Tuesday, November 07, 2006
நம்பமுடியவில்லை.
இது உண்மையா ? உண்மையிலே நடந்து விட்டதா ? சாத்தியமா இது ?
ஏன் ?
எப்படி இது நடந்தது ?
இது நடக்கப் போகிறது என்று என் முன்னரே தெரியாமல் போய்விட்டது. ?
கூட்டுக் குடும்பத்திலே குழப்பம் வரவைத்தது யார் ?
குருவிக் கட்டியகூட்டுக்குள்ளே குண்டு வைத்தது யார் ?
இனி நான் என்ன செய்வது ?
எவ்வளவு நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்?
இறைவா !! ஏன் இந்த சோதனை ?
Monday, October 30, 2006
வயசுப் பொண்ணு
மனைவியின் கதறலைக் கேட்டு, படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எறிந்துவிட்டு குரல் வந்த பாத்ரூமை நோக்கி ஓடினார் பரமசிவம்.
"என்ன ஆச்சு? ஏன் இந்த கத்து கத்தறே"
பாத்ரூமில் அவர்களின் செல்ல மகள் வர்ஷா அழுதுக் கொண்டு தலைகுனிந்திருந்தாள். அறை முழுவதும் அவள் எடுத்து இருந்த வாந்தி !
"என்னடி ஆச்சு? ஏன் இந்த வாந்தி. யாரு காரணம் இதுக்கு ? புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்து இருக்கும் இராஜாவா ?"
வர்ஷா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுக் கொண்டு இருந்தாள்.
"பண்றதெல்லாம் பன்ணிட்டு, இப்ப ஏண் வாயைத் தொறக்க மாட்டேங்கறே ".
எல்லாம் நீ கொடுக்கற செல்லம். ஒரு வயசு பொண்ணை கண்ட பசங்க கூட எல்லாம், இவளை சுத்த விட்டு இருக்க. இப்ப பாரு இங்க வந்து நிக்குது. இனி நான் என்ன பண்றது. தெரு ஊரில எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு அவமானம். தலைக் கட்ட முடியுமா ?
என்னங்க பண்றது ? அழுதாள் மனைவி.
வெற என்ன? . டாக்டருக்கு போன் பண்ணு. யாருக்கும் தெரியாம , இத முடிச்சற வேண்டியதுதான்.
"அப்பா. டாக்டரெல்லாம் வேண்டாப்பா ." அழுதாள் வர்ஷா ..
பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்த ஐந்து வயசு பயனோட சேர்ந்து கிட்டு தன் ஒரு வயசு பொண்ணு தீபாவளிக்கு வந்த பலகாரத்தை எல்லாம் தின்று வாந்தி எடுப்பதை பற்றி கவலைப் பட்டுக் கொண்டே டாக்டருக்கு போன் செய்ய தொடங்கினார் பரமசிவம்.
Wednesday, October 25, 2006
சில சில
பொழுது போகாம எழுதறேன் இந்த blog
பனிக்காலம் வீதி முழுவதும் ஒரே fog
புது இடம், கும்மிருட்டு அமாவாசை மாலை
இடம்மாறி வைத்து விட்டேன் இடது காலை
துரத்தி வந்து கடிச்சது தெரு dog
-------------------------------------------------------
கவலை வேண்டாம் எப்போதும் chill
வேலை செய்யணும், காசு சேர்கணும் still
ஊர் சுத்தணும் எனக்கு தேவை மஜா
யாருக்கும் நான் தூக்கக்கூடாது கூஜா
இருக்கவே இருக்கு தாத்தாவின் சொத்து will
--------------------------------------------------
பெளர்ணமி பாண்டியன்
Thursday, September 21, 2006
சில கிஸ்கிஸ்கள்
1. இரசிகர்களிடம் மடாரென்று சரிந்துக் கொண்டு இருக்கும், டேமேஜான இமேஜை சரியாக்க உச்ச நடிகர் பல அதிரடி முடிவுகள் எடுத்து இருக்கிறாராம். முதல் அறிவிப்பு இந்த வாரமே வருதாமே?
2. பிரபல ஹோட்டல் அதிபரோடு அந்த இளம் நடிகை இப்போது சுற்றி வந்தாலும். நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் செய்திகள் வந்தாலும், நடிகையின் லூட்டிகளைப் பார்த்து ஹோட்டல் பார்ட்டி ஜகா வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.
3. அந்த பின்னழகு நடிகை புதுப் படங்களை ஒத்துக் கொள்ளாதாதற்கு காரணம் குவா-குவா தானாம் .
4.ஐந்தெழுத்து இளம் நடிகை சமீபத்தில் தன் ஆதர்ச பாடகரை ஒரு பார்ட்டியில் பார்த்ததும் முத்த மழையில் குளிப்பாட்டினாராம். இதனால் பாடகர் வீட்டில் அடிதடியாம் .
5. அக்கா நடிகையை பார்த்து பொறாமையில் தங்கை நடிகையும் ஏகப்பட்ட ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் வாய்ப்பு அவ்வளவாக வராததில் நொந்துப் போய் இருக்கிறாராம்.
Wednesday, September 20, 2006
இட ஒதுக்கீடும் க்ரீம் லேயரும்
நீண்ட நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று, நண்பர்கள் வலியிறுத்தி வந்தாலும் இடை விடாத அலுவலக பணியினால் இன்றுத்தான் எழுத நேரம் கிடைத்தது.
க்ரீம் லேயர் எப்படி வரையறுப்பது, இட ஒதுக்கீடு எப்படி செய்வது ?
