பறவைக் காய்ச்சலை விட, மிக வேகமாக பரவி வருகிறது இந்த தேர்தல் ஜூரம். அநேக கட்சிகள் இருந்தாலும், வழமைப்போலவே இந்த தேர்தலும், இருமுனைப் போட்டித்தான். இரண்டுப் பெரிய அணிகள் கூடி நிற்கிறார்கள். இந்த முறை பமக பற்றிய ஒரு அலசு அலசுவோம் .
தோற்றம்:
பமக வின் நிறுவனர், தலைவர், இளைஞர், வலைபூ கலைஞர் முகமூடியார். இக்கட்சி தன் சொந்த நலனுக்காக ஆரம்பிக்க ப்பட்டது என்றாலும், மிக விரைவிலேயே, உலகத் தமிழர்களின் மத்தியில் பரந்த வரவேற்பை பெற்றது. வளைகுடா நாடுகள் முதல், இரஷ்யா வரையிலும், அமெரிக்க நாடுகள் முதல் நியூஸி வரையிலும் இக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு அரிய ஒரு எடுத்துக்காட்டு.
இது ஒரு சாதிக் கட்சி என்று அடிக்கடி எதிர்கட்சிகள் ஏளனம் செய்துக் கொண்டுத்தான் வருகிறார்கள். சொல்லை விடச் செயல் பெரிது என்று கட்சியும் அதன் தொண்டர்களும் அதற்கெல்லாம் செவிக் கொடுக்காமல் பணிச் அயராமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவ்வப்போது கட்சிப் பிளவு,பொது, இணை, துணை செயலாளரின் ஆவேச அறிவிப்புகள் இருந்தாலும், கட்சியை பிளவுப்படாமல் வைத்து வழி நடாத்திவருகிறார் முகமூடியார். இன்று இருக்கும் கட்சிகளில் உட்கட்சிப் பூசல் அதிகம் (வெளிவராமல் இருக்கும் ) இல்லாத கட்சி பமக என்றால் அது மிகையாகாது.
பமக வின் தேர்தல் கூட்டணிப் பற்றி அதன் அகில உலக இணைத் துணைப் பொது செயலாளர் அளித்த அறிக்கையை நாம் கொஞ்சம் கவனித்து வாசிக்க வேண்டும். இது ஒருப் புதிய கட்சியாக இருந்தாலும், தங்களின் அரசியல் அறிவையும், சாதுரியத்தையும், தங்களின் அறிக்கைகளும், பதிவுகளும். மூலமாக தெளிவாக விளக்கி வருகிறார்கள் . அது இரசிக்கும் வண்ணமுமாக வெளிப்படுத்துவதின் மூலம் மக்களை எளிதில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.
இது ஒரு வெற்றுப் பேப்பர் கட்சி என்று சொன்னவர்களுக்கு, மூன்று வார்த்தைகளுக்கு 350க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்கள் வரவைத்து தங்களின் பலத்தையும் காட்டி இருக்கிறார்கள் .
பமக தலைவர் Indiblog தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையுடன் வென்றதும் நினைவில் கொள்ள வேண்டும் இந்த தருணத்தில்.
பமக, பச்சோந்தி மக்கள் கட்சியா, பலம் வாய்ந்த மக்கள் காட்சியா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உவ்வேக்... :-) என்னாப்பா நடக்குது இங்க?
குசும்பரே
ஜூரம் முத்திப் போய்விட்டதா ? இரஷ்ய மருத்துவரிடம் போக வேண்டியதுதான் வைத்தியத்துக்கு !
Post a Comment