கவிதை(க்)கள்
ஒற்று மிகுமா, மிகாதா
கவலை சிலருக்கு !
பற்று இருக்குமா பற்றவனிடம்
கவலை சிலருக்கு !
88, 127 தேர்தல்
கோபம சிலருக்கு !
சேற்று வீசலாம் யார் மீது
யோசனை சிலருக்கு !
நேற்றைய பின்னூட்டம்இன்று எங்கே
ஏக்கம் சிலருக்கு !
கற்றுக் கொள்லாம் பலவற்றை
கவலை சிலருக்கு !
தோற்று போகலாம் பாகிஸ்தான்
ஆசை பலருக்கு !
சற்று பொறுங்கள், சாப்பாட்டு நேரம்
பசி கவலை எனக்கு !
------------------------------------------------------------------
கேரட் சாப்பிட்டாலும்
காதலுக்கு கண் தெரிவதில்லை !
எலாஸ்டிக் போட்டாலும்
நாய் வால் நிமிர்வதில்லை !!
காம்பவுண்ட் சுவர் கட்டினாலும்
காற்றுக்கு வேலி போட முடிவதில்லை!
ஏரோப்பிளேனில் பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாவதில்லை !
பிரபு தேவாவிடம் நடனம் கற்றாலும்
வான்கோழி மயிலாவதில்லை !!
ஓ ....
மானிடா.....
உனக்கு எதுக்கு
வேண்டாத வேலை !!!
===========================
கவிஞர் பவுர்ணமி பாண்டியன் !
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
பவுர்ணமி பாண்டியனுக்கு வாழ்த்து(க்)கள். அருமையான கருத்து(க்)கள்.
அருமையான கவிதை(க்)கள்.
நன்றி. வாழ்த்து(க்)கள்.
-ஞானசேகர்
சேற்று வீசலாம் - ற்
தோற்று(ப்) போகலாம் - (ப்)
சற்று(ப்)பொறுங்கள் - (ப்)
பசி(க்) கவலை - (க்)
காதலுக்கு(க்) கண் - (க்)
======
NJ's comment:
பவுர்ணமி பாண்டியன்
not so bright
missing the right
low in weight
short in height
make not fight
somehow allright
ஏஜெண்டு
உம்ம ஆங்கிலக் கவிதை .. புல்லரிக்குதுப் போங்க !
நன்றி ஞானசேகர்
நிறைய புது ஆளுங்க எல்லாம் இந்த எட்டிப் பார்ப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி !
ஏம்பா சாக்லேட் காரரே !!
என்னப்பா சொல்லறே ? எசகுபிசகா புரிஞ்சிகினியா ஏதாச்சும் ?
பவுர்ணமி பாண்டியனின் பழைய க(வ)விதை கொஞ்சம் தேடிப் படிச்சு பாருங்க !
கவிப்பேரரசு கவிதாகினர் பவுர்ணமி பாண்டியனை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்!
இலக்கியம் பேசும் அருமைப்பதிவில் தலைக்கனம் பிடித்து பீடத்திலிருந்து சில சொற்கணைகளை கவிதையென்னும் துர்ப்பெயரால் வீசும் ஏஜெண்டை, பதிவின் போக்கையும் புனிதத்தையும் திசைதிருப்பியதற்காக கண்டிக்கின்றேன்!
அனானி,
யாரு சாக்லேட் காரரு????
Post a Comment