Sunday, January 29, 2006

காப்பி - Copy

காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் பேனாவுடன் மை இருக்கையில்
காப்பி எதற்காக ?

சொந்த கம்பன் வள்ளுவ தந்த
தெம்பு மிக்க தென்னாட்டில்
வெந்த காப்பி எதற்காக ?

ஆட்பட்டாய் இண்டெர்நெட்டுக்கே
அடிமை வியந்தாய் ஹாலிவுட் படங்களுக்கே
பூப்போட்ட பிரிட்டினி, மடோனா பல்லிளித்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
உள்ளூர் பிகர்கள் இருக்க சிலிக்கான் பெற்ற
அழகே இல்லாத வெளிநாட்டு பிகர்
படங்களின் காப்பி எதற்காக ?

5 comments:

said...

அடாடாடா,
கவித கவித கவித...

புல்லுமுதக்கொண்டு உடம்பே அரிச்சுப் போச்சு!

இது அந்தக் சாதாக்காப்பியோன்னு பாத்தா, இது சிலிகான் டிகிரி காப்பியா? பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னாருக்கு!

said...

இராம்ஸ்
ஒரிஜினல் கவிதையும் படிச்சீங்களா ?

said...

என்ன ஓய்.... ம் ... நடத்தும்... நடத்தும்....

என்ன ஒன்னு, மரங்கொத்தி, எல்லா மரத்தையுங் கொத்தி கொத்தி, வாழ மரத்துல கொத்தி மாட்டிக்கிச்சாம்!!! அப்டீன்னு ஒரு கத கோயம்புத்தூரு பக்கம் சொல்லுவாக!!

;-)

--------
Original here => http://njanapidam.blogspot.com/2006/01/coffee.html

- NJ

said...

ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே !!

மழை நின்ற பிறகும் மரக்கிளை தூவுதே !

ஞான்ஸ் கூட சேர்ந்து வெறும் பாட்டா வருது !

said...

என்னாச்சுப்பா? எல்லாரும் ஒரே பா(ட்)டாய் படுத்துறீங்களே :-)

வேணாம்... அப்புறம் நானும் பாட வேண்டியிருக்கும்... ;-)