Thursday, September 07, 2006

சில சந்தேகங்கள்

1. சில்லுன்னு காதல் வந்தால் HOT ஆ கல்யாணம் வருமா ?

2. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ரஜினி ஒரு வார்த்தை சொன்னா நூறு வார்த்தை சொன்ன மாதிரி. அப்ப, ரஜினியின் ஒரு படம் ஒரு இலட்சம் வார்த்தைக்கு சமமா ?

3.தமிழ் பெயராக தங்கள் பெயரை மாற்றிக் கொண்டால் நடிக/நடிகையருக்கும் வரி விலக்கு உண்டா ?

4. பூமி உருண்டையாக இருக்கிறது. அப்ப வானத்தின் வடிவம் என்ன ?

5. இலவச டிவி ,இலவச மின்சாரம் . சீரியல் பார்த்து அழ இலவச கர்ச்சீப்பும் கொடுப்பார்களா ?


6. ஏன் தமிழ்நாடு தவிர வேறு எந்த தென்னக மாநிலத்திலும், திராவிட என்ற பெயரில் எந்த கட்சியும் இல்லை ?


7. "இரஜினி ரசிகனுக்கு மூளை இருக்கா, தமிழனுக்கு மூளை இருக்கா" என்பது இருக்கட்டும், முதலில் வட்டத்துக்கு மூலை இருக்கா ?

8. இலவச கொத்தனார் தன் வீட்டையும் இலவசமாகவே கட்டிப்பாரா ?

9.ரேஸ் கார் டிரைவர்கள் எல்லாம் ரேஸிஸ்டா ?

10. ஏன் எல்லா பட்டியல்களும் பத்தோட முடிந்து விடுகிறது ?

அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர் இந்த வார ஸ்டார் பதிவராக சின்னவன் குழுவினரால் அறிவிக்கப்படுவார் !!!

4 comments:

said...

1, 3, 5, 9 பிடித்திருந்தன.

- பி.கே. சிவகுமார்

said...

1. ஹாட்டா கல்யாணம் வருமான்னு தெரியலியே.. அப்படியே வந்தாலும் சென்சார் கத்தரி தான் வரும்.

3. நடிகைகளுக்கு ஏற்கனவே துணிவிலக்கு அளித்துள்ளோம். (அதை எதிர்த்து யாரும் கோவணம் கட்டப்போகலியே! அது ஏன் என்பதை துணைக்கேள்வியாக இணைத்துக்கொள்ளவும்) நடிகர்களுக்கு கண்டிப்பாக இச்சலுகை கிடையாது. முகத்தை மூடிக்கொண்டும், கையைக்காலை விஷ்க் விஷ்க் என்றபடியே பஞ்சர் டயலாக் கொடுக்கவில்லையென்றால் யோசிக்கலாம்.

5. கர்சீப் கொடுத்தா அப்புறம் அதை தோய்க்க வாஷிங் மஷினும் கொடுக்கனுமே.. அதுனால கிடையாது.

ஏதோ பாத்துபோட்டு, ஸ்டாராக இல்லாவிட்டாலும் வால் நட்சத்திரமாகவாவது பட்டம் கொடுக்கவும்.

said...

இரேசு
உம்மை வால் நட்சத்திரமா அறிவித்தால் செருப்போட யாரும் என்னை அடிக்க வரமாட்டாங்கள் தானே ?

;-)

said...

என்னங்க நல்லா இருக்கீங்களா?

ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க.
சந்தோஷம்.

நம்ம ரேசுநாதர் சொன்னதுபோல கையைக் காலை விஷ்க் விஷ்க்ன்னு
படுத்திக்கிட்டுப் பஞ்ச் டயலாக் சொல்றது யாருங்க?