Wednesday, July 20, 2005

என்னை ஒழித்த அஜீத்

'ஆனந்த பூங்காற்றே' படத்தை நான் தயாரித்தபோது அதில் நடிக்க அஜீத்தை ஒப்பந்தம் செய்தேன். திட்டமிட்டபடி படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த நிலையில் கார்ப் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில் சிக்கினார் அஜீத்.
இதனால் படம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த்தை வைத்து படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்து அஜீத்தை அணுகினேன். அதற்கு இல்லை, இல்லை நானே நடிக்கிறேன். வேறு நடிகரை தயவு செய்து நாட வேண்டாம் என்று கூறினார். இதனால் அஜீத் குணமாகும் வரை காத்திருந்தேன்.
இந் நிலையில் 'ஜனா' படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்தேன். இதற்காக ரூ. ஒன்றரை கோடியை முன் பணமாக அவருக்கு வழங்கினேன். 2002ம் ஆண்டிலேயே படத்தை ஆரம்பித்தோம்.
இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகி விட்டது. ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக கூறிய அஜீத், கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இப்படத்தை முடிப்பதற்கு என்னைப் பல முறை அலைய வைத்து விட்டார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

8 comments:

Anonymous said...

இங்க நான் அப்படிங்கறது யாரு = சின்னவனா ?

சின்னவன் said...

தல பரணீ.. அது நான் இல்லங்க.
ஆம்னி அக்காவோட ஹஸ்பெண்ட்

Anonymous said...

அது யாரு ஆம்னி அக்கா ? அப்புறம் அவுங்க ஹஸ்பெண்ட் ?

Sud Gopal said...

அதாகப்பட்டது ர்த்தனாரம்பத்திலே,மீனாட்சி,மீனாட்சி என்ற பெயரில் ஒரு பெண்மணி தமிழ்ப் படங்களில் தெறம காட்டி வந்தார்.இங்கே அவரது பப்பு வேகாமல் போகவே,சுந்தரத் தெலுங்கில் தெறம காட்டும் எண்ணத்தில் தனது பெயரையும் ஆம்னி என மாற்றிக் கொண்டு ஹைதராபாத் சென்றார்.
அங்கே சில படங்களில் நடித்துப் புகழும் ஈட்டினார்.பின்னர் தமிழிலே கேப்டனுடன் ஒரு படத்திலும்(ஆனஸ்ட்ராஜ்),புரச்சித் தமிலனுடன் ஒரு படத்திலும்(எங்கிருந்தோ வந்தான்) தெறம் காட்டினார்.இவர் ரோசா கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் ஓனரான காசா மொய்தீனை இலவ்வினார்.ஆயிஷா என்ற பெயர் மாற்றத்துடன் அவரை நிக்காவும் செய்து கொண்டார்.

இந்த விளக்கம் போதவில்லை என்றால்,எனக்கு ஒரு மெயில் போடவும்....
சுதர்சன்.கோபால்
http://konjamkonjam.blogspot.com

சின்னவன் said...

தல பரணீ..
டமில் ந்யூஸ் ஒன்னும் கண்டுகிறது இல்லையா நீங்க ?

தல சுதர்சன்..
IMDB கண்க்கா டீடெய்ல் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்கஸ் பா.

குழலி / Kuzhali said...

ஆனந்த பூங்காற்றே திரைப்படம் வந்து நட்டம் அடைந்த பிறகு அந்த கடனை சிங்கப்பூர்,மலேசியாவில் நட்சத்திர கலை இரவை நடத்த நடிகர் சங்கத்திடம் ஒப்பந்தம் போட்டு நடத்தி சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கி 3 கோடி (பத்திரிக்கை செய்திவழியாக மட்டுமே எனக்குத்தெரியும்) இலாபம் சம்பாதித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன...


அது சரி தற்போது அவருடைய தயாரிப்பில் நடிக்கும் கமல்,விஜயகாந்த் பற்றியெல்லாம் பேசிவிடமுடியுமா காஜா மொய்தீனால்? அப்படி பேசியிருந்தால் பிழைத்ததற்கு வருத்தப்பட வேண்டியதிருக்குமென அவருக்குத்தெரியாதா என்ன? அதான் அஜீத்தை மட்டும் பலிகடாவாக்கிவிட்டார்! என்னமோ போங்க...

Anonymous said...

சுதர்சன் அண்ணாச்சி - ரொம்ப தேங்ஸ்பா.. நல்லா விளங்கீருச்சு

Sud Gopal said...

பர்ணீ,சின்னா:
"IMDB கண்க்கா டீடெய்ல் கொடுத்ததுக்கு ரொம்ப டேங்கஸ் பா."
"ரொம்ப தேங்ஸ்பா.. நல்லா விளங்கீருச்சு"

அத்த எல்லாம் பெர்சுபட்த்தாதே கண்ணு.
பருப்பு வடைக்கும்,எலவுக்கும்(love) இர்க்கிற கனிக்ஸ்ன் உன்கு தெரியுமா???
நம்ம ஊட்டாண்ட வந்து கண்டுக்க...
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_22.html
சுதர்சன்.கோபால்