எச்சரிக்கை: இந்த பதிவு, கிட்டத்தட்ட 1000 வலைப்பதிவுகள், 100 புத்தகங்கள், 10 லைப்ரரிக்கு செம்று ஆராயந்து எழுதப்பட்டது. புள்ளி விவரங்களில் எதேனும் தவறு இருந்தால் தெரிவிக்கவும்.
இட ஒதுக்கீடை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இட ஒதுக்கீடு என்று வந்து விட்டால் க்ரீம் லேயர் இல்லாமலா ? இல்லை இட் ஒதுக்கீடுதான் பொய் சொல்லுமா ?
நம் அனைவருக்கும் தேவையான இட ஒதுக்கீடு இங்கே !
Monday, September 11, 2006
என்னைப் போல நீயும்.
ஸிம்ஸ்ன்ஸ் ஐம்பதாவது ( குத்து மதிப்பாத்தான். எவ்வளவு நாளாய் வந்துக் கொண்டு இருக்கிறது ) ஸீஸ்ன ஆரம்பிப்பதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல்.
உங்களைப் போன்ற ஸிம்ஸன்பாத்திரம் வேண்டுமா ? பொத்தான்களை அமுக்குங்கோ
Thursday, September 07, 2006
சில சந்தேகங்கள்
1. சில்லுன்னு காதல் வந்தால் HOT ஆ கல்யாணம் வருமா ?
2. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ரஜினி ஒரு வார்த்தை சொன்னா நூறு வார்த்தை சொன்ன மாதிரி. அப்ப, ரஜினியின் ஒரு படம் ஒரு இலட்சம் வார்த்தைக்கு சமமா ?
3.தமிழ் பெயராக தங்கள் பெயரை மாற்றிக் கொண்டால் நடிக/நடிகையருக்கும் வரி விலக்கு உண்டா ?
4. பூமி உருண்டையாக இருக்கிறது. அப்ப வானத்தின் வடிவம் என்ன ?
5. இலவச டிவி ,இலவச மின்சாரம் . சீரியல் பார்த்து அழ இலவச கர்ச்சீப்பும் கொடுப்பார்களா ?
6. ஏன் தமிழ்நாடு தவிர வேறு எந்த தென்னக மாநிலத்திலும், திராவிட என்ற பெயரில் எந்த கட்சியும் இல்லை ?
7. "இரஜினி ரசிகனுக்கு மூளை இருக்கா, தமிழனுக்கு மூளை இருக்கா" என்பது இருக்கட்டும், முதலில் வட்டத்துக்கு மூலை இருக்கா ?
8. இலவச கொத்தனார் தன் வீட்டையும் இலவசமாகவே கட்டிப்பாரா ?
9.ரேஸ் கார் டிரைவர்கள் எல்லாம் ரேஸிஸ்டா ?
10. ஏன் எல்லா பட்டியல்களும் பத்தோட முடிந்து விடுகிறது ?
அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர் இந்த வார ஸ்டார் பதிவராக சின்னவன் குழுவினரால் அறிவிக்கப்படுவார் !!!
Thursday, August 31, 2006
வேட்டை(விளை)யாடு
தனித் தமிழில் எப்போதும் கதைப்பதாகவும், கவிதை எழுதிக் கொல்லும் அந்த நடிகர் தன் வடமொழிப் பெயரான கமலஸாஸன் என்பதை இவ்வளவு நாள் வரையிலும் தாமரைசிரிப்பாளன் என்று மாற்றிக் கொள்ளாதிலேயே அவரின் ஆரியப் பற்று அப்பட்டமாகிறது.
$10 டிக்கெட்டுக்கும், $20 நொறுக்கித் தீனிக்கும் செலவழிக்காமல், நியாயமாய் இணையத்தில் இந்த படத்தை பார்த்தில் எழுந்த சில கேள்விகள்.
1. அடுத்த கெளதம் படத்தில் ஜோதிகா எப்படிக் கொல்லப்படுவார் ?
2. கெளதம் பட வில்லன்கள் அனைவரும் ஒரே சலூனில்தான் முடி வெட்டிக் கொள்கிறார்களா ?
3. அமெரிக்காப் போகும் போது Econamy class பயணம் செய்யும் கமல், ஜோதிகாவுடன் திரும்ப வரும் போது , ஏன் First Class வருகிறார் ?
4.அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft ?
5. கமல் ஜோடி கமலினி, அப்படியென்றால் ரஜினியின் அடுத்த ஜோடி ரஜினியினி ?
6. கை, மார்பு என்று குத்தாமல், முதுகில் இளமாறன் , பச்சைக் குத்தியிருப்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா ?
7. Seriously, shit இந்த இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது ?
8. மனைவியைக் கொல்லும் வில்லனை, போலிஸ்கார கதாநாயகன் இதுவரை எத்துனைப் படத்தில் பழிவாங்கி இருப்பான்?
பினா குனா 1:
முதல் பத்தி , விரைவில் வலைப்பூவில் இந்தப் படத்தை பற்றி எழுதப் படப் போகும் விமர்சனம் என்று, துப்பறியும் பாம்பு குழுவினரின் ஆறாவது உறுப்பினர் , சிலுக்குவார்ப் பட்டி சின்னக் கிழவனார், எமக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
பினா குனா 2:
இந்தப் பதிவுக்கு மட்டும் கலர் பென்சில் இலவசமாய் அளித்த குசும்பனாருக்கு நன்றிகள்.
Wednesday, April 05, 2006
கவிதை, Jessica Alba, Playboy
வரதட்சணை கொடுத்து
மாப்பிள்ளை வாங்கினேன்.
மண் எண்ணெய் அடுப்பு
இலவசமாய் கொடுத்தார்
மாமியார்.
----------------------------------------
வெண்பா வடிக்க அன்பா(ய்)
அழைக்கும் மேஸ்திரி !
