ஆஸ்கார் ரேஸ் - படம் 1
நம்ம இரேசு ஆஸ்கார் படங்களைப் பத்தி ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதற்குப் பிறகுத்தான் புரிந்தது இங்கிலீஸ் படங்கள் நிறைய நான் பார்க்காமல் விட்டு இருக்கிறது. இன்னும் 2/3 வாரத்தில் ஆஸ்கார் வந்துவிடும், ஹாலிவுட் இருந்துக்கிட்டு நானே படம் பார்க்காமல் இருந்தால் எப்படி. இதோ இந்த வார இறுதியில் பார்த்த ஆஸ்கார் வாங்க தகுதியுள்ள இன்கிலீஷ் ப்பட விமர்சனம்..
கிராமத்தில் தொடங்கிறது கதை. குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகத்தை பார்த்து கண்ணீர் வடித்து அழுகிறாள் கதாநாயகி. வழக்கம் போல, பெண்கள் அடைக்கி ஆள நினைக்கிற அப்பா, உள்ளூர் ரவுடி என டைரக்டர் ஒரு கிராமத்தை நம் கண் முன்னால் நிறுத்துகிறார். சோகத்திலும் காதல் மலர்வது இயற்கைத்தானே. நாயகிக்கும் காதல் வருகிறது ஆனால் நாயகனோடு அல்ல. நாயகனும் காதலர்களை ஒன்று சேர்கிறார். பின்னர் கதை கிராமத்தில் இருந்து நகரத்துக்கு மாறுகிறது.
டைரக்டர் இங்கே இன்னொரு நாயகியை அறிமுகப்படுத்துகிறார். கதைக்கு ஒரு நாயகி, சதைக்கு ஒரு நாயகி என்ற stereotype ஆகவே வருது ஒரு பெரிய குறை. இருந்த்தாலும் நடிக்கும் நடிகர்கள் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பதால் குறைகள் அவ்வளவாகத் தெரியவில்லை.
நாயகன் மற்ற நடிகர்களை கிண்டலடித்து தன் வழக்கமான பாணியை இதிலும் தொடர்ந்து இருக்கிறார்,. இந்த இங்கிலீஷ் படத்துக்கு விருது கிடைக்குமா என்பதே நல்ல சினிமா விரும்பிகளின் ஆவல்.
Film : Englishkaran (2005)
Director:Shakthi Chidambaram
Cast: Sathyaraj, Madhumitha, Namitha, Vadivelu, Aishwarya, Thandapani
Music: Deva
Cinematography: Suresh Devan
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஒரு சின்ன சந்தேகம்!
மட்டுறுத்துல் இருக்கற பதிவுல நீரே பூந்து கருத்து சொல்லிட்டு அப்புறம் அழிப்பீரா?
அன்பு சொன்ன காக்கா கதை நினைவுக்கு வந்து தொலைக்குதே! அப்போ ஒத்துதூனீரு! ஹி ஹி.. இப்ப மாட்டிகினீரா??? :))
இராம்ஸ்
வேற பதிவுக்கான பதிலை இதுல போட்டுட்டேன். அதனாலதான் டிலீட் .
ஆமா அது என்ன காக்கா கதை ?
http://valaippadhivu.blogspot.com/2005/10/are-you-mobile.html
இதெல்லாம் மறந்திருச்சா? அவ்வளவு சுருக்க??? :PPPP
அபாரா ஞாபக சக்தி அய்யா உமக்கு.
நிச்சயமா நான் அதை மறந்து விட்டேன். !!
ஆனா இந்த comment delete வேற காரணமய்யா !
Post a Comment