Thursday, August 31, 2006

வேட்டை(விளை)யாடு

இராகவன், ஆராதனா,மாயா என்ற வட மொழி ஆரிய பெயர்களுடையவர் நல்லவராகவும், வல்லவராகவும், அமுதன், இளமாறன் என்ற திராவிடத் தமிழர்களை ,காம கொடூரனராகவும், கொலைகாரராகவும் காட்டுவதிலிருந்தே, இப்படத்தின் கதாசிரியரின்/இயக்குனரின் அடிவருடித்தனம் அப்பட்டமாய் தெரிகிறது.

தனித் தமிழில் எப்போதும் கதைப்பதாகவும், கவிதை எழுதிக் கொல்லும் அந்த நடிகர் தன் வடமொழிப் பெயரான கமலஸாஸன் என்பதை இவ்வளவு நாள் வரையிலும் தாமரைசிரிப்பாளன் என்று மாற்றிக் கொள்ளாதிலேயே அவரின் ஆரியப் பற்று அப்பட்டமாகிறது.


$10 டிக்கெட்டுக்கும், $20 நொறுக்கித் தீனிக்கும் செலவழிக்காமல், நியாயமாய் இணையத்தில் இந்த படத்தை பார்த்தில் எழுந்த சில கேள்விகள்.


1. அடுத்த கெளதம் படத்தில் ஜோதிகா எப்படிக் கொல்லப்படுவார் ?

2. கெளதம் பட வில்லன்கள் அனைவரும் ஒரே சலூனில்தான் முடி வெட்டிக் கொள்கிறார்களா ?

3. அமெரிக்காப் போகும் போது Econamy class பயணம் செய்யும் கமல், ஜோதிகாவுடன் திரும்ப வரும் போது , ஏன் First Class வருகிறார் ?

4.அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft ?

5. கமல் ஜோடி கமலினி, அப்படியென்றால் ரஜினியின் அடுத்த ஜோடி ரஜினியினி ?

6. கை, மார்பு என்று குத்தாமல், முதுகில் இளமாறன் , பச்சைக் குத்தியிருப்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா ?

7. Seriously, shit இந்த இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது ?

8. மனைவியைக் கொல்லும் வில்லனை, போலிஸ்கார கதாநாயகன் இதுவரை எத்துனைப் படத்தில் பழிவாங்கி இருப்பான்?


பினா குனா 1:
முதல் பத்தி , விரைவில் வலைப்பூவில் இந்தப் படத்தை பற்றி எழுதப் படப் போகும் விமர்சனம் என்று, துப்பறியும் பாம்பு குழுவினரின் ஆறாவது உறுப்பினர் , சிலுக்குவார்ப் பட்டி சின்னக் கிழவனார், எமக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.


பினா குனா 2:

இந்தப் பதிவுக்கு மட்டும் கலர் பென்சில் இலவசமாய் அளித்த குசும்பனாருக்கு நன்றிகள்.

24 comments:

said...

:)

said...

சின்னவரே!

விமர்சனம் ஜூப்பர். நம்ம கலர் பென்ஸில் சும்மா பூந்து வெளையாடி இருக்கு போல :-)

கருப்பு பேக்கிரௌண்டில கலர் கொடுக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமோ? தெரிஞ்சே போட்டிருந்தேள்னா OK தான்.

ஆமாம் சின்னவன் என்ற பெயர் திராவிடமா? ;-)

said...

-----அடுத்த கெளதம் படத்தில் ஜோதிகா எப்படிக் கொல்லப்படுவார்.----

ஓ!!! சூர்யா-ஜோதிகா திருமணத்தைக் குறிக்கும் உள்ளர்த்தமா!!! :-O


----கெளதம் பட வில்லன்கள் அனைவரும் ஒரே சலூனில்தான் முடி வெட்டிக் கொள்கிறார்களா ?----

அவர்கள் மறைந்திருந்து வாழ்க்கை நடத்துவதைத்தான் இயக்குநர் குறிப்பால் உணர்த்துகிறார்.


-----ஜோதிகாவுடன் திரும்ப வரும் போது , ஏன் First Class ----

ஏனென்றால் அது ஜோதிகா டிக்கெட்

said...

ஆரம்பிச்சுட்டாருய்யா... ஆரம்பிச்சுட்டாருய்யா... :-)

தாய்வீட்டுக்குத் திரும்பி வந்த தன்மானச் செம்மல்
பழைய அவதாரப் பெருமையுணர்ந்த பெருமகன்
சின்னவனே வருக வருக.

அன்புடன், பி.கே. சிவகுமார்

said...

குசும்பு விமர்சனம். :-)))

//இந்தப் பதிவுக்கு மட்டும் கலர் பென்சில் இலவசமாய் அளித்த குசும்பனாருக்கு நன்றிகள்//

பள்ளிகோட பொஸ்த்தகத்தை கூட இப்படி உத்து உத்து படிச்சதில்ல ஆனால் அந்த கலர் எழுத்தை படிக்கறதுக்கு நான் உத்து படிச்சதில கண்ணு ரெண்டும் தெறிச்சி விழறா மாதிரி வலிக்குதுங்க. :-(

said...

சிரில்
நன்றி மீண்டும் வருக.

said...

பாபா.
அமெரிக்காவில் இருக்கும் போது கூட பரட்டைத் தலையுடன் தானே அலையறானுங்க ?

said...

PKS

வருக வருக.

said...