வம்பா(ய்) நிமிரா நாய் வாலுக்கு
போடலாமோ இஸ்திரி ...
====================================================================================
ஜெஸிக்கா இரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு கோர்ட்டுக்குப் போகாமலேயே முடிந்து விட்டது.
மேலதிக விவரங்களுக்கு
Monday, April 03, 2006
7-27-2007
உங்கள் அபிமான திரை அரங்குகளில் ...
பார்க்கத் தவறாதீர்கள், பார்த்தும் மறந்து விடாதீர்கள்.
அகில உலக தமிழ் வலைப்பூக்களில் முதன்முறையாக...
முன்னோட்டம்..
(click on the image for the video ! )
இந்த வார கலெக்ஷ்னில Ice age, Stone Age ஜெயித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ??
Tuesday, March 28, 2006
காதல் !!!
காதல் ஒரு வழி
பாதை பயணமாம்
பாவம் நான்
என் கார் இருப்பதோ
மெக்கானிக் கடையில்.
பிரேக் மாற்ற ஆயிரம் ரூபாயாம்
ஹர்ரன் ஒலி அதிகரிக்க
பத்து ரூபாய்தான் ஆனது .
என்னவளே !!
நீ சொர்கத்தில் பிறந்தவளாய்
இருக்கலாம் ! ஆனால்
நிச்சயம் நரகத்தில்தான்
வளர்க்கப்பட்டு இருக்கிறாய்
ஏனடி !
என்னை வதைக்கிறாய்.
நான் மீண்டும்
சிறுவனாக ஆகக் கூடாதா ??
சிறுவயதில் உடைந்த எலும்புகள்
சீக்கிரம் ஆறிவிட்டன.
உன்னால் இன்று உடைந்த
இதயம் எப்போது ஆறும் ??
Saturday, March 25, 2006
தேர்தல் ஜூரம்
தோற்றம்:
பமக வின் நிறுவனர், தலைவர், இளைஞர், வலைபூ கலைஞர் முகமூடியார். இக்கட்சி தன் சொந்த நலனுக்காக ஆரம்பிக்க ப்பட்டது என்றாலும், மிக விரைவிலேயே, உலகத் தமிழர்களின் மத்தியில் பரந்த வரவேற்பை பெற்றது. வளைகுடா நாடுகள் முதல், இரஷ்யா வரையிலும், அமெரிக்க நாடுகள் முதல் நியூஸி வரையிலும் இக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு அரிய ஒரு எடுத்துக்காட்டு.
இது ஒரு சாதிக் கட்சி என்று அடிக்கடி எதிர்கட்சிகள் ஏளனம் செய்துக் கொண்டுத்தான் வருகிறார்கள். சொல்லை விடச் செயல் பெரிது என்று கட்சியும் அதன் தொண்டர்களும் அதற்கெல்லாம் செவிக் கொடுக்காமல் பணிச் அயராமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவ்வப்போது கட்சிப் பிளவு,பொது, இணை, துணை செயலாளரின் ஆவேச அறிவிப்புகள் இருந்தாலும், கட்சியை பிளவுப்படாமல் வைத்து வழி நடாத்திவருகிறார் முகமூடியார். இன்று இருக்கும் கட்சிகளில் உட்கட்சிப் பூசல் அதிகம் (வெளிவராமல் இருக்கும் ) இல்லாத கட்சி பமக என்றால் அது மிகையாகாது.
பமக வின் தேர்தல் கூட்டணிப் பற்றி அதன் அகில உலக இணைத் துணைப் பொது செயலாளர் அளித்த அறிக்கையை நாம் கொஞ்சம் கவனித்து வாசிக்க வேண்டும். இது ஒருப் புதிய கட்சியாக இருந்தாலும், தங்களின் அரசியல் அறிவையும், சாதுரியத்தையும், தங்களின் அறிக்கைகளும், பதிவுகளும். மூலமாக தெளிவாக விளக்கி வருகிறார்கள் . அது இரசிக்கும் வண்ணமுமாக வெளிப்படுத்துவதின் மூலம் மக்களை எளிதில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.
இது ஒரு வெற்றுப் பேப்பர் கட்சி என்று சொன்னவர்களுக்கு, மூன்று வார்த்தைகளுக்கு 350க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்கள் வரவைத்து தங்களின் பலத்தையும் காட்டி இருக்கிறார்கள் .
பமக தலைவர் Indiblog தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையுடன் வென்றதும் நினைவில் கொள்ள வேண்டும் இந்த தருணத்தில்.
பமக, பச்சோந்தி மக்கள் கட்சியா, பலம் வாய்ந்த மக்கள் காட்சியா
Wednesday, March 22, 2006
கல் எறிந்தவர்கள் - Uno
என்று சுயசரிதை எழுதுகிறார் ஒருவர் !
இந்த குளத்தில் காதல் எறிந்தவர்கள்
என்று கவிதை எழுதுகிறார் மற்றவர்
என் மீதே கல் எறிந்தவர்களை
பற்றி நான்
என்ன எழுத ?
என் கவிதைகளைப் படிப்பதுதான்
அவர்களுக்கும் தண்டனை ?
*******************************************************************
கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...
என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !
*******************************************************************
எருதுக்கு தெரியுமா
காக்கையின் கால் வலி ??
------------------
பெளர்ணமி பாண்டியன்
Snakes on a plane- ஒரு முன்னோட்டம்
இந்த "திகில்" படத்தின் முன்னோட்டத்தை பார்த்து அசந்துத்தான் போய் விட்டேன்.
