Wednesday, August 31, 2005
தங்கர் , ரிக்கி பாண்டீங்க்
சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் ரிக்கி பாண்டீங்க்.
இங்கிலாந்து எப்படி தேவையில்லாமல் substitute க்களை பயன்படுத்துகிறது எடுத்து கூற வந்து கெட்ட வார்த்தைகளில் இங்கிலாந்து அணியினரையும் அவர்களின் பயிற்சியாளரையும் திட்டி புயலை கிளப்பிவிட்டார்.
Damien Martyn எப்படி அம்பயரிகளிடமும் , பேரே தெரியாத substitute பீல்டர்களிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.
ரிக்கி பாண்டீங்கும், மார்டீனும், க்ளார்கும் ரன் அவுட் ஆனதிற்கு அவர்களுக்கு சரியாக ஓடத்தெரியாதது மட்டும்தான் காரணமா ? சூப்பராய் பீல்டிங்க் செய்யும் substitute பீல்டரும்தான் காரணம்.
ஆட்டம் இடையில் பாத்ரூம் பிரேக் எடுக்காத கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் யார்தான் இல்லை? ரிக்கி பாண்டீங்க் அப்படியே ஆடுவாரா ? இல்லை அம்பயர்கள்தான் ஆட விடுவார்களா ?
விளம்பரத்தில் நடிக்காத கிரிக்கெட்டர் யார்தான் உள்ளனர்? ஆனால் Sprit of the Game என்பதே இல்லையா?? ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில்தான் , இங்கிலாந்து இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், டாஸ் போடும் போது பொத்திக்கொண்டு இருப்பார்கள்.
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தோற்காத Ashes இப்போது தோற்கும் நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டதுக்கு யார்தான் பொறுப்பு.
ரிக்கி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பாத்ரூம் பிரேக்கு மட்டும் substitue OK " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இங்கிலாந்தின் விதிகள வளைக்கும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல் தான் வேண்டும். அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு இந்திய கிரிக்கெட் போர்டை வறுத்தெடுக்கும் இங்கிலாந்து அணியினர், முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.
இங்கிலாந்து செய்யும் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை ரிக்கி பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் அவரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?
இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.
ரிக்கியின் கெட்ட வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் Match Referee க்கள் என்ன substitute யே பண்ணாதவர்களா , இல்லை எதிர் அணியினரை திட்டாதவர்களா ? Sledgeing என்னவென்று கிரிக்கெட் ஆடுபவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.
"இங்கிலாந்தை பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், match suspension . suspension தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று ரஞ்சன் மடுகலே , கூட்ட முடிவில் அறிவித்தார்."
மேட்சுக்கு மேட்சு இந்தியாவில் வந்த போதெல்லாம் Leg stump க்கு வெளியே negative bowling போட்ட இங்கிலாந்தே வாழ்க உனது திறமை !!
Monday, August 29, 2005
என் ஆட்டோகிராப்
கல்லூரியில் , பஸ்ஸில் பெண்ணை உற்று நோக்குதல், அழ வைத்தல் இதயம் நெகிழ்வுடன் பகிரப்படுகின்றன. Square Drive அடித்து கிளிகளை கபாஸ்கராய் கவர்ந்த்து எப்படி என்று பதிவுகள் பல. ( விஸ்வநாத் அல்லவா Sqaure Drive க்கு பேமஸ். குண்டப்பா என்ற செல்ல பெயர் வெளியில் சொல்லுமாறு இல்லையோ ?? )
இதோ என் ஆட்டோ கிராப் !!
பத்தாவது படிக்கும் போது தான் பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் ஒரு மயில் வந்தது. . மயில் சென்னையில் இருந்து வந்திருந்தது.மஞ்சள் bottom, கறுப்பு top, கலக்கலாய் இருந்தது மயில். அன்று சென்னைப் பற்றி ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவே இல்லை.
மயிலின் பேர் தெரியவில்லை . மயில் வந்த விஷயத்தை பசங்களுக்கு நான் தான் சொன்னேன்.
கோலி சோடா குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு சென்னை மயில் வீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது.
அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். மயில் வீட்டில் தாகசாந்தி நடக்கும். யாரும் பார்க்காத போது மயில் மேல் ஒரு செல்ல இடி . ஒரு ஆசை தடவல் மாமி வருவதற்குள் ஓட்டம்.
தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன்
பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.
அதில் இரண்டு குழந்தைகள் மயிலோடு எப்பவும் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் மயிலோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள்.இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது.
மயில் வீட்டு மாமி என்னை கூப்பிட்டார்கள் .
'மாமா ஆத்துல இல்ல. மயிலோட கொஞ்சம் கடைதெரு வரைக்கும் போய்விட்டு வரையா ?"
என் அதிர்ஷ்டத்தை என்னெவென்று சொல்வது.
இவ்வளவு நாள் கிட்டக்கூட நெருங்கி பார்க்காமல் இருந்த மயிலோடு கடைத்தெருவா ..
நான் மயிலோட சென்றதை கபில்தேவ், விவ் ரிச்சர்ட்ஸ், போத்தம் எல்லாம் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந் தார்கள். கடைத்தெருவில் ஆசை ஆசையாய் மயிலின் புகைப்படம் ஒன்றும் எடுத்து விட்டேன்.
அப்புறம் மாமா,மாமி வீடு மாற்றி சென்றவுடன் மயிலும் போயே போச்சு .
சோகம் தாளாமல் நான் கவிதைகளாய் எழுதி தள்ளினேன்.
மயிலே!!
உனக்கு மெயில் அனுப்ப
குயிலை தேடினேன்
குயில் சொன்னது
இன்று போஸ்டல் ஸ்டரைக் !!!
அந்த நாட்களுக்கு சாட்சியாக ஒரு படம்தான் மிச்சம்
காஞ்சி மயில் என்று, நாங்கள் அன்று பெயர் வைத்த அந்த மயிலின் புகைப்படம் இங்கே.
பாகம் ஒன்று முடிந்தது ..
( சே சே.. இந்த V.M. கதைகள் படிச்சிட்டு என் புத்தி இப்படி ஏன் ஆயிடிச்சு ?? )
Sunday, August 28, 2005
புயல் அறிமுகம்
இவரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கூடிய விரைவில் இவர் பேர் உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கப்போகிறது !
படத்தை பார்த்தவுடன் தெரிந்து போய் இருக்கும் இவர் Tennis ஆட்டக்காரர் என்று.
பெயர் Nicole Vaidisova.
பதினாறு வயது ( பிறந்த தேதி April 23, 1989 )
உலக வரிசையில் இப்போதய இடம் 26.
இப்பவே கிட்டத்தட்ட 6 அடி இருக்கிறார்..
அபாரமாக ஆடுகிறார் .
கிட்டத்தட்ட ஷரபோவை போலவே. மிக நேர்த்தியான் Forehand. மிகவும் எளிதான backhand. Service கொஞ்சம் வீக் என்றாலும், இன்னும் சில வருடங்களில் உடலில் வலு சேர்ந்தவுடன் அதுவும் மெருகு ஏறும்.
அடுத்த வருடத்துக்குள் இவர் நிச்சயம் Top 10 ல் இருக்கப் போகிறார் என்று பந்தயம் கட்ட நான் ரெடி.
பின்குறிப்புகள்:
1. I happen to like Women Tennis a lot. Sometimes for the Right Reasons.
2. இந்த மாதிரி ஒரு ஜொள்ளு பதிவு போட்டால் வரும் சில Classic பின்னூட்டங்களை இந்த பதிவின் பின்னூட்டத்திலும் படிக்கத் தவறாதீர்கள் !!!
3. More Nicole
4: இந்த பதிவுக்கும் அஸின் பற்றி வரும் பல பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
Friday, August 26, 2005
இன்னொரு புயல்
சாதனை
நடந்து வரும் 4 வது Ashes போட்டியில் Andrew Flintoff இடது கையால் இன்று ஆடி 102 ரன்கள குவித்து உள்ளார்
வழக்கமாக வலது கையால் ஆடும் இவர், ஏன் திடீரென்று இடது கையினால் ஆடினார் என்று யாருக்கும் தெரியாது.
