Tuesday, January 24, 2006

ஹோமர் குமாரனுக்கு ஒரு வாழ்த்து

ஹோமர் குமாரனுக்கு ஒரு வாழ்த்து !!

இராகவன் இதுக்கும் நீங்களே பொழிப்புரை எழுதிடுங்க !
அப்படியே ஸ்ரீதேவிப் பாட்டியையும் கேட்டேன் என்று சொல்லுங்க. ( அவிங்கதானே மயிலு ! )

ஸ்பிரிங்பீல்ட் என்னும்
கிராமமில்லா நகரமாம்
ஹோமர் செய்த தவறினால்
நானன்று தோன்றினேன்
பாடு பார்ட் என்று
நல்ல பெயர்தனை அருளினான் !


அகவையோ இருநான்கு ,
ஓராறு, ஒரொன்று அழகு
தமக்கையருடன் புள்ளி சேர்
கோலம் போல வயலும் வாழ்வாம் !

மகிழ்ச்சியுடனே பணிப்பல புரிந்து
தண்டனை வாங்குதலாம்
பள்ளி என்னும் அலங்கோலத்திலே !

வாழ்வதோ அமெரிக்கா
தோன்றுவதோ உலக
சின்னத்திரை எங்கும்
வாழ்க Fox, வாழ்க Matt
நல்வாழ்வு பெற நானும் வந்தேன் !

3 comments:

said...

சுயபுராணமா???

நடக்கட்டும்...

ஸ்கின்னர், அவுஸ்றேலியா என்று பலவற்றை விட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

இராகவன், வலுவுல வந்து வம்புல மாட்டிக்கிறீங்களே அதான் ஆச்சரியமா இருக்கு! :)

said...

ஹாஹாஹாஹா....சின்னவரே. இராகவன் ரொம்பக் கஷ்டப் படப் போறார்.

said...

இராம்ஸ்
//ஸ்கின்னர், அவுஸ்றேலியா
அது ரெண்டாவது கவிதைக்கு பொருளாய் வைச்சுக்கலாம்.

//இராகவன், வலுவுல வந்து வம்புல மாட்டிக்கிறீங்களே அதான் ஆச்சரியமா இருக்கு! :)
//

:-))

குமரன்
நன்றி ! ராகவன் என்ன சொல்லறாரு பார்ப்போம்