Monday, October 30, 2006

வயசுப் பொண்ணு

"அய்யோ. அடிப் பாவி மகளே என்னக் காரியம்டீ செய்துவிட்டு வந்து இருக்க !"

மனைவியின் கதறலைக் கேட்டு, படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எறிந்துவிட்டு குரல் வந்த பாத்ரூமை நோக்கி ஓடினார் பரமசிவம்.

"என்ன ஆச்சு? ஏன் இந்த கத்து கத்தறே"

பாத்ரூமில் அவர்களின் செல்ல மகள் வர்ஷா அழுதுக் கொண்டு தலைகுனிந்திருந்தாள். அறை முழுவதும் அவள் எடுத்து இருந்த வாந்தி !

"என்னடி ஆச்சு? ஏன் இந்த வாந்தி. யாரு காரணம் இதுக்கு ? புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்து இருக்கும் இராஜாவா ?"


வர்ஷா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுக் கொண்டு இருந்தாள்.
"பண்றதெல்லாம் பன்ணிட்டு, இப்ப ஏண் வாயைத் தொறக்க மாட்டேங்கறே ".


எல்லாம் நீ கொடுக்கற செல்லம். ஒரு வயசு பொண்ணை கண்ட பசங்க கூட எல்லாம், இவளை சுத்த விட்டு இருக்க. இப்ப பாரு இங்க வந்து நிக்குது. இனி நான் என்ன பண்றது. தெரு ஊரில எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு அவமானம். தலைக் கட்ட முடியுமா ?


என்னங்க பண்றது ? அழுதாள் மனைவி.

வெற என்ன? . டாக்டருக்கு போன் பண்ணு. யாருக்கும் தெரியாம , இத முடிச்சற வேண்டியதுதான்.

"அப்பா. டாக்டரெல்லாம் வேண்டாப்பா ." அழுதாள் வர்ஷா ..


பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்த ஐந்து வயசு பயனோட சேர்ந்து கிட்டு தன் ஒரு வயசு பொண்ணு தீபாவளிக்கு வந்த பலகாரத்தை எல்லாம் தின்று வாந்தி எடுப்பதை பற்றி கவலைப் பட்டுக் கொண்டே டாக்டருக்கு போன் செய்ய தொடங்கினார் பரமசிவம்.

4 comments:

said...

தீபாவளி முடிஞ்சு இவ்வளவு நாள் கழிச்சு பலகாரங்களைச் சாப்பிட்டா இப்படித்தான்.

said...

தீபாவளிக்கு ஒரு பலகாரம்கூட சாப்பிட முடியாத வேதனையில் விளைந்ததுதான் இது கொத்ஸ்

said...

குமுதம் ரொம்ப புடிக்குமோ :) இல்லை பாதிப்பு ஜாஸ்தியாஇருக்கு அதான் கேட்டேன் :)

said...

சங்கரு
தீவாளி பலகாரம் ஒன்னு கூட கண்ணுல/பல்லுல படாத சோகத்தில் எழுதினதுங்க !
குமுததுக்கு அனுப்பிசரலாமா ?