கேப்டன் Vaughn , Flintoff இடது கையால் ஆடாவிட்டல் ஸ்டெம்பின் மீது குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தியதால் , Flintoff இடது கையினால் இன்று ஆடினார் என்று நம்பத்தகாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்பாலில் Switch hitters இருப்பது போல இனி கிரிக்கெட்டிலும் வலது, இடது கை ஆட்டம் அனுமதிக்கப்படுமா ? என்பதே ரசிகர்களின் கேள்வி .
வலது கையில் ஆடும் Flintoff
இடது கையில் ஆடும் Flintoff
=========================
Sources :
Thursday, August 25, 2005
முகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு
நிருபர்: எவ்வளவோ வலைபதிவர் இருக்காங்க... ஆனா உங்க தனித்தன்மை என்ன சார்.
முகமூடி: மற்ற வலைபதிவர்களை கிண்டல் அடிக்கிறது ... என்ன அதிர்ச்சி லுக் விடறீங்க.. இப்ப பாத்தீங்கன்னா, மொத்தம் ஏழே பேர்தான் ரெகுலராக வலைபதிகிறார்கள். இவ்ளோ குறைச்சலா இருக்குற வலைபதிவை மட்டும் படித்தால் மற்றவர்களுக்கு போர் அடிக்காதா ? அதனால ஒரு நாளைக்கு ஒரு கிண்டல் பதிவு போடறேன்.
முதல்ல ஒரு சீரியஸான(??) பதிவை யாரோ போடுவாங்க . அப்புறம் அதையே கிண்டல் அடிச்சி நான் பதிவு போடுவேன். அப்புறம் ஞானபீடம் அத கிண்டல் பண்ணி கமெண்ட் விடுவாரு. அத கிண்டல் பண்ணி சின்னவன் ஒரு பதிவு போடுவாரு. அப்புறம் குழலி, ஜிகிடி...,
நிருபர்: போதும் சார், புரிஞ்சி போச்சி.. சில குறிப்பிட்ட வலைபதிவர்களை மட்டும்தான் நீங்க நிறைய கிண்டல் அடிக்கிறீங்க .. அது உங்க கொள்கையா சார்.
முகமூடி: மண்ணாங்கட்டி. வேற எவன் என்னை எதிர்த்து எழுதறான் . வலைபதிவு கிண்டல் மாதிரி உயர்ந்த விஷயத்த பண்றவனுக்கு இந்த தமிழ்மணம் கொடுக்கற கௌரவம் இதுதான் தம்பி... ஆனா அந்த சில வலைபதிவர்கள் அப்படி இல்ல. எனக்கு கிண்டல் அடிக்கற மாதிரியான விஷயங்கள் நிறைய எழுதறாங்க. அதான் எங்க வெற்றிக்கூட்டணியோட ரகசியம்.
நிருபர்: அப்புறம் ஏதோ ஒரு படத்துல கூட நடிச்சீங்க போலருக்கு
முகமூடி: ஹிஹி. நான் பின்னூட்டத்தில் சொல்லறத எல்லாம் அப்படியே நம்பக்கூடாது ராசா. பாரு , நான் கூடத்தான் Dr/Engineer அப்படினு ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன். எல்லரும் அத நம்பலையா . அப்படியே அடிச்சு விட வேண்டியதுதான்
நிருபர்: கொஞ்ச நாளா உங்க கிண்டல்கள் நிறைய காணோமே அது ஏன் சார்.
முகமூடி: அது ஒரு சோகமான காரணம்பா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஒரு சிறுகதை போட்டி ஆரம்பிச்ச்சிட்டேன். அத முடிக்கறதுக்குள்ள எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது.. மயக்கமா வருது... இருந்தாலும் சமாளிச்சி என் வாழ்க்கைல முத தடவ போட்டி போட்டு முடிச்சேன்...
இப்ப பேங்கல $500 போட்டு வச்சிருக்கேன்.
மொத்தம் 5 X 100 = 500.
5 போட்டி நடத்தற அளவு காசு ரெடி .. என் முதல் போட்டி முடிவுகள் மட்டும் வரட்டும் அப்புறம் தமிழ்மணம் எங்கும் நம்ம கிண்டல்தான்..
Wednesday, August 24, 2005
கவிதைகள்
அதில் சில
தினமும் நீந்துங்கள்
உடல் பருமன் குறையும்
என்றார் மருத்துவர்.
பார்த்ததே இல்லை
போலும் அவர்
திமிங்கலங்களை .!!!
Nike ஷ¥ அணிந்து
Reebok சட்டை மாட்டி
Rayban கண்ணாடி அணிந்து
Swiss மலை அடிவாரத்தில்
Bikini போட்ட மங்கையர் சூழ
சினிமா ஹீரோ பாடினார்
இந்தியனாய் இரு.!!!
ஒரே மாதிரி உடை
ஒரே மாதிரி தலை தொப்பி
2000 மாணவர்கள்
பட்டமளிப்பு விழாவில்
பேசினார் தலைவர்.
தனித்துவமே உனது வெற்றி !!!
கொலம்பஸ்க்கு நன்றி
நீங்கள் மட்டும் இல்லாவிட்டால்
Ohio வின் தலைநகருக்கு
என்ன பெயர் வைப்பது ?
எனது ரம்மியான பொழுதுகளை
ஒரு சீட்டுக்கட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்.
அவளின் நினைவுகள்
சரக்காய்
சிவப்பான பனித்துளியாய்
உருண்டு திரண்டு
மதுக்கோப்பையின் நுனியில் !!
===========
கவிஞர் பவுர்ணமி பாண்டியன்.
Tuesday, August 23, 2005
அஸினுக்கு வயசு 27.
இப்ப லேட்டஸ்ட் பேஷ்ன் அஸின் பற்றிய பதிவு போடறதுதான். ஒருத்தரு மன்றம் அமைக்கறாரு, அனுமதியே இன்னும் வாங்கல , அதுக்கு முன்னே , பொருளார் பதவிக்கு சண்டை.
மக்கள், மன்றம் , கட்சி எல்லாம் எதுக்கு என்று நல்லாவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். வழக்கம்போல நானும் ஒரு அஸின் பதிவு போடறேன்.
அஸினுக்கு வயசு 27.
ASIN பிலிப்பென்ஸ் நாட்டின் மிகப் பிரபலமான கிராமிய-ராக் குழுக்களுள் ஒன்று. இந்த வருடத்தோடு அந்த குழு ஆரம்பித்து 27 வருடம் ஆகிறது.
சுற்றுபுற சூழல் பற்றிய அவர்களின் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இருபது வருடங்களுக்கும் மேலாக பல இலட்சக்கனக்கான மக்களின் பாராட்டை பெற்று வருகிறது இந்த குழு.
நவம்பர் மாததில் இந்த குழு அமெரிக்கா முழுவதும் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். மிகப்பெரிய வெற்றி பெரும் என்று பரவாலாக எதிர்பார்க்கப்படுகிறது இந்த அமெரிக்க பயணம். உடனே ஆசியாவிலேயே இந்த குழுதான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று யாரும் எழுதிவிட வேண்டாம்.
Monday, August 22, 2005
அரட்டை அரங்கம்.
Son of Bosey பார்த்து இருக்கிறீர்களா ?அதில் இருந்து ஒரு பதிவு இன்றைக்கு மறுபதிவு ...
Visu Yet To Complete Sentence He Began In 2001
by Anand Ramachandran, who still longs for 'old school' tamil cinema.
World famous king blade Tamil film actor-director Visu is yet to finish one of his typically long-winding, meaningless sentences, one that he, startlingly began over four years ago.
Tamil film actor / director Visu, photographed in 2000, which was the last time he had his mouth closed. It all began when Visu, best known for movies with titles like ‘Samsaram adhu Minsaram', ‘Thirumathi adhu Vegumathi' and ‘Prosthetic adhu Aesthetic', was asked by an interviewer for his opinion on a topic that has long since been forgotten by everyone involved, including the actor himself.
After taking a moment to think, Visu ( lovingly referred to as ‘Visu' by friends) launched into what would evolve into a never ending blade, even by his own lofty standards.
After taking a year to greet the crowd ( and everyone else in the world, mostly by individual names), he then spent 2003 and 2004 dwelling on what essentially boiled down to “Good question, now let me see . . . .” He also interspersed his reply with several entertaining instances where he pursed his lips, raised an eyebrow and moaned “Mmmmmmmm. . . .”
