Wednesday, July 20, 2005

சென்னையை பிரிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னையை பிரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னையைப் பிரித்து 3 மாவட்டங்களாக்க வேண்டும். கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

5 comments:

Helio Eudoro said...

sorry i dont read mandarim....

aathirai said...

எல்லா நகரங்களிலும் ஒரே அளவு கடைகள் இல்லை. அண்ணாநகரில் நிறைய கடைகள்
உள்ளன். கூடுவாஞ்சேரியில் கடைகள் மிகவும் குறைவு. அனைத்து நகரங்களும் ஒரே
அளவு கடைகள் இருக்க வேண்டும் என்பதற்காக, அண்ணாநகரை வடக்கு, கிழக்கு,
தெற்கு, மேற்கு, வடமேற்கு,வடகிழக்கு,தென்மேற்கு, தென்கிழக்கு என்று எட்டாக
பிரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவோம் என்று புதிய பமகவின் உ.பி.ச. அறிவிக்கிறேன்.

Anand V said...

ஆதிரை கலக்கிட்டிங்க.
இனிமே ப்ரஸ் மீட்டிங்க எல்லாம் நீங்கதான் நடத்தனம்.

உங்கள மாதிரி 4 பேர், வேண்டாம் நீங்க ஒருத்த போதும் புதிய பமக வுக்கு !
(அப்படியே சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் )

aathirai said...

உ.பி.ச வந்துவிட்டால் தலைவருக்கு வேலையேது?
சிறுமாவூர் பங்களாவில் போய் ஓய்வெடுக்க வேண்டியதுதான்.

aathirai said...

மேலும் சென்னையை எப்படி இரண்டாக பிரிக்க முடியும்? வடக்கு தெற்காக பிரிப்பதா, அல்லது
கிழக்கு மேற்காக பிரிப்பதா ? வடக்கு தெற்காக பிரித்தால் வடக்கு வாழும் , தெற்கு தேயும்.
கூவம் யாருக்கு சொந்தம்? வடக்கில் இருப்பவர்கள் தண்ணீர் விடவில்லையென்றால் தென்சென்னை
எருமைகள் எவ்வாறு குளிக்க முடியும்? கிழக்கு மேற்காக பிரித்தால், மெரீனா சமாதி இடம் யாருக்கு என்று
சண்டை வருமே! இதற்கெல்லாம் பா.ம்.க.தலைவர் பதிலளிப்பாரா?