Thursday, September 21, 2006

சில கிஸ்கிஸ்கள்

சில கிஸ்கிஸ்கள்

1. இரசிகர்களிடம் மடாரென்று சரிந்துக் கொண்டு இருக்கும், டேமேஜான இமேஜை சரியாக்க உச்ச நடிகர் பல அதிரடி முடிவுகள் எடுத்து இருக்கிறாராம். முதல் அறிவிப்பு இந்த வாரமே வருதாமே?

2. பிரபல ஹோட்டல் அதிபரோடு அந்த இளம் நடிகை இப்போது சுற்றி வந்தாலும். நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் செய்திகள் வந்தாலும், நடிகையின் லூட்டிகளைப் பார்த்து ஹோட்டல் பார்ட்டி ஜகா வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.

3. அந்த பின்னழகு நடிகை புதுப் படங்களை ஒத்துக் கொள்ளாதாதற்கு காரணம் குவா-குவா தானாம் .


4.ஐந்தெழுத்து இளம் நடிகை சமீபத்தில் தன் ஆதர்ச பாடகரை ஒரு பார்ட்டியில் பார்த்ததும் முத்த மழையில் குளிப்பாட்டினாராம். இதனால் பாடகர் வீட்டில் அடிதடியாம் .

5. அக்கா நடிகையை பார்த்து பொறாமையில் தங்கை நடிகையும் ஏகப்பட்ட ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் வாய்ப்பு அவ்வளவாக வராததில் நொந்துப் போய் இருக்கிறாராம்.

15 comments:

Sivabalan said...

//இதனால் பாடகர் வீட்டில் அடிதடியாம் //

:))

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, கொஞ்சம் தயவு பண்ணுங்கண்ணா. இன்னும் கொஞ்சம் க்ளூ குடுங்கண்ணா.

சின்னவன் said...

சிவபாலன்
சிரிப்பானை மட்டும் போட்டு இருக்கீங்க. யாரு அதுன்னு தெரிஞ்சுதா ?


கொத்ஸ்
புதிர் மன்னன் உமக்கே, க்ளுவா. எவ்வளவு கண்டுபிடிச்சீர் ?

Sivabalan said...

ஜோக்குகாக சிரித்தேன்.. உண்மையில் யாரென்று தெரியவில்லை..

என்க்கு தெரிந்த்து உச்ச நடிகர் மட்டும் தான்.

மற்றவைகளுக்கு இகொ சொன்னதுபோல் மேலும் க்ளு வேணும்..

சின்னவன் said...

கொதஸ், சிவபாலன்
நீங்க நினைக்கிற உச்ச நடிகர் இவர் இல்லை . போதுமா க்ளூ

Anonymous said...

//உச்ச நடிகர்//

rajinikanth?

Anonymous said...

ப்ளாகரா

சின்னவன் said...

அனானி :
அவர் இல்லை இவர். இவரின் மிஷனே வேற ! ( புரிந்ததா ? )

வழுக்கினியான்:
?????

Anonymous said...

அண்ணா
இது என்னா தமிழ் சினிமா கிசு கிசுவா இல்லை வேற ஏதாவதா ?

சின்னவன் said...

அன்னானி அண்ணை
சரியான பாதையில் தான் போகிறீர் !

Anonymous said...

This is about other bloggers ;-) what else!!

சின்னவன் said...

ஆங்கில அனானி ,
எதுக்கைய்யா வம்புல மாட்டிவிடப் பார்க்கிறீர்.

இது சினிமா கிஸ்கிஸ்தான். ஆனால் தமிழ் சினிமா இல்லை :-)

சரவணகுமார் said...

1. டாம் க்ரூஸ்
3.ப்ரிட்டினி பியர்ஸ்

சரியா தலை...

இங்கிலீஸ் பட கிஸு கிஸு எழுதுனா இணையத்துல வரி விலக்கு கிடைக்காது தெரியுமில்ல

சின்னவன் said...

சரவண குமார்
டாம் சரிதான். ஆனால் ப்ரிட்டினிக்குத்தான் ஏற்கனவே இரண்டு குட்டி இருக்கே. இது வரப் போற குட்டிப் பத்தி. எதுக்கும் கொஞ்சம் லோவா யோசிங்க !

தமிழில் தலைப்பு (மட்டுமே ) வரிவிலக்குக்கு போதும் இல்லையா ? வேணும்னா தலைப்பை சிக கிச்கிச் என்று மாற்றிக் கொள்ளலாம் .

சின்னவன் said...

வாங்க Babble
அதானே. சனங்க இவ்வளவு அப்பாவியா கூட இருப்பாங்களா என்ன ?
அக்கா, ஒரே ஸ்பினாசா தின்னறாங்களாம் . எல்லாம் நல்லா நடந்தாச் சரிதான்.