Currently, he is reportedly moving on to the part where he quotes examples from his movies to address the question the point at which the last stragglers quickly left the building, ending any chance of further news updates.
Strangely, Visu hasn't stopped for food or drink giving credence to the oft-quoted theory that he gets all the nourishment he needs from the constant drone of his own voice.
Rumour has it that after completing his filibuster, Visu is planning to launch an all-new TV show called ‘Visuvin Aruvai Kodumai'. Stay tuned, if you're the masochistic sort.
Saturday, August 20, 2005
Friday, August 19, 2005
மனைவி எரிப்பு.
Calcutta Fire Marshal: Many Indian Homes Lack Bride Extinguisher
CALCUTTA, INDIA
Failure to own or use a bride extinguisher results in millions of rupees of property damage in India annually, Calcutta fire marshal Prasad Chandra said in a press conference Monday.
"This tragedy occurs far too often when well-meaning husbands, attempting to collect on a dowry, ignite their brides indoors. The damage is often compounded when a burning bride attempts to escape and spreads the flames to other homes," Chandra said.
"If you absolutely must burn your bride, avoid additional destruction with an affordable bride extinguisher. And, if possible, confine the burning to your backyard bride pit."
He also recommended that homeowners install and periodically test marital smoke detectors.
அவர்கள்
காசு வாங்கினால்
மாப்பிள்ளைகள்.
நாங்கள் வாங்கினால்
எங்கள் பெயர் .....
எங்கேயோ படித்த கவிதை..
என்று ஒழியும் வரதட்சனை சாவுகள்.
குழலியே கோபமா ?
“ம்ம், நீ?”
“எனக்குக் கோபம் இல்லை”
“எனக்கும் கோபம் கன்னாபின்னான்னு இருக்கு” என்றது குழலி. “நெறயா உம் மேல. கொஞ்சம் எம் மேலயும். ஜெண்டில்மேனாய் இரு என்று மீசைக்கார KT குஞ்சுமோன் ஒரு வார்த்தைல சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா என்ன பண்றதுன்னு தெரியலே!”
“சரி. விடு. அங்க என்ன பின்னூட்டம் விட்ட ?"
“விடா? நான்தான் பின்னூட்டத்தை அழிச்சிட்டேனே ”
“ஆமா. அதுக்காக என்ன பண்றது? நீ அழிச்சதை திரும்பவும் ஒரு முறை சொல்லிட்டா தீர்ந்து போயிடும் பிரச்சினை தான் . நான் உனக்கு முன்னாடியே சொன்னேன். ஏன் இப்படி அறிவாளியா இருக்கேன்னு?”
“சொன்னே. இல்லைன்னு சொல்லல்லே. ஆனா நான் நல்லதனமா இருக்கணும்னு நெனச்சேன், அதனால அழிச்சேன் "
“என்னைப் பாத்து நெதானமாச் சொல்லு. நல்லவனா மாறும் இந்த முடிவு
திடீர் மாற்றம் இல்லையே”
“நீ சொல்றது சரிதான். இருந்தாலும் எல்லாம் சரியாகிடும்னு ஒரு நப்பாசை. அதான் இப்போ எல்லா நாரதர்கள் மூலம் மோசமான வலி"
"எவ்வளவு நம்பிக்கையான ஆளு நீ, இப்படி பின்னூட்டம் இட்டு அழிக்கலாமா சொல்லு ? எவ்வளவு பின்னூட்டங்கள் இப்ப அதனால? "
"உனக்கு தனியாய் மயில் அனுப்பறேன். அத பத்தி. எல்லாம் சரியாயிடும்"
நிமிர்ந்து பார்த்து மெல்லச் குழலியிடம் சொன்னேன், “ஒரு முறை கடலூருக்கு போய்ட்டு வாயேன் !”
=====================
செல்வராஜூக்கு நன்றி.
சிறுகதை - வீ .எம்.
என்ற நண்பனை திரும்பி பார்த்ததேன் நான்.
வெங்கட் ரமணீ மயில் வாகன திருமகன் என்ற என் நீண்ட பெயர் எல்லோராலும் வீ எம் என்று எப்பவோ சுருங்கி விட்டது.
. வெங்கட் தாத்தா பெயர் , ரமணீ அப்பா பெயர், மயில் அம்மாவிற்கு பிடித்த பறவை, திருமகன் படம் தான் அப்பாவும் அம்மாவும் பார்த்த முதல் படமாம் அதானால் எனக்கு இந்த நீண்ட பெயர் வந்தது என்பது இந்த கதைக்கு தேவை இல்லாத விஷயம் என்றாலும் 2000 வார்த்தை எழுதனுமே !!
அமுதம் பத்திரிக்கை கவிதை போட்டி ஒன்று அறிவித்து இருந்தது. அதற்காக நான் எழுதிக்கொண்டு இருக்கும் கவிதைகளை தான் நண்பன் கிண்டல் அடிக்கிறான். ஆனால் அது எனக்கு பெரிதாய் படவில்லை.
கல்லூரிக்கு போகும் முன் , இந்த பஸ் ஸ்டாண்டில் தினமும் சைட் அடிப்பது வழக்ககம். பக்கத்தில் இரண்டு பிகர் களும் நின்று கொண்டு இருந்தார்கள். மஞ்சள் சுரிதாரில் ஒருத்தியும், ஜீன்ஸ் போட்ட இன்னொருத்தியும்.
பக்கத்திலேயே, கிராமத்து பெரிசு ஒன்று மஞ்சப் பையோடு பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தது.
ஓ ....பெண்ணே...
உனக்குதான் எத்தனை ஆடைகள்.
ஜீன்ஸ் .சுடிதார், சேலை, தாவணி..
பாவம்
பக்கத்தில் இருக்கும் பெருசை பார்..
கிராமத்து விவசாயிக்கு
இருப்பது கோவணம் மட்டும் தான் !!!
"மச்சி கலக்கிட்டமா. இதுக்குதான் முதல் பரிசு "
என்றான் நண்பன், பிகர்கள் மேல் இருந்த கண்களை எடுக்காமலேயே.
இதுக்கு இப்படியா. இன்னும் கனமாய் 200 பக்கத்துக்கு ஒரு கவிதை எழுதி இருக்கேனே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
நாங்கள் தமிழில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த பிகர்கள் தங்களுக்குள் நக்கலாய் சிரித்து கொள்வது நன்றாய் தெரிந்தது
பஸ் வந்தவுடன் ஓடி ஏறிய சுரிதார் பெண்ணின் துப்படாவை பின்னலேயே ஏறிய பெரிசு கால் வைத்து விட அந்த பெண் படிக்கட்டில் நிலை தவறி விழுந்து விட்டாள்
அவளை நான் காப்பாறியது, பின்னர் எங்களுக்குள் காதல் வந்து கல்யாணத்தில் முடிந்ததும் இந்த கதைக்கு தேவைபடும் விஷயம்.
காதலை ஒத்துக்கொள்ளும் முன் அவள் போட்ட முதல் கண்டிஷன்.
இனிமே கவிதை அது இது என்று எழுதின அவ்வளவு தான்.
அப்படியாக என் எழுத்து சேவை முடிவு பெற்றது. இதுதான் என் கடைசி எழுத்துக்கள்.
நன்றி! வணக்கம் !!
.ம்.. அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே. அமுதம் போட்டி பரிசு எனக்குத்தான் கிடைத்தது !
(வீ எம். அண்ணாச்சி . சும்மா தமாஷ¤க்குத்தான். பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. எடுத்து விடுகிறேன். . )
Thursday, August 18, 2005
வட கொரிய திட்டுக்கள்
இந்த சௌத்து கொரியா காரங்களை பத்தி நிறைய நியூஸ் கீது. ஏன்னா அங்க கூட சனநாயக ஆச்சியாம். ஆனா இந்த நார்த்து பசங்களை பத்தி நிறைய நியூஸ் வெள்யே வராதாம். அந்த நாட்டு அதிபரு அவ்வளவு ஸ்டிரிக்டாம்.