வெறும் விமானத்தை வைத்து பயம காட்டியாகி விட்டது, பாம்பை மட்டும் அனகோன்டா அது இட்து என்று பயம் காண்பித்தாகி விட்டது. இரண்டையும் சேர்த்து பயம் காட்ட வேண்டும் என்று யோசித்த கதாசிரியருக்கும். அதை படமாக்க முன்வந்த New line Cinema ஸ்டியோக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதில் நடிக்கும் Samuel Jackson க்கு பாம்பை விட நிறைய பணம் கொடுத்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா ?
1. விமானத்தில் பாம்புகள் இருக்கின்றன
2. Samuel Jackson விமானத்தில் இருக்கிறார்
3. Samuel Jackson பாம்புகளை அடித்து நொறுக்குகிறார்.
4.சுபம்.
படம் அபாராமாக ஓடி அடுத்த வருட ஆஸ்கர்களை அள்ளி குவிக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை
ஆமா, இவங்க ஏதாவது நம்ம இராமநாராயணன் படத்தை பார்த்து காப்பி அடித்து இருப்பார்களோ ?
trailer இங்கே !!!!
Sunday, March 19, 2006
இது சரக்கு வாரம்....
============================
மதுவை நம்பாதே
மது உடம்புக்கும் , பர்ஸுக்கும்
நல்லதல்ல !
மதுவினால் கெட்டவர்கள், அழிந்தவர்கள்
அநேகம் ...
என்றான் நண்பன் ...
அப்ப கவலையை மறக்க
யாரைத்தான் காதலிப்பது ?
அவளின் தங்கை எவ்வளவோ பரவாயில்லை
அவள் மிக சாது என்றான் !!!
--------------------------------------------------------
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணை இருப்பு.
இதிலாவது இந்த வான்கோழி மயிலாகட்டுமே
---------------------------------------------------------
நான் ஒட்டகங்களை
நம்புவதில்லை !!
பல நாள் குடிக்காமல்
இருக்குமாமே !!!!
-------------------------------------------------------
குடித்தால் கணித அறிவு வளரும்.
நன்றாக குடித்து இருக்கும்
நண்பன் சொன்னான் ...
நம்ப மாட்டேன் என்றேன் நான்
கடல் கன்னிகள் எந்த ஆடை அணிவார்கள் ?
தெரியாமல் முழித்தேன்.
ALGEBRA என்றான் அந்த கணித மேதை !
----------------------------------------
கவிஞர் பெளர்ணமி பாண்டியன்
Friday, March 17, 2006
Friday, February 03, 2006
சொல்ல மறந்த சில தலைப்புகள்
1. (கதவை) திறந்துக் கொண்டு வா !
2. பட்டையை கிளப்பும் பதிவர்கள்
3. தாஜ்மகாலை கட்டிய கொத்தனார்
4. ரீபஸ், கோயபஸ், பினாமிபஸ்
5. மேக்ஸி(ம்)மா மினிமா சினிமா
6. திண்ணை மரத்தடி எதில் தூங்குவது நல்லது
7. குசும்பன்,முகமூடி பதிவுகள்- எளிதில் புரிய 20 வழிகள்
8. ஆழ்குத்தெழுத்து சித்தர் பாடல்கள்
9.அடிப்பொடிகளின் சாட்டிங் அவசியமா ?
10.பின்னூட்டம் பெறாமல் இருப்பது எப்படி
ஒரு கடிதம்
இவ்வளவு நாட்களாய் வெறும் வலைப்பதிவின் மூலம் உன்னை சந்தித்து வந்த நான், இதோ, இ-கலப்பைக் கொண்டு நட்பு வயலில் நாற்று நட இக்கடிதம் மூலம் உன்னை தேடி வருகிறேன்.
உனக்குத்தான் வாழ்வில் எத்துணை பிரச்சனைகள், இன்னல்கள் . அலுவலகம்/கல்லூரி செல்ல வேண்டும், வேலைப் பார்க்க வேண்டும், குடும்பத்தாரோடு அழுமூஞ்சி சீரியல்கள் பார்க்க வேண்டும், இவ்வளவு இடையூறுகளுக்கு இடையிலேயும், உனக்காக அனுமதிக்கப்பட்ட இந்த மனித வாழ்வின் சில நொடித்துளிகளையேனும், எனக்கா ஒதுக்கி, இந்த பக்கங்களை தவறாமல் படித்து வரும் உன்னை, நான் சாப்பிடும் french fries ல் , உருளைக்கிழங்கு இருக்கும் வரை மறக்க மாட்டேன்
ஏன் இந்த திடீர் கடிதம் என நீ கேட்கக் கூடும். சொல்கிறேன் கேள்...
நான் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவன் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து பால்கனியில் இருந்து பார்த்தவன். உன்னை சந்திக்க ஆரம்பித்தப்பின் தான், வாழ்க்கையை அருகில் இருந்து அனுபவப்பானும் இங்கு இருக்கிறான் என்று அறிந்துக் கொண்டேன். வாழ்க்¨யை மட்டும் நீ அனுபவித்தால் போதுமா ?
காதல், ஒருத்தலைக் காதல், குடும்பம், மனைவி, மழலைப் பட்டாளங்கள், friends போன்றவற்றையும் துள்ளுகின்ற வயசில் இருக்கும் boys நாம் கற்றுக் கொள்வது எப்போது ?
எவ்வளவு நாள்த்தான் தமிழ் நமக்கு pizza கொடுக்கும் , நாம் தமிழ்குக்கு ஒரு பர்கரேனும் தர வேண்டாமா ?
எவ்வளவு நாள் நம்மை நையாண்டி மேளம் என்று புறம் தள்ளுவார்கள், சிவமணியின் ட் ரம்ஸ் போல தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டாமா ?
புழுக்களாய் நெளிவது எவ்வளவு காலம், பட்டாம் பூச்சிகளாய் சிறகடிக்க வேண்டாமா ?
