Friday, February 03, 2006

ஒரு கடிதம்

இரத்ததின் இரத்தமான, சொத்தில் பங்குக் கேட்காத என் உடன்பிறவா உடன்பிறப்பே !!

இவ்வளவு நாட்களாய் வெறும் வலைப்பதிவின் மூலம் உன்னை சந்தித்து வந்த நான், இதோ, இ-கலப்பைக் கொண்டு நட்பு வயலில் நாற்று நட இக்கடிதம் மூலம் உன்னை தேடி வருகிறேன்.

உனக்குத்தான் வாழ்வில் எத்துணை பிரச்சனைகள், இன்னல்கள் . அலுவலகம்/கல்லூரி செல்ல வேண்டும், வேலைப் பார்க்க வேண்டும், குடும்பத்தாரோடு அழுமூஞ்சி சீரியல்கள் பார்க்க வேண்டும், இவ்வளவு இடையூறுகளுக்கு இடையிலேயும், உனக்காக அனுமதிக்கப்பட்ட இந்த மனித வாழ்வின் சில நொடித்துளிகளையேனும், எனக்கா ஒதுக்கி, இந்த பக்கங்களை தவறாமல் படித்து வரும் உன்னை, நான் சாப்பிடும் french fries ல் , உருளைக்கிழங்கு இருக்கும் வரை மறக்க மாட்டேன்

ஏன் இந்த திடீர் கடிதம் என நீ கேட்கக் கூடும். சொல்கிறேன் கேள்...


நான் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவன் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து பால்கனியில் இருந்து பார்த்தவன். உன்னை சந்திக்க ஆரம்பித்தப்பின் தான், வாழ்க்கையை அருகில் இருந்து அனுபவப்பானும் இங்கு இருக்கிறான் என்று அறிந்துக் கொண்டேன். வாழ்க்¨யை மட்டும் நீ அனுபவித்தால் போதுமா ?

காதல், ஒருத்தலைக் காதல், குடும்பம், மனைவி, மழலைப் பட்டாளங்கள், friends போன்றவற்றையும் துள்ளுகின்ற வயசில் இருக்கும் boys நாம் கற்றுக் கொள்வது எப்போது ?

எவ்வளவு நாள்த்தான் தமிழ் நமக்கு pizza கொடுக்கும் , நாம் தமிழ்குக்கு ஒரு பர்கரேனும் தர வேண்டாமா ?

எவ்வளவு நாள் நம்மை நையாண்டி மேளம் என்று புறம் தள்ளுவார்கள், சிவமணியின் ட் ரம்ஸ் போல தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டாமா ?

புழுக்களாய் நெளிவது எவ்வளவு காலம், பட்டாம் பூச்சிகளாய் சிறகடிக்க வேண்டாமா ?

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுத்தான், ஒத்த கருத்துடைய நம் நண்பர்கள் அனைவரையும் ஒரு கலந்துரையாடலுக்கு அடுத்த வாரம் அழைத்து உள்ளேன். உன் பிற கடமைகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் தடுக்கும் என்பது உன் கவலை தோய்ந்த முகத்தை பார்த்தே என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. கவலை வேண்டாம்.

இந்த கலந்துரையாடலை நடாத்துவதற்கும் கொளுத்தும் வெயில் வந்தவர்களை தாகச்சாந்தி செய்வதற்கும் , உன்னால் முடிந்த $25 மட்டும் எனக்கு அனுப்பி வைத்து விடு. உன் சார்பில் நான் கலந்துக்கொள்கிறேன் இந்த கருத்தரங்கில்.

ஏதோ என்னால் ஆன சிறு உதவி உனக்கு. பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்.


நீ பணம் அனுப்பும் கவரின் வழிமேல் விழி வைத்து

உன் அன்பு
ஹிம்ஸன்.

5 comments:

said...

$25 வந்ததா இம்ஸரே? மறக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொல்லவும் நீரு பால்கனியில் இருக்கும்போது கூடவே கக்கத்தில் மஞ்சப்பை இருந்தது கூட ஞாபகம் வருதே !!!!

said...

இதுவும் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சி மாதிரியா? ஒண்ணிமே புரியலையே?

said...

.

குசும்பரே
நம்ம குடும்பமே மஞ்ச கலர் குடும்பம்.
ஹோமர், மார்ஜ், லிஸா, மேகி எல்லாருமே மஞ்ச கலரு ஜிங்குச்சா தான்
இதில் எங்கேயே மஞ்சப் பை பார்த்தீரு.

ஆமா, உமக்கு எப்படி அய்யா , பல விஷயங்கள் தெரிகிறது. ஏதோ எனக்கும் புரிகிறமாதிரி எழுதக் கூடாதா ? ஒரு ஆளைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.


அய்யா சந்தோசு
உனக்கு என்னய்யா நான் செய்ஞேன். இப்படி என்ன பழிவாங்கறீரு. இதுக்கும் எதுக்கும் சம்பந்தம் இல்லைப்பா. எல்லாரும் கடுதாசி போடறாங்களேன்னு நானும் கடுதாசி போட்டேன். அம்புட்டுத்தேன்

said...

சிறு துளி பெறு வெள்ளம் என்பதை அறிந்து $25 மட்டுமே கேட்கும் சின்னவரே,

தாஙள் $ 15 கொடுத்து பால்கனியில் இருந்து பார்த்த வாழ்க்கையை .02 cent கூட கொடுத்து வாழ்க்கையை அருகில் இருந்து பார்காத அவல நிலையில் உள்ள நான், எவ்வாறு தாஙள் கூட்டியுள்ள கருத்தரங்கீரூக்கு $ 25 அனுப்புவது. என்னவே இந்த உண்மை உடன்பிறப்பும் வாழ்க்கையை டமன்ட் ஜுப்லி யாக பார்க்கும் வண்ணம் ஒரு $ 250 பணமாக கொடுத்தால் வெகஸ் சென்ட்று, வாழ்க்கையை வென்ட்று வருவேன்

பணம் அனுப்பும் கவரின் வழிமேல் விழி வைத்து
உடன்பிறவா உடன்பிறப்பு
கார்த்திக்

said...

//சொத்தில் பங்குக் கேட்காத என் உடன்பிறவா உடன்பிறப்பே !!
//

ஆரம்பமே அடிபொலி!!!நடத்துங்க!!! :)