கடேசியா இந்த லின்கு கிட்சுது. இதல நார்த்த பத்தி எல்லா நியூஸ¥ம் கீது. இதல ஒரு டமாஸ் கூட கீது. நார்த்து காரனுங்க மத்த நாட்ட எப்படி எல்லாம் திட்றானுங்கன்னு ( சப்பானு, அமெரிக்கா அல்லாதையும்.. ) சாம்பிளுக்கு கொஞ்சம்..
ஹி ஹி.. நம்க்கு டமில் நாலேட்ஜ் சொல்ப குறவு. அதனால் நீயே டமில் மேல ட் ரான்ஸ்லேட் பண்ணீக்க. சர்தானா ?
You black-hearted political dwarf, we will mercilessly crush you with the weapon of singlehearted unity!
You reckless gangster, you will be dealt a thousandfold retaliatory blow!
You anti-socialist reactionary, your ridiculous clamour for "human rights" is nothing but a shrill cry!
You arrogant traitor!
You extra-large running dog, you have glaringly revealed your true colours!
You swollen-headed beast, such a provocation will be regarded as a declaration of war!
You bellicose aggressor!
You shameless warmonger!
இன்னாதான் இங்கிலீஸ¥ல திட்னாலும் நம்ம கட்சி கூட்டங்களில் திட்ற மாத்ரி வருமா சொல்லு
இனிமேட்டு யாரும் என்க்கு உலக அர்சியலு தெரியாதுன்னு சொல்ல கூடாது. ஆமா. சொல்லி போட்டன்..
Wednesday, August 17, 2005
கேள்வி பதிவு
Whats a question with no answer called?
If a General is a higher ranking officer than a Major, then why is a major illness worse than a general illness?
Doesn't a lightning rod on top of church show a lack of faith?
Why do the numbers on phones go down while the numbers on calculators go up?
Who was the first person to say, "See that chicken over there ... I'm gonna eat the first thing that comes out if its butt"?
If electricity comes from electrons, does morality come from morons?
"Have you ever noticed that if you rearranged the letters in mother in law, they come out to Woman Hitler?"
364 days of the year, parents tell their kids not to take candy from strangers, yet on Halloween, its encouraged! Why is that ?
Tuesday, August 16, 2005
கண்டன அறிக்கை.
ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்தவர்கள் நாங்கள், உண்ணும் விரதத்தை கண்டுபிடித்தவர்கள் நாங்கள், சோடா பாட்டில், கல் வீச்சில் வல்லவர்கள் நாங்கள். எம் தலைவரை பற்றி நீங்கள் எழுதுவதை கண்டு எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்காது. அற வழியில் எஙக்ள் போராட்டம் தொடங்கும்.
"சென்னை தந்த செம்மல், "
"சென்னை தேமதுர தமிழ் திக்கெட்டும் பரவிடச்செய்த திருமகன், "
"கூவம் கண்ட குயில் "
எங்கள் ஆருயிர் தலை லூஸ் மோகனை பற்றி கிண்டல் அடிப்பதை உடனே நிறுத்துமாறு முகமூடியையும், முகக்கண்ணாடியையும் "அன்போடு" கேட்டுக்கொள்கிறோம்.
முதற்கட்டமாக உங்கள் பதிவுகளில் Dynamic IP உதவியோடு எண்ணற்ற கள்ள ஒட்டுக்கள் "-" வாக போடப்படும் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
திரையுலகில் 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் லூஸ் மோகனே ,
உன்னால் தமிழும், தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம். உங்களால மட்டும் எல்லாருக்கும் லாபம்.
இப்படிக்கு
அ,இ.அ.மோ.மு.க
( அகில இந்திய அண்ணன் லூஸ் மோகன் முன்னேற்ற கழகம். )
இதில் இருக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க எல்லாம் கண்டுகாத நைனா,
நம்ம டமில் நாலேட்ஜ் அவ்வள்வு தான் ..
Monday, August 15, 2005
சாருவின் கோணல் பக்கங்கள்
இசைக்கும், இலக்கியத்துக்கும் பெரும் ஆதரவு அளித்து போஷித்து வரும் பட்டு ஜவுளி வர்த்தகர் "நல்லி' குப்புசாமி செட்டியாரின் ஆதரவில் இவ்விழா நடந்தது; கடந்த ஆண்டும் அது போலவே...
கடந்த ஆண்டு இந்த விழா நடந்த போது, சிறு பத்திரிகையாளர்களிடையே ஒரு சலசலப்பு... "ஜவுளிக் கடைக்காரருக்கும், இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு? ஆதிக்க சக்திகளிடமும், பண முதலைகளிடமும், முற்பட்ட இனத்தினரிடமும் விலை போய் விட்டார் சாரு நிவேதிதா...' என்று!
இந்த குற்றச்சாட்டு, அப்பட்டமான வயிற்று எரிச்சல் தவிர, வேறு முரண்பாடு ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்கு தெரியும்!
சிறு பத்திரிகையாளர்களுக்கு, "ஐடன்டிட்டி கிரைசிஸ்' உண்டு. அதாவது, தன் எழுத்து, படைப்பு பரவலாக பல பேரைச் சென்றடையவில்லையே... ஜனரஞ்சக இதழ்கள் தம்மைக் கண்டு கொள்ளவில்லையே... தமக்கு பண ஆதரவு தர யாரும் முன்வரவில்லையே... என்ற ஆதங்கங்கள் நிறையவே உண்டு... அதனாலேயே, ஏணியைக் கோணி என்பர்... கோணியை, ஏணி என்பர்! எப்போதுமே எதிர்மறையாக சிந்திப்பர்–எழுதுவர்... அப்போது தானே நாலு பேர் கவனத்தைக் கவர முடியும்!
ஏதாவது ஒரு ஜனரஞ்சக பத்திரிகை, இவர்களில் ஒருவரை அழைத்து எழுத வைக்கட்டும்.. பிறகு தெரியும் சேதி... இந்த சமாச்சாரம் சமீபத்தில் கூட நடந்தது... ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்.. இவரைக் கூப்பிட்டு, "குமுதம்' இதழில் எழுதச் சொன்னார்கள்...
அவ்வளவுதான்! சிறு பத்திரிகைகளில் அவர் தொட்டு வந்த "சப்ஜெக்ட்'களே மாறி விட்டது... அவரது எதார்த்த நடை எங்கோ ஓடிப் போனது... சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த பார்வை மாறிப்போனது... ஒரு கட்டத்தில், "குமுதம்' ஆசிரியர் குழு, "நீங்கள் ஜெயமோகனாகவே இருந்து எழுதுங்கள்' என்று கேட்டுக் கொண்டதாக அறிந்தேன்!
ஒவ்வொருவரின் பேச்சையும் அவதானித்துக் கொண்டிருந்த போதும், பின் இருக்கைகளிலிருந்து சிலர், உரத்த குரலில் "கமென்ட்' அடித்து, கிண்டல் செய்து கொண்டிருந்தனர்... இலக்கியக் கூட்டங்களில் இது வாடிக்கை! இலக்கிய எழுத்தாளர்களின் கருத்து வேறுபாடுகள் இங்கே வெடிக்கும்; சில நேரங்களில் கை கலப்புகள் கூட நடக்கும்... இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் முன்பு ஒருமுறை சாருவின் பல் உடைந்தது!
முந்தைய தினமே, சாரு என்னிடம், "போலீஸ் பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செய்து விடேன்...' என்று கேட்டுக் கொண்டிருந்ததால், ஒரு எஸ்.ஐ., சகிதம் நான்கு போலீஸ்காரர்கள் தடியுடன் வந்து, வாயிலில் நின்று கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் நண்பர் ஒருவரும் "மப்டி'யில் வந்து அமர்ந்திருந்தார்.
அவரும் இந்த "அலம்பல்'களை கவனித்தபடியே இருந்தார்!
கூட்டம் முடிந்த பின்னும் அவர்களது "அலம்பல்' அடங்காமல் இருக்கவே, "மப்டி'யில் இருந்த இன்ஸ்பெக்டர், "படித்தவர்கள் கூடும் இடமாயிற்றே என்று "மப்டி'யில் வந்தேன்... கஷ்டப்பட்டு, "யூனிபார்மை' ஜீப்பில் அமர்ந்தபடியே கழற்றி, இந்த உடை அணிந்து வந்தேன்... இப்படிப்பட்ட, "சில்லரை'களும் வரும் என்று தெரிந்திருந்தால், போலீஸ் உடையிலேயே வந்து, லத்தியை சுழற்றி இருக்கலாம் போலுள்ளதே...' என அவர்கள் காதுபடக் கூறியதும், அவர்கள் "எஸ்கேப்!'