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுத்தான், ஒத்த கருத்துடைய நம் நண்பர்கள் அனைவரையும் ஒரு கலந்துரையாடலுக்கு அடுத்த வாரம் அழைத்து உள்ளேன். உன் பிற கடமைகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தடுக்கும் என்பது உன் கவலை தோய்ந்த முகத்தை பார்த்தே என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. கவலை வேண்டாம்.
இந்த கலந்துரையாடலை நடாத்துவதற்கும் கொளுத்தும் வெயில் வந்தவர்களை தாகச்சாந்தி செய்வதற்கும் , உன்னால் முடிந்த $25 மட்டும் எனக்கு அனுப்பி வைத்து விடு. உன் சார்பில் நான் கலந்துக்கொள்கிறேன் இந்த கருத்தரங்கில்.
ஏதோ என்னால் ஆன சிறு உதவி உனக்கு. பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்.
நீ பணம் அனுப்பும் கவரின் வழிமேல் விழி வைத்து
உன் அன்பு
ஹிம்ஸன்.
Thursday, February 02, 2006
வேகஸ் போக இன்னொரு reason
அகில உலக வாலிப வயோதிக அன்பர்களே, உங்கள் நாளேட்டுகளில் நாளைய தினத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைத்தான் Hooters தங்களின் casino வை வேகஸாலில் திறக்கிறார்கள். வேகஸ் போவதிற்கு இதை விட வேற ஏதாவது சலுகை வேண்டுமா என்ன.
அப்படியே அம்மணிக்களின் வலைப்பூயும் பார்த்து விடுங்கள், முக்கியமாக Deep thoughts பகுதியை !
எங்கே கிளம்பிட்டீங்க ? hootersair சீட் ரிசர்வ் பண்ணவா ?
Tuesday, January 31, 2006
Monday, January 30, 2006
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
வா அண்ணாத்தே, வந்து குந்து. இன்னிக்கு நடந்த கதய கேட்டுகினியா நீயி
காலங்காத்தால, அஞ்சு மணிக்க்கெல்லாம், நம்ம பய வண்டியை கட்டினிக்கு வியாபாரம் பாக்க கிளம்பிகினம்பா. மார்கழி மாசமா, ஒரே குளுரு. பனியா பொய்து. ராவுல கஞ்சா அடிக்க வசதியாக கீனும்னு நம்ம பேட்டை பசங்ஹ தெரு ட்யூப் லைட்ட எல்லாம் ஒடிச்சி போட்டுனு கிறானுகுகளே, கண்ணே தெரியலப்பா.
ராத்திரி பொண்டாடி மேல கைய போட்ட
"ஏய்யா பேமானி, உன்க்கு வேற வேலை எதுவும் கிடியாதா" னு
கண்ட மேனிக்கு திட்டிட்டாப்பா. நானும் அதே சோகத்தில வண்டியை உருட்டிகினு போனாம்பா.
மார்கழி மாசம் ஆச்சா, நம்ம பேட்டை நாயுங்களெல்லாம், மஜாவா சோடியாய் சுத்திகினுகிறதா நான் பாக்காமா, ஒரு சோடி மேல லைட்டா டேஷ் உட்டுகினிம்பா.சும்மா வள் வள்னு கத்தினு என்ன ஒரக் கண்ணால பாத்திகினு நாய்ங்க ஓடிப் போச்சுப்பா.நானும் சரி, உடு, நாய்க்களுக்கு நம்மல மாத்ரி வேற வேலை எதுவும் இல்லனு வியாபாரம் பார்க்க போனேம்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
சும்ம சாயங்கலாம், நம்ம தமாசு தங்கவேலுவு, நம்ம இரவுடி கபாலியும் அண்ணாத்தே அண்ணாத்தே உனக்கு விச்யம் தெரியுமான்னு கூவிக்கினே பசாருக்கு நம்ம கடையாண்ட வந்தானுங்க.
"இன்னடா, பேமானிகங்களா இன்னாடா விசயம்னு" நானும் கேட்டுகினேம்பா
"அண்ணாத்தே, அண்ணாத்தே, நம்ம தங்கச்சிய நாய் கட்சிச்சிடுப்பா" னானுக்க
"அட பரதேசிங்களா, நம்ம தங்கச்சிதான் முழு ஸ¥ஸ் ஆச்சே, அதுபாட்டுக்கு எங்கனா கக்கூஸாண்டா, வாந்திதானாடா எப்ப பார்த்தாலும் எடுத்துனு இருக்கும் அத எப்பட்றா நாய் கடிச்சிது"
ன்னு நானும் கேட்டுகினேம்பா !
"அண்ணாத்தே, வயக்கம்போல வாந்தி எடுக்கசொல்லறப்பதான் நாய் கடிச்சிசு" ன்னானுங்கப்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
அப்பால, நானும், கபாலி, தஙகவேலு எல்லாம் கையில குச்சி எடுத்துனினு அந்த நாய் அடிக்க கிளம்பினாம்பா.
எல்லா இடத்திலும் தேடி போய்., கடைசியா, குப்பத்தொட்டிகிட்ட கண்டுபிடிச்சம்பா.,
"அண்ணாத்தே அண்ணாத்தே , அந்த நாய்தான் நம்ம தங்கச்சிய கடிச்சிது " ன்னு பசங்க அடையாளம் காட்டினானுங்கப்பா.
அது எந்த நாய்டானு பார்த்தா, காலையிலே நான் வண்டியில டேஷ் உட்டேன் பாருப்பா, அதே நாய்தான்பா.மவனே என்னையாடா காலையில ஜல்சா பண்றசொல்ல இடிச்சே , இப்ப உன் தஙக்சசி கதிய பார்த்தியா ந்னு நக்கலா போஸ் குடுக்குதுப்பா.