தம்பி,
இவ்வள்வு நாளாய் ,

கலர்களை , சைட் அடித்து வந்த இந்த கிராமத்து இராஜா,
முதன்முறையாக
சைட்டுக்கு கலர் அடித்ததால் வந்த வினை இது.
மன்னிக்கவும் .

said...

சின்னவா, என் மன்னவா,

இவ்வளவு நாள் எங்கய்யா போயிட்ட. சூப்பர் குசும்பு பதிவு வாத்தியாரே. இந்த நல்ல வேலையை மேலே வைக்கவும்.

said...

குசும்பரே
எப்படி அய்யா கலர் அடிக்கிறீர். ஒரு பதிவுக்கே தாவு தீர்ந்துப் போச்சு.

சின்னவன் , திராவிடம் இல்லை, மத்தவங்க காதில் ஊத்தற திராவகம்..

ஜிந்தா .. சீ சீ. சின்னவா !

said...

அய்யா, கவுதமின் சென்ற படத்தில் அன்புச்செல்வன், இளமாறன் என எல்லா நற்றமிழ் பெயர்களும்
நல்ல பாத்திரங்களுக்குத் தான் கொடுக்கப் பட்டிருந்தன.தவிர இப்படத்தில் கமலினி முகர்ஜியின் பெயர்
கயல்விழி.

மாயை, அராகம் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் தாம்.இருக்கறதையும் குழப்பி வைக்காதைங்க!

-பிரதாப்

said...

வாய்யா கொத்ஸ்
அது என்னய்யா, நீர் ஒரு தும்மல் தும்மினாலும் முன்னூறு பின்னூட்டம் விழுது. ஆமாம் உம்மை அந்த போலிஸ்காரர் இன்னமும் தேடிக் கொண்டுத்தான் இருக்கிறாரா ?

said...

பிரதாப்
முதல் முறையாக இந்தப் பக்கம் வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவின் நோக்கம் குழப்புவதற்காக இல்லை.இப்படியும் விமர்சனம் விரைவில் வரும் என்று சொல்வதற்காகத்தான்.

said...

சின்னவரே,
ரீ-எண்ட்ரீ மட்டும் கிராண்டா கொடுத்துகிட்டே இருக்கீங்க. ஆனா, அப்புறம் ஆப் ஆயிடறீங்களே..


-----
மூவீ ரிவ்யூ சூப்பர்! ஐ ஆம் வெரி வெரி லைக் யுவர் ரிவ்யூ யா.. யூ ஹாவ் ஆஸ்க்ட் கொஸ்டின்ஸ் டு புல் அவுட் டங்க்.. கேன் கவுதம் ஆன்ஸர் திஸ் கொஸ்டின்ஸ்?

யூ னோ... தே ஆல்வேஸ் ஸ்பீக் இங்கிலீஸ் அண்ட் இந்தி யா. ஐ டொண்ட் லைக் இட் அட் ஆலு.

said...

படித்தேன், சிரித்தேன் :)
//8. மனைவியைக் கொல்லும் வில்லனை, போலிஸ்கார கதாநாயகன் இதுவரை எத்துனைப் படத்தில் பழிவாங்கி இருப்பான்?
//
ஆமாம், இந்த மாதிரி encounter கமலுக்கோ இராகவனுக்கோ பெருமை சேர்க்குமா ?

said...

ஹே இராம்ஸ்
ய்யா டியூட் !!
தே ஆல்வேஸ் ஆக்ட் லைக் தட் மேன் !
ஐ ம் லைக் வாட் எவேர்.
பட் அஸ் அ டமிலியன் வீ காட் டூ , டூ சம்திங்க் டூ டீச் எ லெஸன் டு தெம்.

said...

மணியன்
வருகைக்கு நன்றி.

said...

//அது என்னய்யா, நீர் ஒரு தும்மல் தும்மினாலும் முன்னூறு பின்னூட்டம் விழுது. //

எல்லாம் நம்ம மக்கள் மனதில் இருக்கும் அன்புதாங்க!

//ஆமாம் உம்மை அந்த போலிஸ்காரர் இன்னமும் தேடிக் கொண்டுத்தான் இருக்கிறாரா ?//

கடைசியா கேள்விப்பட்ட படி அவரும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு பின்னூட்டக் கயமைத்தனம் பண்ண முயற்சி செய்யறாராமே.

said...

கொத்ஸ்
ஆனாலும் உம்ம மேலே மக்களுக்கு அன்பே அன்பு.
ஒழுங்கா புதிர் போட்டுக்கிட்டு இருந்த மனுஷனை கெடுத்தது அந்த இராம்ஸ்.
நடாத்துங்க !அப்ப அப்ப என்னையும் ஆட்டைக்கு சேர்த்துகுங்க இராசா !

said...

"காக்க காக்க"ல அன்பு செல்வன், இளமாறன் எல்லாம் நல்லவங்கப்பா ;)

மின்னலேல மாதவன் பேரு ராஜேஷ் (இது தமிழ் பேரா???)

said...

வெட்டி,

ராஜேஷ் தமிழ் பெயரல்ல.

ராஜ்ய + ஈஷ்

ராஜியத்துக்கு கடவுள்,
அரசன் என்று பொருள் .

(என்று படித்ததாக நியாபகம். )

said...

!
- NJ

said...

டப்பா படம் அதுக்கு ஒரு விமர்சனம் அதுவும் கலர் பென்சில் வைத்து.
அநியாயத்துகு ஆரிய-திராவிட ஆர்க்யூமெண்டுகளை வேஸ்ட் ஆக்கிட்டீங்களே