Wednesday, March 22, 2006

கல் எறிந்தவர்கள் - Uno

a.இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்
என்று சுயசரிதை எழுதுகிறார் ஒருவர் !
இந்த குளத்தில் காதல் எறிந்தவர்கள்
என்று கவிதை எழுதுகிறார் மற்றவர்
என் மீதே கல் எறிந்தவர்களை
பற்றி நான்
என்ன எழுத ?
என் கவிதைகளைப் படிப்பதுதான்
அவர்களுக்கும் தண்டனை ?

*******************************************************************


கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !


*******************************************************************

எருதுக்கு தெரியுமா
காக்கையின் கால் வலி ??


------------------
பெளர்ணமி பாண்டியன்

5 comments:

said...

எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை இதைத்தவிர:

//என் கவிதைகளைப் படிப்பதுதான்
அவர்களுக்கும் தண்டணையோ //

இங்கே 'தண்டனை' என்று இருக்கவேண்டும்

//கொழுந்து விட்டு
எறியும் விளக்கின்//

இங்கே 'எரியும்' என்றிருக்கணும்

//எருத்துக்கு தெரியுமா//

எருதுக்கு... ( 'த்' கிடையாது)

இப்படிக்கு,
டீச்சர்.

said...

திருத்தி விட்டேன்.
மிக்க நன்றி டீச்சர்

said...

என்னத்தை 'திருத்திவிட்டேன் டீச்சர்?'

தண்டனை இன்னும் தண்டணையாவே இருக்கே, இதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?:-)

said...

//கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !/

very nice kavithai pa...

inthe kulathil kadhel erinthu kayappaduthiyavargalai vidavu kavithai erinthu kayappaduthi vittayappa

said...

//கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !//


கவிதை நன்றாக உள்ளது பௌர்ணமி பாண்டியா..
( ஏன் அமாவாசை அப்துல்லான்னு வைக்கவேண்டியதுதானே? :) )

என் மீது காதல் எறிந்து காயப்படுத்தியவர்களை விடவும் நீ
இந்தக் கவிதை எழுதி அதிகமாய் காயப்படுத்திவிட்டாயப்பா..