சரின்னு நானும், கபாலியும் தங்கவேலும் நாலு அடிப்போட்டு தொர்த்திஉட்டேன்பா.வூட்டாண்டா வந்து பார்த்தா, தங்கச்சிக்கு வெறி புடிச்சி போச்சு, தொப்புள சுத்தி 48 ஊசி போட்டனும்னு டாக்கரு சொல்லிட்டாருப்பா.
என் தங்கச்சி கதைய பார்த்தியா நைனா. நான் என்னத்த பண்ணுவேன். இனிமே தண்ணியே அவ குடிக்ககூடாதாம்பா. அதான் நான் தண்ணிப் போட்டு பொலம்பினுகிறேன்.
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
Sunday, January 29, 2006
காப்பி - Copy
காப்பி எதற்காக?
கையினில் பேனாவுடன் மை இருக்கையில்
காப்பி எதற்காக ?
சொந்த கம்பன் வள்ளுவ தந்த
தெம்பு மிக்க தென்னாட்டில்
வெந்த காப்பி எதற்காக ?
ஆட்பட்டாய் இண்டெர்நெட்டுக்கே
அடிமை வியந்தாய் ஹாலிவுட் படங்களுக்கே
பூப்போட்ட பிரிட்டினி, மடோனா பல்லிளித்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?
திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
உள்ளூர் பிகர்கள் இருக்க சிலிக்கான் பெற்ற
அழகே இல்லாத வெளிநாட்டு பிகர்
படங்களின் காப்பி எதற்காக ?
Saturday, January 28, 2006
இது பாட்டு வாரம்
வருது வருது , அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது.
---------------------------------------------------------
என் கிட்டே மோதாதே,
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே.
நான் சூராதி சூரனடா
---------------------------------------------------------
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
=========================================================
இந்த பதிவுக்கு எதிர்பார்க்கப்படும்/அனுமதிக்கப்படும் பின்னூட்டங்கள்
- அண்ணே. உங்க கோபம் புரியுது. ஆனா எதுக்கு இந்த நேரதில் இந்த பாட்டுக்கள் ?
- சூப்பர் பாடல்கள். புரிய வேண்டிய பூரான்களுக்குப் புரிந்தால் சரி !
- சும்மா நச் ந்னு இருக்கு !
- இந்த மாதிரி பாடல்கள் தான் நான் தேடிக்கிட்டு இருக்கிறேன். லிங்க் கிடைக்குமா ?
Friday, January 27, 2006
நன்றி ! நன்றி!! நன்றி !!
Wednesday, January 25, 2006
என் disclaimer !!
- Persons browsing this site do so at their own risk
- We make no representation that chinnavan.blogspot.com is suitable to be read by any person or that it does not contain material that may be disturbing, offensive or morally repugnant to some people.
- Some street and post office addresses, telephone numbers, facsimile numbers, email addresses and URLs in this site are also fictitious and if identical real addresses, numbers or URLs come into existence before or after publication of chinnavan.blogspot.com then it is entirely coincidental and Chinnavan, his publisher, his Internet provider, his agents, his assigns and his successors bear no responsibility for any confusion, damages or anything else arising from the coincidental naming.
- We make no representation that any material in this page or anywhere else in this site, is true and accurate.
- Should you or any viewer of this website, or of any of the pages herein, respond with information, feedback, data, questions, comments, suggestions or the like regarding the content of anything you see , any such response, unless otherwise agreed upon in writing, shall be deemed not to be confidential and Chinnavan shall be free to reproduce, use, disclose and distribute the response to others without limitation. You agree that Chinnavan shall be free to use any ideas, concepts or techniques contained in your response for any purpose whatsoever including, but not limited to, developing, manufacturing and marketing products incorporating such ideas, concepts or techniques.
- The fine print...
- This "fine print" part of my disclaimer is for the fun of it and should be taken too seriously. This website does not necessarily reflect the thoughts or opinions of either my ISP, my company, my friends, my wife, or my dog; but don't quote me on that; copyright and all rights reserved; you may distribute this article freely but you may not make a profit from it (no matter how hard you try!);
- terms are subject to change without notice; illustrations are slightly enlarged to show detail and are closer than you think; any resemblance to actual persons, living or dead, is unintentional and purely coincidental except for Mugamoodi and Ramanathan;
- do not remove this disclaimer under penalty of law; hand wash only, tumble dry on low heat; do not bend, fold, mutilate, or spindle; your mileage may vary; no substitutions allowed; for a limited time only; this website is void where prohibited, taxed, or otherwise restricted; caveat emptor; website is provided "as is" without any warranties; reader assumes full responsibility; this is an equal opportunity website; no shoes, no shirt, no service; quantities are limited while supplies last; if any defects are discovered, do not attempt to read them yourself, but return to an authorized service center; read at your own risk; parental discretion advised,
- keep away from sunlight; limit one-per-family please; no money down; no purchase necessary; you need not be present to win; some assembly required; batteries not included; instructions are included; action figures sold separately; no preservatives added; slippery when wet; safety goggles may be required during use; sealed for your protection, do not read if safety seal is broken; call before you dig; not liable for damages arising from use or misuse; for external use only; if rash, irritation, redness, or swelling develops, discontinue reading; read only with proper ventilation; avoid extreme temperatures and store in a cool dry place; keep away from open flames; avoid contact with eyes and skin and avoid inhaling fumes;
- do not puncture, incinerate, or store above 120 degrees Fahrenheit; do not place near a flammable or magnetic source; smoking this article could be hazardous to your health; the best safeguard is abstinence, no salt, MSG, artificial color or flavoring added; if ingested, do not induce vomiting, if symptoms persist, consult a physician; possible penalties for early withdrawal; offer valid only at participating sites; allow four to six weeks for delivery; disclaimer does not cover misuse, accident, lightning, flood, tornado, tsunami, volcanic eruption, earthquake, hurricanes, and other Acts of Nature, neglect, damage from improper reading, incorrect line voltage, improper or unauthorized reading, broken antenna or marred cabinet, missing or altered serial numbers,
- electromagnetic radiation from nuclear blasts, sonic boom vibrations, customer adjustments that are not covered in this list, and incidents owing to an airplane crash, ship sinking or taking on water, motor vehicle crashing, dropping the item, falling rocks, leaky roof, broken glass, mud slides, forest fire, or projectile (which can include, but not be limited to, arrows, bullets, shot, BB's, shrapnel, lasers, napalm, torpedoes, or emissions of X-rays, Alpha, Beta and Gamma rays, knives, stones, etc.); other restrictions may apply !
