Tuesday, July 26, 2005

நம்பிக்கை ! என் கவிதை!

எல்லாரும் இந்த $50, $25 கவிதை போட்டிக்கு எழுதி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள்.

புது கவிதைக்கு மேத்தா, தாத்தா என்றால் ,

ஒன்று விட்ட சித்தப்பாவின் மூன்றாம் மகளின், மூத்தபெரியப்பா மகனாக சின்னவன் மட்டும் என்ன சுமமாவா..

இதோ நம்ப கவிதை !!

(சரி சரி
நிறய பேர் தங்களால் கவிதை எழுத முடியும் என்று நினைத்து எழுதுவதே ஒரு பெரிய நம்பிக்கையினால் தானே..சரியான தலைப்பு தான்.. )



தங்கலீஷ் இருக்கலாமாம் !!
போட்டியின் நடுவர்களின் தகுதி தெரியாது !
பரிசாக கிடைக்கும் வெறும் $50 க்காக
கவிதையின் இலககணம் கூட அறியாமல்
மண்டபத்தில் யாரேனும் நிச்சயம்
எழுதி கொடுப்பார்கள் என்று புலம்பி திரியும்
இந்த தருமியின்
நம்பிக்கை !



பின்குறிப்பு 1

வலைபூ தருமி அய்யாவை நான் சொல்லவில்லை. இந்த தருமி நம்ப திருவிளையாடல் நாகேஷ் சார் !

பின்குறிப்பு 2
இதை அங்க கொண்டு போய் பரிசாகவோ, உதையாகவோ வாங்கிக் கொள்ள நான் தயாராக இல்லை!

6 comments:

Anonymous said...

மண்டபத்தில் எழுதி தரும் யார் மீதும் நம்பிக்கை வைக்க கூடாது. ஏனென்றால் நம்பிக்கை வைத்தவர் ஏமாற்றினால் தாங்க முடியாது அப்புறம் தரம அடிதான் கிடைக்கும் .

Anonymous said...

ஓரு ஏழை புலவனின் புலம்பலை நன்றாக நாக்கில் படும்படி சொல்லி இருக்கிறீர்கள்

Anonymous said...

Sabash chinnavan
Ippadithan patti pulambuthu

Anonymous said...

gloriouslly written
sad yet true..
:(

Anonymous said...

கிண்டலுக்கா எழுதினாலும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்

Anonymous said...

எல்லாம் ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க போல..! ம்..ம். ஆகட்டும் ஆகட்டும்!