===================
சாருவின் கோணல் பக்கங்கள் மூன்றாம் பதிப்பு விழாவை பற்றி அந்துமணியின் பார்வை (சில பகுதிகள் ).
வர வர இந்த தினமலரை மறுபதிப்பு செய்ய ஆட்களே இல்லாமல் போய்விட்டார்கள்.கிடைத்த சந்தர்பத்தை விடுவானேன்.
ஆமாம் இதில் குறிப்பட படும் "அலம்பல்கள்" யார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
Sunday, August 14, 2005
முகமூடி 10
கவலை வேண்டாம் . இந்த கேள்விகள் மூலம் கண்டுபிடிச்சடலாம். !!
முகமூடி 10
1 நீங்க என்ன வேலை செய்றீங்க ?
இவர் மட்டும்தான் எனக்கு தெரிந்த வலைபதிவர்களில் Dr and Engineer.
2. லூஸ் மோகன் எப்ப ¨தைலாபுரம் போறார் ?
லூஸ் மோகனின் Travel iterinary இவர் கிட்ட மட்டும்தான் இருக்கும்
.3. பொய்கடவுள்கள் யார் யார் ?
எழுதறேன் என்று சொன்னரு ஆனா வரவே இல்லை ?
4.குமுதம் ஆசிரியரின் e-mail address முகவரி என்ன ?
வெற யாரரவது மெனக்கெட்டு குமுதம் ஆசிரியருக்கு மயில் அனுப்பி இருக்கிறார்களா ?
5.பின்னூட்டம் இட்டால் பரிசாய் கிடக்கும் கஸ்மால பவுடர் எங்கே கிடைக்கும் ?
6. Bokeh அப்படின்னா என்ன ?
7 கடிக்கும் வரை எது அழகு ?
8. தமிழ் தாத்தா யாரு ?
9. பமக மகளிர் அணியில் சேர என்ன அனுபவம் இருக்க வேண்டும் ?
10. கடைசி கேள்வி .. Mask க்கும் Son Of Mask க்கும் என்ன வித்தியாசம் ? .
முகமூடி அண்ணாச்சி உடனே சின்னவன் 10 எழுதி விடாதீர்கள்.
மூடு விழா
இன்றே கடைசி ! படிக்க தவறாதீர்கள்!!!
இதுவரை எவ்வளவு பேர் இங்கு வந்து படித்து இருப்பார்கள்..
தினமும் வரும் நண்பர்கள் எவ்வளவு பேர்.
ஒரு நாளைக்கு பலமுறை எவ்வளவு பேர் வந்து போய் இருப்பார்கள்.
இப்ப இதை மூடி விட்டால்?
வேறு வழியே இல்லை . மூடித்தான் ஆக வேண்டும்
வேறு வழியே இல்லை . மூடித்தான் ஆக வேண்டும்
அவர்கள் வேற இடத்துக்கு படிக்க போய்விடுவார்கள் .
இந்த ஒரு இடம் இருந்ததே அவர்கள் மறந்தும் போகலாம்.
ஆனால் நான் ???
பாடுபட்டு, இரத்தம் சிந்தி உருவாக்கிய நான் என்ன செய்வேன்? அழுகைதான் வருகிறது.
======================================
You Got Mail படத்தில் Shop around the Corner மூடும் முன் Kathleen Kelly ( Meg Ryan) இப்படிதான் யோசித்து இருப்பாரோ?
இந்த வலைபூவிற்குதான் மூடுவிழா என்று நினைத்து நீங்கள் வந்து இருந்தால். ஹி ஹி..
எனது Audio Blog வரும்வரை இதை கொஞ்சம் நாள் ஓட விடத்தான் எண்ணம்
பின்குறிப்பு :
1. அஞ்சலி தேவியுடன் நான் ஆட்டம் போடுகிறேன் ( கனவில் ) என்ற நண்பருக்கு,
அஞ்சலி தேவி ஒரு பிரபலமான அழகிய இளம் பலான நடிகை என்பது தெரியும் தானே?
Google தேடி பார்த்து வரும் NSFW படங்களினால் உங்கள் அலுவகத்திலோ, வீட்டிலோ வரும் பிரச்சனைகளூக்கு நான் பொறுப்பு அல்ல !!!!
2. எழுத தூண்டிய தலைவர் முகமூடிக்கு நன்றி !!
( கோப்பி ரைட் ஆக்ட் படி வழக்கு வராமல் இருக்க )
Friday, August 12, 2005
10 கேள்விகள்
உதாரணதிற்கு பிரபலம் சானியா மிர்சா .
கேள்விகளும் பதிலும் இப்படி இருக்க கூடும்.
ஆணா ? No
சினிமா ? No
விளையாட்டு ? Yes ( கிரிக்கெட் இல்லை )
டென்னிஸ் ? Yes ( மரியா அல்லது சானியா சாத்தியம் )
இந்தியர் ? Yes .
ஆட்டம் முடிந்தது. சானியா மிர்சா தான் சரியான விடை.
இதே போல் வலைபதிவர்களை 10 கேள்விக்குள் கண்டு பிடிக்க முடியுமா ? கேட்டுத்தான் பார்ப்போமே .
ரம்யா அவர்கள் சொன்னது இந்த விளையாட்டைதான் என்று நினைக்கிறேன்.
1. நட்சத்திர வலைபதிவரா ?
Yes : கஷ்டம். புதிதாய் வலைபதித்த 6 வயது குட்டி பாப்பா தவிர கிட்டதட்ட எல்லாரும் நட்சத்திரம் ஆகி விட்டார்கள். என்னது ?? அடுத்த வாரம் அந்த பாப்பா தான் நட்சத்திரமா ? கடவுளே !!! )
No/Maybe : அடுத்த கேள்வி.
2. ரஜினி ரசிகரா ?
Yes : எளிது. கிட்டதட்ட மாயவரம் மாபியா வை சார்ந்தவராய் இருப்பார். ( மாயவரத்துக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம். விஜய ராஜேந்தர் ஊர் அல்லவா அது ? )
No : இவர்கள் அடுத்த கேள்வியில் நிச்சயம் கண்டு பிடித்து விடலாம்.
Maybe : கொஞ்சம் கடினம்.
3. ராமதாஸ்/திருமா பிடிக்குமா?
Yes :போன கேள்விக்கு பதில் நிச்சயம் இல்லை என்று இருக்க சாத்தியம் அதிகம். விடை எளிது.
No : போன கேள்விக்கு பதில் நிச்சயம் ஆம் என்று இருக்க சாத்தியம் அதிகம். விடை எளிது.
Maybe : அடுத்த கேள்வி
( இந்த கேள்வியை, பிராமாண/தலித் ஆதரவா/எதிர்ப்பா என்று கூட கேட்டு பார்க்கலாம்.
4. இஸ்லாம்/குரானில் இல்லாதது எதுவும் இல்லையா
Yes / No : ஆரோக்கியமா தேடினால் விடை எளிது
Maybe : அடுத்த கேள்வி
5. சுஜாதா பிடிக்குமா ?
Yes :வாத்தியார் என்று அவரை அழைப்பவர்களிடம் தேட வேண்டியது தான்
No : இது இன்னமும் எளிது. பிரபலமான இரண்டு பதிவுகளில் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர்.
Maybe : அடுத்த கேள்வி
6. பெண் , பெண்ணீயம், குடும்பம் பற்றி எழுதுபவரா ?
Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி
7. படம் காட்டும் பதிவரா ?
Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி
8. யாருக்கும் புரியாத மொழியில் எழுதும் இலக்கியவாதியா ?
Yes ரொம்ப ஈஸி..
No /Maybe : அடுத்த கேள்வி
9.மற்ற பதிவுகளை/பின்னூட்டங்களை கிண்டலடிப்பவரா ?
Yes ரொம்ப ஈஸி (நம்ம தலையிலே கையா ?.. )
No /Maybe : அடுத்த கேள்வி
10. சொந்த பெயரில் எழுதுபவரா ?
இதற்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டு இருப்பீர்கள். இல்லை ஒரு சிலர் என்று வட்டத்தை சிறிதாக்கி இருப்பீர்கள்.