- Official end of bla, bla, bla.
Tuesday, January 24, 2006
ஹோமர் குமாரனுக்கு ஒரு வாழ்த்து
இராகவன் இதுக்கும் நீங்களே பொழிப்புரை எழுதிடுங்க !
அப்படியே ஸ்ரீதேவிப் பாட்டியையும் கேட்டேன் என்று சொல்லுங்க. ( அவிங்கதானே மயிலு ! )
ஸ்பிரிங்பீல்ட் என்னும்
கிராமமில்லா நகரமாம்
ஹோமர் செய்த தவறினால்
நானன்று தோன்றினேன்
பாடு பார்ட் என்று
நல்ல பெயர்தனை அருளினான் !
அகவையோ இருநான்கு ,
ஓராறு, ஒரொன்று அழகு
தமக்கையருடன் புள்ளி சேர்
கோலம் போல வயலும் வாழ்வாம் !
மகிழ்ச்சியுடனே பணிப்பல புரிந்து
தண்டனை வாங்குதலாம்
பள்ளி என்னும் அலங்கோலத்திலே !
வாழ்வதோ அமெரிக்கா
தோன்றுவதோ உலக
சின்னத்திரை எங்கும்
வாழ்க Fox, வாழ்க Matt
நல்வாழ்வு பெற நானும் வந்தேன் !
ஆஸ்கார் ரேஸ் - படம் 1
நம்ம இரேசு ஆஸ்கார் படங்களைப் பத்தி ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதற்குப் பிறகுத்தான் புரிந்தது இங்கிலீஸ் படங்கள் நிறைய நான் பார்க்காமல் விட்டு இருக்கிறது. இன்னும் 2/3 வாரத்தில் ஆஸ்கார் வந்துவிடும், ஹாலிவுட் இருந்துக்கிட்டு நானே படம் பார்க்காமல் இருந்தால் எப்படி. இதோ இந்த வார இறுதியில் பார்த்த ஆஸ்கார் வாங்க தகுதியுள்ள இன்கிலீஷ் ப்பட விமர்சனம்..
கிராமத்தில் தொடங்கிறது கதை. குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகத்தை பார்த்து கண்ணீர் வடித்து அழுகிறாள் கதாநாயகி. வழக்கம் போல, பெண்கள் அடைக்கி ஆள நினைக்கிற அப்பா, உள்ளூர் ரவுடி என டைரக்டர் ஒரு கிராமத்தை நம் கண் முன்னால் நிறுத்துகிறார். சோகத்திலும் காதல் மலர்வது இயற்கைத்தானே. நாயகிக்கும் காதல் வருகிறது ஆனால் நாயகனோடு அல்ல. நாயகனும் காதலர்களை ஒன்று சேர்கிறார். பின்னர் கதை கிராமத்தில் இருந்து நகரத்துக்கு மாறுகிறது.
டைரக்டர் இங்கே இன்னொரு நாயகியை அறிமுகப்படுத்துகிறார். கதைக்கு ஒரு நாயகி, சதைக்கு ஒரு நாயகி என்ற stereotype ஆகவே வருது ஒரு பெரிய குறை. இருந்த்தாலும் நடிக்கும் நடிகர்கள் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பதால் குறைகள் அவ்வளவாகத் தெரியவில்லை.
நாயகன் மற்ற நடிகர்களை கிண்டலடித்து தன் வழக்கமான பாணியை இதிலும் தொடர்ந்து இருக்கிறார்,. இந்த இங்கிலீஷ் படத்துக்கு விருது கிடைக்குமா என்பதே நல்ல சினிமா விரும்பிகளின் ஆவல்.
Film : Englishkaran (2005)
Director:Shakthi Chidambaram
Cast: Sathyaraj, Madhumitha, Namitha, Vadivelu, Aishwarya, Thandapani
Music: Deva
Cinematography: Suresh Devan
Monday, January 23, 2006
கவிதை(க்)கள்
ஒற்று மிகுமா, மிகாதா
கவலை சிலருக்கு !
பற்று இருக்குமா பற்றவனிடம்
கவலை சிலருக்கு !
88, 127 தேர்தல்
கோபம சிலருக்கு !
சேற்று வீசலாம் யார் மீது
யோசனை சிலருக்கு !
நேற்றைய பின்னூட்டம்இன்று எங்கே
ஏக்கம் சிலருக்கு !
கற்றுக் கொள்லாம் பலவற்றை
கவலை சிலருக்கு !
தோற்று போகலாம் பாகிஸ்தான்
ஆசை பலருக்கு !
சற்று பொறுங்கள், சாப்பாட்டு நேரம்
பசி கவலை எனக்கு !
------------------------------------------------------------------
கேரட் சாப்பிட்டாலும்
காதலுக்கு கண் தெரிவதில்லை !
எலாஸ்டிக் போட்டாலும்
நாய் வால் நிமிர்வதில்லை !!
