Thursday, July 21, 2005

பிலிம் காட்டறேன்

பிலிம் காட்டறேன்!!!
இந்த ப்ளக்கரில் டைரக்டா படம் போட வசதி வந்தாலும் வந்தது, பதிவுகளில் படங்க தொல்லை ஜாஸ்தியாச்சு ! ஆள் ஆளுக்கு பிலிம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க

இதில ரொம்ப சீரியசா தல தர்ணீ கடல குந்திகினு வானம் குழம்பு, சூரிய ரசம்னு
சிவப்பு சிவப்பாய் காட்டராரு

இந்த கேனந்து அண்ணாத்த ஆப்புவெச்சாரு, full stop ன்னு technical ஆ சொல்லிகினு அவரு ஒரு சைட்ல காட்டினு கிறாரு . படம் காட்ட ஒரு கட்சி வேற இத்ல.

நமிதா இடுப்பு பெரிசாசு, இவங்க எனது கனவு பன்னிங்க அப்பிடின்னு இன்னொரு கும்பல் இதுதான் சாக்குனு நடிகைகளின் போட்டாவ ஜலசாவ போட்டுகினு கிறாங்க

அட இதுன்னாச்சும் பரவாயில்லங்க, நமிதா அஸின் இடுப்ப பார்த்து ஜொள்ளு விடலாம்
.சில சாமிங்க சட்டையில்லாத ஆம்பிள போட்டாவ போட்டு இந்த இடுப்ப பார்த்து ரசிங்கன்னு சொல்றாங்க.


இதெல்லாம் பார்த்து நொந்து போயி நானும் ஒரு 67000 அப்பிடின்னு ப்ரிண்டு ஓசில கொடுத்த ஒரு புது கேமிரால Self portrait எடுத்தேங்க.
இதோ அது உங்களின் பார்வைக்காக.

சாரிங்க!! இடுப்பெல்லாம் காட்ட கூச்சமாயிருப்பதினால் முகம் மட்டும்.




5 comments:

Anonymous said...

hehehe

Anand V said...

அட . என்னையும்மா?

குழலி / Kuzhali said...

//இவங்க எனது கனவு பன்னிங்க அப்பிடின்னு இன்னொரு கும்பல் //

கும்பல்?! ஏம்பா நான் ஒருத்தன் மட்டும் தான் போட்டதா ஞாபகம், தனி மனிதனை கும்பல் என்று கிண்டல் செய்த சின்னவனை வண்மையாக கண்டிக்கின்றேன்...

-இவன்
அகில உலக அசின்,பூஜா,லைலா ரசிகர் மன்ற தலைவர்
அசின்பூஜாலைலா குழலி

Anonymous said...

:-)))))

சின்னவன் said...

தல குழலி,
நான் நமிதா, அஸினு பூஜா எல்லோரையும் சேர்த்து சொன்னப்பா. தனியா இல்லை.
நம்ப பதிவு பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றி..