இந்த பத்து கேள்விகளுக்குள் நீங்கள் விடை கண்டு பிடித்து விட்டீர்கள் எனில் நீங்கள் தமிழ்மணத்தை கரைத்து குடித்தவர். வரும் எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களயும் படிப்பவர் ( வேற வேலை எதுவும் இல்லையா உங்களுக்கு ? )
இல்லை என்றால், நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டுமே படிப்பவர். உங்களுக்கு நிறைய வேலை இருப்பது போல் காட்டிக் கொள்பவர், இல்லை மனைவி/கணவனிடம் இனையத்தில் நிறய நேரம் செலவழிக்கிறீர்கள் என்று திட்டு வாங்குபவர்.
வேற கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.
அட இதற்கே ஒரு போட்டி வைக்கலாம் போல இருக்கே?
சரி போட்டி விதிகள்.
1. கேள்வி 20 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. கேள்வி தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் கேள்வி இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) கேட்டு இருக்ககூடாது
3. கேள்வி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும்
முதல் பரிசு :: US $75 gift card
இரண்டாவது பரிசு :: US $25 gift card,
ஜெயித்தவர்கள் எனக்கு கொடுக்க வேண்டும் .
முகமூடிக்கு ஒரு கேள்வி
நான் உங்கள் வலைபதிவில் பின்னூட்டம் இட முடியாத நிலையில் இருப்பதால் இந்த தனி பதிவு.
போட்டிக்கு ஏன் என் கதை சேர்த்துக்கொள்ள படவில்லை ?
உங்களின் விதிகளை நான் எங்கும் மீற வில்லை.
//போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) பிரசுரிக்கப்பட்டிருக்கக்கூடாது. கதையின் காப்புரிமை எழுதிய ஆசிரியருக்கு சொந்தமானது
இந்த படைப்பு முழுமையாக எந்த பதிவிலும் இல்லை. இது முழுவதும் எனது கற்பனையே. மூன்று கதைகள் என்னை எழுத தூண்டி மட்டும் தான் விட்டன. அவற்றை நான் முழுவதுமாய் காப்பி அடிக்கவில்லையே? You can say I am inspired by them :)
ஏன் முகமூடி ஏன் ?
ஒரு வளரும் கன்னி கதை ஆசிரியனின் கனவை கருவிலேயே
கலைக்காதீர்கள். ( அப்பாடா எத்தனை "க" . பேசாம சீரியலுக்கு வசனம் எழுத போலாம் போல )
Thursday, August 11, 2005
சிறுகதை.. சுட்ட பழம்.
பரிசு எனக்கு தானே? இதோ போட்டிகான எனது கதை !
தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக்கொண்டே கோயிந்தசாமி மூன்றாவது முறையாக வீட்டு வாசலுக்கு வந்து நீண்டு கிடக்கும் தெருவை பார்த்துக்கொண்டிருந்தார்.இந்த போஸ்ட்மேனை இன்னுங்காணோம்திண்ணேல உட்கார்ந்து புகையிலை பொட்டலத்தை பிரித்தார். அவரது நெற்றியில் விழுந்த கோடுகள் சொல்லியது அவரது சிந்தனை பழ்னிசாமி பற்றியது என்று.
தவமிருந்து பின்பு பிறந்தவன். எப்பவும் அவனுக்கு மொட்டை அடிச்சு விட்டு விடுவார்.
தலையில கொஞ்சம் தலையில முடி மொளச்சிடக் கூடாதே.உடனே எதோ ஒரு கோயிலுக்குக் கிளப்பீட்டுப் போயிடுவார் .கால் பரிச்சை லீவுல தான் கொல தெய்வம் கோயில் போய் மொட்டை போட்டுட்டு வந்தரார் . முழுப் பரிச்சை லீவில பழனில மொட்டை போடணும்
கூடப் படிக்கிற K.கதிர்வேல்,"கொடுக்காப்புளி"தங்கதுரை,மீனாச்சியக்கா வூட்டு ரமேசு இவிங்க எல்லாம் புதுசா வந்திருக்கிற ரஜினி மாதிரி முடி வெட்டிக்கப் போறாங்களாம் என்று பழனிசாமி எப்பவும் அழுவான்.
இப்படி வரிசைக்கா மொட்டை போட்றதப் பத்தி யாராவது கேட்டாலும் பழனிச்சாமிக்கு சாமி பக்தி சாஸ்தி;அவன் நேர்ந்து கிட்டதனாலத் தான் இப்படின்னு அப்பா பொய் சொல்றப்பவெல்லாம் ஊடால புகுந்து அப்பா பொய் சொல்றாங்கன்னு சொல்லத் துடிப்பான்.
ஒருவழியாய பழனிசாமி எப்படியோ படிச்சிட்டு Engineering college வேற போயிட்டான். என்ன அங்க இங்க பெயிலானதுனால வயசுதான் ஜாஸ்தியாய் போச்சு. அவன எல்லாம் கூட படிக்கிற பசங்களும் "மாமா" கூப்பிட ஆரம்பிச்சதுல ரொம்ப வருத்தம் அவனுக்கு.
அவன் போடுற சட்டையில அயரினிங் கிரீஸ் மடிப்பு அப்படியே இருக்கும். அந்த அளவுக்கு சுத்தமா அயர்ன் செய்வான், அதே மாதிரி தினம் தினம் ஒரு ஷீ போட்டுக்கொண்டு சோக்காதான் வருவான், எப்போது பார்த்தாலும் அப்போதான் மேக்கப் போட்ட மாதிரி இருப்பான். நிறய பசங்க அவன் கூடவே இருப்பானுங்க காலேஜில.
அப்படித்தான் அவங்க அம்ம செத்தபோ, பசங்க வண்டி கட்டிகினு வந்தானுங்க. நம்ம பழனிசாமி பசங்களையும், பொண்டாடியையும் பார்த்து எல்லாம் வாயடைச்சு போயி நின்னானுங்க. கேட்டா, பழனிசாமிக்கு கல்யாணம் ஆனதே அந்த பசங்களுக்கு தெரியாதாம். அட என் பேரே கோயிந்தசாமி, இவனுங்க நமக்கு மேல கோயிந்து போல இருக்குன்னு கோயிந்த சாமி அப்ப நினைச்சுகிட்டார்.
பழ்னிசாமி எப்படியோ பிட்டு கிட்டு அடிச்சி, பேப்பர் எல்லாம் சேஸ் பண்ணி படிச்சு முடிச்சிட்டான்.
அப்புறம் அவன் சென்னைக்கு போனதும் இததெல்லாமும் நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு. பிறந்த மண்ணை விட்டு போவதில்லை என்றிருந்தாலும் தன் மகன் கூப்பிடுவான் அவனுடன் போகலாமென்று நினத்தார். ஆனால் அது நிகழவேயில்லை. 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' இவரு மனச தேத்திக்கிட்டாரு
போஸ்ட்மேன் வந்தான் கடைசில. கோயிந்த சாமியின் கிராப்பை பார்த்து அவனுக்கு ஒரே சிரிப்பு.
இன்ன கிழவா, நம்ம பிதாமகன் விக்ரம் கணக்கா இருக்கு உன் கிராப்பு என்று நக்கல் அடித்தான்.
கோயிந்த சாமிக்கு இப்ப எதுவும் பிடிப்பதில்லை. தன் கிராப்பும், மகன் தீபாவளிக்கு அனுப்பி வைத்த 500 பணமும்.
முகத்தில் ஏமாற்றம் மேகத்தின் நிழல் மண்ணில் படர்வதுபோல தழுவி நின்றது. நீண்டநேரம் திண்ணையிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தார்.
கதை எழுத தூண்டிய சுதர்சன், குழலி, சுரேஷ் க்கு மிக்க நன்றி. உங்கள் கதைகள் வெற்றி அடைய என் வாழ்த்துகள். நீங்க யார் ஜெயித்தாலும் நான் ஜெயித்த மாதிரி தான். :)
Wednesday, August 10, 2005
நண்பனின் குழந்தை..
