவாளர் மீதும் துவேஷம் இல்லை அவரை தூற்றி எனக்கு என்ன ஆக போகிறது.

அவரை பற்றி தனிபட்ட முறையில்
எதுவும் எனககு தெரியாது .

சொல்ல வந்தது விடும் சவால்களை பற்றி . சவால்கள் எவ்வளவு அபத்தமாக இருக்கின்றன என காட்டத்தான்.

தனிப்பட்ட ஒருவரை பற்றி ஆகிவிட கூடாது என்பதற்காகத்தான் நான் ஜாதி , அரசியல், எழுத்ததாளர் பாசம் எல்லவற்றை பற்றியும் சேர்த்து எழுதினேன்.

அதை பற்றி நீங்கள் வருத்தம் தெரிவிக்காதது ஏன் என்று எனக்கு தெரியவில்லை


அப்படியும் சிரிப்பு வரவில்லை என்றால் Pauly shore போல $1 திருப்பி தர அளவிற்கு எனக்கு வசதியில்லை :)

said...

// விவாதப்பொருளாக ஒரு சக வலைப்பதிவரையே(அவரது கருத்தையல்லாது)

வளவன்
சொல்லி இருப்பது அவரின் கருத்தை தானே . சவால் விடுவது கருத்து இல்லையா ?

இதில் என்ன எல்லை மீறிய து வேஷத்தை கண்டீர்கள் ?

தெளிவு படுத்தினால் , அனைவருக்கும் எது எல்லை, எதை மீறக்கூடாது என்பது தெளிவாக விளங்கும்

said...

// My god can kick your god's A$$.

சின்னவன்
இது எனக்கு மதத்தை பற்றி வலை பதியும் ஒரு சில வலை பதிவாளர்களை பற்றிய எல்லை மீறிய துவேஷமாக தெரிகிறது. உடனடியாக மன்னிப்பு கேள்.

பதிவை மீண்டும் ஒரு முறை நன்றாக படித்து விட்டு எத்தனை தனி மனித துவேஷங்களை பற்றி இதில் இருக்கிறது என்று மீண்டும் பின்னூட்டம் இடுவேன்.

said...

//எனக்கு எந்த ஒரு தனிபட்ட வலை பதிவாளர் மீதும் துவேஷம் இல்லை அவரை தூற்றி எனக்கு என்ன ஆக போகிறது.//
எனக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் "அவர்களை பற்றி நான் புத்தகமே எழுதி இருக்கிறேன், மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெஞ்சு வெடிக்கிறதா ?" (இது போல் இன்னும் பல) இதையெல்லாம் தனி மனித துவேஷமில்லை என்காதீர்கள்

//அவரை பற்றி தனிபட்ட முறையில்
எதுவும் எனககு தெரியாது.//
எனக்கும் எதுவும் தெரியாது, எங்கோ ஒரு வலைப்பதிவில் சுனாமியின் போது அவர் ஆற்றிய பணி பற்றி படித்ததாக ஞாபகம்.

//அதை பற்றி நீங்கள் வருத்தம் தெரிவிக்காதது ஏன் என்று எனக்கு தெரியவில்லை//
வருத்தமே மொத்தப்பதிவிற்கும் தான்...

//இதில் என்ன எல்லை மீறிய து வேஷத்தை கண்டீர்கள் ?
தெளிவு படுத்தினால் , அனைவருக்கும் எது எல்லை, எதை மீறக்கூடாது என்பது தெளிவாக விளங்கும் //
ஐயா அனானிமஸாரே, எனக்கு துவேஷமாகத்தோன்றியது அதைத்தெரியப்படுத்தினேன். அதுவும் இப்பதிவாளரின் பதிவினை தொடர்ந்து படித்து வருபவன் என்ற உரிமையில்....

said...

தனி மனித துவேஷம் பற்றி பேசும் வளவனுக்கு ஒரு கேள்வி !!

சில நாட்களுக்கு முன் சில வலைபதிவாளர்களை பற்றி ஆபாசமான பின்னூட்டங்கள் வந்தன

அப்ப எங்கே போய் இருந்த்தீர்கள் நீங்க ?

இது வருந்ததக்க செயல் என்று அப்பவே திருவாய் மலரந்திருந்தால் உங்களை மிகவும் பாராட்டி இருப்பேன்.

ஏன் சொல்லவில்லை, ஆபாசம் உங்கள் மீதும் பாயும் என்பதால் தானோ?

said...

//"அவர்களை பற்றி நான் புத்தகமே எழுதி இருக்கிறேன், மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெஞ்சு வெடிக்கிறதா ?" (இது போல் இன்னும் பல) இதையெல்லாம் தனி மனித துவேஷமில்லை என்காதீர்கள்
//
இதில் என்ன தனி மனித துவேஷம் இருக்கிறது? அவர்தானே சப்தமா? சகாப்தமா? என்று ஆராய்ந்து எழுதியதாக கூறினார், அப்படி ஆராய்ந்து எழுதியபோது இது கன்னட சலுவாலியா சங்கத்திற்கு டொனேஷன் கொடுத்ததும், அந்த சங்கத்தில் அவர் மெம்பராக இருந்ததும் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாத மாதிரி அதை விட்டுவிட்டாரா? அவர் தானே சவால் விட்டார்? சப்தம் போட்டு சவால் விட்டால் அவர் டொனேஷன் கொடுத்ததும் மெம்பராக இருந்ததும் இல்லையென்று ஆகிவிடாது.

said...

//இதையெல்லாம் தனி மனித துவேஷமில்லை என்காதீர்கள்

வளவன்,
இது நிச்சயம் கிண்டலுக்காக எழுதியது தான். துவேஷம் இல்லை.
எனக்கு கிண்டலாக பட்டது உங்களுக் துவேஷ்மாய் தெரிகிறது.

//இப்பதிவாளரின் பதிவினை தொடர்ந்து படித்து வருபவன் என்ற உரிமையில்

இந்த பதிவு உங்களை வருத்தமடைய செய்தது என்பதில் எனக்கும் வருத்தமே !
உங்கள் உரிமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

உங்களின் புரிதலுக்கு நன்றி....

said...

This is real neat, the language stuff, I'd appreciate if someone can help me find a way to also blog in
--Hindi
and
--Sanskrit


Thanks in advance

Tarry

said...

>> மாங்காமரத்தான்: தினமலர் பரபரப்பு செய்தி. அந்துமணி இராமதாஸை திட்டினார்

செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! அந்துமணியும் இராமதாஸ¤ம் ஒரே ஆள். மாங்காமரத்தான், சினிமா பொன்னையா என்ற பெயரிலும் அவரே தான் எழுதறார். முடிந்தால் அந்துமணி, பொன்னையா, மாங்கா இவர்களின் போட்டோவை ஆதாரம் காட்டுங்கள். உண்மை இல்லை என்றால் இனி நான் மாங்காவே சாப்பிட மாட்டேன் >>


இதெல்லாம் ரொம்பவே அதிகமுங்க! :)))

இந்த "முகமூடி" என்பவர் "தேனி மாவட்ட மாவீரர்" என்றால் எனக்கு அவர் யாரென்று தெரியுமென்றுதான் தோன்றுகிறது! ;)

said...

Mr Anderson
என்னய்யா குழப்புறீரு.

யாரு தேனீ மாவட்ட மாவீரர் ? நீங்க வலைபதிவர் முகமூடி பற்றியா சொல்றீங்க ?
அவரு எங்கங்க தேனீக்கு போனாரு?