காம்பவுண்ட் சுவர் கட்டினாலும்
காற்றுக்கு வேலி போட முடிவதில்லை!
ஏரோப்பிளேனில் பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாவதில்லை !
பிரபு தேவாவிடம் நடனம் கற்றாலும்
வான்கோழி மயிலாவதில்லை !!
ஓ ....
மானிடா.....
உனக்கு எதுக்கு
வேண்டாத வேலை !!!
===========================
கவிஞர் பவுர்ணமி பாண்டியன் !
சில கேள்விகள்
1.பதிவுகள் பின்னூட்டம் சைஸில் இருக்கு என்று கேட்கிறார்களே, சிலர் போடும் பின்னூட்டங்கள் பதிவு சைஸ¤க்கு இருக்கே ? அதை ஏன் யாரும் கேட்கறது இல்லை ?
2. ஐந்து பெளலர் டீமில் சேர்த்தா , எதிர் அணியை சீக்கிரம் அவுட் ஆக்கலாம்னா, அப்புறம் அவங்க எப்படி 590 ரன் அடிக்கிறாங்க ?
3. கேபிள் டீவியை எல்லாம அரசாங்கமே எடுத்துக்கிச்சுன்னா, எதிர்கட்சி செய்தித்தாள்களை என்னப் பண்றது ?
4.சிவாஜியா ரஜினி நடிக்கிறாரு, ரஜினியா சிவாஜி எப்பயாச்சும் நடிச்சு இருக்காரா ?
5. 88 proxy ip address தயாரிக்கிற script யாருக்கிட்ட இருக்கு ?
6. இர்பான் பதான் பெளலரா, பேட்ஸ்மனா ?
Sunday, January 22, 2006
கேர்ள்ப்ரண்ட் படங்கள்
( சபை நாகரிகம் கருதி நண்பரது பெயரை வெளியில் சொல்ல வில்லை ).
என்ன படத்தை போட்டு விடலாமா ?
Saturday, January 21, 2006
கொத்தனார் போட்டி -1
விடை சொல்லுங்க !!
- மலர்தடியால் (மரத்தடி இல்லை ) வந்த சுனாமி ( 5)
- முந்தானை மூடிச்சை கடியால் அவிழ் (4)
- முருகனின் அப்பா கால் இல்லாமல் புண்ணியம் தேடி போகும் ஊர் (4)
Friday, January 20, 2006
தாம்பராஸ், சண்டைக்கோழி
நாட்டில பெரிசுங்க எல்லாம் லேட்டஸ்டா எந்த விஷயத்துக்காக சண்டை போட்டுக்கினுகிறாங்கன்னு நம்ம முகமிலிக்கிட்ட கேட்டா, அவரு வந்து இந்த தாம்ப்ராஸ¤ம், சண்டைக்கோழியும் தான் எல்லார் மண்டையும் போட்டு உருட்ட்து ந்ன்னு சொன்னாரு. கிட்டத்தட்ட எல்லாரும் இந்த ரெண்டு விஷயத்தை பத்தியும் கருத்து சொல்லிட்டாங்க, நீ இன்னும் சொல்லலியான்னாரு.
சரி. நானும் இந்த ரெண்டைப் பத்தியும் ஒரு பதிவைப் போடறேன்.
தாம்பராஸ் :
ஏற்கனவே ரொம்ப முன்னேறித்தானே இருக்கு , இன்னும் என்ன முன்னேற்றம் ந்னு சிலப் பேர் சொல்லறாங்க. முன்னேற்றம் இல்லைனா எப்படினு மற்ற சில பேர் சொல்லறாங்க. இது ரொம்ப காமெடின்னு இன்னும் சிலப் பேர் சொல்லறாங்க. என் கருத்து என்னனா, இவங்க இப்ப செய்றது நல்ல pizza த்தான். நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன் நான் சொல்லறதை நம்பவில்லை என்றால் .
சண்டைக்கோழி: சண்டைக்கோழி சொன்ன உடனே எனக்கு Seinfeld ன் Little Jerry தான் நியாபகத்துக்கு வருது. நம்ம கிராமர் வீட்டிலேயே முட்டை சாப்பிடால்முன்னு ஒரு கோழி வாங்கினு வருவாரு. வந்தப் பொறகுத்தான் தெரியும் அது சேவல்னு. அதுக்கு little Jerry ன்னு பேர வச்சி, சண்டைக்கோழியாய் train பண்ணுவாங்க. நல்லத் தாமஷா இருக்கும்.
நம்ம கருத்து என்னனா, என்னத்தான் Cripsy Chicken Sandwich நல்லா ருசியாய் இருந்தாலும் கோழிச்சண்டை எல்லாம் பார்க்க கஷ்டமாய் இருக்கு சில சமயம் காமெடியாவும் இருக்கு. சண்டையை விட கூடி நிக்கிற கூட்டம் போடற சண்டை இன்னும் நல்லா இருக்கு..
நடக்கட்டும் நடக்கட்டும்.
Monday, January 16, 2006
தேர்தலும் சில !@#$
இப்ப எல்லாம் தேர்தல் என்றாலே கலவரம்தான் போலும். Florida மக்களில் இருந்து ஓட்டு போடும் மெஷினில் வேற கட்சி பொத்தானை அமுக்கினா ஷாக் அடிக்கும் என்று பயமுறுத்தும் நம்ம அரசியல்வாதிகளும் வரை. அதற்காகவே இந்த பயனர் கையேடு .
(வலைப்பூ ) கலைஞர், தமிழ் ,டி தாங்கி அண்ணன் மாஸ்காரும் இப்படியா எல¦க்ஷனின் செயித்தாரு என்று யாருப்ப்பா அங்கே கேட்கிறது ?