ஷேன் வார்னேயின் Top Spinner யை Flipper ல் இருந்து எப்படி கண்டு பிடிப்பது, சானியா மிர்சாவின் Second Serve எவ்வளவு Weak யாய் இருக்கிறது, நமீதாவின் இடுப்பு, திரிஷாவின் குளியல் என்று போய் கொண்டு இருந்த பேச்சுக்கள் இப்ப எல்லாம் குழந்தையை பற்றி மட்டும்தான் .
குழந்தை இப்படி செய்தது, அப்படி செய்தது, 5 மாததுக்குள் இவ்வளவு செய்கிறது என்று ..
கடந்த 150 நாட்களில் குழந்தையின் 100 படம் மயிலில் வந்து இருக்கும். இவன் மட்டும் அல்ல, புதிதாய் பெற்றோர் ஆன நிறய பேர்களை நான் பார்த்த வகையில் இப்படிதான்.
எனக்கும் ஒரு குழந்தை பிறந்தால் நானும் இதே போல்தான் இருப்பேனோ என்னவோ . அதுவரை புதியாய பெற்றோர்களான நண்பர்களே, அடிக்கடி உங்களின் குழந்தைகளின் போட்டோக்களை எனக்கு அனுப்பாதீர்கள். வருடத்திற்கு ஒரு படம் போதும்.
எனக்கு சுஷ்மிதா சென்னின் படங்களை சேர்த்து வைக்கவே Hard disk ல் இடம் இல்லை.
(இந்த பதிவை எழுத உதவிய என் வாத்தியார் Jerry Seinfeld க்கு நன்றி.)
Tuesday, August 09, 2005
மாடர்ன் தலைப்புகள்
* All rights are reserved.
* The information herein may not be used as blog titles without proper written permission from the owner.
* All permitted titles must be properly attributed with a link to the originating URL.
வர இருக்கும் தலைப்புகள் ...
1. நாய்க்கும் வாந்தி வரும்
2. பூனை துப்பும் Hairballs
3. வயித்து வலி வராத ஆள் ஏது
4. விக்கலில் வாய்க்கு வந்தவை
5. எச்சில் ஒவியங்கள்
6. முகமூதி என்னும் மூடன்
இப்படி எழுதினதால கூடிய விரைவில் சின்னவன் சிறுநீர் கழிப்பதாக பதிவு வந்தால் , சின்னவன் மாடர்னாக எழுதுவத மற்றவர்களும் ஒத்துகொள்வதாக அறிந்து மகிழ்ச்சியடைவான் இவன்.
ரொம்ப நன்னி எல்லோருக்கும்..
Monday, August 08, 2005
போட்டிகள்
சுஜாதா குற்றப் போட்டி
சுஜாதா 1ம் வகுப்பில் எழுதிய அ ஆ வில் இருந்து இன்று காலை எழுதிய சலவை கணக்கு வரையில் உள்ள எழுத்து, பொருள், கருத்து பிழைகளை தகுந்த ஆதாரத் துடன் காட்டவேண்டும். அதிக பிழைகள் கண்டு பிடிப்பவருக்கு மெக்ஸிகோ நாட்டு சலவைகாரியும் நானும் என்ற வசந்தின் சுயசரிதை பரிசாக வழங்கப்படும்
திருவாசகத்தில் உள்ள தெரு வாசகங்கள்
இளையராஜா எந்த எந்த இடத்தில் முறை எத்தனை முறை அபஸ்வரத்தில் பாடி இருக்கிறார்
உள்ளூரில் இசை அமைத்து இருந்தால் எவ்வளவு காசு மிச்ச படுத்தி இருக்கலாம்
என்று ஆராய்ந்து எழுத வேண்டும். சரியான முறையில் பாடி கேஸட் /சிடி அனுப்பி வைக்க வேண்டும்.
பரிசாக ஞாநியின் பியர் பாட்டலும், சாரு வழக்கமாக அனியும் பேன்ஸி பனியனும் தரப்படும்.
மத நூலகளும் "e" யும்.
அனைத்து மத நூலகலின் ஆங்கில மொழி பெயற்புகளில் "e" இந்த எழுத்து எத்தனை முறை வருகிறது என்று எண்ணி சொல்ல வேண்டும்.
பரிசாக தி.க. வெளியீடுகள் ஒரு வருடத்திற்கு !
Last but not least ...Now. Mother of all competitions. !!!
ரஜினி துதி பாடல்.
4 வரிக்கும் மிகாமல், நாடு, நதி, மொழி ஆகியவற்றை பெண்ணாக உருவகப்படுத்தி எழுத்தப்பட்ட பாடல்களை ரஜினிக்கு ஏற்ற மாதிரி பாடவேண்டும். கன்னடத்தில் எழுதுபவர்களுக்கு கூடுதல் மதிபெண்கள் .
பரிசாக இராமதாஸ் தோட்டத்து மாங்கனிகள், வேண்டும் போது எல்லாம்.
விதிமுறைகள்
-----------------
1. நடுவர்களின் தீர்ப்பே இறுதி ( அவங்க யாரு, தகுதி என்ன என்று எல்லாம் கேட்க கூடாது )
2. போட்டியில் கலந்து கொள்பவர்கள், இந்த பதிவை பற்றி பத்து வரி எழுதி தங்களின் பதிவில் இருந்து இதற்கு லின்க் கொடுக்கவேண்டும் ( அப்படியாவது இங்க கூட்டம் வ ருமான்னு பார்க்கணும். போட்டி நடத்திறதே ஒரு விளம்பரத்துக்காக தானே !!)
========================================================================
எந்த வலைபதிவரையும் எனக்கு தெரியாது, யாரிடம் நான் கடன் வாங்கவில்லை, என் எழுத்துக்கள் காப்பி அடிக்க படவில்லை . ஆகவே எனக்கு யார் மீதும் துவேஷமோ, பொறாமையோ இல்லை !!!
Saturday, August 06, 2005
அனுராதா என்ற ஒரு அம்மா!
ஸ்மிதா பற்றியும், சாந்தி பற்றியும் எழுதி விட்டார்கள். மிச்சம் இருப்பது அனுராதா மட்டும்தான். அவரை பற்றியும் எழுதி 80, 90 களின் கவர்ச்சி Holy trinity பற்றி முழுமை செய்கிறேன்.
அனுராதா 80களில் மிக பிரபலமான ஒரு கவர்ச்சி நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் சதீஷ் என்ற நடன கலைஞரை காதலித்து மணந்து கொண்டு திரை படங்களில் இருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கியும் இருந்தார்.
ஒரு விபத்தில் சதீஷ் மிகவும் காயம் பட்டு , கை, கால் அசைக்க முடியாமல் ஒரு குழந்தை போல ஆகி விட்டார் மணமான கொஞ்ச நாட்களில். கையில் ஒரு பெண் குழந்தை , கூடவே கணவன் குழந்தை போல ! அனுராதாவின் கண்ணீர் பேட்டி ஒரு பிரபல வார இதழில் வெளிவந்ததை படிக்க நேர்ந்த்து .
இன்று அவரின் மகள் பிரபல நடிகை ஆகி விட்டார் அனுராதாவும் சில படங்களில் நடிக்கபோவதாகவும் செய்திகள்.
தனி ஒரு பெண்ணயாய் , குடும்பத்தை முன்னேற்றி கொண்டு வந்த அனுராதாவும் பாராட்டுக்கு உரியவரே.
வாழ்க்கை கவர்ச்சி மட்டும் அல்ல, கடினமும் கூட !!
Friday, August 05, 2005
சவால்
நீங்கள் தெய்வமாய் மதிக்கும் உங்கள் அபிமான நடிகரை பற்றியோ, உங்கள் கட்சி தலைவரை பற்றியோ, உங்கள் நேசமிகு எழுததாளரை பற்றியோ
யாரேனும் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி எழுதினால் உங்கள் இரத்தம் கொதிக்கிறதா? உடனடியாக பதில் சொல்லியே ஆகவே வேண்டும் என்று தோன்றுகிறதா ? அவர்களை பற்றி நான் புத்தகமே எழுதி இருக்கிறேன், மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெஞ்சு வெடிக்கிறதா ?
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்.
விடுங்கள் ஒரு பகிரங்க சவால் !!!
எதிர்த்து நில்லுங்கள். தைரியமாக நேருக்கு நேர் சவால் விடுங்கள்.என்ன சவால் விடுவது என்று உடனடியாக யோசிக்க முடியவில்லையா ?
கவலை வேண்டாம். சில உடனடி சவால்கள் இங்கே !!
குயிலி : LoveMoney என்பது அண்புமணியின் உண்மையான பெயர் இல்லை. இது புரளி.
செல்லுண்டியின் சவால். :ஒரு பகிரங்க சவால்!
இல்லை. அதுதான் உண்மையான பெயர். உங்களால் Birth certificate காட்டமுடியுமா ? காட்டினால் என் பெயரை ராமதாஸ் ராஜ்கி என்று மாற்றி கொள்கிறேன்
---------------------------------------------------------------------------------
முகமீடி : Mask Of Zorro வும் நானும் ஒரே ஆள் இல்லை.
செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! கதை விடாதீர். Catherine Zeta Jones உடன் நீங்கள் ஆடியதை நான் Chineese Maan theatre ல் முதல் வரிசையில் விசில் அடித்து பார்த்தேன். ஆதாரம் காட்டுங்கள், இனி நான் முகத்துக்கு பவுடரே பூச மாட்டேன்
---------------------------------------------------------------------------------
மாங்காமரத்தான்: தினமலர் பரபரப்பு செய்தி. அந்துமணி இராமதாஸை திட்டினார்
செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! அந்துமணியும் இராமதாஸ¤ம் ஒரே ஆள். மாங்காமரத்தான், சினிமா பொன்னையா என்ற பெயரிலும் அவரே தான் எழுதறார். முடிந்தால் அந்துமணி, பொன்னையா, மாங்கா இவர்களின் போட்டோவை ஆதாரம் காட்டுங்கள். உண்மை இல்லை என்றால் இனி நான் மாங்காவே சாப்பிட மாட்டேன்
---------------------------------------------------------------------------------
கமுகா : ஜென் கதைகளுக்கும் சுஷ்மிதா சென் க்கும் எந்த தொடர்ப்பும் இல்லை.
செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! சுத்த பொய். சுஷ்மிதா ஜப்பானில் பிறக்கவே இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள். நிரூபித்தால், சுஷ்மிதாவை பார்த்து ஜொள் விடுததை நிறுத்துகிறேன்.
---------------------------------------------------------------------------------
சங்கட்: சுஜாதா என்ற பெயரில் எழுதுவது ரங்கராஜன்.
செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் !. முடிந்தால் ரங்கராஜனின் கையெழுத்தையும் அவர் மனைவி சுஜாதாவின் கையெழுத்தையும் காட்டுங்கள்.இல்லை என்றால் நான் இனி பெண் பெயரில் மட்டும்தான் எழுதுவேன்
---------------------------------------------------------------------------------
மத பதிவாளர்கள்: எங்கள் மதம் தான் சிறந்தது. My god can kick your god's A$$.
செல்லுண்டியின் சவால் : ஒரு பகிரங்க சவால் ! பாபாதான் சிறந்தவர். அவர்தான் கிரிஷ்ணன். அல்லா, ஜீஸ்ஸ எல்லாருக்கும் பேசவே கற்று கொடுத்தார். பாபா போட்டோவை என்னால் காட்டமுடியும். மற்றவர்களின் போட்டோவை காட்டுங்கள் பார்க்கலாம். காட்டினால் நான் என் பெயரை
சங்கர் சலீம் சைமன் என்று மாற்றி கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------
சரி .
இது எல்லாம் ரொம்ப ஈஸியாய் ஆதாரம் காட்டுவாங்களே என்றால் ...
இதென்ன ஜூஜிபி..
கண்ணா !!
சிலர் சொல்லறதை செய்வாங்க
சிலர் செய்றதைதான் சொல்வாங்க..
நாம சொல்றது மட்டும்தான் செய்றதே கிடையாது..வரட்டா..
.என்று சொல்லிவிட்டு அணங்கே, ஆமணக்கே என்று கோஷ்டி கானம் பாடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
நான் வலைபூக்களுக்கு கொஞ்சம் புதுசு. இப்பதான் இந்த பதிவையும் அதில் பிரபல ரசிகர் விட்டு இருக்கிற சவாலையும் பார்த்தேன்.. அந்த பாதிப்புதான் இது .
எல்லா பெங்களூர் பேப்பரில் முதல் பக்கமாய் வந்த இந்த செய்திக்கா இந்த சவால் ? சம்பந்த பட்டவங்க யாருமே இதற்கு மறுப்பு தெரிவிச்சதா எனக்கு ஞாபகம் இல்லை.
Thursday, August 04, 2005
பரிணாம வளர்ச்சி
என்க்கு மிகவும் பிடித்த கார்ட்டூன்களில் Frank & Ernest ம் ஒன்று. அவற்றில் வந்த பரிணாமம் பற்றிய சில கார்ட்டூன்கள் இங்க
NASA திட்டம்..
NASA to Extend Daylight Using Giant Space Mirrors
Washington DC – Congress approved funding for NASA to build giant space mirrors that will be used to extend daylight by up to six hours a day in the United States.
The project is expected to cost taxpayers close to 216 billion dollars and take twenty years to build. Increased productivity and other benefits will more than compensate for the initial investment. Health care savings from reducing the "winter blahs" will alone pay for half of the project.
"A standardized day will revolutionize worker productivity and safety," said NASA engineer Christian Betterton. "The 'sun' will rise and 'set' at the same time each day all across the country. This will even remove the need for time zones!"
Some scientists fear the increased daylight hours could have devastating effects on the environment. Julio Stelter from the Daylight Institute said, "Daylight savings time already causes huge problems for wildlife, and this would only add to their confusion. We're also worried about the effects of an extended day on global warming."
NASA engineers assured environmentalists that the giant space mirror would only hasten the unavoidable destruction of the planet at the hands of man by a few thousand years, so there wasn't "that much to worry about."
An amendment added to the law would allow NASA to make 24-hour daylight in the event of a national emergency like a war or a primetime sporting event.
Indiana opted out of the plan and will instead be subjected to total darkness for eleven months out of the year.
Wednesday, August 03, 2005
என் குட்டி கதை - 1 ..
"ஏம்மா என் செல்ல குட்டி, ஏன் கன்னு குட்டி கூட இருக்கிற இந்த குட்டியூண்டு போட்டோவை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருப்பாய்.பாரு ஸ்கூலில் இருந்து நம்ம குட்டி குட்டி பசங்க, தலையில குட்டி குட்டி விளையாடி கிட்டே வராங்க "என்றான் குட்டியப்பன்.
மாடு அடி வயிற்றில் முட்டிய ஒரு குட்டி விபத்துக்கு பின், குட்டியாகி போன கணவனுக்கு வைத்தியம் பார்த்து ஊரு விட்டு போய்விட்ட 25 வய்து குட்டி நாட்டு வைத்தியனுக்கு குட்டிபசங்க போட்டோவை அனுப்பி வைக்க வேண்டும் என்று மனதுக்குள் குட்டி குட்டி எண்ணங்கள் பூக்க வெட்கப்பட்டாள் அவள்.
===============================================================
என்னங்க பண்ணறது, இப்ப வர குட்டி கதைகளில் வர குட்டிகள் எல்லாம் கொஞ்சம் கொடூரமாத்தான் இருக்காங்க.
---
தகர மாளிகை
Tuesday, August 02, 2005
தினமும் ஒரு ( சுஷ்மிதா) சென்
நான் தவறாமல் படிக்கும் வலைபதிவுகளில் ஒன்று தினமும் ஒரு ஜென் கதை .அழகாக எழுதிவரும் கங்காவிற்கு பாராட்டுக்கள்.
சரி நாமளும் உருப்படியாக ஏதாவது செய்யாலாம் என்று மூளை கசக்கி யோசித்ததில் நினைவுக்கு வந்தது தான் இது.
நமது ஷகலகக - Useless Analysis எல்லோரின் பேராதரவு பெற்றது அறிந்ததே.. அதன் தொடர்ச்சியாக
தினம் ஒரு ( சுஷ்மிதா) சென்
செய்தி போடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
இன்றைய செய்தி!
"சுஷ்மிதா, ரேனே என்ற பெண் குழந்தையை 18 மாதங்களில் இருந்து தத்து எடுத்து வளர்த்து வருகிறார்."
இவரை வங்காள அணங்கு என்று சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தம் இருக்கிறது.